என் மனதில் இருந்த காதல் பிசாசு எழுந்ததும், மஞ்சு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாளா?, அவளுக்கு முழு சம்மதமா?, இவ்வளவு சீக்கிரமாவா அவளாள என்னை மறக்க முடிஞ்சது?, நான் தான் அவளை மறக்க முடியாம தவிக்கறன்னா?, நான் காதலிச்சன்னு முத்துவுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பான்?, அவன்க்கிட்ட சொல்லிடலாமா?, சொன்னா எப்படி எடுத்துக்குவான் ?, எனக்கு பொண்ணு தாங்கன்னு கேட்டுடலாம்மா என மனம் பலவாறாக குழம்பி தத்தளிக்க ஆரம்பித்தது.
யாரோ என்னை உலுக்கியபோது தான் நினைவுக்கு வந்தேன். சுற்றிலும் பார்த்தேன். ஏழுமலை என் தோல் மேல் கைவைத்தபடியிருக்க அருகே ஜான், ஜீவா மட்டுமே என்னை பார்த்தபடி நின்றிருந்தனர்.
அவனுங்க எங்கடா?.
முத்துவோட போயிருக்கானுங்க. வந்துடுவானுங்க.
நீங்ககூட சொல்லவே இல்லையேடா?.
என்னத்த சொல்றது. இரண்டு நாளைக்கு முன்னாடி தான் சொன்னான். நீ மறந்துட்டன்னு சொன்ன. சரி எதுக்கு உங்கிட்ட சொல்லி சங்கடப்படுத்தனும்மேன்னு தான் விட்டுட்டோம். முத்துவுக்கும் எதுவும் தெரியாது. இப்ப சொன்னாக்கூட அவன் வேணான்னிடுவான். சொல்லட்டா என கேட்டான் ஜீவா.
மனம்மோ தவியாய் தவித்தது. கண்ணீர் முட்டிக்கொண்டு வர. ஏன் கண் கலங்குவதை கண்ட ஜீவா.
ஏய் என்னடா நீ. படிச்சவன்னு சொல்ற. இதுக்கெல்லாம் போய் அழுதுக்கிட்டு. டேய் முத்துவ கூப்ட்டு வா அவன்க்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு நைட்க்கு நிச்சயத்துக்கு முன்னாடியே பொண்ண தூக்கலாம் என்றான்.
ஏழுமலை முத்துவை அழைக்க வேகமாக நடந்தான்.
ஏழுமலை வேகவேகமாக முத்துவை அழைக்க போனான்.
மச்சான் சொல்றத கேளு, அது ஒரு வாழ்க்கையை தொடங்கப்போவுது விட்டுரு. முடிஞ்சது முடிஞ்சதா இருக்கட்டும் வீணா எதுக்கு இப்ப பழசை கிளருற. இப்ப ஏதாவது நீ முடிவு பண்ண அத இரண்டு பேருக்கும் பிரச்சனை. இரண்டாவது பொண்ணும் ஓடிப்போய்டுச்சின்னா ஊர்ல ரொம்ப கேவலமா பேசுவாங்க. அதல அவுங்க ஏதாவது பண்ணிக்கிட்ட வாழ்க்கை முழுக்க மனசுல சுமையா இருக்கும் சொல்றத கேளு. காலேஜ்ல சீட் கிடைச்சாச்சி. எல்லாமே இனிமே மறந்துடும் சொல்றத கேளு என கெஞ்சினான் ஜான்.
நான் மெல்ல, மாப்ள அவனை கூப்பிடுடா என்றதும் ஜீவா தயக்கத்துடன் ஏய் நில்லுடா என கத்த ஏழுமலை நின்றான். இங்க வா என அழைக்க வந்தவன் என்னடா?.
வேணாம் மச்சான். காதலிச்சோம். பிரிஞ்சாச்சி. மனசுல அந்த நினைவு இருக்குது. இல்லன்னு சொல்லல. ஆனா இனி மஞ்சு முத்துவோட மனைவிய ஆகப்போகுது. ஆத கெடுக்க வேணாம். இன்னைக்கு அவள போய் வான்னு கூப்பிட்டாலும் வராது. அதுக்கு குடும்பம் முக்கியம். அப்படியே வந்து இழுத்தும் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஊர்ல ஒரு மாதிரியா பேசுவாங்க. அதனால சரியாவராது. அது நல்லாயிருக்கட்டும். இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேணாம். முத்துக்கு கூட தெரிய வேணாம். அவன் அப்பறம் ரொம்ப கஸ்டப்படுவான் என்றேன்.
மூவரும் அமைதியாக என்னை பார்த்தார்கள். வாங்கடா சரியாகிடும் எனச்சொல்லிவிட்டு கழனியை நோக்கி நடந்தேன். அவன்களும் வந்தான்கள். என் மனம் ஓரளவு அமைதியாக இருந்தது.
ஏரிக்கரையை விட்டு இறங்கி எங்களது கழனிக்கு வரப்பில் நடந்து போனோம். மச்சான் இளநீர் சாப்பிடுறியாடா எனக்கேட்டுவிட்டு டேய் யாராவது மரத்தல ஏறி 4 இளநீர பிச்சி போடுங்கடா என்றதும் ஏழுமலை தான் ஏறினான். போதும் போதும் எனும்போதே 10 காய்களை தள்ளியவன்.
ஏன்டா இத்தனை ?
உங்கப்பன் தேங்காயை கூட பத்தரமா பாதுகாக்கறான் அதான் ஏறுடான்னதும் ஏறி தள்ளிட்டன் என்றான்.
பம்புசெட்ல கொடுவாயிருக்கும் எடுத்துவாடா எனச்சொல்லிவிட்டு நாங்கள் மூவரும் தென்னமரத்தின் கீழே உட்காரும்போதே ஜீவா, இவன் பையன் குடிக்கற பழக்கத்த கத்துக்கிட்டானா ஜான் ?.
இவனா சரக்கு பேரை கேட்டாலே எங்கப்பா அடிப்பாருன்னு ஓடறான். இவன் எங்க குடிக்கறது. இவன் பால்டப்பி பாஸ்.
அங்கவந்தும் கத்துக்கலயா ?.
திங்கறதுக்கு மட்டும் செலவு பண்றான். சரக்கு பக்கம் மட்டும் வர்றமாட்டேன்கிறான். பீர் மட்டுமாவுது குடிடான்னு கேட்டாலே நடுங்கறான் என போட்டு தாக்கும்போதே ஏழுமலை கொடுவா கத்தியுடன் வந்து இளநீரை சீவி தந்தான். ஆளுக்கு இரண்டு என குடித்துக்கொண்டுயிருக்கும் போதே தூரத்தில் மஞ்சு மாட்டுக்கு பில் புடுங்கி எடுத்துக்கொண்டு வருவதை கண்டேன். இந்த வழியா தான் வந்தாகனும் என்ன பண்ணலாம் என யோசிக்கும் போதே ஜான் என்ன மச்சான் யோசிக்கற.
ஒன்னும்மில்லடா.
என் பக்கம்மிருந்த ஜான், அது ஒன்னும்மில்ல மஞ்சு இந்த பக்கமா வருது. அதப்பாத்து சார் உர்ருன்னாயிட்டாரு.
ஜான் திரும்பிபாத்துவிட்டு. அது மாட்டும் போகப்போகது. உனக்கென்னடா வந்துச்சி. நீ வேலையப்பாரு என்றான்.
மஞ்சு அருகில் வந்தவள் என்னைப்பார்தும் பெரியதாக எந்த ரியாக்ட்டும் காட்டவில்லை. அருகில் இருந்த ஜானை பார்த்ததும் ஆச்சர்யமாகி ஏய் ஜான் எப்படியிருக்கற?.
ம். நல்லாயிருக்கறன்.
நீ எப்படியிருக்கற?.
எனக்கென்ன. நல்லத்தான் இருக்கன்.
பாஸாயிட்டயில்ல?. அடுத்த என்ன படிக்கப்போற.
நானும் இவனும் பி.காம் சேரப்போறோம்.
அப்படியா?. எந்த காலேஜ்ல?.
இதைக்கேட்டுக்கொண்டிருந்த நான் காரணம்மேயில்லாமல் எந்த காலேஜ்ன்னு சொன்னா வந்து சேரவாப்போறாங்க. பெரிய இவனாட்டம் பதில் சொல்லிக்கிட்டுயிருக்கற. வாடா போலாம்.
ஏய் சும்மாயிருடா என்றான் ஜான். இதை வேடிக்கை பார்த்தபடி நின்றான்கள் அவன்கள் இருவரும்.
கல்யாணம்ன்னு சொன்னாங்க. வாழ்த்துக்கள் மஞ்சு.
ம்.
பெரிய இவ. இவளுக்கு வாழ்த்து சொல்றான் வர்றியா இல்லையாடா என சிடுசிடுத்தேன்.
ஏண்டா இப்படி என கேட்கும்போதே ச்சீ வா என்றேன்.
மஞ்சுவின் முகம் இருண்டு போய், கண்ணில் நீர் கோத்தது.
சரி நான் கிளம்பறன் மஞ்சுவிடம் கூறிவிட்டு வந்தவன். ஏன்டா இப்படி நடந்துக்கற?.
சில நொடிகள் அமைதியாக நடந்தபடியே, அதும் மனசுல எங்கயாவது ஒரு ஓரத்தல நான் இருப்பன்யில்ல அதுக்கூட இனிமே இருக்கக்கூடாதுன்னு தான் அப்படி பேசனன்.
அமைதியாக என்னை பார்த்தவன்கள், எதுவும் பேசாமல் நடக்க தொடங்கினார்கள். கிணத்தடிக்கு வந்திருந்தோம்.
தண்ணீ மேல வரைக்கும் இருக்குதுல்ல என ஜான் ஆச்சர்யப்பட நீச்சல் தெரியுமா ஜான் என கேட்டான் ஏழுமலை.
தெரியாது.
கத்துக்கறியா ?.
அய்யோ எனக்கு கிணறுன்னாலே பயம் என்றான்.
குடிக்கறதுக்கு வீரன் மாதிரி பேசன. நீச்சல் கத்துக்கறியான்னு கேட்டதுக்கு நடுங்கற என ஜீவா கலாய்க்க. சிரித்துக்கொண்டுயிருந்தோம்.
குறிப்பிட்ட தேதியன்று நானும் எங்கப்பாவும் காலேஜ்க்கு போனோம். ஜானும் அவன் அப்பாவுடன் வந்திருந்தான். சர்டிப்கெட் சரிபார்க்கப்பட்டு பணம் கட்டியதற்க்கு பில் தந்து ஆகஸ்ட் 5ந்தேதி காலேஜ் வந்துடு, வரும்போது பில் எடுத்துவா என்றார் கிளர்க். பிரின்ஸ்பால், எச்.ஓ.டியை பார்த்துவிட்டு கிளம்பினோம்.
ஆகஸ்ட் 5ந்தேதி கல்லூரி திறக்க காலேஜ்க்கு போனோம். கேட்டின் முகப்பில் புத்தம் புது மலராய் கல்லூரிக்கு வரும் இதயங்களை மூன்றாமாண்டு மாணவ செல்வங்கள் உங்களை அன்புடன் வரவேற்க்கிறார்கள் என்ற இரண்டு பேனர்கள் வரவேற்றன. வளாகத்துக்குள் பூத்து குலுங்கும் மரங்கள், சுடிதார், தாவணி, புடவை என கலக்கும் இளைஞிகள், ஜீன்ஸ் பேன்ட், டீசர்ட் என கலக்கும் இளைஞர்கள் ஒருபுறம் என பார்க்கும்போதே கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.
மச்சான் சூப்பர் பிகர்ங்கடா. என்னம்மா கலர் ட்ரஸ்ல வலம் வருதுங்க. காலேஜ் லைப்ல ஏதாவது ஒன்ன கரெக்ட் பண்ணி 3 வருஷத்த ஓட்டனும்டா என்றான்.
நீ ஒரு ஆளை கரெக்ட் பண்றவனாடா என கேட்டபடியே நடக்க
ஏய் என்ற குரல் கேட்டு திருப்பினோம். அங்கு……..
தொடரும்………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக