மதியம் 3 மணிக்கு படம் பார்த்துவிட்டு சைக்கிளில் ட்ரிபிள்ஸ் வந்துக்கொண்டிருந்தோம். படம் சூப்பர்டா என்றான் ஏழுமலை.
செம ஃபைட் மச்சான். ஏய். பொங்களுக்கு நம்ம ஊர்ல டீவி டெக் எடுத்துவரும்போது இந்த படத்த கண்டிப்பா போடுனும்டா என்றான் ஜீவா.
நான் அவன்களிடம் ஆமாம், தீபாவளிக்கு வீடியோ டெக் எடுத்து வரலியாடா ?.
ஏய் ஆளைப்பத்தியா. இப்ப டீவி டெக்குக்கு 300 ரூபா கேட்கறான். யார்க்கிட்டயிருக்கு அவ்ளோ பணம். கோயில்ல கூழ் ஊத்தனப்ப எடுத்து வந்துட்டு டீவி காரன் போகும்போது காசு தர நாங்க பட்ட கஸ்டம் எங்களுக்கு தான் தெரியும். மயிரு நீ கூட தர்றன்னு சொன்ன கடைசியில தரவேயில்ல. நாங்க தான் கடன் வாங்கி தந்தோம். அதனால இந்தமுறை விட்டாச்சி என்றான் ஜீவா.
பொண்ணுங்கக்கிட்ட கேட்க வேண்டியதுதானே ?.
அவளுங்க தானே. காசு தரும்போதே நான் சொல்ற படத்ததான் போடனும்கிறாளுங்க. அதான் அவளுங்கக்கிட்ட வாங்கறதில்ல.
முதல்ல பொண்ணுங்க்கிட்ட காச வாங்கிக்கிட்டு அதுக்கப்பறம் நீங்க சொன்ன படம் கிடைக்கல, கேசட் சரியில்லன்னு டபாய்க்க வேண்டியது தான்.
உன் மயிருக்கு என்ன நீ சொல்லிட்டு போயிடுவ. அவளுங்க கேட்ட படத்த போடலன்னா தினமும் எங்களை தான் திட்டுவாளுங்க. அவளுங்கக்கிட்ட விளையாட்டு காட்ட நாங்க தயாரில்ல என்றான்கள் கோரஸாக.
போங்கடா. அடுத்த முறை எங்கிட்ட சொல்லு நான் பணம் வாங்கி தர்றன் என பேசியபடியே சைக்கிளை மிதிக்க ஊர் எல்லையை நெருங்கியிருந்தோம்.
ஊருக்குள் நுழையும்போதே எதிரில் வந்த முத்து சைக்கிளை மடங்கியவன், கோயால என்னை விட்டுட்டு எங்கடா போனீங்க.
சினிமாவுக்கு.
கோத்தா என்னை கூப்ட்டா நாங்க வரமாட்டோமா ?.
உன்ன காலையில பாக்க முடியலடா . .
ஒருத்தன் ஆள்யில்லன்னா தேடமாட்டீங்களா?
சரி விடு. இன்னோரு முறை போலாம்.
கோபாமாக ம் என்றவன். முக்கியமான விஷயம்டா மதியம் 12 மணியிருக்கும் மஞ்சு அப்பன் தூக்கு மாட்டிக்கிட்டான்.
நாங்கள் மூன்று பேரும் அதிர்ச்சியாகி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
நான் கூடுதல் அதிர்ச்சியுடன் என்னடா ஆச்சி.
அந்த சந்திரா இருக்காளே. அவ புருஷனை விட்டுட்டு முன்ன காதலிச்சானே முருகன் அவனோட இன்னைக்கு எஸ்கேப். முருகன் வீட்டுக்கு தெரிஞ்சி சந்திரா வீட்டாண்ட வந்து சண்டை போட சந்திரா அப்பன் கயித்துல தொங்கிட்டான். நல்ல வேளை மஞ்சு சத்தம் போட உள்ளப்போய் காப்பாத்தனோம் என்றான்.
அந்தாளு தான் சொத்துக்கு ஆசைப்பட்டு தப்பு பண்ணான்னா, இவ அதுக்கு மேல தப்பு பண்ணி ஓடுகாலீ குடும்பம்ன்னு பேர் வாங்கி தந்துட்டாடா மச்சான். பாவம்டா என உச் கொட்டினான்.
என்னாச்சே என்றபடி நாங்கள் கலைந்தோம். இரண்டு நாள் மஞ்சுவை தெருவில் பாக்கவே முடியவில்லை. ஊரே இதைப்பற்றி தான் பேசிக்கொண்டுயிருந்தது.
தீபாவளி லீவு முடிந்து பள்ளிக்கு போகும் போது மஞ்சுவுக்கு ஆறுதல் சொல்லியபடி செல்ல வேண்டும் என பார்த்தேன். குனிந்தபடியே வந்து பஸ் ஏறினால். பஸ்சிலும் பேசவில்லை. பஸ்சை விட்டு இறங்கியும் பேசவில்லை. க்ளாஸ்சில் உம்மென இருந்தாள்.
மதியம் லஞ்ச் டைமில் உங்கிட்ட பேசனும் என்றாள். தேவியும் அருகில் இருந்தாள்.
ஸாரி என்றேன்.
நான் தான் ஸாரி சொல்லனும். என்னை மன்னிச்சிடு.
எதுக்கு
நாம பிரிஞ்சிடலாம், காதல் ஒத்துவராது என்றாள் படீரென.
உங்கக்கா பண்ணத நினைச்சி கவலைப்படறியா. நாம கல்யாணம் பண்ணிக்க இன்னும் குறைஞ்சது 5 வருஷம்மிருக்கு. அதுக்குள்ள எல்லாம் மறந்திருக்கும்.
இல்ல. எங்கப்பா தூக்குல தொங்கனத நான் பாக்கலன்னா எங்கள விட்டு போயிருப்பாரு என அழுதவள். எனக்கு அவுங்க தான் முக்கியம். அதனால நாம பிரிஞ்சிடலாம்.
லூசு மாதிரி பேசாத.
இல்ல இனிமே என்க்கிட்ட பேசாத, எல்லாத்தையும் மறந்துடு எனச்சொல்லிவிட்டு விறுவிறுவென கண்ணை துடைத்தபடி வெளியே போனாள்.
காலையில வந்ததும் எங்கிட்ட நான் அவனை மறுந்துட்டன்னு சொல்லுன்னு விஷயத்த சொன்னா. நான் நீ பண்றத்து தப்புன்னு சொன்னன். ஆனா அவ பிடிவாதமாயிருந்தா. உங்கிட்ட நேர்ல சொல்லமாட்டன்னா. நான் தான் எதுவாயிருந்தாலும் நீயே அவன்க்கிட்ட சொல்லுன்னன். நான் திரும்ப பேசிப்பாக்கறன் எனச்சொல்லிவிட்டு அவளும் போனாள்.
மனம் சோர்ந்து போய் அப்படியே உட்கார்ந்தேன். என்ன மச்சான் ஆச்சி என்றான். மஞ்சு அவுங்க அக்கா ஓடிப்போய்டுச்சி. அதனால அவுங்க வீட்ல பிரச்சனை அதனால காதல் வேணாம்ன்னிட்டு போறா என்றேன்.
அது பாதிக்கப்பட்டுயிருக்கு. கோபத்தல வேணாம்ங்குது பேசிக்கலாம். வா முதல்ல சாப்ட்டுட்டு வரலாம்.
நான் வரல நீ போய்ட்டு வா.
வா மச்சான். எல்லாம் சரியாகிடும்.
மனசு சரியில்ல. நீ போய்ட்டு வாடா.
நீ சாப்பிடலன்னா நானும் சாப்பிடல என்றபடி அமர்ந்தான்.
இவள எப்படி சமாதானம் செய்யறது. சாயந்தரம் பேசிப்பார்க்கலாம் என எண்ணியபடி சாப்பிடாமலே இருந்தேன்.
மதிய வகுப்பு முடிந்து எல்லோரும் புறப்பட மஞ்சு நில்லு என்ற என் குரலை கேட்டும் நிற்காமல் போக கையை பிடித்து இழுத்து நிறுத்தினேன்.
கைய விடு. இன்னோரு முறை கைய புடிச்ச அவ்ளோதான் என பொறித்தவள். விடுன்னா விட்டுடனும். சும்மா தொல்லை பண்ணாத என கோபத்தை காட்டிவிட்டு போனாள்.
எனக்கு கோபம் சர்ரென ஏறியது. அந்த கோபத்தை கிரவுண்ட்டில் பந்தில் காட்டினேன். மாஸ்டர் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார்.
பஸ் ஸ்டான்ட்க்கு போனபோது பஸ்க்காக காத்திருந்தாள். நான் அவள் அருகில் போனதும் தூரப்போய் நின்றுக்கொண்டாள்.
கோபம் வர பல்லை கடித்தபடி அவளை நெருங்கிய எண்ணியபோது பஸ் வந்துவிட்டது. நான் முன்னால் ஏறுவதை பார்த்து அவள் பின்னால் ஏறினால்.
மறுநாள் சனிக்கிழமை. ஸ்பெஷல் க்ளாஸ் மட்டுமே. ப்ரேயர்கூட கிடையாது. முன்னால் அவள் என்னை உதாசீனப்படுத்தியது கோபத்தை வரவைக்க சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு 8 மணிக்கே கிளம்பிவிட்டேன். 9 மணிக்கெல்லாம் கிரவுண்டில் நான் மட்டும் விளையாட தொடங்கினேன். அவள் மீதான கோபத்தை பந்தில் காட்டிக்கொண்டிருந்தேன்.
10 மணிக்கு பெல் அடிக்க க்ளாஸ்கள் தொடங்க நான் மட்டும் பந்திடம் கோபத்தை காட்டிக்கொண்டுயிருந்தேன். என் கோபத்தின் தன்மையை பேஸ்கட் போர்டில் டமால் டமால் என விழுந்து காட்டியது. பெல் அடித்து அரைமணி நேரம்மிருக்கும் எச்.எம் கூப்பிடறாரு என ஜீவா வந்து நின்றான்.
என்னவாம் என்றேன் கோபத்தோடு.
…………
நீ க்ளாஸ்க்கு போ நான் போய் பாக்கறன்.
அவர் க்ளாஸ்ல தான் இருக்காரு.
நின்றேன். நீ போ நான் வர்றன்.
அவர் கோபமாயிருக்காரு பாத்துடா எனச்சொல்லிவிட்டு நடந்தான்.
பந்தை அங்கேயே போட்டுவிட்டு க்ளாஸ் ரூம்மை நோக்கி போனன்.
கிரவுண்ட்ல என்னடா பண்ற.
விளையாடிக்கிட்டு இருந்தன் சார்.
ஸ்கூல்க்கு வந்தியா விளையாட வந்தியா
இன்னைக்கு க்ளாஸ்க்கு வரல சார்.
க்ளாஸ்க்கு வராதவன் வீட்ல இருக்கவேண்டியது தானே எதுக்கு வந்து உயிர வாங்கற
ஸ்கூல்க்கு தான் வந்தன். க்hளஸ்ல இருக்க புடிக்கல அதனால விளையாட போனன் சார்.
நான் பதிலுக்கு பதில் பேசியதால் கோபமாகி கம்பை எடுத்து பட்டக்சில் அடித்துக்கொண்டு எறும்ம மாடு மாதிரி வளர்ந்துயிருக்கு புத்தியிருக்கா பாரு, நீயெல்லாம் மாடு மேய்க்கதான் லாயக்கு என விளாசினார். மற்ற க்ளாஸ் பசங்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்க்க வாத்தியார்கள் வெளியே வந்து நின்றனர். முட்டி போடுடா என்றார்.
சார் உங்க இஸ்டத்துக்கு அடிக்காதிங்க. நான் என்ன தப்பு பண்ணன்னு அடிக்கறிங்க. நான் ஸ்கூல்க்கு வராம தான் விளையாடிக்கிட்டு இருக்கறன். ஸ்கூல் கட்டடிச்சிட்டு போய் விளையாடல என கோபமாக கத்தினேன்.
திரும்ப கம்பால் அடிக்க வர கம்பின் ஒரு முனையை கையால் பிடித்தேன். இன்னும் கோபமாகி கம்பை இழுக்க நான் இழுக்க சார் நான் உங்கக்கிட்ட படிக்க விரும்பல. எதுக்கு சும்மா அடிக்கறிங்க என மஞ்சு மீதான கோபத்தை அவரிடம் காட்டிவிட்டு நின்றேன்.
நீ சரிப்படமாட்டா திங்கட்கிழமை வரும்போது உங்கப்பாவை கூப்ட்டுக்கிட்டு வா என்றார்.
அவ்ளோ தானே நான் அழைச்சிக்கிட்டு வர்றன் சார் என்றபடி நடந்தேன். ஸ்டான்டில் நிறுத்தியிருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். ரொம்பத்தான் ஓவரா பேசிட்டமோ, எங்கயிருந்து இந்த தைரியம் வந்தது எல்லாம் அவளாள தான், படிப்பு போச்சா, வீட்ல கேட்டா என்ன சொல்றது என யோசித்தும் பயந்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.
வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்த அப்பா என்னடா சீக்கிரம் வந்துட்டா
திங்கட்கிழமை சார் உன்னை அழைச்சி வரச்சொன்னாரு என கோபமாக சொல்லியடி உள்ளே போய் பையை தூக்கி போட்டுவிட்டு உட்கார்ந்தேன்.
எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்.
அம்மா மட்டும் என்னடா ஆச்சியென்றால் பதில் பேசாமல் வீட்டிலிருந்து வெளியே வந்தேன்.
திங்கட்கிழமை அப்பா என்னுடன் கிளம்பினார். பஸ்க்கு காத்திருக்கும் போது அவளை பார்த்தேன். சைக்கிளில் மஞ்சு எங்களை க்ராஸ் செய்து போனாள்.
ஸ்கூலில் ப்ரேயர் முடிந்ததும் எச்.எம் ரூம் முன்னாடி நின்றிருந்தோம்.
தன் அறைக்குள் போக வந்தவர் எங்கப்பாவை பார்த்து உன் பையனுக்கு படிக்க விரும்பம்மில்லையாம். டீசி வாங்கிக்கிட்டு போய்யா.
என்ன சார் பண்ணான்.
ஏன் அவன்க்கிட்ட கேட்கலயா, கூப்டதும் வந்துட்டிய்யா, புள்ளைய கண்டிச்சி வளக்கமாட்டியா, இவனை புள்ளையா பெத்ததுக்கு எறுமைய பெத்துயிருந்தின்னா பாலாவது தந்துயிருக்கும், உருப்படாத நாய், எச்.எம்மான என்னையே எதிர்த்து பேசுது, உனக்கெல்லாம் எங்கயிருந்து சோறு போடபோகுது, பாத்து இருய்யா நாளைக்கு உன் தலையில கல்ல போட்டு கொன்னுடப்போகுது என்றதும் எனக்கு சுர்ரென கோபம் வந்தது. அட்டனன்ஸ் எடுக்க வந்து ஆசிரியர்கள் இதை வேடிக்கை பார்த்தபடி நின்றனர்.
சார் நிறுத்துங்க சார். சும்மா திட்டாதிங்க. நீங்க கேள்வி கேட்டிங்க. பதில் சொன்னன். நான் ஒன்னும் ஸ்கூல் கட்டடிச்சிட்டு போகல. ஸ்கூல்குள்ளயே வராம கிரவுண்ட்ல தான் இருந்தன். நீங்க தான் என்னை கூப்ட்டு அடிச்சிங்க. எங்கப்பாவ கூப்ட்டு வரச்சொன்னிங்க வந்துயிருக்காரு. சும்மா திரும்ப எதுக்கு சார் திட்டறிங்க என்றதும்.
எங்கப்பா என்னை முறைத்தவர் எச்.எம் பக்கம் திரும்பி அவன்தான் ஸ்கூல்க்கே வரலன்னு சொல்றான் அப்பறம் எதுக்கு அவனை கூப்ட்டு அடிச்சிங்க. நான் என்ன அடிக்கறதுக்கா அனுப்பிவச்சன். அவன் தப்பு பண்ணதா இருக்கட்டும் சார். நீங்க கேள்வி கேட்டுயிருக்கிங்க பதில் சொல்லியிருக்கான். அதல என்ன தப்பு என கோபமாக கேட்க.
உன் பையன் படிக்க விரும்பலங்கறான் என கத்தினார்.
அது அவனோட விருப்பம் சார். படிச்சா நல்லாயிருக்க போறான். இல்லன்னா கழனி காட்ல கஸ்டப்படபோறான். நீங்க அடிக்கறதுக்கு முன்னாடி என்னை கூப்ட்டு சொல்லியிருக்கனும். அத விட்டுட்டு அடிச்சா என்ன சார் அர்த்தம். என் முன்னாடியே இவ்ளோ மோசமா திட்டறிங்க. உங்க பையனை போய் இப்படி வீட்ல திட்டிப்பாருங்க. போய்யான்னிட்டு போவான் என்றவர். இப்ப என்ன உன் பையன் தப்பு பண்ணிட்டான் டீசி தர போறன்னா தாங்க. அதவிட்டுட்டு அவனை கேவலாம பேசற வேலை வச்சிக்காதிங்க. பசங்கக்கிட்ட அன்பா சொல்லனும் சார். அதவிட்டுட்டு இப்படி மோசமா பேசனா படிக்கமாட்டானுங்க. நடிக்கதான் செய்வானுங்க என்றதும்.
இதோ அப்பானே கேட்டுட்டான் டீசி தந்துவிடுய்யா என பியூனை பாத்து வெறுப்பாக கூறியதும், எச்.எம் பின்னால் நின்றிருந்த பி.டி சார் முன் வந்து அவரிடம் சார் நீங்க உள்ள போங்க நான் பாத்துக்கறன் என்றார். எச்.எம் முறைத்தபடி ரூம்க்குள் போனார்.
பீ.டி சார் டேய் உங்கப்பாவ அழைச்சிக்கிட்டு என் ரூம்க்கு வா என நடந்தார். நாங்கள் பின்னாடியே போனோம்.
எங்கப்பாவிடம் உட்காருங்க சார் என்றார்.
இல்ல சார் பரவாயில்ல.
உட்காருங்க சார்.
எச்.எம் எப்பவும் அப்படித்தான் கோபப்படுவாரு. இவன் ரொம்ப நல்ல பையன் சுமாரா படிப்பான். யார்க்கிட்டயும் எந்த வம்புக்கும் போனதில்ல. இவன் மேல இதுவரை எந்த புகாரும் வந்ததில்ல. நான் அவனை விளையாட வெளியூர் அழைச்சிக்கிட்டு போயிருக்கன் மத்த பசங்க மாதிரியில்லாம ரொம்ப ஒழுக்கமா நடந்துக்குவான். வாத்தியார்ங்களுக்கு பயந்து மரியாதையா நடந்துக்கறவன் அன்னைக்கு ஏன் அப்படி நடந்துக்கிட்டான்னு எனக்கே ஆச்சர்யமாகிடுச்சி. சனிக்கிழமை ஸ்கூல் உள்ள வராம க்ரவுண்ட்ல இருந்திருக்கான். கூப்ட்டு அவர் கேட்க இவன் கோபமா பதில் சொல்லியிருக்கான். எச்.எம்மயே எதிர்த்து பேசறியான்னு அடிச்சியிருக்காரு. ஏன் அப்படி பேசனான்னு பசங்கக்கிட்ட விசாரிச்சன். உங்க பையன் ஏதோ ஒரு பொண்ண காதலிச்சியிருக்கான். அதான் பிரச்சனை என்னன்னு கேளுங்க நான் எச்.எம்ம பாத்துட்டு வந்துடறன் என எழுந்து வெளியே போனார்.
என்னை பார்த்து முறைத்தார்.
தொடரும்..........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக