வியாழன், ஜனவரி 26, 2012

சுகமான சுமைகள்………… பாகம் 13.
குரல் வந்த திசையை திரும்பி பார்த்தபோது சீனியர் மாணவர்கள் மூன்று பேர் அமர்ந்திருந்தனர். அவர்களின் எதிரே தாவணி போட்ட பெண் ஒருத்தியும், சுடிதார் போட்ட பெண் ஒருத்தியும் நின்றிருந்தனர். 

வாங்கடா இங்க என்றார்கள் எங்களை பார்த்து. 

மச்சான் ராக்கிங் பண்ணுவாங்கன்னு நினைக்கறன் என கிசுகிசுத்தான் ஜான். 

வா பாத்துக்கலாம். 

கிட்டே போனதும், சீனியர் உட்கார்ந்துயிருக்கறோம். வணக்கம் வைக்கமாட்டிங்களாடா?

ஸாரி சீனியர் நீங்க யார்ன்னே தெரியாது அதான் வணக்கம் வைக்கல. 

டேய் எங்கள தெரியலயா என ஒருவன் குரலை உயர்த்த. 

நிஜமா நீங்க யார்ன்னு தெரியல சீனியர். 

நொல்லக்கண்ணன்டா இவன் என சொல்ல மற்றவர்களும் சிரித்தனர்.

கடுப்பாகி, கண்ணு நல்லாதான் இருக்கு சீனியர். என் கண்ணுக்கு மனுஷங்க மட்டும் தான் தெரியறாங்க. மாடு, கழுதை, எறும்பு தெரியறதில்ல சீனியர் என்றதும் 

சுடிதார் போட்ட பெண் க்ளுக் என சிரித்தால். 

திமிரா பாத்தியா இவனுக்கு. எங்கள மாடுங்கறியா என ஒருவன் எகிற. 

உங்கள சொல்லுவன்னா சீனியர் பம்மியதும் 

மற்றொருவன் உங்க பேர் என்னடா ?.

பெயரை சொன்னதும். 

நீங்க பஸ்ட் இயர் ஸ்டூடன்ட் சீனியர்க்கிட்ட மரியாதை இருக்கனும், சொல்றத செய்யனும் புரிஞ்சதா?.

செய்யறோம் சீனியர் என்றான் ஜான். 

திரும்பி பாக்காம போங்கடா. 

திரும்பி நடக்க தொடங்கினோம். கொஞ்ச தூரம் வந்ததும் மச்சான் தைரியமா பேசிட்ட. எப்படீடா?. 

காலேஜ்க்கு வர்றதுக்கு முன்னாடியே இங்க படிச்ச ஒரு அண்ணன்க்கிட்ட ராக்கிங் பண்ணா என்ன பண்றதுன்னு கேட்டன். அவர் தான் ஆரம்பத்தலயே ராங்கா பேசிடு. அப்பறம் உன்கிட்ட கொஞ்சம் சாப்ட்டா நடந்துக்குவானுங்க. இல்லன்னா அவனுங்க படிச்சி முடிக்கற வரைக்கும் சீண்டிக்கிட்டே இருப்பானுங்கன்னாரு. அதான் கொஞ்சம் சவுண்டா பேசனன் ஒர்க்கவுட்டாகிடுச்சி. பயந்துயிருந்தோம் கலாச்சியிருப்பானுங்க என பேசியபடி வகுப்பை தேடி வந்து சேர்ந்தோம். ஒத்த நோட்டுடன் காலேஜ்க்கு வருவது என்பது புதுசாகயிருந்தது. ஸ்கூல் லைப்க்கு தலைகீழாக காலேஜ் லைப் இருந்ததால் அதை புரிந்துக்கொள்ள நாளானது. அடுத்த பெஞ்சில் இருந்த அகிலன், தயா, ரமேஷ் எங்கள் இருவருடன் நண்பரானார்கள். காலேஜ்ஜில் எங்களுக்கு வைத்த பெயர் பஞ்சபாண்டவர். 

தினமும் வீட்டுக்கு வந்து போவது கஸ்டாக இருக்கிறது என்று வீட்டில் போராடி அனுமதி வாங்கி ஜான் இருந்த ஏரியாவிலேயே அவன் தெருவுக்கு இரண்டு தெரு தள்ளி ரூம் எடுத்து தந்தான். ரமேஷ்சும் கிராமத்தில் இருந்து வருவதால் என் ரூம் மெட்டானான். 

ஒருநாள் மதியம் ஆபிஸ் ரூம் போய் ஸ்காலர்ஷீப்க்கு அப்ளிக்கேஷன் தந்துவிட்டு மாடிப்படி ஏறிக்கொண்டுயிருந்தேன். படியில் ஒருபெண் நோட் புத்தகங்களை தவறவிட்டுவிட்டு அதை எடுத்துக்கொண்டுயிருந்தாள். நான்கு படி தாண்டி கிடந்த இரண்டு புத்தகத்தை எடுத்து தந்தபோது தான் அவளின் முகத்தை பார்க்க நேரிட்டது. முதல் நாள் காலேஜ் வந்தப்ப ராக்கிங் பண்ண சீனியர் பசங்களோட பாத்த பொண்ணு மாதிரியிருக்கே என மனதுக்குள் எண்ணியபடி புக்கை தந்தபோது வாங்கிக்கொண்டு என் முகத்தை பார்த்தாள். அப்போது புரபஸர் ஒருவர் படியில் இறங்கி வர அந்தயிடத்தை விட்டு வந்துவிட்டேன். 

மறுநாள் முதல் வகுப்பே கட் என்பதால் நான், ஜான், அகிலன் மூவரும் ஒத்த நோட்டுடன் புங்கமரத்தின் கீழ் உட்கார்ந்து கதையளந்துக்கொண்டுயிருந்தோம். மச்சான் நம்ம க்ளாஸ்ல எல்லாம் மொக்க பிகர்களா இருக்காளுங்கடா. சைன்ஸ் குரூப்ல போய் பாரு. சூப்பர் பிகர்ங்க கலக்குதுங்க. அவனுங்க மூனு வருஷத்துக்கு கொடுத்து வச்சவனுங்க என ஜான் பீல் பண்ண. 

நமக்கு கொடுத்து வச்சது அவ்ளோ தான்டா என்றான் அகிலன். 

ஏய் அதான் இங்கிலிஸ் க்ளாஸ் கம்பய்ன் பண்ணி தானே வைக்கறாங்க. அப்ப பாருங்களேன்டா. 

ஏன்னடா மச்சான் இப்படி பேசற. அழக மணி கணக்க உட்காந்து ஆராதிக்கனும்டா வாரத்தல இரண்டு நாள் தான் கம்பைன் க்ளாஸ் இத வச்சிக்கிட்டு என்ன பண்றத்து. 

அதுக்கு என்ன பண்ணனும்கிற. 

மச்சான் என் கொள்கைய மறந்துட்டியேடா.

என்ன கொள்கை ?.

டேய். ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணி காலேஜ் முடியற வரைக்கும் அவளோட 3 வருஷத்த ஓட்டனும்ன்னு காலேஜ் வந்தன்னைக்கே சொன்னனேடா என்றான் ஜான். 

மச்சான் சூப்பர் கொள்கை. நான் உன் கட்சியில சேர்ந்துக்கறன் என குதுகலித்தான் அகிலன். 

வேணாம்டா, அவன் மணிக்கு ஒரு பொண்ண சைட் அடிப்பான். பத்தாவது படிக்கும் போது சென்ட் அடிச்சிக்கிட்டு வந்து நான் ஒரு பொண்ண காதலிக்கறன்னு சொன்னான். 3 மாசத்துக்கப்பறம் அவ வேற ஒருத்தனை காதலிக்கறான்னு சொன்னவன், இப்ப வேற ஒருத்திய காதலிக்கறன்னு சொன்னான். ஹோட்டலுக்கு கூப்ட்டும் போய் செலவெல்லாம் பண்ணான். மச்சினிச்சி கூட கரெக்ட்டாகுதுன்னு அளந்தான். அடுத்த 6 மாசத்துல வந்து அவளுக்கு கல்யாணம் நிச்சியமாகிடுச்சின்னான். இதுவரை 5 பொண்ண காதலிக்கறன்னு சொல்லிட்டான். ஸ்கூல் முடிஞ்சி காலேஜ் வந்துயிருக்கான். பாரு வாரத்துக்கு ஒரு பொண்ணு காதலிக்குதுன்னு சொல்லி உயிர வாங்குவான். இவனைப்பத்தி தெரியாம செட் சேராத சொல்லிட்டன். 

போடாங்க. நான் உண்மையா தான் அவளுங்கள காதலிக்கறன். அவளுங்க அப்படி இருக்கமாட்டேன்கிறாளுங்க. 

மூடு. ஒருத்திய காதலிக்கும்போதே கூடயிருக்கற அவளோட ப்ரண்ட்டுக்கும் ரூட் போட்டா உன்ன காதலிக்கறவ பாத்துக்கிட்டு சும்மாயிருப்பாளா?. ஆதான் கழட்டி விடறா என்றதும்.  

ஏய் அடங்கு. காதலிச்சா இன்னோரு பொண்ணுக்கிட்ட பேசக்கூடாதா?. அவளுங்க என் பணத்தல ஜாலியா இருந்துட்டு வேற ஒருத்தன் கிடைச்சவுடனே பிரிஞ்சி போக ப்ளான் போட்டுக்கிட்டு சும்மாங்காட்டியும் நீ எங்கிட்ட மட்டும் தான் பேசனம்ன்னு சொல்றாத ஒத்துக்க சொல்றியா என கேட்டான் ஜான். 

உன்னப்பத்தி எனக்கு தெரியும். வாய மூடிக்கிட்டு சும்மாயிருடா என்றதும். 

டேய் காலையில வந்தா வா. இல்லன்னா விடு என்றவனை பார்த்து. ஒன்னுக்கூட சிக்காது பாரு என்றதும். 

டேய் பத்தே நாள்ள ஃபிகர்கள சைட் அடிச்சி அதல நல்லதா பாத்து ஒன்ன புடிக்கறன்னா இல்லையான்னு பாரு என சவால்விட்டான் ஜான். மச்சான் நான் உன்பக்கம்டா என்றான் அகிலன். 

இரண்டு பேரும் உருப்பட்டமாதிரி தான் என அவன்களை பார்த்து சொல்லிக்கொண்டுயிருக்கும் போது யாரே பின்னால் இருந்து என் கண்ணை இறுக்கி மூட யாரு என யோசித்தபடியே இருக்க ஜான் தான் மாச்சான் என கத்தியவன் திடீரென சைலண்டானான். 

யாராயிருக்கும் என யோசித்தபடி கண்ணை மூடிக்கொண்டுயிருந்த கை விரல்களை பிடித்தபோது வளையல்கள் தட்டுப்பட சடாரென எழுந்தேன். அப்பா என்ற பழக்கப்பட்ட ஒரு பெண்ணின் குரல் வரவும், கண்களை மூடியிருந்த கை விலகியிருந்தது. 

யாராது என பார்த்தபோது கால் முட்டியை தேய்த்தப்படி நின்றிருந்தாள் தேவி. அவளுடன் அவளும் …………..

தொடரும்………..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக