வியாழன், மார்ச் 15, 2012

வரலாறுகள் மாறும். நிச்சயம் தண்டனையுண்டு.நெஞ்சம் இன்னமும் துடிக்கிறது அய்யோ இருக்கக்கூடாதே என்று. பாலகன். நீண்ட காலத்திற்கு பின் பிறந்த கடைக்குட்டி. கடைக்குட்டி என்றால் குடும்பத்தில் மட்டுமல்ல வெளியிலும் அவ்வளவு பாசம் கிட்டும். 

அமுல் பேபியாய் தந்தையின் பாசம் அவ்வளவாக கிடைக்காமல் தாயின் அரவணைப்பில் பிறந்த மண்ணை விட்டு நாடு நாடாக சுற்றி கடைசியில் தன் தாய் மண்ணில் வந்திருந்தபோது தான் அந்த பாலகன் ஈவு இறக்கமற்ற கொடூரமான இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டதாக காட்டப்படும் அந்த புகைப்படத்தையும், வீடியோவையும் காணும் போது நெஞ்சம் பதறுகிறது. அவன் மட்டுமல்ல, அவனைப்போல எத்தனை எத்தனை சிறுவர்கள், மக்கள் மீது ஏவுகனையையும், கொத்து குண்டுகளையும் வீசி கொன்றுள்ளனர். 

ஈழப்போரின் வரலாறு தெரியாத பாலகன் பாலசந்திரன். தன் மக்கள் படும் துன்பங்கள் அவ்வளவாக அறியாதவன். துப்பாக்கிக்கும் அவனுக்கும் அவனைப்போன்ற சிறார்களுக்கும் என்ன சம்மந்தம்?. இந்த உலகில் அவன் விடுதலைப்புலிகள் தலைவரின் மகன் என்ற ஒன்றே அவனை கொன்றுள்ளது. இவனைப்போல் எத்தனை எத்தனை பிள்ளைகள் கொல்லப்பட்டுயிருந்தாலும் இவன் கொல்லப்பட்டது கொடூரத்திலும் கொடூரம். கோடூரத்தின் உச்சம். 

அவனுடன் இருந்த பாதுகாவலர்களை அவன் கண் முன்னால் நிர்வாணமாக்கி, கைகள் பின்னால் கட்டப்பட்டு அதன்பின்பே சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்கள். அவன் கண் முன் நடந்த இந்த கொடூரத்தை செய்வர்கள் நிச்சயமாக மனிதர்களாக இருக்கமாட்டார்கள். மனித தன்மையே அற்ற மிருகமாக தான் இருப்பார்கள். இவர்கள் மட்டுமல்ல இதற்கான உத்தரவை போட்ட தலைமைகள் அது இராஜபக்சேவாகட்டும், இந்தியவின் சோனியாகாந்தியாகட்டும் நினைவில் கொள்ளுங்கள் உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கின்றன. 

மரணத்தை சில மணி நேரத்திற்க்கு முன்பே தன் கண் முன்னால் அந்த பாலகனுக்கு கொடூரமான முறையில் மரண பயத்தை காட்டி துடிக்க துடிக்க கொன்றுள்ளீர்கள். மரணம் வரப்போகிறது என அறிந்துள்ளான். இருந்தும் அவன் முகத்தில் சிறு சலனமும் இல்லை. உறங்குவது போலவே இருக்கிறான். அந்த பாலகன் உடலில் ஐந்துக்கும் மேற்பட்ட தோட்டாக்களின் வடுக்கள். எறும்பு கடித்தாலே தாங்காத பாலகனை துப்பாக்கி தோட்டா மூலம் கொன்றுள்ளனர். 

வாழ உரிமை கேட்ட மக்கள் மீது இராணுவம் வீசிய கொத்து குண்டுகள், ஏவுகணைகள் விழுந்து சொரணையும், விலியும் கொண்ட உடலை சின்னாபின்னமாக்கி உயிருக்கு போராடவைத்துள்ளார்கள். சிக்கிய தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து நிர்வாணமாக்கி கொலை செய்து இறந்த அந்த உடல்களை காட்சி பொருளாக்கி ரசித்த ஜென்மங்கள் மனித தன்மைக்கு அப்பார்பட்டவர்கள். 


வரலாறுகள் மாறும், எழுதி வைத்துக்கொள்ளுங்கள் வரலாறு மாறும். இன்று உன் கையில் உள்ள அதிகாரம் நாளை மாறும் அன்று இந்த படுபாதகத்துக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் நம்புகிறோம். நிச்சயம் தண்டனை கிடைக்கும். 

4 கருத்துகள்:

 1. உங்களது ஒரு பதிவுக்கு 100 ஹிட்ஸ் வேண்டுமா...? உடனே http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை இணைத்திடுங்கள்...

  பதிலளிநீக்கு
 2. சிங்கள வெறியர்களுக்கும் அதற்க்கு துணை போன இந்தியாவுக்கும் நிச்சயம் காலம் சிறந்த பதில் சொல்லும். காலம் சக்கரம் மாறி மாறி சுழலும் அதில் யாரும் நிரந்தரமாக வெற்றியை பெற்று விட்டதாக மமதை கொள்ள முடியாது. இந்தியாவின் சூழ்ச்சிக்கு, இரண்டகத்துக்கு இந்தியா உடைந்து தனித்தமிழ் நாடு என்று ஒன்று பிறக்கும் போது அதன் வலி புரியும் இந்தியாவுக்கு .

  பதிலளிநீக்கு
 3. நிச்சயம் காலம் சிறந்த பதில் சொல்லும்.

  http://www.dunkindonutscoupons.com

  பதிலளிநீக்கு
 4. Very quickly this web page will be famous among all blogging people, due to it's
  good articles or reviews

  My blog post: seo; ,

  பதிலளிநீக்கு