செவ்வாய், மார்ச் 06, 2012

சுகமான சுமைகள்………… பாகம் 20.




காலேஜ் முடிந்து ரூம்மை நோக்கி நடந்து போய்கொண்டிருந்த போது தான் அவளை பார்தேன். வெள்ளை கலர் லைட் புளு பூ டிசைன் போட்ட சுடிதாரில் அழகான தலை பின்னலுடன் பந்தமாக நடந்து வந்துக்கொண்டிருந்தாள். பேரழகி என சொல்ல முடியாவிட்டாலும் மாநிறத்தில் மினுமினுத்தால். அவள் என்னை கடந்து போனபோது திரும்பி பார்கும் விதத்தில் இருந்தது அவளின் உருவம். பார்ததும் மனதில் பந்தமாய் இதயத்தில் அமர்ந்துகொண்டாள். அவள் சென்ற திசையை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் வந்ததோடு நம்மை அவள் திரும்பி பார்க்கமாட்டாளா என மனம் ஏங்கியது. 

சார் என்ன ஒரே யோசனையா இருக்காரு என ப்ரியா உலுக்கியபோது தான் நினைவுக்கு வந்தேன்.

எந்த உலகத்தல இருக்கா ?. 

கனவு லோகத்தல?.

யாருடா அவ?. 

3 மாசத்துக்கு முன்ன ஒரு சூப்பரா ஒரு பொண்ண பாத்தன்னு சொன்னன்யில்ல. அதேமாதிரி சுடிதார் போட்டுக்கிட்டு ஒரு பொண்ணு போனா அவளா இருக்குமோன்னு பாத்து ஏமாந்துட்டன். அவளை திரும்ப பாக்கமாட்டோமான்னு ஒரு எண்ணம். இப்ப என்ன பண்ணிக்கிட்டுயிருப்பான்னு நினைச்சிக்கிட்டு இருந்தன். 

ச்சீ எப்பபாரு அவளையே நினைச்சிக்கிட்டு. அவள விடு என கோபத்தில் பேசியவள் நானும் 6 மாசமா கேட்கறன் பதிலே சொல்லமாட்டேன்கிற. அன்னைக்கு பேசிக்கிட்டு இருந்தியே அது யாரு? எதுக்காக அந்த பையன்களை அடிச்சாரு? 

எதுக்குன்னு மறந்துட்டன் லூசு. 

3 மாசத்துக்கு பாத்தவ எந்த ட்ரெஸ் போட்டுயிருந்தான்னு ஞாபகம் வச்சியிருக்கற இத மறந்துட்டியா?. எங்கிட்ட பொய் சொல்றியா?. இப்ப நீ சொல்லல நான் உன்கூட பேசமாட்டன்.

தயக்கத்துடன் நடந்தை கூறியதும். 

உனக்கு ரவுடிங்களோட தொடர்புயிருக்கா?  

ஏய் அவர் எங்க ஊர்க்காரர் அவ்ளோ தான்.

அந்தாளை பாத்தாலே பயமாயிருக்கு. அந்தாளுக்கூட சேந்து நீ கெட்டு போகாத.

ம் எனும்போதே மனம் குழம்பியது. இந்த ஆறு மாசத்தல அவரோட கேங்கே என் பேச்சை கேட்க ஆரம்பித்துயிருந்தது. கட்டப்பஞ்சாயத்து செய்யும் குட்டி லீடர்கள் முதல் சாராயம் கடத்தும் தம்மாந்துண்டு பொடிசுகள் வரை பழக்கமாகியிருந்தார்கள். எங்கு பாத்தாலும் வணக்கம்ண்ணே என்ற குரல் வந்து உடலில் ஒரு புல்லரிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதை ப்ரியாவிடம் கூறலாமா வேண்டாமா என தயங்கியபோது, 

என்ன திரும்ப யோசனை?. திரும்ப அவளா?.

ம் என்றதும். நான் போறன் என எழுந்து புத்தகத்தால் அடித்துவிட்டு போனால். 

காலேஜ் முடிந்து வீட்டுக்கு கிளம்பும்போது ஏய் இன்னிக்கு வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போறன் வர்றியா?. 

ம்.

7 மணிக்கு வந்துடு வெளியிலயே நில்லு நான் வந்ததும் ஒன்னா போலாம்.

ம். என்றதும் கிளம்பிவிட்டாள். 

ஷார்ப்பாக 7 மணிக்கு கோட்டைக்குள் உள்ள கோயில் வாசலில் கோயிலுக்குள் போகும் ஃபிகர்களை சைட் அடித்துக்கொண்டுயிருந்தபோது தான் அவளை பார்த்தேன். அவள்தானா என்ற குழப்பத்தில் அவளே தான் என முடிவுக்கு வந்தபோது கையில் நோட்டுடன் யாருக்காவே காத்திருந்தாள். யாருக்காக காத்திருக்கறா ஒருவேளை காதலிக்கறாளோ சீச்சீ இருக்காது என என் மனம் எனக்காகவே யோசித்தது. 

அந்த நேரத்தில் ப்ரியாவை மறந்தேபோனேன். ரோட்டை பார்பதும், வாட்சை பார்ப்பதுமாக இருந்தாள். எனக்கே அவளை பார்த்துக்கொண்டே இருந்ததில் நேரம் போனதுப்பற்றி கவலைப்படவில்லை. காத்திருந்தவள் ஒருவழியாக அவள் மட்டும் தனியாக கோயிலுக்குள் போனாள். நானும் அவள் பின்னாடியே கோயிலுக்குள் போனேன்.


அவள் சாமியை தரிசிக்க நான் இன்னும் அதிக நேரம் அவ கோயில்ல இருக்கனும் என சாமியிடம் வேண்டினேன். ஆனால் அவள் கோயிலை விட்டு வெளியே வந்தவள் சர்ரென சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். 

ச்சே. சைக்கிள் எடுத்துவந்துயிருந்தா அவ பின்னாடியே போய் அட்ரஸ்ச கண்டுபிடிச்சியிருக்கலாம் என நொந்துக்கொண்டபோது தான் ப்ரியா நினைவுக்கு வந்தாள். இவ ஏன் வரல என என் மீதான வெறுப்பு அவள் மீதான கோபம்மாக மாறியது. 

கோட்டைக்குள் உள்ள அந்த பி.சி.ஓ பூத்தில் இருந்து ப்ரியா வீட்டுக்கு ஃபோன் செய்தபோது, போனை எடுத்தவள் என் குரலை கேட்டதும் வர முடியலடா. 

ஏன்

வர முடியலன்னு சொன்னா விடேன். 

என்ன விடறது. உனக்காக நான் எவ்ளோ நேரம் காத்திருந்தன் தெரியுமா?. வர முடியாதவ அப்பறம் எதுக்கு என்ன வரச்சொன்ன?. 

புரிஞ்சிக்க. 

ஓன்னும் புரியவேணாம் என படாரென போனை வைத்து விட்டு கிளம்பி ரூமை நோக்கி நடந்தபோது அவளுக்கு என்ன அவசரமோ வீணா கோபப்பட்டாச்சே என எண்ணியபடி ரூம்மில் வந்து சாப்பிட்டுவிட்டு படுத்தேன். ரமேஷ் எதையோ படித்துக்கொண்டிருந்தான். 

காலையில் காலேஜ்க்குள் நுழையும்போதே பார்த்தேன். வழக்கமாக நாங்கள் உட்காரும் பெஞ்சில் ப்ரியா உட்கார்திருந்தாள். அவள் முகத்தில் கோபம் இருப்பதை தூரத்தில் இருந்து பார்கும்போதே தெரிந்து உடன் வந்த ரமேஷ்சிடம் மச்சான் நீ க்ளாஸ்கு போ 

ப்ரியா உக்காந்திருக்கு ஒரு ஹலோ சொல்லிட்டு போறன்டா. 

அது கோபத்துல இருக்கு. கிளம்பு. 

கதைவிடாத. நீ கைகாட்டு பதிலுக்கு கை காட்டமாட்டா பாரு. 

அதையும் தான் பாக்கலாம் என்றபடி கைகாட்டினான். அவள் அதை கண்டுக்கொள்ளவேயில்லை. 

பாத்தியா.

போதும் கதைவிடாத. அது கவனிக்கல. வேணாம்ன்னு சொன்னா கேளு அங்க வந்து அசிங்கப்படாத. 

அடங்கு நான் பாத்துக்கறன். 

அதுக்கப்பறம் உன் இஸ்டம் என்றபடியே அவள் அருகில் வந்ததும். 

அவன்தான் உன்ன அப்படியே போகச்சொன்னான்யில்ல. அப்பறம் எதுக்கு வந்த என ரமேஷ்சிடம் கேட்டதும் அதிர்ந்து போனவன் இல்ல ப்ரியா ஒரு ஹலோ சொல்லலாம்னு வந்தன். சொல்லிட்டயில்ல கிளம்பு. 

மச்சான் நீ போகாத. 

எப்பா உங்க விளையாட்டுக்கு நான் வரல. என்ன விடுங்க என்றபடி இடத்தை காலி  செய்தான். 

என்னை முறைத்தவள் பேசிக்கிட்டு இருக்குதம்போதே எதுக்கு படார்னு போனை வச்ச?.

கோபம் தான். 

வர முடியலன்னா என்ன ஏதுன்னு யோசிக்கமாட்டியா?. 

யோசிக்கல. சரி நான் தான் போன் பண்ணன்யில்ல. காரணம் சொல்ல வேண்டியதானே. 

லூசா நீ போன்ல சொல்றமாதிரியிருந்தா சொல்லியிருப்பன்யில்ல. 

அப்ப இப்பச்சொல்லு.

தயங்கியவள். கோயிலுக்கு வரக்கூடாது அதான் வரல.  

அதான் எதுக்கு. 

லூசுங்கறத நிருபிக்கற. 

ஏய்…..

வீட்டுக்கு போனதும் வயித்துவலி. 

ஏய் என்ன சொல்ற ஆஸ்பிட்டல்கு போனியா என பதறிப்போய் அவள் அருகே அமர்ந்து என்னாச்சி என கேட்டதும். சில நொடிகள் அமைதியாக முகத்தை பார்த்தவள். 

பின் மெல்ல மென்சஸ் பீரியட் நேத்து சாயந்தரம் ஸ்டார்ட்டாகிடுச்சி அதானால தான். 

ஸாரிடா என்றதும் ஸாரி கேட்காதன்னு எத்தனை முறை சொல்றது என தலையில் குட்டினாள். ஏன்னடா எப்ப பாத்தாலும் அதுங்கிட்ட அடிவாங்கிக்கிட்டே இருக்க என ஜான் கேட்டுக்கொண்டே வந்தான். 

ஓன்னும்மில்ல. நேத்து கோயிலுக்கு வரச்சொல்லிட்டு மேடம் வரல. அதான் சண்டை. அதவிடு நேத்து நீ ஏன் வரல?. 

அப்பா வேலை வச்சிட்டு போயிருந்தாரு அதான் வரல.

ம். சரி கிளம்பலாம்.

எழுந்திருக்க நினைக்கும்போது ப்ரியா விரலை சுரண்டடினாள். 

தொடரும்……………..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக