சனி, ஜூன் 30, 2012

ராஜஸ்தானும்…….. த்ரிஷாவின் இடுப்பும்.
ராஜஸ்தான் எங்கு உள்ளது, அதைப்பற்றி இரண்டு குறிப்புகள் தாங்கள் ?.

பாண்டவர்கள், கவுரவர்கள் என்பவர்கள் யார் ?.

நஞ்சை, புஞ்சை, குறுவை என்றால் என்ன ?.

கண்தானம், ரத்ததானம், அன்னதானம் இதில் சிறந்தது எது ?.

பிசியோதெரபி என்றால் என்ன?.

பழுப்பு நிலக்கரி எங்கு கிடைக்கிறது ?, எப்படி அதில் மின்சாரம் தயாரிக்கிறார்கள்?.

திருமணத்தன்று மெட்டி அணிவிப்பது எதனால்?.

ஆதித்யா சேனலில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்ற நிகழ்ச்சியை காண நேர்ந்தது. ஆதில்தான் மேற்கண்ட மேற்கண்ட கேள்விகளை கடலூர் மாவட்ட மக்களிடம் கேட்டார். கேள்வி கேட்கப்பட்டவர்கள் 80 சதவிதனர் பள்ளி – கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியர் பயிற்சி படிப்பவர்கள் ( வருங்கால ஆசிரியர்கள் ) அதில் ஒருவர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஆசிரியராக இருப்பவர். கேள்விகளுக்கு பதில் தந்தார்கள். பதிலை அவர்கள் சொல்ல சொல்ல அதை கேட்ட எனக்கு அவர்களை அவர்களை இழுத்து வைத்து உதைக்க வேண்டும் என்ற அளவுக்கு கோபம் வந்தது.

அவர்கள் சொன்ன பதில்களை அவர்கள் முன்னிலையிலையே நக்கல் அடித்தார் நிகழ்ச்சி தொகுப்பாளார். அதனை பதில் சொன்னவர்கள் பெருமையாக நினைத்து சிரித்தபோது கோபம் அதிகமானது.

கேள்விக்கான பதிலாக, பாண்டவர் என்பவர் ஒருவர், கவுரவர்கள் என்பவர் மூன்று பேர் என்றனரும் பலரும். இராஜஸ்தான் எங்கு உள்ளது என்ற கேள்விக்கு பீகார் அருகே உள்ளது என்ற பதில் தந்தார் ஒரு மாணவி. மற்றொரு மாணவி, அமெரிக்கா என்ற மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் என பதில் தந்தார். நன்செய், புன்செய் நிலம் பற்றிய கேள்விக்கு மற்றொரு மாணவி, நன்செய் என்பது நெல்லை அரைப்பது, புன்செய் என்பது கத்தரிக்காய் அரைப்பது என பதில் தந்தார்.

ஒரு கல்லூரி மாணவி, நிலக்கரி மீது மின்சாரம் பாய்ச்சி அதிலிருந்து மின்சாரம் தயாரித்து மின்சாரம் எடுப்பார்கள் என்ற பதிலை கேட்டபோது நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது. வருங்கால ஆசிரியர்களும் தப்பாகவே பதில்கள் தந்தார்கள்.

இவர்களிடம் இந்திய பிரதமர் யார் என்று கேட்டால் முஷ்ரப் என்று சொல்வார்கள் போல. இந்த நாய்களிடம் விஜய் என்ன படம் நடிக்கிறார், த்ரிஷாவின் இடுப்பு அளவு என்ன என்ற கேள்விகளை கேட்டுயிருந்தால் பதில் சரியாக வந்திருக்குமோ என்னவோ.

கேள்வி கேட்கப்பட்டவர்கள் படிக்காத பாமரன் என்றால் மன்னிக்கலாம். படித்து பட்டம் பெற்றவர்கள். வருங்கால தலைமுறையை உருவாக்கப்போகும் பொருப்பான ஆசிரியர் பணியிடங்களில் அமர போகிறவர்கள். சாதாரண சின்ன கேள்விகள். அந்த கேள்விகளுக்கு 5 பக்கத்துக்கு கட்டுரையை சாதாரணமாக எழுதிவிடலாம். அதற்கே இவர்களுக்கு பதில் தெரியவில்லை. இவர்கள் வருங்கால தலைமுறைக்கு எதை கற்று தரப்போகிறார்கள்.

எதுவும் தெரியாத மங்குணிகளை உருவாக்கிய ஆசிரியர்களை, பேராசிரியர்களை நடுரோட்டில் நிற்கவைத்து சுட வேண்டும். இவர்கள் பணிக்கு சேர்ந்து மங்குணிகளை தான் உருவாக்கியுள்ளார்கள். பாடத்திட்டத்தில் குறையில்லை, பாடம் நடத்துபவர்கள், அதை படிப்பவர்களிடம் தான் குறைகள் உள்ளது.

இந்த லட்சணத்தில் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லை பதிவு மூப்பு அடிப்படையில் பணி தர வேண்டும் என போராடுகிறார்கள். ஒரு சாதாரண சின்ன கேள்விக்கே பதில் தெரியவில்லை. இந்த ………………. பாடம் நடத்தி என்ன கிழிக்க போகிறார்கள்.

இன்னும் நம்புங்கடா இந்தியா 2020ல் வல்லரசாகிவிடும்…………….

1 கருத்து:

 1. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
  http://www.valaiyakam.com/page.php?page=votetools

  நன்றி

  வலையகம்
  http://www.valaiyakam.com/

  பதிலளிநீக்கு