செவ்வாய், அக்டோபர் 04, 2011

இஸ்லாமிய இம்சைகள்.உலகில் இன்னும் ஒரு மதம் தனது வம்சத்தை விருச்சிக்கும் மாதர் குலத்துக்கு மாணிக்கங்களை அடிமையிலும் அடிமையாக வைத்திருக்கிறது என்றால் அது இஸ்லாமிய மதம் தான். பிறந்தது முதல் சுடுகாட்டுக்கு போகும் வரை அவர்கள் வாழ்வு அடிமையாகவே இருட்டிலேயே கிடக்கிறது. வெளிச்ச ரேகைகள் அவர்கள் வாழ்வில் தெரிவதேயில்லை. வெளிச்சத்தை தேடி அவர்களை சொல்லவும் விடுவதில்லை அந்த ஆணாதிக்க மதம்.

கறுப்பு அங்கி என்ற ஒன்றை உடல் முழுக்க போட்டு மறைத்து இன்றளவும் இந்தியாவில் பெண்களை, பெண் குழந்தைகளை சுத்தவிடுகிறது என்றால் அது இஸ்லாமிய சமுகம் மட்டும் தான். கேட்டால், இது எங்களது மதகோட்பாடு என்கிறார்கள். எந்தயிடத்தில் இஸ்லாமிய கேட்பாடு பெண்களை அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் எனக்கூறியது ?. மசூதிக்கு தொழுகை செய்ய போக கூடாது என்றது. தங்களது ஆணாதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்ள கொள்கை என்ற முகமுடியை ஆண் சமுகம் மாட்டிக்கொண்டது. காலப்போக்கில் அது இஸ்லாத்தை தவிர்த்து மற்ற மதத்தில் செல்லா காசாகி வந்தன, வருகின்றன. 

இதை கண்டு, உணர்ந்தே வந்த இஸ்லாமிய சமூக ஆணாதிக்கவாதிகள் படிப்பதால் தான் இந்த நிலையென பெண் பிள்ளைகளை படிக்க அனுப்புவதேயில்லை. ஆண்களும் அதிகம் படிப்பதில்லை என்கின்றனர் இஸ்லாமிய நண்பர்கள். படித்தால் கேள்வி கேட்பார்கள், மத கோட்பாட்டை மீறுவார்கள் என யூகித்து கொள்கை என்ற முகமுடியை இரும்பால் போட்டு மூடி அவர்களை அடிமையாகவே வைத்திருக்கிறார்கள் இஸ்லாமிய பிற்போக்குவாதிகள்.

உலகின் பல நாடுகள் குறிப்பாக மேற்குலக நாடுகள் இந்த அடிமைத்தனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அங்கி அணிவதை தடை செய்துள்ளன. ஆனால் அப்படி வாதத்தை உருவாக்கக்கூட இந்தியாவில் ஒருவரும் இல்லை என்பதே வேதனைக்குறியது.

அரசியல் கட்சிகளும், சமுக இயக்கங்களும் இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் தரித்துள்ளன. பெண் விடுதலைக்காக பேசுபவர்கள் இஸ்லாமிய சகோதரிகளின் விடியலுக்காக பேச மறுக்கின்றனர். கேட்டால், அவர்கள் சிறுபான்மையின மக்கள் என்கிறார்கள். சிறுபான்மையின மக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளும் இந்தியாவில் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மாநில கட்சிகளாகட்டும், தேசிய கட்சிகளாகட்டும் சிறுபான்மையினத்தை சீண்டுவதுயில்லை. காரணம் வாக்குகள் சிதறிவிடும் என்ற பயம்.

அப்படிப்பட்டவர்கள் இருட்டில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய சகோதரிகளுக்காக குரல் கொடுக்கமாட்டார்கள் என்பது நிச்சயம். மீறி தந்தால் இஸ்லாத்தை ஆட்டி வைக்கும் பிற்போக்குவாதிகளான ஆண் சமுகத்தின் எதிர்ப்பை, கோபத்தை சம்பாதிக்க நேரிடுமே என்பதால் பயந்து போய்வுள்ளனர்.

இதனால் மதம் என்ற மந்திரச்சாவியை காட்டி ஆணாதிக்க மத்தின் ஆண்கள், பலதார மணம், மனைவியை கொடுமை செய்வது, சொத்துரிமையில்லை என்பது என அடாவடி செய்கின்றனர். இது மாற வேண்டும் ஆணாதிக்க சமுகத்தின் ஆதிக்கம் ஒழிய வேண்டும். வேண்டும் அம்மத்திற்க்கு ஒரு மறுமலர்ச்சி. அப்பெண்மணிகளுக்கு ஒரு ஒளி கிடைக்கும் ?. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக