திங்கள், ஜனவரி 02, 2012

ஸாரி மேடம். ( பகுதி 7 )
மஞ்சு என்னை நோக்கி வீசியது என் தோள்பட்டை மேல் படீரென பட்டு கீழே விழுந்ததை பார்த்த போது நான் தந்த 5 ரூபாய் காயின் அது. 

அதை குனிந்து கையில் எடுத்தபடியே இப்ப எதுக்கு தூக்கி போடறாங்களாம் என தேவியை பார்த்து கேட்டேன். 

இருவருமே சைலண்டாக இருந்தனர். 

இப்ப உங்களுக்குள்ள என்ன பிரச்சனை என கேட்டாள் தேவி. 

உன் ப்ரண்ட்க்கிட்டயே கேளு எனச்சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டேன். 

மச்சான் என்ன பிரச்சனை. உன் ஆளு ஏன் கோபமாயிருக்கு என கேட்டு தொல்லை படுத்தினான் ஜான். 

இரண்டு நாள் நடந்ததை அப்படியே சொன்னேன். 

இவ்ளோ நாளா நீ லவ்வ சொல்லவேயில்லையா என கேட்ட ஜான். நானாயிருந்தா ரூம் போட்டு எல்லாத்தையும் முடிச்சியிருப்பன்.  

அவனை முறைத்துக்கொண்டு போடா மயிரு. உன் புத்தி உன்னவிட்டு போவூமா. நான் அவளை கல்யாணம் பண்ணிக்க நினைக்கறன். நீ கழட்டிவிட ஐடியா தர்ற. நீ தர்ற ஐடியாவ கேட்டா நான் உருப்பட்ட மாதிரி தான். 

அனுபவஸ்தன் ஐடியா தர்றன் கேளு மச்சான் என்றான் சிரித்தபடியே. 

நீ எல்லாத்தையும் மூடு. என் லவ் மேட்டரை நானே பாத்துக்கறன். 

தேவி மஞ்சுவிடம், என்னடீயாச்சீ. நேத்து ஹோட்டலுக்கு கூப்பிட்டும் போனானா? இல்லையா ?. 

ம். கூப்ட்டும்போனானான். 

அப்பறம் என்ன?. நீ லவ் பண்றன்னு சொல்ல வேண்டியதுதானே

வெளிய வந்து சொல்லலாம்ன்னு நினைச்சன். அதுக்குள்ள அவனே என்னை கை கழுவிடமாட்டீயேன்னு கேட்டான். எனக்கு கோபம் வந்துடுச்சி. 

முறைச்சிட்டு வெளிய வந்தன்னா. பின்னாடி வந்தவன் நான் உன்னை காதலிக்கறன்னு சொன்னான். 

ஐ அப்பறம் ஆர்வமானாள் தேவி.  

அவனே சொல்லுவான்னு நான் எதிர்பார்க்கல. நீ என்ன சொல்றன்னு கேட்டான். 

நீ ஓ.கே தானே சொன்ன ?.

இல்லடீ. ஆச்சர்யத்தல என்ன பேசறதுன்னு தெரியாம கம்முனு இருந்தன். என்னன்னு தெரியல எதுவும் அப்ப சொல்ல முடியாம திரும்பி நடந்தன். அவனும் பின்னாடியே வந்தான். என்னனு தெரியல அதுக்கப்பறம் எதுவுமே பேசல. பஸ் ஏறி ஊருக்கு வந்துட்டோம். காலையில பஸ்ல வரும்போதும் அவன்க்கிட்ட பேச முடியல. அவன்க்கிட்ட சில்லறையில்லன்னு டிக்கட் எடுத்தன். அந்த காச தான் கோபமா எடுத்துவந்து தந்துட்டு போறான். 

பின்ன உன் மேல கோபப்படாம கொஞ்சுவானா. 

இப்ப என்னடீ பண்றத்து. 

மணவாளனே நான் ஏங்குகிறேன்னு தூது அனுப்பு உங்காளு உருகிடுவான். 

ஏய் சும்மாயிருடீ

சரிவிடு மதியம் பாத்துக்கலாம் என்றாள். 

மீண்டும் வகுப்புகள் ஆரம்பமானது. லஞ்ச் பெல் அடித்ததும் ஜானும் நானும் சாப்பிட கிளம்பினோம். 

ஏய் ராஜா என கூப்பிட்டாள் தேவி. 

நானும் ஜானும் நின்று என்ன என்பதை போல பார்த்தோம். 

எனக்கு இன்னைக்கு பர்த்டே எனும் போதே. 

ஏய் சொல்லவேயில்ல. கங்கிராட்ஸ் என கை கொடுத்தேன். 

ஜானும் கங்கிராட்ஸ் சொன்னவன் டிரீட் எதுவும்மில்லயா என்றான். 

நீ கேட்கறதுயெல்லாம் என்னால வாங்கி தர்ற முடியாது என சிரித்தாள் தேவி. 

மூடிக்கிட்டுயிரூடா என ஜானை பார்த்து சொல்லிவிட்டு சரி சாப்ட்டுட்டு வந்துடறோம் அப்பறம் பேசிக்கலாம் என தேவியிடம் சொல்லிவிட்டு கிளம்பியபோது, நான் பர்த்டே ட்ரீட் தர்றன். இன்னைக்கு லஞ்ச் என் செலவு எல்லாரும் ஹோட்டலுக்கு போலாம் என்றாள். 

ஆஹா போலாமே என்றான் ஜான். 

இல்ல வேணாம் தேவி. 

இல்ல போறோம் என கட்டளையிட்டாள் தேவி. 

ஆவள் நினைத்தது நடக்க வேண்டும் என நினைப்பவள் என்பதால் சரி அப்படின்னா வெஜ்டேரியன் ஹோட்டலுக்குதான் போகனும். அப்படின்னா ஒ.கே.  

மச்சான். ட்;ரீட் தர்றது அவ நீ ஏண்டா. இதல மூக்க நுழைக்கற. 

உன்னபத்தி எனக்கு தெரியும். அடுத்தவங்க காசுன்னு காஸ்ட்லியா தான் ஆர்டர் பண்ணுவ அதனால தான் சொன்னன் மூடிக்கிட்டு வா.

ஏய்….. யாரைப்பத்தி என்ன சொன்ன. இன்னைக்கி செலவெல்லாம் என்னுது. தேவிக்கு என்னோட பர்த்டே கிப்ட். 

தேவி, அப்ப பெரிய ஹோட்டலுக்கா போலாம். 

போடா என்ன பெருசா செலவாயிட போகுது நானும் பாத்துக்கறன் என வீம்பு பேசியபடியே வந்தன். 

நான் தேவியிடமும், ஜான்னிடம் பேசினேனே தவிர மஞ்சுவிடம் பேசவேயில்லை. மஞ்சு யாரிடமும் பேசவில்லை. சைலண்டாகவே வந்தாள். 

நடுத்தரமான ஒரு ஹோட்டல்க்குள் நுழைந்து அமர்ந்தோம். சர்வர் வந்து ஒரு மாதிரியாக பார்த்தவனிடம் 4 மினி மீல்ஸ் என ஆர்டர் தந்தோம்.  

எங்களைப்பார்த்த தேவி, இன்னைக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமான நாள். என் வாழ்க்கையில மறக்க முடியாத ஒரு காதல் வாழ்க்கையோட தொடக்க நாள் என்றாள். 

என் காதருகே வந்த ஜான், என்ன மச்சான். காதல்ங்கறா, உண்மைய சொல்லு. நீ காதலிக்கறன்னு சொன்னது மஞ்சுக்கிட்டயா இல்ல தேவிக்கிட்டயா என கிசுகிசுத்தான். 

திரும்பி அவனை முறைத்தேன். 

தேவி என்னிடம் என்னடா சொன்னான். அவனுக்கு கொழுப்பு அதிகமாயிடுச்சி. அப்ப நான் அத குறைச்சி கூப்ட்டுக்கிட்டு வர்றன். நீங்க இருங்க என்றவள். 

வாடா வா என ஜானை அழைத்தாள். 

எங்க என கேட்டபடியே எழுந்தான் ஜான். 

வா சொல்றன் என நடந்தாள். பின்னாடியே ஜான் போவதை பார்த்துவிட்டு என்னை பார்த்தபடியே இருந்த மஞ்சுவை நானும் பார்த்தேன். 

ஸாரி என்றாள். 

எதுக்கு. 
நானும் உன்னை காதலிக்கறன் என்றவள். நான் சொல்லலாம்ன்னு பாத்தன். அதுக்குள்ள நீ சொல்லிட்டயா அதான் பதில் சொல்ல முடியல என்றான். 

சந்தோஷத்தில் திக்குமுக்காடி போய் உட்கார்ந்திருந்தேன். கண்களில் காதலோடு மஞ்சுவை பார்த்தபோது, அவள் தலையை புன்னகையோடு குனிந்துகொண்டாள். 

என்னப்பா ஓ.கேவா என தேவி மஞ்சுவை பார்த்து கேட்க, ஜான் சொல்லிட்ட படியே வந்து அமர்ந்தார்கள் ஆமாம் என தலையாட்டினேன். அவளும் சிரித்தாள். 

மச்சான் காதலிக்க ஆரம்பிச்சிட்ட பணம் தண்ணீயா செலவாகும் ஜாக்கிரதை என்றான். 

அதெல்லாம் கிடையாது என தேவி ஜானை முறைக்க. 

அனுபவஸ்தன் சொன்ன சரியா தான் இருக்கும் விடு தேவி என்றேன். 

இவன் யாரை காதலிக்கறான் என தேவியும், மஞ்சுவும் ஆச்சர்யமாக கேட்க. 

மீல்ஸ் வந்தது. சாதத்தை பிசைந்தபடியே சொல்லட்டாடா என ஜானை பார்த்து கேட்டேன். 

நீ வேற மச்சான். அதான் புட்டுக்கிச்சே என்றான் சோகமாக. 

என்னடா சொல்ற. 

அதையேன் கேட்கற. பின்னாடி வீட்டு பொண்ணு பாக்க அழகா இருந்தாளேன்னு பந்தாவா செலவு பண்ணி அவ கேட்கறதையெல்லாம் வாங்கி தந்தன். ஊர்லயிருந்து இரண்டு நாளைக்கு முன்னாடி அவுங்க அக்கா அதான் நம்ம கூட பத்தாவது படிச்சிட்டு எக்ஸாம் லீவுல கல்யாணம் பண்ணிக்கிட்டு போனாலே குண்டு பூசணி அவ வந்துயிருந்தா. அவ தங்கச்சிய நான் நோட்டம் விடறத பாத்துட்டு தன் தங்கச்சிக்கிட்ட என்னைப்பத்தி ஏதோதோ போட்டு கொடுத்துயிருக்கா. அப்பலயிருந்து பாக்கல. இன்னைக்கு காலையில ஸ்கூல் வந்துக்கிட்டுயிருக்கும் போது எதிர்ல வந்தவளை மடக்கி ஏன் என்க்கிட்ட பேசமாட்டேன்கிறன்னு கேட்டன். 

ச்சீ. பொறுக்கி நீ நல்லவன்யில்லன்னு எங்கக்கா சொன்னா. இனிமே எங்கிட்ட ஏதாவது பேசன எங்கப்பாக்கிட்டயே சொல்லுவன்னு சொல்லிட்டு போய்ட்டா மச்சான் என சாதாரணமாக சொல்லியபடி சாப்பிட்டான். 

என்னடா சாதாரணமா சொல்ற. கவலையா இல்லையா ?

விடு மச்சான். அவ இல்லன்னா இன்னோருத்தி என்றவன். போண்ணு அவளுக்கே அவ்வளவு இருக்கும் போது என் பர்சனாலிட்டிக்கு நிறைய பொண்ணுங்க கிடைக்கும் மச்சான் என்றவன். என் காதருகே வந்து வர்றப்ப நம்ம கூட படிச்சானே டேவிட் அவன் வீட்டுக்கு ஒரு சூப்பர் ஃபிகர் வந்திருக்கு அத ரூட் போட்டுடலாம்ன்னு இருக்கன் என்றான். 

என்னடா அதுக்குள்ள ரகசியம் பேசறிங்க என்றாள் தேவி. 

ஓன்னும்மில்ல என்றபடி கை கழுவ எழுந்தோம். ஜான் விடாப்பிடியாக பில் தந்தான். 

காதல் பெயிலியர்க்கு ட்டீட் தர்றவன் நீ ஒருத்தன் தான் மச்சான் என கலாய்த்தேன். 
ஏய் சும்மாயிருடா. 

தேவி திரும்பி. ஏன் பர்த்டே ட்ரீட்ன்னு சொன்னதெல்லாம் பொய்யாடா என கோபமாக கேட்டுவிட்டு நடக்க பின்னாடியே ஓடிய ஜான், சத்தியமா தேவி உன் பர்த்டேவுக்கு தான் ட்டீட். காதல் பெயிலியர்க்கு இவ்ளோ காஸ்ட்லியா ட்டீட் தர்ற மாட்டன் என சொல்லியபடி போனான்.  

சாலை என்றும் பாராமல் மஞ்சு என் அருகே வந்து என் விரல்களோடு விரல் கோர்த்து நடக்க தொடங்கினால். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக