செவ்வாய், ஜூன் 07, 2011

தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு.


திமுகவின் இளம் தலைவர் என ஆங்கில, வட இந்திய ஊடகங்கள் சன் டிவியின் இரண்டாவது உரிமையாளர் தயாநிதிமாறனை வர்ணித்தது. திமுகவை புதிய பாதையில் கொண்டு செல்கிறார் என தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அந்த தயாநிதிமாறன் ஆந்திராவில் உடன் இருந்தே கூ+ழ்ச்சி செய்து மாமனாரிடமிருந்த முதல்வர் பதவியை பறித்து தனதாக்கி கொண்டது போல……… தாத்தாவிடம் உள்ள முதல்வர் பதவியை பறித்து தான் அந்த நாற்காலியில் அமர ஆசைப்பட்டார். கருத்து கணிப்புகளை வெளியிட்டார். அழகிரியை டம்மியாக்கினார். அதை சகித்துக்கொள்ள முடியாத அழகிரி அன் கோ. மதுரை தினகரன் அலுவலத்தை நொறுக்கி 3 பேரை உயிரோடு எரித்தார். உடனே இதற்க்கு பழி வாங்க தான் சார்ந்த கட்சியின் ஆட்சியவே கலைக்க முற்பட்டார் தயாநிதிமாறன். அரசியல் களத்தில் கத்து குட்டி தயாநிதியைப்போல் 100 தயாநிதிமாறனை கண்டவர் கருணாநிதி.

எரிவதை புடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்பதை உணர்ந்து மாறனிடமிருந்த மத்திய அமைச்சர் பதவியை பறித்தார். செத்தப்பாம்பாகி சீண்டுவார்யில்லாமல் கிடந்தார். சன் க்கு போட்டியாக கலைஞர் மீடியா உதயமானது. மோதல் தீவிரமானது. திமுகவை மறைமுகமாக பழிவாங்க முடிவு செய்தார்கள் மாறன் பிரதர்ஸ். காங்கிரஸ் கொம்பு சீவி விட்டது. 2ஜி ஊழல் விவகாரத்தில் மாற்று கட்சி முகாம்களுக்கே போய் டாக்மெண்டுகளை தந்தார்கள். தங்களது ஊடக நண்பர்கள், பாட்னர்கள் மூலம் விவகாரத்தை ஊதினார்கள். விவகாரம் பெரிதாகி, சிக்கலானது.

திடீர் திருப்பமாக இதயம் கனிந்தது, கண்கள் பனிந்தன. குடும்பங்கள் ஒன்றாகின. ஆனால் நீரில் ஒட்டாத எண்ணெய்யானார்கள் மாறன் சகோதரர்கள். போட்டியாகவுள்ள கலைஞர் தொலைக்காட்சி கூடாரத்தை காலி செய்ய முடிவு செய்தார்கள் மாறன் அன் கோ. அதற்கான காய் நகர்த்தல் வடநாட்டில் நடந்தது. அவர்கள் நினைத்ததை போலவே, ரெய்டு, ராஜினாமா, ராசா, கனிமொழி கைது என வரிசை கட்டியது. தேர்தலில் திமுக தோற்றது.

சந்தோஷமாக தான் இருந்தார்கள் மாறன் அன் கோ வினர். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை புரிந்து கொள்ள தவறிய மாறன் பிரதர்ஸ்சை புரிய வைத்து விட்டார் சட்ட நிபுணர் பிரசாந்த்பூஷன். 2ஜி ஊழல் விவகாரத்தில் தயாநிதிமாறன்க்கு பங்கு உள்ளது என நீதிமன்றம் சென்றார். பாஜகவை சேர்ந்த நாடாளமன்ற பொது கணக்கு குழு தலைவர் முரளிமனோகர்ஜோஷி, மாறன் காலத்தில் தான் 2ஜி ஊழல் ஆரம்பமானது என குற்றம் சாட்டினார். அதற்க்கு சாட்சியாக தொழிலதிபரான முன்னால் ஏர்செல் ஓனர் சிவசங்கரன் வந்து நிற்க்கிறார்.

அடுத்ததாக 2005ல் தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி அதி உயர் அழுத்தம் கொண்ட 320க்கும் அதிகமான இணைப்பு கொண்ட ஐ.எஸ்.டி வசதிகொண்ட தொலைபேசி எக்ஸ்சேஞ்ச் தயாநிதிமாறனின் போட்கிளப் வீடு டூ சன் டிவி அலுவலகத்துக்கு இடையே செயல்பட்டது. இதனால் அரசுக்கு 440 கோடி வருவாய் இழப்பு என்ற பூதம் கிளம்பியது. அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லை என்றது அமுல்பேபி. இதோ ஆதாரம் என பக்கம் பக்கமாக காட்டினார்கள். இல்லையே என் பெயரில் ஒரே ஒரு இணைப்பு மட்டும் தான் உள்ளது என சான்று காட்டினார். அது பொய் என முகத்திரையை கிழிக்கப்பட்டது.

திமுகவை நோக்கி வீசிய ஆயுதம் பூமராங் போல இப்போது அவர்களை நோக்கி அதி வேகமாக வருகிறது. அதை தவிர்க்க சோனியா, பிரதமர் மன்மோகன் என பலரை போய் பார்த்தார். மாறனால் முடிய வேண்டிய காரியம் முடிந்ததால் அவரை கழட்டி விட்டுவிட்டார்கள். திமுக தலைமை மவுனத்தை கடைபிடிக்கிறது. தப்பிக்க தங்களது தொழிலதிபர் திறமையை பயன்படுத்துகிறார்கள் மாறன் பிரதர்ஸ்.


இந்த பிரச்சனைகள் முடிவதற்க்குள் சன் டிவி மதிப்பு காலி பெருங்காய டப்பாவாகிவிடும் போல்யிருக்கிறது. மாறன்க்கு எதிராக பிரச்சனை கிளம்பாத போது சன் குரூப்பில் 1 ஷேர் மதிப்பு 540 ரூபாய். பிரச்சனை தொடங்கியபின் ஒரேநாளில் 310 ரூபாய்க்கு வந்துவிட்டது. வரும் நாட்களில் அது இன்னும் குறைய வாய்ப்புள்ளது. ஆக தற்போதைய நிலையில் மாறன்களுக்கு இழப்பு சுமார் 2500 முதல் 3000 ஆயிரம் கோடி என்கிறார்கள் பங்கு வர்த்தகர்கள். பங்கு மையமான செபியிடம் இந்த பிரச்சனை தீர்ந்து விடும், தொழில் பாதிப்பு அடையாது, முடங்காது என விளக்கம் தந்து அறிக்கை வெளியிட்டவர்கள். இது அரசியல் பழிவாங்கல் என காரணம் கற்பிக்கிறது மாறன் சார்பான ஊடக வட்டாரம். ராசா, கனி சிக்கியபோது அது ஊழல். மாறன் சிக்கினால் அது அரசியல் பழிவாங்கலாம். எப்புடீ………

கர்ப்பவதி என்னதான் வயித்தை மறைத்தாலும் ஒருநாள் பிள்ளை பிறந்தே தீரும். அதேபோல் மாறன் தன் ஊழலை என்னதான் மறைத்தாலும் வெளியே வந்தே தீரும். சோற்றில் மறைக்கப்பட்ட பூசணியை போல காங்கிரஸ் கட்சியின் ஊழல் வெளிவந்தால் சிறப்பாகயிருக்கும். வெளிவருமா?.

3 கருத்துகள்:

  1. சூப்பர் போஸ்ட் 2ஜி பற்றி நொடிக்கொருமுறை தனது டிவியில் ஒளிபரப்பினார்கள் அப்போது தான் அது சாமானிய மக்களுக்கு தெரியவந்தது..!!!

    இப்பொழுது இவர்களுகுக்கே திரும்பியுள்ளது...!!!

    பதிலளிநீக்கு
  2. மாறன்களுக்கும், சன் டீ.வீக்கும் மதிப்பு இருந்தாத்தா? எப்போ எங்கே? வடக்கே இவனுங்களைப் பாத்து காரித் துப்பாதவங்களே இல்லை.
    \\ஆக தற்போதைய நிலையில் மாறன்களுக்கு இழப்பு சுமார் 2500 முதல் 3000 ஆயிரம் கோடி என்கிறார்கள் பங்கு வர்த்தகர்கள். \\ What a pleasing news, Thanks.

    பதிலளிநீக்கு
  3. super
    காற்றுள்ள போதே "தூற்றி"க்கொள்கிறீர்கள்

    www.masteralamohamed.blogspot.com
    sirajmohamed21@gmail.com

    பதிலளிநீக்கு