ஞாயிறு, நவம்பர் 13, 2011

அம்மாக்கு குடிகாரர்களின் ஆலோசனை.....


2000ல் மதுக்கடைகள் நகரங்களில் வண்ண வண்ண போர்டுகளில் தனியார் கடைகளாக இருந்தன. 2004ல் தமிழக முதல்வராக இருந்த ஜெ தனியார் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டவர் நகரத்துக்கு நகரம், கிராமத்திற்க்கு கிராமம் அரசே மதுபான கடைகளை திறக்கும் என்றார். அவர் அறிவிப்பை கேட்டு இப்படி கூட அரசாங்கங்கள் இருக்குமா என குய்யோ முய்யோ என்ற சத்தங்கள் கேட்டது.
எதற்க்கும் அம்மா அசரவில்லை. டாஸ்மாக் கடைகளில் ஊத்தி தரும் வேலைக்கு ஆள் எடுத்தார். ஆரம்பத்தில் சம்பளம் 10 வயது பையன் ஹோட்டலில் வாங்கும் சம்பளம் தான். இருந்தும் அரசாங்க காசாச்சே என டிகிரி முடித்தவர்கள் எல்லாம் க்யூ கட்டி நின்றார்கள். வேலையும் கிடைத்தது.
அடுத்து திமுக ஆட்சிக்கு வந்தது. ஊருக்கு ஊர் இருந்ததை தெருவுக்கு தெரு கொண்டும் போய் சேர்த்தார்கள். டாஸ்மாக்கில் வேலை பார்ப்பவனை கேவலமாக பார்த்த காலம் போய் அங்கு வேலை பார்ப்பவனுக்கும் பெண் தர நான் நீ என போட்டி போடும் நிலைக்கு பணியாளர்களுக்கு சம்பளத்தை வாரி வழங்கினார்  வள்ளள் மகான் கலைஞர்.
2011 ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மீண்டும் புரட்சி தலைவி அம்மா வந்து அமர்ந்தார். இந்த தீபாவளி டாஸ்மாக் சேல்ஸ் ஒரே நாளில் 260 கோடி தமிழகத்தில் என மகிழ்ச்சி அறிவிப்பு தரும் அளவுக்கு போய்விட்டது அரசாங்கம். பால் புட்டியை மறக்காததுகள் எல்லாம் டாஸ்மாக் வாசலில் நிற்கின்றன.  கடந்த 5 ஆண்டுகளாக குடி எதிராக கும்மியடித்த தமிழ்குடிதாங்கி தற்போதைய ஆட்சியில் எங்கு போனார் என தெரியவில்லை.
டாஸ்மாக் வருமானம் தான் நாட்டை காப்பாற்றுகின்றன என சொன்னவர், தற்போது அந்த வருமானத்தை பெருக்க அதாவது குடிமகன்களுக்கு நல்லது செய்ய முடிவு செய்துவிட்டார் தங்கத்தாய்.
எப்படியென்றால் தற்போது தெருவுக்கு தெரு உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அருகே உள்ள பார்கள் அந்த கால டூரிங் டாக்கிஸ் கொட்டைகைப்போல் உள்ளதால் குடிமகன்கள் அதிகம் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு வசதி செய்து தர முடிவு செய்த தமிழர்களை பெற்று எடுத்த தங்கத்தாய் குளு குளு பார்களை ஏற்பாடு செய்து தர உத்தரவிட்டுள்ளார். அந்த பார்கள் த்ரி ஸ்டார் ஹோட்டல் ரேஞ்ச்க்கு தரம்மாக இருக்க வேண்டும்மென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுவிட்டுள்ளார். அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கிவிட்டன. இன்னும் ஓரிரு மாதங்களில் ஏசி பார்களில் ஓய்யாரமாக காலாட்டிக்கொண்டு விதவிதமான சைட்டிஸ்களோடு போதையில் மிதக்கலாம்.

கேட்காமலே குடிமகன்களுக்கு சலுகைகள் செய்து தரும் எங்கள் குல விளக்கே, நீங்கள் நீடூடீ வாழ நெப்போலியனை வேண்டிக்கொண்டு உங்களது மேலான கவனத்திற்க்கு சில கோரிக்கைகளை குடிமகன்கள் சார்பாகவும், தமிழகத்தின் நலன் சார்பாக சில கோரிக்கைகள் வைக்க ஆசைப்படுகிறேன்…..

    நீங்கள் அமைக்கும் குளு குளு பார்களில் தொலைக்காட்சி பெட்டிகளை வைத்துவிட்டால் குத்து பாட்டுகளோடு சரக்கடிப்போம்.
    பெரிய பெரிய ஹோட்டல்களில் தருவதை போல குட்டை பாவாடை போட்டுக்கொண்ட கேள்ஸ் வந்து சப்ளை செய்ய ஆவன செய்தால் சிறப்பாக இருக்கும். இது எங்களுக்காக அல்ல. தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாமல் ஆயிரக்கணக்கான கன்னிப்பெண்கள் உள்ளார்கள். அவர்களுக்கு தங்களது ஆட்சி காலத்தில் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டுமே என்ற நம்பாசை தாயே.
    மனைவியோடு வந்து குடித்தால் 20 சதவிதம், பிள்ளைகளோடு வந்து குடித்தால் 40 சதவிதம் தள்ளுபடி என அறிவித்தீர்கள் என்;றால் தினமும் குடும்பத்தோடு வந்து குடிப்போம். நாட்டுக்கு வருமானம் இன்னும் பெருகும்.
    ரேஷனில் இலவச அரிசி வாங்க வேண்டும் என்றால் முதலில் 1பீர், ஆப் பிராந்தி வாங்க வேண்டும் என சட்டம் போடுங்கள் தாயே.
    பள்ளிகளில் பிள்ளைகளுக்கு காலையில் பீர், மதியம் கட்டிங் தந்தால் சிறப்பாக படிப்பார்கள் என அண்டார்டிகாவில் ஒரு ஆய்வு முடிவு கூறியுள்ளது. அதனால் அம்மா இந்தியாவில் பிள்ளைகளுக்கு இலவசமாக சரக்கு வழக்கும் திட்டத்தை கொண்டு வந்தால் இனி தமிழகத்தில் அம்மா ஆட்சி மட்டுமே.
    குடித்துவிட்டு ரோட்டில் கிடப்பவர்களை, வாகனம் ஓட்ட முடியாதவர்களை வீட்டில் கொண்டும் போய் விட ப்ரி டாக்ஸி சர்விஸ் கொண்டு வரவேண்டும்.
    108 போல 111 சர்வீஸ் ஆரம்பித்து குடிக்க வெளியே வர முடியாதவர்கள் இந்த நம்பர்க்கு கால் செய்தால் விடு தேடி சரக்கு வரும் திட்டம் கொண்டு வரலாம்.

    குடிகாரர்களை உருவாக்கும் சங்கம் தொடங்கவைத்து அதில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விருது வழங்கினால் சிறப்பாக இருக்கும்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினீhகள் என்றால் 2020ல் தமிழகம் வல்லரசாகிவிடும். இந்தியாவில் கேரளா படித்தவர்களில் முதல் மாநிலமாகவுள்ளது. நாம் குடிப்பதில் முதல் மாநிலம் என்ற பெருமையை பெற தமிழகத்தில் குடிக்காதவர்களே இல்லை என்ற நிலையை அம்மா அவர்கள் உருவாக்க வேண்டும் அதற்காக உணவு, உறக்கம் இல்லாமல் தினமும் 48 மணி நேரம் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அதற்க்கு தங்களுக்கு நாங்கள் எப்போதும் உருதுணையாய் இருப்போம் என்பதை நைன்ட்டி மேல் சத்தியமாக கூறுகிறேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக