வியாழன், ஜூன் 16, 2011

அவளோடு நானிருந்த நிமிடங்களில்……



அவள் காட்டிய பாசம் என் இதயத்தில் நிற்க்கிறது. அவள் சொன்ன நம்பிக்கை வார்த்தைகள் இன்னும் என்னை இயக்குகின்றன. அவளின் ஸ்பரிசம் என்னை விட்டு விலக மறுக்கின்றன. அவள் பேச்சு என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. நான் தவறு செய்யும் போது தண்டனை அனுபவித்தவள் அவள். நான் சாதிக்கும் போது என்னை விட மகிழ்ந்தவள் அவள். நான் பேசவில்லையெனில் அவள் உண்ண மாட்டாள். நான் அழுகிறேன் என்றாள் அவளின் கண்ணில் நீh வடியும், நான் சிரிக்கிறேன் என்றால் அவளின் இதயத்தில் ஆனந்தம் பொங்கும். அவளின் இடுக்கிய கண்களால் என்னை இயக்கியவள். அவள் என்றும் என்னுள் இருப்பவள். அவள் என் ஆனந்தத்தின் வடிகால்.  என் கோபத்தின் குப்பைத்தொட்டி.

அவள் எங்கே இன்று?......... தவறு எங்கே, யாரால் நடந்தது?.

யாராலும்மில்லை…… என்னால் மட்டுமே நடந்தது. வார்த்தைகளில் கவனம்மில்லை என்றால் நம்முள் ஒருவராக இருப்பவர்கள் நம்மை விட்டு விலகி விடுவார்கள் என்பதற்க்கு அவள் ஒரு சாட்சி. உண்மை. நாங்கள் தற்போது விலகி நிற்க்கிறோம். விலகி தான் நிற்கிறோமே தவிர பிரியவில்லை. கண்கள் தான் சந்திக்க மறுக்கன்ற ஒழிய. ஏண்ணங்கள் எங்களை பிரிக்கவில்லை. நான் அவளை விட்டு விலகவும்மாட்டேன். என்னை விட்டு அவளும்  விலகவும்மாட்டால்…………. ஏன் எனில் அவள் என் காதலியல்ல…………..நண்பி.

விலகலுக்கு காரணம், நண்பர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் வர்ணனை தேவையில்லை. வார்த்தைகளில் கவனமும், உண்மையும் இருந்தால் போதும். கோபத்தை நண்பர்களிடம் தான் காட்ட முடியும். ஒருவரை பற்றி நன்கறிந்தயிடம் நட்பின் குடில். உன் உண்மையான நண்பர்கள் யாரென்றால் உன் முக பாவத்திலேயே உன் நிலையை அறிந்துக்கொள்பவர்கள். உனக்காக தன்னை அர்பரிணிக்காவிட்டாலும் உனக்காக துடிப்பவர்கள். அவர்களே உண்மையான உறுதியான நண்பர்கள்.


கால சுழலில் எது மாறினாலும், பேசிய வார்த்தைகளும், பழகிய நிமிடங்களும், உடன் இருந்த காலங்களும் மறக்க முடியாதது. அவை எல்லா மனிதர்களின் மனதின் ஒரு ஓரத்தில் உயிர் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கும். எந்த காலத்திலும் அது மரணித்துவிடாது. ஒரு மனிதனை பாசக்காரனாக்குவது உறவுகள் மட்டுமல்ல நட்பும் அவர்கள் காட்டும் அந்த இனம் தெரியாத அன்பும் தான். அதனால் தான் நாங்கள் விலகியிருந்தாலும் பிரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக