புதன், ஜனவரி 18, 2012

சுகமான சுமைகள்………… 11.


ஸாரி மேடம் என்ற தலைப்பில் இதுவரை எழுதி வந்த தொடர்கதையை தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்கள் கோரிக்கையை ஏற்று தலைப்பை சுகமான சுமைகள் என மாற்றியுள்ளேன். இத்தொடரை தொடர்ந்து வாசித்து ஊக்குவிக்கவும். கதை தொடர்கிறது. 

2 மாதம் ப்ராக்ட்டீஸ். கம்ப்யூட்டர் க்ளாஸ் என பொழுது ஓடியது. ர்pசல்;ட் வந்த அன்று காலையே நானும், ஜானும் ஸ்கூல்க்கு போயிருந்தோம். மதியம் 12 மணிக்கு ரிசல்ட்டை போர்டில் ஒட்டினார்கள். மனம் திக் திக் என அடித்துக்கொள்ள போர்டை போய் பார்த்தோம். எதிர்பாராத வகையில் நான் 923 மார்க் எடுத்திருந்தேன். மச்சான் நான் 985 என தோளை இறுக்கி பிடித்து சந்தோஷப்பட்டான் ஜான். அடுத்து ஆசையோடு மஞ்சுவின் ரிசல்ட்டை தேடியது கண்கள். இங்கிலீஸ்சில் பெயிலாகியிருந்தாள். 

அதான் பிட் தந்தாங்களே எப்படி பெயிலானா என யோசிக்க, விடு மச்சான் அவள மறந்து தொலை என்றான். 

அடுத்து என்னடா படிக்கபோற. 

தெரியலடா இனிமே தான் யோசிக்கனும். நீ?

நான் பி.காம் பண்ண போறன் என்றான் ஜான். 

சரி நாளைக்கு வீட்டுக்கு வர்றன். எந்தந்த காலேஜ்க்கு அப்ளிக்கேஷன் போடலாம்ன்னு யோசிச்சிவை நானும் என்ன சேர்றதுன்னு யோசிச்சி வைக்கறன் என சொல்லிவிட்டு வீட்டுக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

அம்மா வாசலில் காத்திருக்க, அப்பா திண்ணையில் உட்கார்ந்திருந்தார். 953 மார்க்ம்மா. இதைக்கேட்டு சந்தோஷத்துடன் எழுந்த அப்பா 100 ரூபாய் தந்து இந்தா எல்லார்க்கும் லட்டு வாங்கி தா. 

நான் யாருக்கும் தரல. வேணும்ன்னா நீங்க தந்துக்குங்க…. காலேஜ்க்கு அப்ளிக்கேஷன் போடனும் காசு வேணும். 

100 ரூபாயை மீண்டும் பாக்கெட்டில் வைத்தபடியே ஏய் நேத்து யூரியா வாங்கனம்ன்னு பணம் தந்தயின்யில்ல அதலயிருந்து ஆயிரம் தந்துவுடு. மூணு, நாலு காலேஜ்க்கா அப்ளிக்கேஷன் போடு எனச்சொல்லிவிட்டு வெளியே போனார். வார்த்தையில் கோபம் தெரிந்தது. 

சாயந்தரம், புங்க மரத்தின் அருகே சென்றபோது ஏழுலை, ஜீவா, முத்துவும் அமர்ந்திருந்தனர். 

என்னடா படிச்சவனே பாஸ் பண்ணிட்டியா ?.

ம். 

அப்பறம் ஏன் உம்முனு இருக்க. 

ஒன்னுமில்லடா. 

பாஸ் பண்ணிட்ட எங்கள ஏதாவது கவனிக்கறது. 

என்னத்த கவனிக்கறது. பாஸ் பண்ணிட்டன்னு வீட்ல சொன்னதுக்கு 100 ரூபா தந்து லட்டு வாங்கி தாங்கிறாரு. அத வச்சி என்னத்த பண்றத்து அதான் வேணான்னிட்டன். 

ஜீவா உடனே பணம் வச்சிக்கிட்டே ஏண்டா உங்கப்பன் இப்படி கஞ்ச தனம் பண்றாரு. 

ஏன் உங்கம்மா தந்துயிருப்பாங்களே என கேட்டான் முத்து. 

காலேஜ்க்கு அப்ளிக்கேஷன் போடனம்ன்னு கேட்டதுக்கு ஆயிரம் ரூபா தந்துயிருக்காரு. நாளைக்கு கிளம்பும்போது பாத்தா தான் எங்கம்மா ஏதாவது தருவாங்களான்னு தெரியும். 

அண்ணே பெரியய்யா கூப்ட்டு வரச்சொல்லுச்சி என வந்து நின்றான் முத்துவின் பக்கத்து வீட்டு சிறுவன். 

இருங்கடா வந்தர்றன் என எழுந்து போனான். 

ஆமாம் கேட்க மறந்துட்டனே, உங்காளுது ரிசல்ட் என்னாச்சி என கேட்டான் ஏழுலை. 

நீ வேறடா. அவுங்க அப்பன் தூக்கு மாட்டனத பாத்து பயந்து போய் பிரிஞ்சிடலாம்ன்னுச்சி. எவ்ளோ கெஞ்சி பாத்தன் முடியாதுன்னு சொல்லுச்சின்னு தான் சொன்னனே. நானும் அதுக்கப்பறம் எதிர்ல வந்தாக்கூட பாக்கறதில்ல. ரிசல்ட் பாத்தன் இங்கிலிஷ்ல பெயிலாகிடுச்சி. இனிமே அதப்பத்தி பேசாதிங்கடா மனசு ஒரு மாதிரியாயிருக்கு என்றேன். 

நல்ல பொண்ணுடா. பாவம் அவுங்க அப்பன் பண்ண தப்பு. எல்லாம் தலைகீழ மாறிடுச்சி என்றான் ஜீவா. 

சரி நான் கிளம்பறன். அவன் வந்தான்னா சொல்லிடு எனக்கூறிவிட்டு வீட்டுக்கு வந்தேன். 

மறுநாள் ஜான் வீட்டுக்கு போயிருந்தேன். அவன் மட்டுமேயிருந்தான். எங்கடா யாரையும் காணோம். தெரிஞ்சவங்க வீட்ல பங்ஷன் அதுக்கு போயிருக்காங்க. எங்கப்பா மெட்ராஸ்ல ஏதாவது ஒரு காலேஜ்ல சேருடா ஊர் உலகம் பத்தி தெரிஞ்சிக்குவன்னு சொல்றாருடா என்னப்பண்ணலாம். 

எங்க வீட்ல அனுப்புவாங்களான்னு தெரியலயே?. 

முதல்ல அப்ளிக்கேஷன் போடுவோம் அப்பறம் பாத்துக்கலாம். 

கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு சரி நாளைக்கு காலையிலயே கிளம்பலாம் எனச்சொல்லிவிட்டு வந்தேன். 

இரவு வீட்டுக்கு வந்ததும் நாளைக்கு மெட்ராஸ்க்கு போறன். அங்க ஏதாவது ஒரு காலேஜ்ல சேர்ந்து படிக்கலாம்ன்னு இருக்கன். அவ்ளோ தூரம் எதுக்குடா போற என அம்மா தயங்க. சாப்பிட்டுக்கொண்டிருந்த அப்பாவே உன் இஸ்டம் என்றார். 

மறுநாள் நானும் ஜானும் சென்னைக்கு கிளம்பினோம். பஸ் ஸ்டான்ட் வரை வந்த ஜானின் அப்பா அங்க தங்கற மாதிரியிருந்தா எனக்கு தெரிஞ்சவங்க. அவுங்க வீட்ல போய் தங்குங்க நான் போன் பண்ணி சொல்லிட்டன். இதான் அட்ரஸ் என தந்துவிட்டார். இரண்டு பேருக்குமே சென்னை புதுசு. தாம்பரம் கிறிஸ்டியன் காலேஜ், பச்சையப்பா காலேஜ், ஜெயின் காலேஜ், மாநில கல்லூரி என தேடிதேடிப்போய் அப்ளிக்கேஷன் வாங்கி பி.காம் அ பொருளியல் என குறித்துக்கொடுத்தோம். நாளை வந்து பாருங்க என்றார்கள் தனியார் காலேஜ்ஜில். 

மாலை மடிப்பாக்கத்தில் இருந்த ஜானின் அப்பாவின் நண்பர் வீட்டுக்கு போனோம். நன்றாக கவனித்தவர்கள் ஹால்ல படுத்துக்குங்கப்பா என்றார். காலேஜ்ஜில் தந்திருந்த புத்தகத்தில் இருந்து பீஸ் மற்றும் ஹாஸ்டல் பீஸ் போன்றவற்றi கணக்கிட்டபோது மயக்கமே வந்தது. என்னடா இவ்ளோ பணம் போட்டுயிருக்கானுங்க. அதோட நம்ம செலவு வேறயிருக்கு. நம்ம ஊர்ல படிச்ச இதல கால்வாசிக்கூட ஆகாதேட என்றேன். முதல்ல சீட் கிடைக்குதான்னு பாக்கலாம் அப்பறம் பேசிக்கலாம் என்றான் ஜான். 

கிறிஸ்டியன் காலேஜில் ஜான்க்கு பி.காம் கிடைத்திருந்தது. எனக்கு கிடைக்கவில்லை. பச்சையப்பாவில் எனக்கு எக்கனாமிக்ஸ் கிடைக்க அவனுக்கு கிடைக்கவில்லை. சென்னை வேணாம்டா ஊருக்கு போகலாம் என பேசியபடி இருவரும் ஊர் வந்து சேர்ந்தோம். 

வீட்டுக்கு வந்ததும் என்னடா அப்ளிக்கேஷன் போட்டாச்சா. 

போட்டுட்டன். அங்க போய் படிக்கறதுக்கு பதிலா இங்கயே எங்கயாவது சேரலாம்ன்னு இருக்கன். 

ஏன் ?.

ரொம்ப காசு ஆவுது. 

பணம் வேண்ணா கட்டறன்.

வேணாம். இங்கயே ஏதாவது ஒரு காலேஜ்ல சேந்துக்கறன்.

ஏதோ பண்ணு என எழுந்து துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வெளியே போனார். 

மறுநாள் நானும் ஜானும் வேலூர் முத்துரங்கம் கவர்மென்ட் ஆர்ஸ் காலேஜில் பி.காம்க்கு அப்ளிக்கேஷன் வாங்கி பில் பண்ணி பாக்சில் போட்டுவிட்டு வந்தோம். ஜீன் மாதம் இரண்டாம் வாரம் பள்ளியில் சர்டிப்கெட் வாங்க கிளம்பினோம். வழியில் மச்சான் பாஸ் பண்ணியாச்சி சுவீட் வாங்கிட்டு போகலாம் வாத்தியார்க்கு தரனும்டா என்றான் ஜான். 

நான் வாங்கல நீ வேண்ணா வாங்கு.

ஏய் ச்சீ வாங்கு. 

நான் யாருக்கும் தரல. நீ வாங்கிக்கிட்டு வாடா. 

ஜான் லட்டு ஒரு கிலோ வாங்கிக்கொண்டு வந்தான். சைக்கிளில் கிளம்பினோம். ஸ்கூல் உள்ளே மரத்தடியில் ஆனந்தும், குமாரும் நின்றிருந்தனர். 

அவன்களுக்கு கைகாட்டியபடியே அருகில் போய் சைக்கிளை நிறுத்திவிட்டு ஏன்டா நிக்கறிங்க.

க்ளாஸ் நடக்குதுடா. 

போங்கடாங்க. வாங்கடா என ஜான் அழைத்து போனான். ஒவ்வொரு வகுப்பாக போய் எங்களுக்கு பாடம் நடத்திய தமிழ் ஆசிரியர், இங்கிலீஸ் டீச்சர், அக்கவுண்ட்ஸ் சாரிடம் பாஸ் பண்ணிட்டோம் சார் என பாக்ஸை நீட்டினான்கள். நான் வெளியே நின்றேன். 

எச்.எம் ஒரு வகுப்பில் இங்கிலீஸ் கிளாஸ் எடுத்துக்கொண்டுயிருந்தார். நானும் அவனுங்களுடன் உள்ளே போனேன். 

சுவீட் எடுத்தவர் 

என்னை பார்த்து, ஃபெயிலா எனக்கு தெரியும்டா, என்னை எதிர்த்து பேசறவன்யெல்லாம் இப்படித்தான் போவான். மூஞ்ச பாரு என பேச 

சைலண்டாக நின்றேன். 

சுவீட் தந்த நண்பன்கள் கமுக்கமாக சிரித்தபடியே அவன் பாஸ் பண்ணிட்டான் சார்.

ஆச்சர்யமானவர். 

என்ன மார்க் ? 

923. 

இனிமேலாவது ஒழுங்காயிரு என்றார். 

பீ.டி சார் ரூம் அருகே வந்ததும் ஜானிடம் இருந்த சுவீட் பாக்ஸை வாங்கி நான் நீட்டினேன். 

ம். 

என்ன பண்ணப்போற ?

பி.காம் சார். 

நல்லா படிக்கனும். அடிக்கடி வந்துட்டு போ 

சரிங்க சார். 

பள்ளியை விட்டு வெளியே வந்தோம். ஆனந்த் தான் ஆரம்பித்தான் மச்சான் நாம நாளு பேருமே பாஸ் பண்ணியாச்சி இன்னைக்காவது எங்க கூட சேர்ந்து தண்ணீ அடிங்கடா என்றான்கள் ஜானும், ஆனந்த்தும். 

நான் பயந்து போய் இல்ல மச்சான் எனக்கு அந்த பழக்கமேயில்ல. அதோட ஊர்க்காரன் யாராவது பாத்தாலோ வீட்டுக்கு தெரிஞ்சாலோ அவ்ளோ தான். நான் மட்டான் என உண்மையிலேயே பயந்தேன். 

மச்சான் பீர் ஒன்னும் பண்ணதுடா என சமாதானம் செய்தான் ஆனந்த்.

டேய் சாமிகளா ஆளைவிடுங்க என தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டேன். என்னைப்போல் தான் குமாரும் பயந்தான். 

அந்த மயிரூ கதையெல்லாம் வேணாம் ஒழுங்கா வாங்கடா.

ஜான் என்னிடம் சும்மா டேஸ்ட் பண்ணி பாருடா. புடிச்சா குடி இல்லன்னா விடு. 

ஒருநாள் குடிச்சா அந்த பழக்கம் தொத்திக்கும்டா. 

ஒன்னும் ஆகாது வாடா என நச்சரிக்க தொடங்கினான் ஜான். 

கொஞ்சமா தான் குடிப்பன் என குமாரும் சபலத்தோடு சொல்ல என்னையும் வாடா என இழுத்தும் போனார்கள். இரண்டு பீர் வாங்கி வந்து ஒரு புதாரின் மறைவில் நின்றபடி முதல் முறையா குடிக்க போறிங்க நீங்க குடிங்கடா என ஆனந்த்தும், ஜானும் ஆளுக்கொரு பாட்டிலை ஓப்பன் பண்ணி எங்களிடம் தந்தான்கள். 

இரண்டு மடக்கு குடித்துவிட்டு ஏய் கசக்குதுடா எனக்கு வேணாம்டா என ஜானிடம் நீட்ட  அவன் வாங்கி கடகடவென குடித்தான். 

குமாரும் என்னைப்போல் தயங்கி தயங்கி கால்வாசி குடித்துவிட்டு போதும்டா என ஆனந்திடம் தர அவன் பாட்டிலை காலி செய்தான். 

வாய் நாற்றம் வரக்கூடாதுயென பபுள்காம் வாங்கி போட்டுக்கடா என்ற ஜான் மச்சான் நீ கிளம்பு என என்னை அனுப்பிவிட்டான். நானும் பீர் குடிச்சா இப்படித்தான் கசக்கும் போல என எண்ணியபடி வீடு வந்து சேர்ந்தேன். 

15 நாள் இருக்கும் ஒருநாள் போஸ்ட்மேன் வந்து அந்த கடிதத்தை தந்தார். வேலூர் முத்துரங்கம் காலேஜ்ஜில் பி.காம் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது இந்த தேதியல் வந்து சேர வேண்டும் பணத்தை உடனே கட்டவேண்டும், சர்டிப்கெட்டுடன் வாருங்கள் என கடிதம் சொன்னது. இதைப்பற்றி ஜான்க்கு போன் பண்ணி சொல்ல தலைவர் வீட்டுக்கு போய் அக்கா ஒரு போன் பண்ணனும் என்றேன். பண்ணிக்கடா என்றார்கள். அவன் வீட்டுக்கு போன் செய்தேன். ஜானின் அம்மா தான் எடுத்தார். 

ம்மா நான் ராஜா போசறன். 

எப்படிப்பா இருக்கற

நல்லாயிருக்கம்மா 

ஜான்யில்ல. 

அவன் உன்னை பாக்கதான் போறன்னு சொல்லிட்டு கிளம்பனாம்ப்பா. 

சரிம்மா என போனை வைத்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். 

சற்று நேரத்தில் பைக்கில் வந்த ஜான் மச்சான் பி.காம் கிடைச்சியிருக்குடா என்றான். எனக்கும் கிடைச்சிடுச்சிடா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் லட்டர் வந்தது உடனே வீட்டுக்கு போன் பண்ணன். அம்மா நீ இங்க வர்றன்னு சொன்னாங்க. அதான் வெயிட் பண்ணன். 

உள்ளேயிருந்து வந்த அம்மா, வாப்பா என அழைத்தார். 

வர்றன்ம்மா என்றவனிடம். 

இப்பத்தான் காலேஜ்ல சீட் கிடைச்சியிருக்குன்னு சொன்னான். உனக்கு எப்படிப்பா எனக்கும்தாம்மா. இரண்டு பேரும் ஒரே காலேஜ், ஒரு குரூப் என்றான் குதுகலத்தோடு. 

சந்தோஷம்ப்பா. டைம்மாயிடுச்சி இரண்டு பேரும் வந்து சாப்பிடுங்க. 

சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தோம். புங்க மரத்தின் கீழ் பசங்கள் அமர்ந்திருந்தனர். எங்களை பார்த்து கை காட்டி அழைத்தான்கள். 

வாடா ஊர் பசங்க அறிமுகப்படுத்தறன் என அழைத்து சென்றேன். இவன் ஸ்கூல் பிரண்ட் ஜான் என அறிமுகப்படுத்திவிட்டு அவன் ஏழுலை, இவன் ஜீவா, நந்தன், கார்த்தி என ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திவிட்டு காலேஜ்ல சீட் கிடைச்சியிருச்சிடா அதான் சொல்லிட்டு போலம்ன்னு வந்துயிருக்கான். 

இன்னும் எவ்வளவுதான்டா படிப்ப. ஏதாவது வேலைக்கு போடா என்றான் கார்த்தி. 

டேய் இப்ப படிச்சத வச்சிக்கிட்டு மாடு தான் மேய்க்கனும். கம்முனுயிருடா சாமி. சரி வாங்கடா ஏரிக்கரைக்கா போய்ட்டு நிலத்த காட்டிட்டு வரலாம் என கூப்பிட எல்லோரும் எழுந்து நடக்க தொடங்கினோம். ஏரிக்கரை மேல் பேசிக்கொண்டு நடக்க எதிரே மாடு ஓட்டிக்கொண்டு வந்த முத்து. எங்களை பாத்து மாட்டை இழுத்து பிடித்தவன் எங்கடா என்னை மட்டும் விட்டுட்டு போறிங்க. 

உன் மாமன் பொண்ணு சமைஞ்சியிருக்காலம் ஆலம் சுத்தபோறோம் என்றான் கார்த்தி நக்கலாக.

உன்னித மூடு. 

ஏய் இது நம்ம ராஜாவோட பிரண்ட் டவுன்லயிருந்து வந்துயிருக்காரு. அதான் சும்மா ஏரிக்கரை பக்கம் வந்தோம் என்றான் கார்த்தி. 

அப்படியா. உங்க பேர் என்னங்க. 

ஜான். 

இருங்கடா நானும் வர்றன் என பிடித்திருந்த மாட்டை செடியில் கட்டபோக.

கடுப்பான ஆனந்தன், டேய் எங்ககூட சுத்தவராம புதுமாப்பிளையா போய் ரெடியாகற வழியப்பாரு. 

உடனே ஜீவா, என்னடா புது மாப்பிளை அதுயிதுன்னு அவனை கலாய்க்கற. 

இன்னைக்கு நைட் இந்த நாதாரிக்கு நிச்சயதார்த்தம். பொண்ணு வீட்ல நடக்குது. இந்த நாய் நம்மக்கிட்ட சொல்லவேயில்ல. காலையில இவுங்கம்மா எங்க வீட்ல வந்து பேசிக்கிட்டுயிருந்தாங்க. அப்பத்தான் எனக்கே தெரியும். 

ஏய் சொல்லவேயில்ல என நான் கேட்க. 

டேய் சும்மாயிடா கூடவேயிருக்கற எங்களுக்கே சொல்லல இந்த நாயி. 

சும்மாயிருங்கடா. 1 வாரத்துக்கு முந்தி தாண்டா பேச ஆரம்பிச்சாங்க. ஓ.கேயாகிடுச்சி. காலையில சொல்லலாம்ன்னு பாத்தன். அதுக்குள்ள கரண்ட் வந்ததால கரும்புக்கு தண்ணி பாய்ச்ச போனான். இப்பத்தான் வர்றன். 

யார்ரா பொண்ணு என கேட்டேன். 

மஞ்சு. 

லேசான வெட்கத்துடன் அவன் சொன்ன அந்த பெயர். என் இதயத்தில் நெருப்பை சொருகியதைப்போல் இருந்தது. 

மஞ்சுவோட அக்கா ஓடிப்போய்ட்டாயில்ல. அதல மனசு ஒடிஞ்சி போன அவுங்கப்பன் சீக்கிரமா மஞ்சுவுக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணியிருக்காரு. எங்கய்யன் இருவது நாளைக்கு முன்னாடி டீ குடிக்கறயிடத்தல மஞ்சு அப்பன்க்கிட்ட பையன்க்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு இருக்கன்னும் சொல்லிக்கிட்டு இருக்கும்போது, அந்தாளு நானும் எம்பொண்ணுக்கு மாப்பிள பாக்கறன்னு சொல்லியிருக்காரு. பேச்சு வாக்குல உன் பொண்ண தர்றிய்யான்னு எங்கய்யன் கேட்க அவரும் சரிண்ணியிருக்காரு. இன்னைக்கு முறையா நிச்சயதார்த்தம் வர்ற தைல கல்யாணம் வச்சிக்கலாம்ன்னு சொல்லியிருக்காங்க என்றான். 

அவன் பேசுவது காதில் விழுந்தாலும் என் மனதில் ஒரமாக தூங்கிக்கொண்டிருந்த காதல் பிசாசு எழுந்துவிட்டது. 

தொடரும் ………………..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக