கீழ்நிலை அரசு ஊழியர் ஒருவருடன் 30 நிமிடம் நானும் நண்பர் ஒருவரும் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சின் இடையே, குஜராத்தில் மோடியரசு, நிர்வாகத்தின் மேல் மட்டத்தில் அதாவது செயலாளர் அந்தஸ்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கப்படுவதற்கு பதில் கீழ் மட்டத்தில் இருந்து வந்த அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள் இதனால் அரசின் நிர்வாகத்தில் பெரும்பாலான தவறுகள் கலையப்படுகிறது. ஊழியர்கள் மனநிலை, கஸ்டம் போன்றவற்றையும் மக்கள் விரும்பும் சாதகம் பாதகம் பற்றியும் ஆட்சியாளர்களிடத்தில் தெளிவாக விளக்க முடிவதாக கூறுகிறார்கள் என்றார்.
அந்த நண்பர் கூறயது போல் குஜராத் மாநிலத்தில் இருந்தால் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது தான். காரணம், கீழ்நிலை அதிகாரிகளுக்கு தான் அடிமட்டத்தில் உள்ள ஊழியர்களின் பிரச்சனையென்ன?, மக்களின் உணர்வுகள் என்ன? என்பதை இலகுவாக உணர்ந்து கொள்ள முடியும். உதாரணத்துக்கு ஒரு தாசில்தாரால் தான் சாதி சான்றிதழ்கு வாங்க ஒரு பயணாளி யாருக்கெல்லாம் சம்திவ் தர வேண்டியுள்ளது என்பதை நன்கறிவார்.
மத்தியரசு, மாநிலரசு பொது பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இதில் விவசாயத்தை முன்னேற்ற சில திட்டங்கள் போட்டுள்ளார்கள். ஏன் கேள்வி, இந்த அதிகாரிகளுக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும். நெல் நாத்து விட்டால் எத்தனை நாளில் முளைக்கும், எப்போது களையெடுக்க வேண்டும், எப்போது மருந்து அடிக்க வேண்டும், எப்போது அறுவடை செய்ய வேண்டும், இவைகளுக்கு எவ்வளவு செலவாகும் என்பது தெரியுமா என்றால் எதுவுமே தெரியாது. ஆனால், கீழ் மட்ட அதிகாரிகள் தரும் புள்ளி விவரத்தை வாங்கி வைத்துக்கொண்டு பென்சிலால் கிறுக்கி ஒரு தொகையை போட்டு ஒரு மூட்டை நெல்லை 500 ரூபாய்க்கு வாங்களாம் என அறிவிக்க மட்டுமே தெரியும். எதுவுமே தெரியாத ஒரு அதிகாரி விவசாயின் பொருளுக்கு விலை நிர்ணயிக்கும் கொடுமை இங்கு தான்.
அதேபோல், மின்சார வாரியத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும்மென்றால் அத்துறையை நன்குணர்ந்த இளநிலை பொறியாளர் இல்லை கீழ் மட்டத்தில் இருந்து மேல் பதவிக்கு உயர்ந்து வந்த ஒரு அதிகாரியை ஊழலை தடுக்க நியமனம் செய்யப்பட்டால் தவறு எந்தந்த மட்டத்தில் எங்கு நடக்கிறது, யார், யார் எல்லாம் அதனால் பலன் அடைகிறார்கள், எப்படி பலன் அடைகிறார்கள் என்பதை அறிந்திருப்பார். அதனை சரிசெய்வது அவருக்கு சுலபம். அதே துறையில் ஊழலை ஒழிக்க ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்தால் அல்லது அவரிடம் ஆலோசனை கேட்டால் அவர் மேல் மட்டத்தில் நடக்கும் ஊழலை பற்றி மட்டும்மே நன்குணர்ந்துயிருப்பார். அதை மட்டுமே குறிப்பிடுவார். அவருக்கு பொதுமக்களுடன் சம்மந்தப்பட்ட கீழ்மட்ட ஊழல்கள், தவறுகள் தெரியாது. அதனால் அத்துறையில் ஊழலை ஒழிக்க முடியாது.
இதேபோல் தான் மற்ற துறைகளிளும். இது ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியால் அறியமுடியாது. கீழ் மட்ட அதிகாரிகளால் அறியமுடியும். காரணம், ஐ.ஏ.எஸ் தேர்வாகி பயிற்சி பெற்று வருபவர்கள் அரசின் நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதையே கற்று விட்டு வருகிறார்கள் அவர்கள்க்கு தவறு எங்கு நடக்கிறது என்பது தெரியாது. தெரிந்துக்கொள்ளவும் விரும்புவதில்லை.
தேர்வெழுதி, பயிற்சி முடித்து சீட்டுக்கு வரும்போதே அவர்களுக்கு குளிர்சாதன அறை, குளிர்சாதன கார்கள், குளிர்சாதன வசதிகொண்ட வீடு என தந்து அரசியல் வர்க்கம் அவர்களை தங்களது விசுவாசிகளாக்கிகொள்கிறது. இதனால் அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வந்தோம் என்பதையே மறந்துவிடுகிறார்கள்.
மக்கள் தங்களது பிரச்சனைக்கு ரோட்டில் வந்து உட்கார்ந்தால் அவர்களின் குறைகளை கேட்பதில்லை, அவர்களுடன் பேசுவதில்லை. அந்த மக்களின் பிரச்சனை தீர்ப்பதில்லை. அதற்கு பதில் தங்களுக்கு கீழ் உள்ள காவல்துறையை விட்டு விரட்டுகிறார்கள், அடிக்கிறார்கள் சில நேரங்களில் குருவிகளை சுடுவதைப்போல சுட்டு தள்ள அனுமதிக்கிறார்கள். இது தான் இந்த அதிகாரிகளின் லட்சணம். அரசியல்வாதிகள் தான் மோசமானவர்கள் என்றால் அவர்களுக்கு கீழ் உள்ள அதிகார மட்டமும் அப்படியேத்தான் இருக்கிறது.
நாம் கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தில் திமுக ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து சென்றார்கள் என விமர்சனம் செய்தோம். இப்போது ஆட்சியாளராக உள்ள அதிமுகவினர் கொள்ளயைடிப்பதாக விமர்சனம் செய்கிறோம். ஆனால் மறந்தும் யாரும் அரசின் மேல்மட்ட கீழ்மட்ட அதிகாரிகளை விமர்சனம் செய்வதில்லை. அதிகாரத்துக்கு வரும் எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரிகள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை தான் கொள்ளையடிக்கிறாhகள். ஆனால் 30 வயதில் பணிக்கு வந்து 58 வயது வரை கொள்ளயைடிக்கும் கூட்டம் தான் அரசு ஊழியார்கள் கூட்டம். மக்கள் பிரதிநிதிகளை விட அதிகமாக கொள்ளையடிப்பது இவர்கள் தான். ஆனால் பெரும்பாலும் இவர்கள் சிக்குவதில்லை. காரணம், அதிகாரிகள் தங்களுக்குள் விட்டுக்கொடுப்பதில்லை.
மாற்றம் தேவையென்பது அரசியல்வாதிகளிடம்மல்ல………….. அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் சட்டத்தில் தான் தேவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக