செவ்வாய், ஜூன் 14, 2011

சமச்சீர் கல்வியில் நடக்கும் நாித்தனம்.


நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளை விமர்சனம் செய்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்கிறார்கள். இருந்தும் உச்ச நீதிமன்றத்தின் ஒரு கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

சமச்சீர் கல்வி திட்டம் என்பது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தான் தமிழகத்தில் உருவாக்கப்பட்டது. கடந்த திமுக அரசு அதற்காக ஒரு குழுவை அமைத்து பாடத்திட்டங்களை உருவாக்கியது. அது ஏற்புடையதாக உள்ளதா என ஆராய்ந்து ஏற்றுக்கொள்ள ஒப்புதல் அளித்தது. 

கடந்த ஆண்டு முதல் 1 ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்பில் சமச்சீர் கல்வி பாடதிட்டம் நடைமுறைக்கு வந்து மாணவ சமுதாயம் படித்து முடித்துவிட்டது. இந்த ஆண்டு முதல் எல்லா வகுப்புக்கும் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என கடந்த ஆண்டே முடிவு செய்யப்பட்டு அதன் படி 200 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து பாடத்திட்டங்கள் அச்சடித்து பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. 

இந்நிலையில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சி வந்தது. வந்த உடனே முதல்வரான ஜெயலலிதா. சமச்சீர் கல்வி முறைக்கு தடை விதித்தார். அதற்க்கு அவர் கூறிய காரணம், பாடத்திட்டம் தரமானதாகயில்லை. தமிழ் பாடத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் புகழ்பாடப்பட்டுள்ளது என்றார். 

அந்த பாடத்தை நீக்குவதாக அறிவித்துவிட்டு சமச்சீர் கல்வி திட்டத்தை தொடர்ந்துயிருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் அத்திட்டத்தையே நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டது. திமுக தொடங்கிய திட்டத்தை நாம் செயல்படுத்த கூடாது என்ற அதிமுகவின் எண்ணம் தானே தவிர வேறுயில்லை. ( இதற்க்கு முன் ஒரு கட்டுரையில் பார்ப்பனியத்தின் சதி என்று கூறியிருப்பேன் அதுவும் ஒரு காரணம்)

இது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காக, தமிழக அரசை எச்சாித்த நீதிபதி, எதை வைத்து தரமானதுயில்லை என முடிவு செய்தீர்கள் என சரமாாாியாக கேள்வி கேட்டு இந்த ஆண்டே சமச்சீர் பாடத்திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அப்படி அவர் சொல்ல காரணம் தமிழக அரசியல் களத்தை நன்கு அறிந்ததாலே அப்படி ஒரு உத்தரவை அவர் சொல்லியிருப்பார் என எண்ணுகிறேன். 

இதனை எதிர்த்து கேவியட் மனுவாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது தமிழகரசு. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனுவை விசாாித்தவர்கள் சமச்சீர் பாடத்திட்டத்தை ஆராய தலைமை செயலாளர் தலைமையில் குழு ஒன்றை நியமித்துள்ளது. அதில் அரசின் பள்ளி கல்வித்துறையை சார்ந்தவர்கள் இருப்பார்கள் என அறிவித்தது. அடுத்து 2 வாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது. 3 வாரம் கெடு தந்துள்ளது. 

கொஞ்சம் கூட மாணவ சமுதாயத்தை பற்றி சிந்திக்காத நிலையை தான் நீதிபதிகளின் கருத்தில் காண முடிகிறது. காரணம். அதிமுக ஆட்சி சமர்ச்சீர் பாட திட்டத்தை நிறுத்தி பழைய பாட திட்டம் தொடர.......... அதற்காக பாட நூல்கள் அச்சடிக்க 15 நாள் லீவு விடப்பட்டது. இதனால் மாணவர்களின் படிப்பு 15 நாள் கெட்டுள்ளது.

ஜீன் 15ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு பளளிகள் நடைபெறவிருந்த நிலையில் வழக்கு உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் 3 வாரத்திற்க்கு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. 

இந்நிலையில் மாணவ சமுதாயம் இந்த 3 வாரத்திற்க்கு எந்த பாடத்தையும் படிக்காமல் அப்படியே இருக்கம் நிலை. இதனால் 21நாள் மாணவர்களின் படிப்பு பாழானது தான் மிச்சம். தீர்ப்பு வந்தபின் சமச்சீர் பாடத்திட்டம் என்றால் பரவாயில்லை உடனே பாடம் நடத்த தொடங்கிவிடலாம். பழைய பாடத்திட்டப்படி பாடம் நடத்த வேண்டும் என்றால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாட புத்தகம் அச்சடிப்பு தொடங்க வேண்டும், அந்த பாட புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி மாணவர்கள் கையில் கிடைக்க வேண்டும் அதுவரை பாடம் படிக்காமல் விட்டத்தை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி தந்துள்ளார்கள் நீதிபதிகள். 

தமிழகத்தின் அரசியல் நிலை தொியாமல் வழங்கப்பட்ட தீர்ப்பா அ பிராமணியத்தின் சதி திட்டமா ? அது அந்த நீதிபதிகளுக்கே வெளிச்சம்.

1 கருத்து:

  1. மிக நல்லக் கருத்துக்களை கொண்ட பதிவு நண்பரே
    இதே மாதிரியான கருத்துக்களை கொண்ட பதிவினை நானும் இட்டுள்ளேன் , நேரம் அனுமத்தித்தால் படியுங்கள்
    உங்கள் கருத்தை பதியுங்கள்

    http://arr27.blogspot.com/2011/06/blog-post_14.html

    பதிலளிநீக்கு