சனி, அக்டோபர் 22, 2011

உள்ளாட்சி தேர்தல் ஒரு ஆய்வு முடிவு.


2011 உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. ஒவ்வொரு கட்சியும் தனித்து நின்று தங்களது பலத்தை இந்த தர்தலில் காட்டியுள்ளன. முன்பே ஒரு பதிவில் குறிப்பிட்டதை போல இதன் மூலம் கட்சிகளின் ஓட்டு வங்கியை அவ்வளவாக கணக்கிட முடியாது என்று குறிப்பிட்டுயிருந்தோம். தற்போதும் அதேநிலை தான். ஆனால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் வெற்றி நிலவரத்தை கொண்டு ஓரளவு மட்டும் கட்சிகளின் பலத்தை தீர்மானிக்க முடியும்.

அப்படிப்பார்த்தால் தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சி, 150 நகராட்சி, 559 பேரூராட்சி தலைவர் பதவிகளில் 10 மாநகராட்சியை தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியுள்ளது. நகராட்சி, பேரூராட்சிகளில் 3ல் இரண்டு பங்கை ஆளும் கட்சியான அதிமுகவும், 1 பங்கை திமுகவும் கைப்பற்றியுள்ளது. அதேபோல் மாநகர, நகர, பேருராட்சிகளுக்கான கவுன்சிலர்கள் போட்டியில் ஆளும் கட்சியான அதிமுக போல் திமுகவும் பரவலாக சம பலத்துடன் வென்றுள்ளது.

இதில் நாங்கள் தனித்து நின்றால் வடமாவட்டம் எங்கள் கையில் என்ற பாட்டாளிகள், எங்கள் மக்கள் சீறுபவர்கள் என்ற சிறுத்தைகள், கூட்டணி போடும்போதுயெல்லாம் ஆட்சியில் பங்கு கேட்கும் தேசிய கட்சி என பீற்றிக்கொள்ளும் கோமகன்கள் உள்ள காங்கிரஸ், மறுமலர்ச்சி ஏற்படுத்துவோம் என முழங்கும் மதிமுக, நான் தான் அடுத்த முதல்வர் என்ற கனவில் உள்ள சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆகியோர் ‘சில்லறை’கள் என்பதை இந்த தேர்தல் களம் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த தேர்தல் களம் திமுக-அதிமுக இடையே தான் சண்டைக்களம். இதில் ஆளும் கட்சியான அதிமுக யானையாக வெற்றி பெற, திமுகவோ அங்குசமளக்குவுக்கு வெற்றி பெற்றுள்ளது. (உள்ளாட்சி தேர்தல் என்பது ஆளும் கட்சிக்கு சாதகமாகவே இருக்கும் என்பது வரலாறு. காரணம் அதிகார பலம், மக்களின் ஆளும் கட்சிக்கான சாதக பலம் போன்றவையே. 2001, 2006ல் நடந்த உள்ளாட்சி தேர்தலோடு 2011 தேர்தலை ஒப்பிட்டு பார்த்தபின்பே இந்த கணிப்பு).

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக மீதுயிருந்த எதிர்ப்பு இன்னும் குறையவில்லை என்பதையே இந்த தேர்தல் நிலவரம் காட்டியுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்து 6 மாதத்தில் சமச்சீர்கல்வி, புதிய சட்டமன்ற வளாகம் விவகாரம், பரமக்குடி கலவரம் போன்ற பல பிரச்சனைகள் இருந்தும் எதுவும் எடுபடவில்லை என்பது கண்கூடு.

அதற்க்கு காரணம், அதிமுக நிறுத்துவம் வேட்பாளர்கள் பிரச்சனையில்லாதவர்கள், அதிகம் சம்பாதிக்காதவர்கள் என்ற இமேஜ். அதோடு மக்கள் நிரம்ப யோசிக்கின்றனர். அதனால் தான் அதிமுக மீது பலப்பல குற்றச்சாட்டுகள் இருந்தும் அதை ஆதரித்துள்ளனர். அதேபோல் மாற்றத்துக்கு திமுகவை தவிர்த்து மற்றொரு இயக்கத்தை காணவும் மக்கள் தயாராகயில்லை என்பதும் தேர்தலில் திமுக பெற்றுள்ள வாக்குகள் வெற்றிகள் கொண்டு காண முடிகிறது.

ஆனாலும், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுகவினர் மீது மக்கள் என்ன நிலைப்பாட்டில் இருந்தார்களோ அதே நிலைப்பாட்டில் தான் இன்றும் மாநகரம், நகராட்சி, பேரூராட்சி, சிற்றுரூராட்சிகளில் உள்ளார்கள் என்பது தெரிகிறது. அதை மாற்ற நடவடிக்கைகள் திமுக தலைமை உடனடியாக எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேபோல் ஆளும் கட்சிக்கு பயந்துக்கொண்டு போய் பதுங்கிய அதிகாரத்தில் ஆட்டம் போட்டவர்கள், கட்சி முக்கியஸ்தர்களான மு.கஅழகிரி, பழனிச்சாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், சுரேஷ்ராஜன், வீரபாண்டி ஆறுமுகம், நேரு, முரட்டு பக்தர் பெரியசாமி, என்.கே.கே.பி.ராஜா போன்ற பலரை கட்சி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் இல்லையேல் எதிர்காலம் இன்னும் மோசமான நிலைக்கு போய்விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக