வியாழன், மார்ச் 31, 2011

மக்களின் உணர்ச்சியை பணமாக்கும் கிரிக்கெட்.


காலணி ஆதிக்க நாடாக நம்மை அடிமை படுத்தி வைத்திருந்த பிரிட்டிஸ் அரசு நமக்கு சுதந்திரம் வழங்குவதாக அறிவித்த போது இந்த தேசத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அன்று முதல் இந்துக்கள்-இஸ்லாமியர்கள் விரோதிகளாகி போனார்கள்.


1947ல் பிரிந்தவர்களை காலப்போக்கில் விரோதிகளாக வளர்த்துவிட்டார்கள் இரண்டு நாடுகளுக்கு இடையேயான அரசியல்வாதிகளும், பிஸ்னஸ்மேன்களும். இன்று பாகிஸ்தானில் குண்டு வெடித்தால் இந்தியாவில் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் குண்டு வெடித்தால் பாகிஸ்தானில் பட்டாசு வெடிக்கிறார்கள். இத்தனை மாற்றங்களுக்கு காரணம் அரசியல்வாதிகள்க்கு இருந்த பதவி மோகம், வியாபாரிகளுக்கு இருந்த லாப நோக்கம்.  அது நாட்டை மட்டுமல்ல மக்களையும் இரண்டாக பிரித்துவிட்டது. மக்களின் உணர்ச்சிகளை வைத்து ஆயிரக்கணக்கான கோடிகளில் பணம் சம்பாதிக்கிறார்கள் இவர்கள்.


இந்தியர்கள்-பாகிஸ்தானியர்கள் அதிகமானோர் கிரிக்கெட் விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளார்கள். இவர்கள் மற்ற நாடுகளோடு விளையாடும் போது விளையாட்டாக பார்ப்பவர்கள் இந்த இரண்டு நாடுகள் நேரடியாக மோதிக்கொள்ளும் போது மட்டும் விளையாட்டை விரோதமாக பார்க்கிறார்கள். இதனை அரசியல்வாதிகள் அதிகமாக தூண்டிவிடுகிறார்கள். புhகிஸ்தான் அணியை இந்தியா வென்றால் வீரர்களுக்கு கோடி கணக்கில் பணம் தரப்படும் என்கிறார்கள் இந்தியாவை ஆள்பவர்கள். இந்திய அணியை வென்றால் நிலம் ஒதுக்கி தரப்படும் என அறிவிக்கிறார்கள் பாகிஸ்தானை ஆள்பவர்கள்.


மற்ற நாடுகளோடு இந்த நாடுகள் மோதும் போது மூடிக்கொண்டு வீட்டில் இருந்தபடியே பார்க்கும் இரண்டு நாட்டை சேர்ந்த ஆள்பவர்களும், வியாபாரிகளும் இந்தியா-பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் போது கேலரிக்கு வந்து உட்கார்ந்துக்கொள்கிறார்கள். மீடியாக்களும் இவர்களுக்கு உதவுகின்றன. மக்கள் நலனுக்காக, நாடுகளின் ஒற்றுமைக்காக பாடுபட வேண்டியவர்கள் பணக்காரர்களுக்கு ஒத்து ஓதுகிறார்கள்.

2011 ஆம் அண்டு உலக கோப்பையின் போதும் அப்படியே செமி பைனலில் இந்தியா-பாகிஸ்தான் மோதிக்கொண்டபோது இந்திய பிரதமர் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலாணி, இந்தியாவை ஆட்டி படைக்கும் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பண முதலைகள் முகேஷ் அம்பானி, சரக்கு மன்னன் விஜய்மல்லையா என பல வியாபார ஜாம்பவான்கள் லைன் கட்டி அமர்ந்திருந்தார்கள். இவர்கள் அனைவருக்குமே பணமே முக்கியம். மக்களின் உணர்ச்சியை தூண்டி அதை பணமாக்கும் பண பிசாசுகள்.

இந்த மேட்ச்சில் யார் வெல்வார்கள் என்று 10 ஆயிரம் கோடி பெட்டிங் நடந்ததாக கூறப்படுகிறது. இவையெல்லாமே கறுப்பு பணம் தான். இதனால் 10 கோடி கூட அரசுக்கு வருமானம்மில்லை. தனிப்பட்ட நபர்களுக்கு தான் இந்த வருமானமே. தனிப்பட்ட நபர்கள் கொழிக்க மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு, நாடுகளுக்குள் விரோதத்தை வளர்த்துவிட்டு அதன் மூலம் கொழுக்கிறார்கள்.

மக்களே விளையாட்டை விளையாட்டாக பாருங்கள். அடிமையாகிவிடாதிர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக