வியாழன், மார்ச் 22, 2012

வெற்றியும்............ எதிர்கட்சிகள் நிலையும்.



சங்கரன்கோயில் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது ஆளும்கட்சியான அதிமுக. எதிர்கட்சிகள் அனைத்தும் டெபாசிட் இழந்துள்ளன. இடைத்தேர்தல் களத்தில் ஆளும்கட்சி வெற்றி பெறும் சூத்திரத்தை 2003லியே அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக கற்று தந்தது. அதன்படி தான் கடந்த திமுக ஆட்சியில் நடந்த எல்லா இடைத்தேர்தலிலும் அதே சூத்திரத்தை பயன்படுத்தி ( அதைத்தான் திருமங்களம் பார்முலா என்றார்கள்) வெற்றி வாகைகளை சூடின.

2011 பொது தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு நடந்த பென்னகரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றன. அதை கண்டு அடுத்தும் திமுக தான் என்றார்கள் அரசியல் கட்சியினர். ஆனால் அடுத்து வந்த பொது தேர்தலில் அதிமுக  மாபெரும் வெற்றி பெற்றன.

முன்பு போல் மக்கள்யில்லை. இடைத்தேர்தலில் ஆளும்கட்சியை வெற்றி பெற வைத்தால் தான் தொகுதிக்கு ஏதாவது கிடைக்கும் என்பதில் தெளிவாக உள்ளார்கள். அதனால் ஆளும்கட்சி மீது எத்தனை வெறுப்புயிருந்தாலும் அதை கண்டுக்கொள்ளாமல் ஆளும்கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைக்கிறார்கள். 

அதிமுக ஆட்சியமைத்து 10 மாதங்கள் ஆகியுள்ளது. மின்வெட்டு, விலைவாசி உயர்வு, கட்டண உயர்வுகள் என ஆட்சி மீது அதிக அதிருப்தியுள்ளது. ஆனால், மக்கள் ஆளும் கட்சி வேட்பாளரை பெரும் வெற்றி பெற வைத்துள்ளார்கள். 

அதோடு, இலவச பொருகளை தந்து முடித்ததோடு, அதிமுக பண மழை பொழிந்துள்ளது அத்தொகுதியில். ஊருக்கு ஒரு அமைச்சர் என களம்மிறக்கி ஓட்டு வேட்டையாடினார்கள் அதனால் வெற்றி பெற்றுள்ளார்கள். 

அதனால் இந்த வெற்றி ஆச்சர்யபடுத்தக வெற்றியல்ல. இந்த வெற்றி ஒரு உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது, எதிர்கட்சியாக சட்டமன்றத்தில் அமர்ந்துள்ள விஜயகாந்த் கட்சி மூன்றாம் தர கட்சி என்பதை இந்த தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது. அக்கட்சி வெற்றியெல்லாம் அதிமுகவின் வெற்றி என்பது இதன் மூலம் நிரூபனமாகியுள்ளது. 

அதேபோல் மதிமுக தேய்பிறை கட்சியாக உள்ளது என்பதும் இதன் மூலம் வெளிப்படையாகியுள்ளது. 

பணமும், அதிகாரமும் தீர்மானித்த இடைத்தேர்தலாக இருந்தாலும் சில உண்மைகள் இதன் மூலம் வெளிப்படையாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக