ஞாயிறு, அக்டோபர் 23, 2011

காலி பெருங்காய டப்பா.


நாங்கள் தேசிய கட்சி. தனித்து நின்றால் சட்டமன்ற தேர்தலில் 100 இடங்களில் ஜெயிப்போம் என பீலா விட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இளைஞர் காங்கிரஸ் யுவராஜா தற்போது ஏதாவது பேசுவார்களா என எதிர்பார்க்கிறேன் ஒரு வார்த்தையும் இந்த காமெடி பீஸ்களிடம்மிருந்து வர மறுக்கிறது.

2006 முதல் 2011வரை திமுகவை நிம்மதியாக ஆட்சி புரியவிடாமல், மெனாரிட்டி திமுக என மிரட்டிக்கொண்டே இருந்தனர். அதிலும் செல்லாகாசுகளான இளங்கோவன், யுவராஜா, காங்கிரஸ் இளவரசன் இராகுல்காந்தி போன்றோர் பேசாத பேச்சில்லை. சகித்துக்கொண்டு ஆட்சி செய்தார் கருணாநிதி.

சட்டமன்ற தேர்தல் நெருக்கத்தில், செட்டிநாட்டு சீமான் அமெரிக்ககாவின் அடிவருடி சிதம்பரம், இளங்கோவன், யுவராஜா போன்றோர் 63 சீட், ஆட்சியில் பங்கு என மிரட்டி திமுகவிடம் ஒப்பந்தம் போட்டார்கள். திமுகவின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம். அப்போது அவர்கள், இது எங்களது சக்திக்கு மிகவும் குறைவு என்றார்கள். ஏதோ இவர்களிடம் பாகிஸ்தான் உள்ளாச்சி தேர்தலிலேயே வெற்றி பெறும் அளவுக்கு பலம்மிருப்பதாக பீலா விட்டார்கள். தோல்வியடைந்ததும் திமுக மீது பழி போட்டனர்.


உள்ளாட்சி தேர்தல் வந்தபோது, காங்கிரஸ்சை கழட்டி விடுகிறோம் என்றார் கருணாநிதி. கைவிலங்குகள் உடைக்கப்பட்டன என்றார் இளங்கோவன். இதோ உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. காங்கிரஸ்சை எதிர்த்து சீமான் போன்ற சில் வண்டுகள் பிரச்சாரம் செய்யாத நிலையில் அவர்கள் பலம் என்ன என்பதை காட்டிவிட்டன.

லட்சங்களில் ஒட்டு உள்ள மாநகர மன்ற தேர்தல்களில் மேயர் வேட்பாளர்கள் டெப்பாசிட் வாங்கவில்லை. வார்டுகளில் சிலவற்றை தவிர மற்றவற்றில் 200 வாக்குகள்க்கு மேல் தாண்டவில்லை. மக்களுக்கு அறிமுகமேயில்லாத சுயேட்சைகள் கூட காங்கிரஸ் வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் எல்லா மட்டத்திலும் பெற்றுள்ளனர். நகர மன்ற உறுப்பினர்க்கு போட்டியிட்டவர்கள் பலப்பல இடங்களில் 50 வாக்குகள் கூட வாங்கியிருக்கிறார்கள். இந்த கேவலம் நகரங்கள், மாநகரங்கள், பேரூராட்சிகளில் தான். கிராமங்களுக்குள் போனால் இதை விட கேவலம்.

தமிழகத்தில் சிலயிடங்களில் வார்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுயிருக்கிறார்கள். அது அவர்களின் தனிப்பட்ட பலம். மற்றப்படி அந்த காங்கிரஸ் கட்சி காலி பெருங்காய டப்பா என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.

இனிமேல், நாங்கள் தேசிய கட்சி அதனால் ஆட்சியில் பங்கு, அமைச்சர் பதவி, 100 சீட், 200 சீட் என கேட்டால் துரத்தி துரத்தி அடிக்க வேண்டும் திமுக, அதிமுக போன்ற கட்சிகள். கூட்டணியில சேர்த்துக்குங்க சி.பி.ஐ கேஸ் இல்லாம பாத்துக்கறோம், உச்சநீதி மன்ற வழக்க ஊத்தி மூடிடலாம் எனக்கூறி கூட்டணிக்கு வந்தால் நாய்க்கு எலும்பு துண்டு போடுவதைப்போல ஏதாவது போட்டு விடுங்கள்.

பின்குறிப்பு: நாய்கள் என்னை மன்னிக்க வேண்டும். நன்றியுள்ள உங்களை நன்றியில்லாத அவர்களுடன் ஒப்பிட்டத்திற்க்கு.

1 கருத்து: