செவ்வாய், ஜூன் 07, 2011

பி.ஜே.பிக்கு உதவும் காவியுடை கார்ப்பரேட் பாபா.



பாபா ராம் தேவ். காவியுடை தரித்த கார்ப்பரேட் தியான குரு. இவரை தான் தற்போது ஆங்கில, வடஇந்திய ஊடகங்கள் இந்தியாவின் நாயகனாக, நாட்டை சீர்படுத்த வந்த தேவதூதனாக அடையாளப்படுத்துகிறார்கள்.  ஊழலுக்கு எதிராக முண்டா தட்டுகிறார். ஊழலுக்கு எதிராக போராடுவதை வரவேற்க்கிறோம். ஆனால்….. பாபா பின்னால் இருப்பவர்கள் யார்? அவரின் நோக்கம்மென்ன ? என ஆராய வேண்டிய தருணம்மிது.

பாரம்பரிய கொள்ளைக்காரர்களான காங்கிரஸ்க்கு போட்டியாக உருவாகி ஆட்சியை பிடித்து கொள்ளையடித்த மத தீவிரவாதி கட்சியான பி.ஜே.பி தலைவர்களும், இந்துத்துவாவாதிகள் தான் பாபா பின்னால் அணி வகுத்து உள்ளார்கள். இவர்களின் குறி அடுத்து எப்படியாவது மீண்டும் மத்திய ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வெறி. இதற்க்காக ஊழல்க்கு எதிராக கொடி பிடிக்க முயன்றார்கள். தாங்கள் முன்னின்றால் யாரும் உடன் வரமாட்டார்கள் என அறிந்தே கார்ப்பரேட் சாமியாரை களம்மிறக்கினார்கள்.

பாபா ராம்தேவ். அரியாணா மாநிலத்தில் பிரமாண்டமான முறையில் மாளிகை கட்டி அங்கிருந்து தியான வகுப்புகளை நடத்துகிறார். பலாயிரம் கோடிக்கு அதிபதி இந்த துறவி. மிக சமீபத்தில் பாரத் சுவா அபிமான் என்ற பெயரில் ஊழல் எதிர்ப்பு அமைப்பை ஆரம்பித்தார். அதற்க்கு முன் இவர் உலகத்தில் இந்து மதமே சிறந்தது. மற்ற மதங்கள் சரியானவை அல்ல என திருவாய் மலர்ந்தவர். அதோடு  இந்தியாவில் இந்தி மொழி மட்டுமே இருக்க வேண்டும் என சுதேசி சிக்சா என்ற பெயரில் அமைப்பு ஏற்படுத்தி அதன் மூலம் இந்தி மொழியை பரப்பி வருபவர். ஏற்கனவே ஆயுர்வேத மருந்து மோசடி சர்ச்சையில் சிக்கயவர். கறுப்பு பணத்துக்கு எதிராக களமிறங்கி ஊழலை ஒழிக்க இவர் வைக்கும் வாதம் நகைப்புக்குரியதாக உள்ளது. அதாவது ஊழலை ஒழிக்க 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்களை அச்சடிக்க கூடாது என்கிறார். மூட்ட பூச்சிக்கு பயந்து வீட்டை கொலுத்த சொல்லுகிறார்.

இந்த பாபா தான் ஊழல்க்கு எதிராக உண்ணாவிரதத்துக்கு நேரம் குறித்தார். ஊழல் என்றாலே காங்கிரஸ் பெயர் தான் நினைவுக்கு வரும். அந்த கட்சி ஆட்சியில் அவர்களிடம் போய் ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டமசோதாவை நிறை வேற்ற வேண்டும் என கேட்பது வேடிக்கையானது, விநோதமானது. ஆனால் அதைத்தான் பாபா செய்தார். 5 கோடி ரூபாய் செலவு செய்து பந்தல் அமைத்து பாடோபடமாக ஊழல்க்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். வேணாம் விட்டுடுய்யா என மத்திய காங்கிரஸ் அரசு கெஞ்சியது. முடியாது என வீம்பு செய்தவரை எதிர் பார்க்காத நேரத்தில் இரவு நேரத்தில் உண்ணாவிரத பந்தலுக்குள் புகுந்த டெல்லி காவல்துறையினர் அந்தயிடத்தை மல்யுத்த பூமியாக்கி எல்லோரையும் தூக்கி வெளியே போட்டது. பாபாவை டெல்லிக்கு வெளியே தூக்கிம் போய் கடாசிவிட்டு டெல்லிக்குள் நுழைய கூடாது என தடை போட்டு காவலுக்கு இரண்டு பேரை நிறுத்துவிட்டு வந்துவிட்டார்கள்.


இதை கண்டு கொதித்து போனது பி.ஜே.பி, அராஜகம் என்றது. காங்கிரஸ்சோ, பாபா பி.ஜே.பியின் கிளை என சாடியது. உண்மையில் பாபா காவியுடை தரித்தவர்களின் கீ. ஆட்சியை பிடிக்க அவரை பயன்படுத்துக்கிறார்கள். மற்றப்படி அவர் மக்களை காக்க வந்த தேவதூதன் அல்ல.

அதனால் பாபாவை வைத்து மோதிக்கொள்ளும் இந்த இரு கோஷ்டியுமே இந்த விவகாரத்தில் முதலில் வாயை முட வேண்டும். அடுத்து தாங்களை யோக்கியவான்களாக காட்டிக்கொள்ள அறிக்கை விடும் இவர்களும் ஊழலும் பிரிக்க முடியாதவர்கள். காந்தி காலம் முதலே பணக்காரர்களுக்கு பாய் விரித்தவர்கள் காங்கிரஸ்காரர்கள். காந்தி இறக்கும் வரை அன்றைய இந்தியாவில் பணக்காரராக விளங்கிய பிர்லா மாளிகையில் தான் தங்கியிருந்தார். நேரு காலத்தில் பல ஊழல்கள்,  இந்திராகாந்தி காலத்தில் அவரது இளைய மகன் சஞ்சய் காந்தி செய்யாத ஊழல்யில்லை. ராஜிவ்காந்தி காலத்தில் போபர்ஸ் ஊழல், நரசிம்மாராவ் காலத்தில், பங்கு சந்தை மோசடி, சோனியா காலத்தில், ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ் வீடு, காமன்வெல்த் போட்டியில் ஊழல்.


இவர்களுக்கு போட்டியாக 2 முறை ஆட்சியில் இருந்த பி.ஜே.பியினர் கார்ப்பரேட் முதலாளிகளுகு கால் பிடித்துவிட்டு குளிர் காய்ந்தவர்கள். முத்திரை தாள் மோசடி, ராணுவ வீரர்களுக்கான சவப்பெட்டி ஊழல் என பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். அந்தளவுக்கு இரண்டு கட்சிகளுமே ஊழல் செய்வதில் போட்டி போட்டன. தற்போது இரண்டு கட்சிகளும் தாங்கள் ஏதோ யோக்கியவான்கள் போல் பேசுகின்றனர்.

கறுப்பு பணத்தை மீட்க வேண்டும் என குரல் கொடுக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகளிடமும், இவர்களின் பினாமிகளாக உள்ள தொழிலதிபர்களிடமும், சாமியார்களிடமும் தான் ஊழல் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. அறிந்தும், அறியாதது போல் சும்மா பேச்சுக்கு அறிக்கை, அர்ப்பாட்டம் செய்துக்கொண்டுள்ளார்கள். ஆட்சியை பிடிக்க ஊழல் எதிர்ப்பு என்ற ஆயுதத்தை பி.ஜே.பியும், ஆட்சியில் நடப்பதை மறைக்க அதை அரசியலாக்கும்  இந்த அரசியல்வாதிகள் என்று திருந்துகிறார்களோ அன்று தான் இந்தியாவுக்கு விடிவுகாலம். இல்லையேல். இப்படிப்பட்ட கோமாளி நாடகங்களை நாம் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியது தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக