திங்கள், ஜூன் 24, 2013

16 வயது முஸ்லிம் பெண்கள் திருமணத்துக்கு கேரளா அனுமதி.16 வயதுக்குட்பட்ட இஸ்லாமிய பெண்கள் திருமணம் செய்துக்கொண்டு பதிவு செய்ய விண்ணப்பித்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் என கேரளா உள்ளாட்சி துறையின் முதன்மை செயலாளர் ஜேம்ஸ் வர்கீஸ் ஒரு உத்தரவை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அனுப்பியுள்ளார். இது அவரின் தனிப்பட்ட உத்தரவாக இருக்க முடியாது கேரளா அரசாங்கத்தின் உத்தரவாக தான் இதை கருத முடியும்.

எத்தனை அநியாயமான உத்தரவை கேரளா அரசாங்கம் செய்துள்ளது. 18 வயது என்பதே குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதல்ல என உலக சுகாதார நிறுவனம், மருத்துவ ஆய்வு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. அதனால் திருமண வயதை 18 வயதில் இருந்து 20 வயதுக்கு உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழும்பி வரும் நிலையில் 16 வயதாக குறைத்திருப்பது அபத்தம்.

அதுவும் இஸ்லாமிய பெண்களுக்கு என குறிப்பிட்டுள்ளார்கள். இதை பார்த்து இந்து, கிரஸ்த்துவ, பிற இயக்கங்கள் எங்கள் மதத்திற்க்கும் இந்த உத்தரவு பொருந்தும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும் என கேட்டாள் செய்வார்களா ?.

இஸ்லாமிய இயக்கங்கள் கேட்டுக்கொண்டதால் இப்படி செய்தோம் என கேரளா சொல்லலாம். இஸ்லாமிய இயக்கங்கள் அங்கு மட்டுமல்ல தமிழகம், ஆந்திரா, மகாராஷ்ட்டிரா, டெல்லி என பல மாநிலங்களில் வாழும் இஸ்லாமிய பிற்போக்குவாதிகள் எங்கள் மத கோட்பாடுகளில் தலையிடாதீர்கள் என கேட்கிறார்கள். அவர்கள் சிறுபான்மையினம் என்பதால் அவர்கள் கேட்பதற்க்கு தலையாட்டிவிட வேண்டுமா என்ன ?.

இந்தியாவில் பன்முக கலாச்சாரம் கொண்ட மக்கள் வசித்து வருகிறார்கள். ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு விதமான சடங்குகள் உள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் குழந்தை திருமணங்கள் சர்வ சாதாரணம். அதிகளவில் இந்துக்கள் செய்தனர். அதற்கடுத்து இஸ்லாமியர்கள் செய்தனர். பெண்கள் நலனை கணக்கில் கொண்டு சட்டங்கள் போடப்பட்டு பெண்ணுக்கு திருமண வயது 18 என்றும், ஆணுக்கு 21 என்றும் வரையறுக்கப்பட்டன.

இஸ்லாமியர் சமூக பெண்கள் மட்டும் 16 வயதில் செய்து வைக்கப்படும் திருமணங்கள் பதிவு செய்ய அனுமதி வழக்கினால் மற்ற சமூகத்தவரும் கேட்பார்கள். தர மறுக்கும் போது வீணான சர்ச்சைகள் தான் வரும்.

இந்த உத்தரவை கேரளா திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இல்லையேல் இதனை முன்னுதாரணமாக காட்டி பிற மாநிலங்களிலும் உத்தரவை போடச்சொல்லுவார்கள் இஸ்லாமிய பிற்போக்குவாதிகள்.

இந்த உத்தரவு இஸ்லாமிய பிற்போக்கு ஆண்களிடம் அடிமைப்பட்டு கிடக்கும் இஸ்லாமிய பெண் சமூகத்தை இன்னும் அடிமை படுத்திவிடும். ஏற்கனவே இஸ்லாமிய மதத்தில் பெண்களை படிக்க அனுப்புவதில்லை, திருமணமும் அவர்கள் விரும்பியபடி நடப்பதில்லை, அவர்கள் உடலுக்கு, முகத்துக்கு மட்டும் முகமுடி போடவில்லை. அவர்கள் வாழ்க்கைக்கே இஸ்லாமிய பிற்போக்குவாதிகள் முக்காடு போட்டு வைத்துள்ளார்கள். அவர்களை இன்னும் இருட்டில் தள்ளவே இந்த உத்தரவு பயன்படும் என்பதை கேரளா உணர்ந்து திருந்தும்மா ?.

2 கருத்துகள்:

  1. podaa bemaani. thirundungadaa...hindungura koottaththukkulla evvalavu aniyaayam nadakkudu. kooda pirandha thangai vayasukku varalannaa annanee avala poduraan. adha eluthu. avaal...evaalnu solra ellaa naayum avanga manaivikku 100% sudandhiram kudukkuraangannu unakku ninaippaa..enga oru familya sollu paakkalaam. thaan sooththa kaluva vakkullaadhavan aduththavan sooththa kaluvunaanaam. adu pola irukku vun muttaal katturai. kedu ketta naaye

    பதிலளிநீக்கு
  2. what is your problem
    it depends upon the parents and the girl when the supreme court allows and the creator of the whole world allows who are you bull chit to comment

    பதிலளிநீக்கு