செவ்வாய், மார்ச் 08, 2011

காங்கிரஸ்சிடம் தோற்ற கருணாநிதி.


தமிழக மக்கள் விடிய விடிய பல நாடகங்களை பார்த்தவர்கள் தான். பார்க்கும் போதே க்ளைமேக்ஸ் என்னவென்று சொல்லிவிடுவார்கள். ஆனால் அரசியல் களத்தில் தற்போது திமுக நடத்திய நாடகத்தில் க்ளைமேக்ஸ் என்னவென்று தெரியாமல் தடுமாறிக்கொண்டு இருந்தார்கள். நாடக ஆசிரியரான திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி இருந்தார் என்பதால் க்ளைமேக்ஸ் தெரியாமல் இருந்தார்கள். க்ளைமேக்ஸ் வெளியே தெரிந்தபோது ஒட்டுமொத்த மரியாதையும் இழந்து போய்வுள்ளார் கருணாநிதி.

சில வாரங்களாக திமுக-காங்கிரஸ் இடையே சீட் தகராறு நடந்துவந்தது. காங்கிரஸ் அதிகமான சீட்க்கு ஆசைப்படுகிறது. 63 சீட் கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, அதோடு தமிழகத்திற்க்கு ஒத்துவராத பல கண்டிஷன்களை போடுகின்றனர். இதனால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம்;. மத்திய அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியில் இருந்து ஆதரிக்கிறோம் என நள்ளிரவு அறிக்கை விட்டார்.

7ந்தேதி காலை டெல்லிக்கு பிளைட் ஏறினார்கள் திமுக அமைச்சர்கள் 9 மணிக்கெல்லாம் ராஜினாமா கடிதத்தை தந்துவிடுவார்கள் என தகவல் பரப்பினார்கள். 9…….10…..11 என மணியானதே தவிர அமைச்சர்கள் யாரும் பிரதமரை சந்திக்கவில்லை. பிரதமர் பாத்ரூம் போனார் வரவில்லை. மாலை 6 மணிக்கு தான் வருவார் என்று காரணம் சொன்னார்கள். மாலை 6ம் வந்தது 7……8………என மணியானதே தவிர பிரதமரை இவர்கள் சந்திக்கவேயில்லை.

என்ன ஆனாது இவர்களுக்கு பசி எடுத்து ராஜினாமா கடிதத்தை தின்று விட்டார்களா என மக்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் காங்கிரஸ் ஒரு நாள் டைம் கேட்டுள்ளது என்றார் துணை முதல்வாரன ஸ்டாலின்.

8ந்தேதி இரவு மத்திய அமைச்சர்களான திமுகவை சேர்ந்த அழகரி, தயாநிதிமாறன்னுடன் காங்கிரஸ் கட்சியின் மத்தியமைச்சர்கள் பிரணாப்முகர்ஜி, குலாம்நபிஆசாத் பேச்சு வார்த்தை நடத்தியதன் விளைவாக 63 சீட்க்கு திமுக ஒத்துக்கொண்டதாக குலாம் செய்தியாளர்களிடம் அறிவித்தார். உடன் அழகரி, தயாநிதிமாறன். அடுத்து கருணாநிதி ஒரு அறிக்கை விட்டார், பாமக ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து 1 தொகுதியை வாங்கி 63 தொகுதி காங்கிரஸ்க்கு தந்து 121 இடங்களில் திமுக போட்டியிடும் என அறிவித்து நாடகத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார்.

63 இடம் கேட்கிறார்கள் என அறிக்கை விட்ட கருணாநிதி ஒரு நாடகத்திற்க்கு பின் அதேயிடத்தை தந்துள்ளார். இது மக்கள் எதிர்பார்க்காத முடிவு தான் பள்ளத்தை தோண்டி திமுக அதில் போய் விழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை கழட்டி விட்டபோது மக்கள் மிகப்பெரிய அளவில் தமிழகம் முழுவதும் சந்தோஷப்பட்டார்கள். இலங்கை பிரச்சனையில் காங்கிரஸ்சை பழிவாங்க சரியான சந்தர்ப்பம் என கொண்டாடி மற்றவர்களுடன் சந்தோஷத்தை பறிமாறிக்கொண்டார்கள். அதோடு ஊருக்கு இரண்டு பேர் இல்லாத கட்சி திமுகவை மிரட்டுவதா என மற்ற கட்சியினரும் பேசினார்கள். திமுகவின் முடிவை வரவேற்றார்கள்.


அந்த சந்தோஷம் மறைவதற்க்குள் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை தந்துவிட்டார் கருணாநிதி. எந்த பிரச்சனை எப்படியிருந்தாலும் எடுத்த முடிவில் திமுக உறுதியாக இருந்திருந்தால் தனித்து வெல்லும் அளவுக்கு தொண்டர்களும் பணியாற்றியிருப்பார்கள், மக்களும் ஆதரித்துயிருப்பார்கள். அது எல்லாவற்றையும் கெடுத்துக்கொண்டது திமுக.

63 சீட் தந்த முடிவு, சாணக்கியதனம் என வெளியே சொன்னாலும் இந்த முடிவு எதிர் கூட்டணியான அதிமுகவுக்கு சாதகமாக தான் முடியும். 65 ஆண்டுகாலம் அரசியல் வாழ்வில் பல ஏற்ற தாழ்வுகளை திமுகவும், கருணாநிதியும் சந்தித்துள்ளார்கள். அப்போதுயெல்லாம் எடுக்கப்பட்ட முடிவு மக்களிடம் வரவேற்ப்பு பெற்றது. தற்போது எடுத்துள்ள முடிவு வியாபார முடிவு, கொள்கையை கட்சியை அடகு வைக்கப்பட்ட முடிவு என மக்கள் விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள். அதுமட்டுமல்ல இந்த நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. கருணாநிதி தனது அரசியல் சாணக்கிய தனத்தில் தோற்றுள்ளார் என்பது எனது கருத்து.

மக்கள் கருத்து முடிவு தேர்தல் களத்தில் தெரியும்.

2 கருத்துகள்:

  1. சி பி ஐ ரெய்ட் விஷயமாகத்தான் பேரம் பேசினார்கள் என்ற செய்தியும் உலாவியது. திருமாவுக்கும் வீரமணிக்கும் செவிட்டிலடித்தது போல் உள்ளது இந்த உடன்பாடு.வாழ்க அவர்களது கூட்டணி வளர்க “அவர்களது” மக்கள் சேவை.

    பதிலளிநீக்கு
  2. திரு.வீரமணி என்ன சொல்லப் போகிறார்?

    பதிலளிநீக்கு