ஞாயிறு, ஆகஸ்ட் 08, 2010

எந்திரனும்……….. குதிரை சவாரியும்.






சமீபமாக சன் குழும சேனல்களை பார்ப்பதையே விட்டுவிட்டேன். எப்ப பாத்தாலும் சன் டிவி கலாநிதிமாறன் வழங்கும் என மூச்சுக்கு முண்ணூறு முறை காவல்காரன், தோட்டகாரன், சிங்கம், எலி, புலி என விளம்பரத்தை போட்டு பார்ப்பவர்களின் உயிரை எடுப்பதால் தான் அச்சேனல்களை பார்ப்பதே கிடையாது. அதற்க்கு பதில் இசையருவி, விஜய், ஜெயா மேக்ஸ் என பார்த்துக்கொண்டிருக்கிறேன். சமீபமாக கலைஞர் குழுமமும் ரெட் ஜெயன்ட், கிளைட் நைன் வழங்கும், தமிழ்படம், ஆங்கிலப்படம், தெலுங்குபடம், மதாராசாபட்டினம், சித்தூர் பட்டனம் என விளம்பரமாக போட்டு பேதியாக்குவதால் எங்கள் வீட்டு டிவி ரிமோட் என்னை கண்ணாபின்னா வென திட்டுகிறது. 



அப்படியும் மலேசியாவில் எந்திரன் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை ஞாயிறு அன்று மாலை சன்னில் பார்த்துக்கொண்டிருந்தேன். இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கே இத்தனை பந்தா விளம்பரம்மென்றால் படம் வெளிவரும் நாளன்று தமிழகம் முழுவதிலிருந்தும் எந்திரன் தியேட்டர் வாசலில் இருந்து நேரடி ஒளிபரப்பு என சன் குழும சேனல்கள் அலறப்போவதை நினைத்தேன். 

கனவு காணாமல் என் கண் முன் விரிந்தது அக்காட்சிகள், எந்திரன் படம் உலகம் முழுக்க ரிலிஸ்சாக இன்னும் மூன்று தினங்களே உள்ளன. ஆனால் தமிழக மக்கள் தங்களது வீட்டில் சமையல் கூட செய்யாமல், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், கணவன்மார்கள் அலுவலகம் செல்லாமல் எந்திரன் படத்தை பார்க்க வேண்டும் என்ற வாழ்நாள் லட்சியத்தில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மேற்குவங்களம், டெல்லி என இந்தியா முழுக்கவுள்ள மக்கள் தங்கள் வாழ்நாள் லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள தியேட்டர் வாசலில் குடும்பத்தோடு வந்து டேரா போட்டு டிக்கட்க்காக க்யூவில் காத்திருக்கிறார்கள். 

இப்படி பல லட்சம் குடும்பங்கள் தியேட்டர் முன்பு, தேசிய நெடுஞ்சாலையில், கக்கூஸ் சந்துகளில் கூடாரம் அமைத்து தங்கியுள்ளதால் இந்தியாவில்; வாகன போக்குவரத்து முற்றிலும் தடையேற்பட்டுள்ளது, பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. 



வுpமான துறை ஊழியர்கள், எல்லை பாதுகாப்பில் உள்ள ராணுவ வீரர்கள், நக்சலைட்டுகள் என மத்தியரசு ஊழியர்கள் எந்திரன் படம் பார்க்க சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுமுறையும், டிக்கட் வாங்க, உள்ளே திண்பண்டம் வாங்கி திண்ண சிறப்பு கடன் திட்டமும் வேணும் என போராட்டத்தில் குதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறன்றன. மத்தியரசும் எந்திரன் திரைப்படம் வெளிவரும் நாளை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கலாமா என பிரதமர் தலைமையில் கூடிய கேபினட் கூட்டம் ஆசேலாசித்து வருகின்றது.  

அதேபோல் அமெரிக்காவில் ரிலிசாக போகும் எந்திரன் திரைப்படத்திற்க்கு அந்நாட்டு அதிபர் ஓபாமாவுக்கு டிக்கட் கிடைக்கவில்லை என தன் அலுவலக ஹாட் லைனில் இருந்து சன் குழும தலைவர் உயர்திரு, டாக்டர், பத்மபூசன், ஆஸ்கார் நாயகன் கலாநிதிமாறனிடம் தன் குடும்பத்தார் படம் பார்க்க டிக்கட் வேண்டும்மென கேட்டு கெஞ்சியுள்ளார். 

படம் வெளியீட்டன்று, படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களிடம் கருத்து கேட்டபோது, இது போன்ற ஒரு படம் இதுவரை உலகத்தில் வரவில்லை இனி வரப்போவதுமில்லை. அதிலும் குறிப்பாக இடைவேளைக்காக போடப்பட்ட எழுத்து இதுவரை உலகத்தில் கண்டு பிடிக்காத எழுத்து என கோயம்பத்தூர் குப்புசாமியும், சென்னை சரோஜாவும், ஐதராபாத் அம்மாஞ்சியும், கேரளா கேப்பக்கிழங்கு மாமியும், அமெரிக்காவின் ஹிலாரியும் சிலாகித்து சொன்னார்கள். 



படத்தை பற்றி நம் சிறப்பு செய்தியாளர் தரும் சிறப்பு தகவல், படம் பார்க்கும் ரசிகர்கள் ரஜினிகாந்த் ஆம்ஸ் காட்டும் போதும், ஐஸ்வர்யாபச்சான் அழும்போதும் ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டு அன்பு தொல்லை தருகிறார்கள். அதிலும் குறிப்பாக சன் பிக்சர்ஸ் என்ற பெயர் திரையில் வரும்போதுயெல்லாம் தமிழக மக்கள் கற்பூரம் ஏற்றி ஆராதனை செய்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் கேமராமேன் கன்னுகுட்டிடன் உங்கள் வீட்டுப்பிள்ளை……. நன்றி வணக்கம். 

கனவே காணாமல் நம் கண் முன் ஓடியதை கண்டதும் சாமி போதும்டா இந்த சேனல் என வேறு சேனல்கள் மாற்றியபடி வந்தேன். ஜீ டிவியில் தி வெதர் மேன் என்ற ஆங்கிலப்படம் போட்டுயிருந்தார்கள். 


ஆங்கிலப்படத்தில் சில சீன்கள் அப்பட்டமாகயிருக்கும். அப்படித்தான் அந்தப்படத்தில் ஒருயிடத்தில் பள்ளியறையில் நாயகன் மேல் காதல் நாயகி குதிரை சவாரி செய்வார். (அதுயென்ன குதிரை சவாரின்னு கேட்காதிங்கப்பா…….. நான் கல்யாணம்மாகத பையன் ……. அதப்பத்தி கல்யாணம் ஆனவங்கக்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்குங்க). 



அந்த காட்சியும், மேலாடையில்லாத நாயகியின் உடல் சவாரியின் போது ஜம்பாகுவதை காட்டினார்கள். ஆங்கிலப்படத்தை டப் செய்து போடுங்க வேணாம்ன்னு சொல்லல. ஆனா போடறதுக்கு முன்னாடி கொஞ்சம் அந்தப்படத்தை நீங்க பாருங்க. பாத்துட்டு அப்பறம் போடுங்க சாமிங்களா……. புண்ணியமா போகும். 

இல்ல பாத்துட்டு தான் போட்டோம்ன்னு சொன்னிங்கன்னா கொஞ்சம் காத கொடுங்க …………. அடுத்த வாரம் நம்ம ஷகிலா பேபி படுத்த ச்சீசீசீ நடிச்ச படத்த போட்டு இளைஞர்களுக்கு கொஞ்சம் கருணை காட்டுங்கப்பா புண்ணியமா போகும். ஏன்னா தொலைக்காட்சின்னாவே பெண்களுக்கானதா மாறிப்போச்சி நீங்களாவது இளைஞர்களுக்கானதா மாத்தி நடத்துங்க ரேட்டிங் பிச்சிக்கிட்டு போகும். அப்பறம்மென்ன தமிழ்நாட்ல நீங்கதான் அவுங்கள மாதிரி நம்பர் ஒன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக