ஞாயிறு, ஜனவரி 29, 2012

சுகமான சுமைகள்………… பாகம் 14.
ஏய் லூசு, இப்படியா எழுந்திருக்கறது என வலியிலும் திட்ட

ஸாரிய்யா என்றதும் கொஞ்சம் சமாதானம்மானவளிடம். நீ எங்க இந்தப்பக்கம்?.

பக்கத்தில் இருந்தவளை காட்டி இவளை பாக்கலாம்ன்னு வந்தன். நீயும் இங்கதானே படிக்கற அப்படியே உன்னயும் பாத்துட்டு போகலாம்மேன்னு தேடனன். பசங்க இங்க இருக்கறதா சொன்னானுங்க. அதான் வந்தன் என்றாள் தேவி. 

ஏய் நிறுத்து அவனை மட்டும் தான் பாக்க வந்தன்னா என்னை பாக்க வரல. அப்ப அவனோடவே பேசு நான் கிளம்பறோம் என ஜான் கிளம்ப. 

ஓ அய்யாவுக்கு கோபம்மெல்லாம் வருமா என தேவி ஜானை கலாய்க்க. 

பின்ன அவனை பாக்க வந்தன்னு சொன்னா இத கேட்கற என் சின்ன இதயத்துக்கு வலிக்காதா என ரொமான்ஸ் மூடுக்கு மாறினான். 

டேய் இது உனக்கு நல்லதுக்கில்ல சொல்லிட்டன். 

ஆரம்பிச்சிட்டியாடா. 

தேவி சிரித்துக்கொண்டே. விடுங்கடா.

ஸ்கூல் முடிஞ்சதுக்கப்பறம் ஒரே ஒருமுறை தான் சந்திச்சோம். பாக்கவே முடியல. வீட்டுக்கு வரவேண்டியதானேடா. 

எங்க போய் பாத்துட்டு வரலாம்ன்னு கூப்ட்டா இவன் வந்தா தானே என்றான் ஜான். 

என்னை பாக்கனும்கிற நினைப்பெல்லாம் இருக்க உனக்கு.

என்ன இப்படி கேட்டுட்ட தினமும் உன்னை நினைச்சி பாப்பன் தெரியுமா. 

பொய் சொல்லாத.

சத்தியமா என ஜான் சொல்ல தேவியின் முகத்தில் ஒரு சின்ன புன்முறுவல். 

இதை பாத்துக்கொண்டிருந்த நான் தேவிய மட்டுமாடா நினைக்கற என கேட்க என் பக்கம் திரும்பி முறைத்தான். தேவி புரியாமல் என்ன என்றாள். 

நான் உடனே ஒன்னும்மில்ல. நீ ஏன் காலேஜ் போகல?. 

எங்க ப்ரபஸர் ஒருத்தர் ஆக்சிடன்ட்ல நேத்து இருந்துட்டாரு. அதனால இன்னைக்கி லீவு விட்டுட்டாங்க. அதான் இங்க என் ப்ரண்ட்ட பாக்க வந்தன். அப்படியே உங்களையும் பாக்க வந்தன். 

இவுங்க எங்க படிச்சாங்க. இவுங்களப்பத்தி சொன்னதேயில்ல.

ஸாரிப்பா இவப்பேரு ப்ரியா என் பக்கத்து வீடு என ஆரம்பிக்கும்போதே. 

அகிலன் உள்ளே புகுந்து, கேள்ஸ் ஸ்கூல்ல படிச்சாங்க. இப்ப இங்கிலீஸ் லிட்டரேச்சர் பஸ்ட் இயர் சேர்ந்துயிருக்காங்க. தினமும் சைக்கிள்ள தான் வருவாங்க. க்ளாஸ்ல அதிகமா பேசமாட்டாங்க. வெளியில வந்தா நிறையப்பேசுவாங்க என ஒப்பித்தான். 

எப்படிடா என ஆச்சர்யமாக பார்த்தோம். 

இல்லடா இவன் தான் விசாரிக்க சொன்னான். அதான் என ஜானை கைகாட்ட, உடனே ஜான், முதல் நாள் சீனியர் பசங்க ராக்கிங் பண்ணும்போது அங்க இவுங்களயும் பாத்தம்மில்ல அதனால விசாரிக்க சொன்னன் என்றான். 

எங்கள் முன் முதல் முறையாக வாய் திறந்து எங்களையும் ராக் பண்ணானுங்க. நீங்க வந்து ரப்பா பேசனதால டென்ஷனாகி எங்களையும் விட்டுட்டானுங்க என்றாள். 

அப்படியா. உங்களை சீனியர்ன்னு நினைச்சிட்டோம் என்றான் ஜான். 

எங்களுக்குள் அறிமுகப்படலம் நடந்து முடிந்த பின். ஆமாம் உங்கள பஞ்சபாண்டவர்ன்னு காலேஜ்ல சொல்றானுங்க. எங்க மீதி இரண்டு பேர். 

சார்ங்க காதலிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதான் க்ளாஸ்லயே இருக்கானுங்க என்றேன். சிறிது நேரம் பேசிவிட்டு நாங்க கிளம்பறோம் என்ற தேவி. 

என் ஸ்கூட்டி மக்கர் பண்ணுது. என்ன ப்ராபளம்ன்னு வந்து பாரு ராஜா என அழைத்தாள். எனக்கு சைக்கிள் ரிப்பேரே தெரியாது இதல எங்க ஸ்கூட்டி. இதோ இவனை அழைச்சிம் போ என்றதும் ஜான் நீ வா என்றவள் ப்ரியா நீ இங்கயே இரு நான் போய் வண்டிய எடுத்துக்கிட்டு வர்றன் அப்பறம் போலாம் என ஜானை அழைத்துக்கொண்டு கிளம்பினாள்.

நான் வாயாடியா என ப்ரியா அகிலனை முறைக்க.

என்ன சொல்வது என தெரியாமல் முழித்தவன் இல்ல அவன் தான் என இழுத்தான். 

விடுங்க மேடம். ஒரேயடியா பந்தா பண்றிங்களே, உண்மையைத்தானே சொல்லியிருக்கான் என சிரித்துக்கொண்டே கூறியதும். என் பக்கம் கோபமாக திரும்பினாள். மச்சான் நான் எஸ்ஸாகறன் கிசுகிசுத்தவன் நான் கிளம்பறங்க எனச்சொல்லிவிட்டு வேகமாக இடத்தை காலி செய்தான். 

சில நொடிகள் மவுனத்திற்க்கு பின் அப்பறம் ப்ளான் பண்ணி எல்லாரையும் அனுப்பிட்டிங்க. என்ன விஷயம் சொல்லுங்க. 

ஆச்சர்யத்துடன் என்னை நோக்கியவள். எப்படி கண்டுபிடிச்சிங்க என கேட்டாள். 

நான் பயங்கர டென்ஷன் பார்ட்டி கோபத்தல அடிக்க கூட செய்வன். அது தேவிக்கும் தெரியும். அப்படியிருக்கும் போது ஒரு வாயாடி பொண்ண தனியா இங்க விட்டுட்டு அதுவும் ஜானை கூப்ட்டுக்கிட்டு போறான்னா ப்ளான் இல்லாம வேற என்ன.  

இந்த வாயாடி உங்களை தனியா சந்திக்கனம்ன்னு தோணுச்சி அதான்..

எதுக்கு?. 

இல்ல சீனியர் பசங்க முன்னாடி ரவுடி மாதிரி பேசனிங்களா, நான் உங்கள ரவுடின்னு நினைச்சிக்கிட்டன். ஒருநாள் தேவி வீட்ல ஸ்கூல்ல எடுத்த குரூப் போட்டோவுல உங்களைப்பாத்தன். உங்களை காட்டி கேட்டப்ப உங்களைப்பத்தி சொன்னா அதுக்கப்பறம் தான் நான் நினைச்சது தப்புன்னு தெரிஞ்சது. 

நீங்க நினைச்சத விட ரொம்ப மோசமானவன்னு தெரிஞ்சதோ?

சேச்சே. இல்ல. நான் நினைச்சது தப்புன்னு உங்கள நேர்ல பாத்து ஒரு ஸாரி கேட்கலாம்ன்னு நினைச்சன் அதான் அவளை அழைச்சி வந்தன் என்றாள். 

பரவாயில்ல. நான் கூட உங்களை தனியா பாக்கனும்ன்னு எதிர்பார்த்தன். 

ஏன்?.

கீழ கிடந்த நோட் புக் எடுத்து தந்தன் நன்றின்னு ஒரு வார்த்தை சொல்லலயேங்கற கோபம்தான். 

இல்ல. உங்களை பாத்து பயந்துட்டன் அதனால தான். 

நான் பாக்கறதுக்கு பேய் மாதிரி இருக்கறனா என்றதும். 

இல்லைங்க என்றவளிடம் 

அதுயென்ன நான் வந்ததுயிலயிருந்து வாங்க, இல்லைங்க, போங்க, ஸாரிங்கன்னு என்னை ஏதோ பெரிய மனுஷன்க்கிட்ட பேசற மாதிரி பேசறிங்க. நானும் பஸ்ட் இயர் தான். இந்த மரியாதையெல்லாம் வேணாம். பேர் சொல்லியே கூப்பிடுங்க என சொல்லும் போதே ப்ரியா ஜானை பின்னால் உட்கார வைத்துக்கொண்டு ஸ்கூட்டியில் வந்து நின்றாள். 

வண்டியை விட்டு இறங்கிய ஜானை பார்த்து, இன்னைக்கு உன் மானத்த காலேஜ்ல வாங்கப்போறான் பாரு.

டேய் அடங்குடா என்றான் ஜான். 

ஏதாவது சொன்னான்னா வந்து சொல்லுடீ இவனை கொன்னுடறன் என ஜானை முறைக்க. 

அம்மா தாயே நீ கிளம்பு என ஜான் ஜகா வாங்கினான். 

வாடீ போலாம் என ப்ரியாவை அழைக்க அவளும் கிளம்பினால். 

எங்க போறிங்க என கேட்டேன். 

சினிமாவுக்கு.

ப்ரியாவை காட்டி அவுங்களுக்கு சினிமா புடிக்காதே என்றதும்

வாரா வாராம் சினிமாவுக்கு போறவங்க நாங்க எங்கக்கிட்டயேவா என தேவி மறுக்க.

அமைதியாக பின்னால் நின்ற ப்ரியா என்னை பார்த்தவள் தேவி நீ கிளம்புடீ. மதியம் வீட்டுக்கு வர்றன் என்றாள். 

எங்களை அதிர்ச்சியுடன் தேவியும் - ஜானும் பார்த்தார்கள். 

தொடரும் ……………….


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக