இந்த கட்டுரை திமுகவுக்கு சார்பான கட்டுரை போல் தோன்றும். அப்படியல்ல…… உண்மைகள் உறங்கும் போது பொய்கள் தாண்டவமாடும் என்பார்கள். அப்படித்தான் திமுக மவுனமாகயிருக்க காங்கிரஸ் குதியாட்டம் போடுகிறது. பாலிமர் தொலைக்காட்சியில் மக்களுக்காக நிகழ்ச்சியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் ஒரு நேர்காணல் நடத்தப்பட்டது. அதில் அவர் கூறிய கருத்துக்களை கேட்டபோது, காங்கிரஸ்காரர்கள் திமிர் இன்னும் அடங்கலயே என எண்ண தோன்றியது.
திமுகவால் தான் காங்கிரஸ் தோற்றது. நாங்கள் 63 இடங்கள் வாங்கியதில் தவறேயில்லை. எங்களுடைய பலத்துக்கு நாங்கள் 118 இடங்கள் வாங்கி நின்றிருக்க வேண்டும், அது மக்களுக்கும் நன்றாக தெரியும். காங்கிரஸ் தனித்து நின்றிருந்தால் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும். குறைந்தது 25 சட்டமன்ற தொகுதியில் வென்றுயிருப்போம் என்றவர். காங்கிரஸ்சால் திமுக தோற்கவில்லை. அவர்களின் குடும்ப ஆதிக்கம் தான் அவர்களை தோற்கடித்தது என்றார். தேர்தல் பிரச்சாரத்தின் போது ஈரோட்டில் நான் கலைஞரின் காலில் விழவேயில்லை. அப்படி விழுந்ததை காட்டினால் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன் என்றார். திமுக தமிழகத்தில் செத்த கட்சி அதை நான் விமர்சனம் செய்யமாட்டேன் என தேர்தல் முடிவுக்கு பின் அறிவித்தேன். அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். திமுக செத்த கட்சி. தமிழகத்தில் இனி அதிமுகவுக்கு போட்டி காங்கிரஸ் தான் என்றவர். திமுகவுக்கு போட்டி திக தான். அவர்கள் இருவரும் தான் இனி யாரிடம் அதிக உறுப்பினர்கள் உள்ளார்கள் என சண்டை போட வேண்டும் என்றார் சிரித்துக்கொண்டே.
தற்போதைய முதல்வர் ஜெயலலிதா பற்றிய கேள்விக்கு, அவர் பக்குவப்பட்ட பெண்மணி அவர் தலைமை செயலகம் மாற்றம் பற்றி கூறிய கருத்து என்னை அது 100 சதவிதம் சரியென ஒப்புக்கொள்ள வைத்துவிட்டது என சிலாகித்தார். இதுவரை இளங்கோவன் பேசிய பேச்சுகளை வைத்து சில கேள்விகளை கேட்டார். காங்கிரஸ்சை பகைத்துக்கொண்டால் ‘உள்ளே’ போக வேண்டி வரும் என்பதால் தான் கூட்டணியை விட்டு போக மறுக்கிறார்கள் மானங்கெட்டவர்கள் என நான் பேசவில்லை. கொள்ளையடித்தவர்கள் உள்ளே போக வேண்டி வரும் என்றே பேசினேன் என்றார். அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, நிலம் அபகரிப்பு எதுவும்மில்லை. சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது. திமுக ஆட்சியில் இது கொடி கட்டி பறந்தது என திருவாய் மலர்ந்தார்.

அவரின் பதிலும் என் எதிர்விணையும்: காங்கிரஸ்க்கு 63 இடங்களை ஒதுக்கி திமுக மாபெரும் தவறு செய்தது. அது தான் மக்களிடம்மிருந்து திமுகவை அந்நிய படுத்த மிக முக்கிய காரணம். 63 இடங்கள் கேட்கிறார்கள் என காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வருகிறேன் என கலைஞர் அறிவித்தபோது, தமிழகத்தில் திமுகவுக்கு மீது மிகப்பெரிய ஆதரவு அலை எழுந்தது. அதை பயன்படுத்திக்கொள்ள திமுக தவறியதோடு 63 இடங்களை தந்து மானங்கெட்ட கட்சி என்ற பெயரை சம்பாதித்தது. இது திமுக தொண்டர்களை அவமானத்தில் தள்ளியது. ஓன்னும்மில்லாத கட்சிக்கு 63 ஏன் தர வேண்டும் என்ற கேள்வி பாமரன் வரை எதிரொலித்தது. இது தான் திமுகவின் படு தோல்விக்கு முக்கிய காரணம். காங்கிரஸ்சை விட்டு வெளியே வந்திருந்தால் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றாலும் எதிர்கட்சி அந்தஸ்த்து அளவுக்காவுது வென்றிருப்பார்கள். காங்கிரஸ்சுடன் கூட்டணி வைத்ததன் விளைவு படு பாதாளத்துக்கு போய் இளங்கோவன் எல்லாம் திமுகவை செத்த கட்சி என விமர்சிக்கும் நிலைக்கு வந்துவிட்டது.
அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து எதுவுமே நடக்கவில்லை என பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார். இதை இன்னும் 1 ஆண்டு கழித்து சொல்லுங்கள் பார்க்கலாம். இப்போதே சொல்ல முடியாத அளவுக்கு தான் நிர்வாகம் உள்ளது என்பதை செய்திதாள்களை கண்டால் தெரியும். தலைமை செயலகம் மாற்றம் என்பது, 2001-06 ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எடுத்த முடிவு. அப்போது, எந்த இடத்தில் என்பதில் தான் பிரச்சனை ஆரம்பமானது. திமுக ஆட்சி காலத்தில் வேறு ஒருயிடத்தில் கட்டினார்கள். கட்ட போகிறோம் என அறிவித்தபோதே, நான் புது சட்டமன்ற வளாகத்தில் கால் வைக்க மாட்டேன் என்றார். ஆக ஜெயலலிதா இன்று சொல்வதை போல, அரசு துறைகள் வேறு எங்கோ உள்ளது, இடப்பற்றாக்குறை போன்றவையே காரணம் என சொல்வது வடிக்கட்டிய பொய். திமுக கட்டிய கட்டிடத்துக்குள் போக கூடாது என்ற எண்ணம் தானே தவிர வேறுயில்லை.
ஈழ படுகொலையை எந்த தமிழனாலும் மறக்க முடியாது. இதற்க்கு முழு பொறுப்பும் இந்தியாவின் காங்கிரஸ் அரசு தான். அதற்கடுத்து தான் இலங்கை சிங்கள அதிபர் இராஜபக்சே. ஈழ படுகொலையை செய்த இந்திய காங்கிரஸ் அரசு, அதை லாவகமாக தமிழகத்தில் திமுக மீது திருப்பிவிட்டது. தமிழகத்தில் காங்கிரஸ்சை முதுகில் சுமந்ததன் பலனை திமுகவுக்கு கடைசியில் கற்று தந்து விட்டது காங்கிரஸ். காங்கிரஸ் வரலாற்றில் துரோகத்துக்கு தான் முதலிடம். அங்கு கூட்டணி வைக்காதிர்கள் என திமுகவை 10 ஆண்டுகளுக்க முன் எவ்வளவோ எச்சரித்தார்கள். ஆனால் அதை கேட்காமல் கூட்டணி வைத்ததன் பலனை இன்று திமுக அறுவடை செய்கிறது. திமுகவின் தன்மானம், கொள்கை போன்றவற்றை திகார் சிறையில் வைத்துள்ளது காங்கிரஸ்.
ஊழலின் ஒட்டு மொத்த உருவம் எதுவென்றால் அது காங்கிரஸ் தான். ஆனால் நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள், இந்தியாவுக்கே சுத்திரம் வாங்கி தந்தவர்கள் என இளங்கோவன் முதல் எல்லா காங்கிரஸ் தலைவர்களும் பேசுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எதனால் லோக்பால் அமைப்பில் பிரதமரை, ஜனாதிபதியை சேர்க்க மறுக்கிறார்கள். இந்த பதவிக்கு வருபர்கள் என்ன தேவதூதர்களா இல்லை இயந்திரமா ஊழலே செய்யாமல் போக.
1. போர்ஸ் ஊழலில் ஆதாரங்கள் பலயிருந்தும் சாட்சிகளை கைது செய்யாமலும், வங்கி கணக்கை திறந்துவிட்டவர்களும், வழக்கை முடித்துக்கொண்டவர்கள் காங்கிரஸ் ஆட்சியில் தான்.
2. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோத, போபால் விஷவாயு தாக்குதலில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலிவாங்கிய போது அதன் முதலாளிக்கு தனி விமானம் தந்து வழியனுப்பியவர்கள் காங்கிரஸ்காரர்கள்.
3. முத்ரா ஊழல், ஸ்பெக்ட்ராம் ஊழல் என வரிசை கட்டி காங்கிரஸ் மீது குற்றம் சாட்ட முடியும்.
3. கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்தவர்கள் இதே காங்கிரஸ்காரர்கள் ஆண்டபோது தான். இப்படி பலவற்றை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். இதெல்லாம் வெளிவாராமல் போனதன் காரணம் புலனாய்வு அமைப்புகள் பிரதமர், ஜனாதிபதி போன்றோரின் கீழ் இருப்பதால் தான். அவை தனித்துயிருந்திருந்தால் பல ஊழல்களில் ஜனாதிபதிகளும், பிரதமர்களும் சிக்கியிருப்பார்கள். அப்படி சிக்ககூடாது என்பதால் தான் லோக்பால் என்ற அமைப்பின் கீழ் இவர்களை கொண்டு வர பயப்படுகிறார்கள் காங்கிரஸ்காரர்கள். இப்படிப்பட்டவர்கள் பேசுகிறார்கள் நாங்கள், இந்தியாவின் நலன் விரும்பிகள், சுதந்திரம் வாங்கி தந்தவர்கள் என்று.
காங்கிரஸ்காரர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் சுதந்திரத்துக்காக போராடவில்லை என்றாலும் சுதந்திரம் கிடைத்திருக்கும். ஏன் எனில் காங்கிரஸ்சை போல் பல இயக்கங்கள், அமைப்புகள் சுதந்திரத்துக்காக தீவிரமாக போராடின. வலிமையான இயக்கம், பல பணக்காரர்கள், பத்திரிக்கையுலக முதலாளிகள் அந்த இயக்கத்தில் இருந்ததால் நீங்கள் மட்டும் போராடியதாக தகவல்கைள பரப்பினிர்கள். அதோடு, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்து மாற்று இயக்கங்கள், பல போராட்டகாரர்களின் வரலாற்றை மறைத்த இயக்கம் தான் காங்கிரஸ். ஆக நீங்கள் ஒன்றும் இந்தியாவை காக்க வந்த தேவதூதர்களில்லை இந்தியாவை விற்க்கும் சபாகேடுகள் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.
somppu..super...
பதிலளிநீக்குplease remove word verification...
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது மிகவும் சரியே முதலில் இந்தியர்களை ஒரு இந்தியன் ஆளவேண்டும்.இபொழுது இருக்கும் அரசு அமெரிக்காவின் ஒரு கைப்பாவை அரசே ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்து இந்த நாட்டை நாசம் செய்து வைத்து இருகிறார்கள்.அப்புறம் பிரதமர் என்பவர் பிரதமராக இருக்கு வேண்டும் "பிரதமர் மாதிரி" இருக்க கூடாது .
பதிலளிநீக்குGood analysis...
பதிலளிநீக்குடைப் பண்ணும் போது சாியாக தான் பண்றன். யுனிகோட்டா மாத்தும் போது இப்படி மாறிடுது. இனி வரும் போஸ்ட்ல அத ஒழுங்கு படுத்திடறன். தவறை சுட்டி காட்டறதுக்கு நன்றி.
பதிலளிநீக்குcangress 63 thogthigalai keatathu makalukukaaga. paniyaatra aanal d M k mathiya manthrien kuripata laakakalai keatathu kolaiyadika.oulauku ethiraaga makal vaakalithu ullanar
பதிலளிநீக்குவந்தே மாதரம் .........வந்தே மாதரம். .......... வந்த பின் ஏமாத்துறோம்
பதிலளிநீக்கு