திங்கள், பிப்ரவரி 07, 2011

மக்கள் பொங்கினால் நாடு தாங்காது. – எகிப்து.


எகிப்து வரலாற்று அறிஞர்கள் அள்ள அள்ள குறையாத பொக்கிஷ நாடு. எகிப்தியர்களின் கட்டிட கலையை இன்றளவும் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கிறார்கள் உலக கட்டிட பொறியாளர்கள். உலக சுற்றுல பயணிகளின் சொர்க்கம் எகிப்து. உலக மக்களை பிரமிப்பில் ஆழ்த்தும் பிரமிடுகள், சகாரா பாலைவனம், உலகின் நீளமான நைல் நதி என உலகின் பல அதி முக்கிய தலங்களை தன்னுள் வைத்துள்ள நாடு எகிப்து.

உலக பந்தில் ஆசிய கண்டத்திற்க்கு மிக அருகில் உள்ள இஸ்லாமிய நாடு. மத கட்டுப்பாடுகளை ஓரளவு தவிர்த்துள்ள நாடு. அதற்க்கு பதில் ராணுவ கட்டுப்பாடுகள் அதிகம். எகிப்து வெளி தோற்றத்துக்கு குடியரசு நாடு என அறிவித்து இருந்தாலும் நடப்பது ராணுவ ஆட்சி. இதனால் தான் இன்று எகிப்து பற்றி எரிகிறது. மக்கள் தெருக்களில் இறங்கி இராணுவத்தோடு மோதுகிறார்கள். அவர்கள் போராடுவது சுதந்திரத்திற்காக அல்ல. தங்களுக்கு நல்ல வாழ்க்கை வேண்டும் என்பதற்காக.

1922ல் எகிப்து சுதந்திரம் அடைந்தது. அது மன்னர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் 1951ல் இளம் இராணுவ சிப்பாய்கள் செய்த புரட்சியின் காரணமாக மன்னர் பரூக்கின் முடியாட்சி கலைக்கப்பட்டு குடியாட்சி பிரகடணம் செய்யப்பட்டு தேர்தல்கள் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் மூலம் நாடு ஆளப்பட்டன.


1981ல் தேர்தல் மூலம் அன்வர் எல் சதாக் என்பவர் குடியரசு தலைவரானார். அவர் மர்ம மனிதர்களால் சுடப்பட்டு இறந்த பின், விமான படை தளபதியாக இருந்து அரசியல்வாதியான முகமது ஹாசினி முபாரக் என்பவர் 1982ல் குடியரசு தலைவராக பதவியேற்றார். புதவிக்கு வந்தவர் முதலில் செய்த காரியம் எதிர்க்கட்சிகளை தடை செய்தது. மக்கள் செல்வாக்க உள்ள அமைப்பு, கட்சிகளை, மனிதர்களை சிறைக்கு அனுப்பினார். உலக நாடுகள் கண்டனம் எழுப்பும். புpடித்தவர்களை வெளியே அனுப்புவார் கொஞ்ச நாளில் மீண்டும் உள்ளே அனுப்புவார். இப்படி உள்ளே வெளியே விiளாயாடினார்.

அதிகமாக கண்டனம் வந்தால் தேர்தல் நடத்துவார் அவரே மீண்டும் குடியரசு தலைவராவார். ஆப்படி தொடர்ந்து குடியரசு தலைவராகும் அளவுக்கு மக்கள் செல்வாக்கு பெற்றவரும்மில்லை, இராணுவ செல்வாக்கு, மேற்கத்திய நாடுகளின் செல்வாக்கு பெற்றவர்.

மக்களின் வளர்ச்சிக்காக ஒரு பணியும் செய்யவில்லை என்பதால் கடந்த 40 ஆண்டுகளில் எகிப்தின் பொருளாதாரம் பாதாளத்தில் விழுந்துள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை, விவாசாயிகள் விவசாயம் செய்ய முடியவில்லை, விலைவாசி விண்ணை முட்டுகிறது. பசி, பட்டினி, பஞ்சம், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு என ஏழைகளை தற்கொலையை நோக்கி தள்ளியது. ஆனால் ஆட்சியாளர்களுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை.

சூயஸ் கல்வாய் நுழைவாயில் எகிப்தில் தான் உள்ளது. உலகின் பாதி கப்பல்கள் இதை கடந்து தான் செல்ல வேண்டும். அப்படிப்பட்ட நாட்டு மக்கள் 70 சதவிதம் வாழ வழியில்லாமல் வறுமைகயில் உள்ளார்கள். எகிப்து பொருளாதாரம் பின் தங்கி போக வைக்க ஆட்சியாளர்கள் முன்னின்று பணி செய்தனர். இதனால் அவர்களின் தனிப்பட்ட பொருளாதாரம் உயர்ந்தது. பணக்காரர்கள் மட்டும் மேலும் பணக்காரர்களானார்கள்.

இதனால் 1985 முதல் அடிக்கடி நாட்டில் போராட்டம் நடைபெற்றது, மக்களும் கலந்து கொண்டனர். ஆனால், அதை ஆட்சியாளர்கள் அடக்கியே  வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் நிலையை கண்டு இளைஞர்கள் கொதித்துப்போயிருந்தனர். நாட்டின் பல பகுதிகளில் இருந்த அவர்களை ஒண்றினைத்தது பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமுக இணைய தளங்கள். நாட்டின் நிலைப்பற்றி, மக்களின் வறுமை பற்றி வலை தளங்கள் மூலம் விவாதிக்க ஆரம்பித்தது. விளைவு, 2011 ஜனவரி 25ந்தேதி கோபத்தின் நாளாக அறிவித்து எகிப்து முழுவதும் இளைஞர்கள் தெருக்களில் இறங்கி போராடினர்.


விவசாயிகள், சிறு வியாபாரிகள், எதிர்கட்சிகள், மனித உரிமை அமைப்புகள் என தானாகவே தெருக்களுக்கு வந்தனர். இன்று எகிப்தின் தலைநகரம் கொய்ரோ உட்பட எல்லா நகர வீதிகளும் பற்றி எரிகின்றன. எகிப்து ராணுவம், காவல்துறை மக்களை நோக்கி சுடுகின்றன. மக்கள் திருப்பி தாக்க இதுவரை அரசு தரப்பில் 500 பேரும், பொதுமக்கள் தரப்பில் 2000 பேரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்களது குழந்தை குட்டிகளோடு தெருக்களில் அரசின் ராணுவத்தை எதிர்த்து நிற்ப்பதை கண்டு ராணுவமும், அரசம் அரண்டு விட்டது. மக்களின் எழுச்சியை தடுக்க முடியாமல் எகிப்தின் குடியரசு தலைவர் தேர்தல் அறிவித்துள்ளார். அதை மக்கள் ஓரளவு நம்பி மாற்றத்துக்கு காத்திருக்கின்றனர்.


மக்கள் பொருமைசாலிகள் பொருமைக்கு ஒரு எல்லையுண்டு. மக்கள்  பொங்கினால் நாடு தாங்காது என்பதை எகிப்து மக்கள் ஆட்சியாளர்களுக்கு உணர்த்தியுள்ளார்கள். மக்களுக்காக தான் நாடும், அதிகாரங்களும் என்பதை ஆட்சியாளர்கள் புாிந்துக்கொண்டால் சாி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக