திங்கள், ஜனவரி 10, 2011

தேமுதிக கப்பலின் ‘ கேப்டன் ’ ஜெ.


சேலத்தில் 9ந்தேதி உரிமை மீட்பு மாநாட்டை பிரமாண்டமாக நடத்தியது தேமுதிக. கூட்டணி அறிவிப்பு செய்வார் என்ற நம்பிக்கையுடன் தமிழகம் முழுவதும்மிருந்து லட்ச கணக்கில் சேலத்தில் குவிந்தார்கள் விஜயகாந்த் ரசிகர்கள்.
அதை மாநாட்டு மேடை பொய்யாக்கவில்லை. கட்சியின் சார்பில் கொண்டுவரப்பட்ட மாநாட்டு தீர்மானங்கள் அனைத்தும் திமுகவை கடுமையாக தாக்கியே இருந்தது. சில தீர்மானங்களில் மத்தியரசையும் லோசாக டச் பண்ணியிருந்தார்கள். சேலம் மா.செ இளங்கோவன் முதல் மாநில மகளிரணி தலைவி பிரேமலதா வரை திமுக வை அட்டாக் செய்தார்கள்.
கட்சி ஆரம்பித்த 2005 முதல் என் கூட்டணி எப்போதும் மக்களுடன், கடவுளுடன் தான் என கர்ஜித்து வந்த கேப்டன் தற்போது தன் கட்சியின் துடுப்பை இரட்டை இலை தலைவியிடம் தர தயாராகிவிட்டார் என்பதை மாநாட்டின் பேச்சு மூலம் உணர முடிந்தது. வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவை கரைசேர்க்கும் பொறுப்பை ர.ரக்கள் ஏற்றுக்கொள்ள போகிறார்கள்.
காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து வெளியில் வரும், வரும் என காத்திருந்து காத்திருந்து நொந்துபோய் தலைவியிடம் சரண் அடைந்துள்ளார் விஜயகாந்த். இதற்க்கு விஜயகாந்தின் மச்சான்க்கும், மனைவிக்கும் விஜயகாந்த் ரசிகர்கள் நன்றி சொல்ல வேண்டும்.

2006ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ரசிகர்களை 234 தொகுதியிலும் முரசு சின்னத்தில் வேட்பாளர்களாக நிறுத்தி மக்களை சந்தித்து வாக்கு வாங்கினார்கள். அந்த தேர்தலில் பாமகவின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட விருத்தாசலத்தில் விஜயகாந்த் வென்றார். பாரம்பரியமான காங்கிரஸ் கட்சியை விட அதிகமான வாக்கு வங்கி தேமுதிகவிடம் இருப்பதை நிருப்பத்தார். தமிழக மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். இது விஜயகாந்த்க்கு பெருமைதான் ஆனால் தேமுதிகவின் வேட்பாளர்கள் கடன்காரர்களானார்கள்.
அதனால் அதன்பின் வந்த இடைத்தேர்தல், நாடாளமன்ற தேர்தலில் கூட்டணி வைப்போம் என மன்றாடினார்கள். ஆனால் நான் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர், அதனால் மக்கள்-கடவுளுடன் தான் கூட்டணி என பிடிவாதம் பிடித்தார். இதனால் நடந்த பல தேர்தல்களில் பலர் கடன் காரர்களானார்கள்.
கட்சிக்கு செலவு செய்ய ரசிகர்கள் பயந்து போய் பின்வாங்கினர், கட்சியை விட்டே ஓடி பதுங்கினர். அது மட்டுமல்ல தேர்தல் ஆணையத்திடம் தேமுதிக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக்க வேண்டும் என்றால் எம்.எல்.ஏ, எம்.பி பலம், வாக்குபலத்தை காட்ட வேண்டிய கூ+ழ்நிலைகளின் நிஜத்தை உணர்ந்த விஜயகாந்த் கூட்டணி வைக்க இறங்கி வந்தார்.
இதற்காக நம்பிக்கையான கட்சி பிரமுகர்கள், உறவினர்களை களத்தில் இறக்கி விட்டார். காங்கிரஸ்சுடன் கூட்டணி வைப்பதற்க்கு தேமுதிகவின் அவை தலைவர் பன்ருட்டி ராமச்சந்திரன் டெல்லியில் முகாம் போட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மச்சான் சுதிஷ் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதில் உறவு வெற்றி பெற்று விட்டது.

அதை மேடையில் தேமுதிகா நிர்வாகிகள், விஜயகாந்த் பேசும்போது தெளிவாக உணர முடிந்தது. திமுக மீதான அட்டாக் தான் பேச்சில் அதிகம், காங்கிரஸ்சையும் லேசாக டச் செய்தார். ஜெயலலிதாவை ஒருயிடத்தில் கூட டச் செய்யாமல் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைக்கிறது என்பதை தன் ரசிகர்களுக்கு நாசுக்காத உணர்த்தினார்.
அதிமுகவுடன் கூட்டணி வைப்பதாலோ என்னவோ, பூணுல் போட்ட அய்யர்களுக்காக அதிகம் சப்போட் செய்தார் மதுரை மைந்தர். கூடவே அடிக்கடி எனக்கும் கோபப்பட தெரியும் ஆனால் கோபப்பட்டால் ‘ நிதானமாக ’ பேச முடியாது அதனால் தான் பொறுமையாக பேசுகிறேன் என தடாலடித்தார்.

நிதானமாகயில்லை என்பதை அவரின் பேச்சு தெளிவுபடுத்தியது, பேச ஆரம்பிக்கும் போது, கூட்டத்திற்க்து வந்துள்ள எனது தொண்டர்கள் சாப்பாடடை வீட்டில் இருந்தே கட்டி எடுத்து வந்துள்ளார்கள், மற்ற கட்சியில் கூட்டம் கூட்டி சாப்பாடு போடுவார்கள் என பேசினார். 1.20 மணி நேர பேச்சுக்கு பின் பேச்சை முடிக்கும்போது, உங்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதனால் கவலைப்படாமல் பொட்டலம் கட்டப்பட்டுள்ள சாப்பாடு பொட்டலத்தை வாங்கி செல்லுங்கள் என்றார். கூடவே கூட்டணி பற்றி கவலைப்படாதிங்கள் அதை நான் பார்த்துக்கொள்ளுகிறேன் என்றார்.

விஜயகாந்த் பேசி முடித்து நன்றி சொல்லும் போது கேப்டன் சேனலின் லோகோ மைக்கின் மேலிருந்து கீழே இறங்கியது. விஜயகாந்தின் எதிர்காலத்தை தடுமாறாமல் அந்த லோகோ தெளிவுபடுத்தியது.

1 கருத்து: