அரசியல்வாதியாக ஒருவர் வேடம் தாித்தது முதல் அவர் யாராக இருந்தாலும் அவரை பட்டி தொட்டி முதல் பட்டணம் வரை படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை பொதுமக்கள் அவரை கவனிக்க தொடங்கி விடுவார்கள்.
அப்படி கவனிக்கப்பட்டவர் நடிகர் விஜயகாந்த். கிராமங்களில் நல்ல ஆதரவு வட்டத்தை கொண்டுயிருந்தார். சினிமாவில் பேசுவதை போலவே ஊழலை ஒழிப்பேன், தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பேன். அதனால் எனக்கு வாக்களியுங்கள் என்றார். அதனை நம்பி கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அவருக்கு வாக்கு செலுத்தினார்கள் தமிழக வாக்காளர்கள். தமிழகத்தின் 3வது கட்சி என சொல்லும் அளவுக்கு வாக்குகளை ஒவ்வொரு தொகுதியிலும் பெற்றார். இந்திய அரசியலே அவரை திரும்பி பார்த்தது.
அந்த நேரத்தில் தான் முன்னால் முதல்வர் ஜெ அறிக்கை ஒன்றை வெளியிட்டார். கறுப்பு எம்.ஜி.ஆர் என சொல்பவர் குடித்துவிட்டு சட்டமன்றம் வருகிறார் என அறிக்கை விட்டார். இதற்க்கு பதில் அறிக்கை விட்ட விஜயகாந்த் அவர் என்ன ஊத்தி தந்தாரா என பதில் அறிக்கை விட்டார்.
தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக சேலத்தில் மாநாடு போட்டார், பேச முடியாத அளவுக்கு தடுமாறினார்............ பேசி முடிக்கும் வரை தடுமாறிக்கொண்டுயிருந்தார். அப்படி பிரச்சாரம் செய்யும் போதே கூட்டணி வேண்டுபவர்கள் கை தூக்குங்கள் என்றார் ஆர்வத்தோடு கை தூக்கியவர்களிடம் கூட்டணி வைக்கறதா, வேணாமான்னு நான் முடிவு செய்யறன் என அடித்தார் அந்தர் பல்டி.
இன்று அதிமுகவுன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த 29ந்தேதி தருமபுாி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்க்க போனார். வேட்பாளர் பாஸ்கரை தனது டெம்போ டிராவலர் வேனில் ஏற்றியவர் பேசும் பாய்ன்ட் வந்ததும் அவரை உள்ளே அமர சொல்லிவிட்டு தடுமாற்றத்துடன் பேசிக்கொண்டுயிருந்தார். பேசும் போது வேட்பாளர் பாண்டியன்க்கு ஒட்டுப்போடுங்கள் என மைக்கில் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
அப்போது வேனில் உள்ளேயிருந்த வேட்பாளர் மேலே எழுந்து அண்ணே என் பெயர் பாண்டியன் இல்லன்னே பாஸ்கர்ன்னே எனச்சொன்னார். இதில் கடுப்பான விஜயகாந்த் தலையிலும், தோள்பட்டையிலும் அடிப்போட அதிர்ந்து போன வேட்பாளர் கை கொண்டு தடுக்க மீண்டும் அடி விழுந்தது. பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் ஒரு கட்சியின் தலைவர், அடுத்த முதல்வர் எனச்சொல்லிக்கொள்பவர் பொதுயிடத்தில் எப்படி நடந்து கொள்ள தொியாத முட்டாளாக இருக்கிறார்.
எல்லா கட்சியிலும் தொண்டர்கள் முதல் இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் தங்கள் கட்சியின் தலைவரை கடவுளாக மதிப்பது வாடிக்கை தான். அதற்காக அந்த தலைவர்கள் எல்லாம் அவர்களை அடிப்பதுயில்லை.
தமிழக அரசியல் கட்சிகளில் அதிமுக தலைவி ஜெ மட்டுமே, கட்சியினரை அடிமையாக வைத்திருக்கிறார் என்ற பேச்சு உண்டு. அதற்க்கு ஏற்றாற்போல் ஜெ காலில் வயது வித்தியாசம்மில்லாமல் இடம் பொருள் தொியாமல் காலில் விழுவதால் தான் அதிமுகவினரை பொதுமக்கள் யாரும் மதிப்பதில்லை. அப்படிப்பட்ட நிலை இன்று விஜயகாந்த் கட்சியின் தொண்டர்களுக்கும், விஜயகாந்த்க்கும் வந்துள்ளது.
விஜயகாந்தின் அஸ்தமனம் தொடங்கிவிட்டது.
விஜயகாந்தின் அஸ்தமனம் தொடங்கிவிட்டது.
மிகச்சரியான கருத்து
பதிலளிநீக்குநண்றி ''பாருங்க!. படிங்க!. பரப்புங்க!'' பதிவருக்கு
பதிலளிநீக்குhttp://jmdtamil.blogspot.com/2011/03/blog-post_31.html
இறுதி போட்டிக்கு வருகிறான்! இனவெறி பிடித்தவன்!
உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி! மும்பையில் ஏப்ரல் 2 -ம் தேதி நடக்க இருக்கிறது!
இறுதி போட்டியில் இந்தியாவும், இலங்கையும் களம் காணுகின்றன.... பாதுகாப்பு பலபபடுத்தப்பட்டுள்ளது, போட்டியை காண பெரிய வி. வி.ஐ.பி. கள் வருகின்றனர்,
அது மட்டும் இல்லை, இன வெறி பிடித்த இலங்கை அதிபர் ராசபக்சே- வும் வருகிறார்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் செய்தி தொடர்பாளர் பந்துலா ஜெயசேகரா இதை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியை காண வந்த ராஜபக்சேவுக்கு எதிராக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தமிழின உணர்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதைப்போல மும்பையில் நடைபெறும் இந்த போட்டியை காண வரும் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்த தமிழின உணர்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதைவைத்து தமிழக அரசியலும் அரங்கேருமாம்!..
இனத்தை அழித்தவனக்கு!
இன்முக வரவேற்ப்பா!