ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர் யார்?
இவர் ஒரு அமெரிக்க கோடீஸ்வரர். இவர் வங்கி மற்றும் நிதி தொடர்பான
பணியில் இருந்ததாகவும், அதனால் இவருக்கு அமெரிக்காவின் அனைத்து துறை சார்ந்த பிரபலங்களுடனும்
மிக நெருக்கமான நட்பு இருந்தார். ஏராளமான, சிறுமிகளையும் இளம்பெண்களையும், ஏமாற்றி,
கடத்தி, சீரழித்து, அவர்களை பல பிரபலங்களுக்கு விருந்தாக்கிய மிக மோசமான பாலியல் குற்றவாளியாக
இவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு முதல் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் மீது பல குற்றச்சாட்டுகள்
முன்வைக்கப்பட்டன. "லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்" எனும் தீவில், சிறுமிகளை
ஏமாற்றி கடத்திச்சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டுவந்தது. 2008 ஆம் ஆண்டு
14 வயது சிறுமி ஒருவரின் பெற்றோர், புளோரிடா பொலிஸாரிடம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனது பாம்
பீச் (Palm Beach) இல்லத்தில் வைத்து தங்கள் மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார்
ஒன்றை தந்தார்கள். விசாரணையை ஆரம்பித்த புளோரிடா
காவல்துறையினர், ஜெஃப்ரி எப்ஸ்டீனின் Palm Beach வீட்டில் நடத்திய சோதனையில் அங்கிருந்து சிறுமிகளின்
புகைப்படங்களை கைப்பற்றினர். ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டு,
பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட்டார். எனினும்
ஜெஃப்ரி எப்ஸ்டீனை கைது செய்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சமாதான ஒப்பந்தம் செய்துக்கொண்டு
சிறை தண்டனையிலிருந்து தப்பிவிட்டார். அதன்பின் பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும்
2019 ஆம் ஆண்டு, பாலியல் தொழிலுக்காக குறைந்த வயதுடைய சிறுமிகளைக் கொண்ட ஒரு வலையமைப்பை
(Network) நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது
செய்யப்பட்டு 2019 ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட எப்ஸ்டீன்,
மர்மமான முறையில் சிறையில் உயிரிழந்தார். அவர்
சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது. எப்ஸ்டீன் வெளியில் வந்தால் பல
முக்கிய நபர்களின் பெயர்கள் அடிபடும் என கருதி சிறையில் வைத்தே அவரது கதையை முடித்துவிட்டார்கள்
என பரபரப்பாகின.
எப்ஸ்டின் பைல்ஸ் என்றால் என்ன?
ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டார் என
வழக்கு முடிக்கப்பட்டது. எப்ஸ்டீனின் உதவியாளர் கிஸ்லேன் மாக்ஸ்வெல் தற்போது 20 ஆண்டுகால
சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார். அமெரிக்க நீதிமன்ற சட்டப்படி வழக்கு
முடிவுக்கு வந்தபின் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின்னர் அவை பொதுமக்களின்
பார்வைக்கு வெளியிடப்படும். அதன்படி குற்றவாளியாக அறியப்பட்டு, உயிரிழந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்
என்ற நபர் பற்றிய நீதிமன்ற ஆவணங்கள் தான் எப்ஸ்டின்
பைல்ஸ்.
ஆவணங்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின்
வாக்குமூலங்கள், எழுத்துப் பிரதிகள் மற்றும் எப்ஸ்டீனின் இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில்
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் என சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான பக்கங்கள், சுமார்
2,000 வீடியோக்கள் மற்றும் 180,000 போட்டோக்கள் அடங்கிய 300GB அளவிலான ஆவணங்களை அமெரிக்காவின்
உள்நாட்டு புலனாய்வு பிரிவான எப்.பி.ஐ சேமித்து வைத்திருந்தவற்றைத்தான் அமெரிக்கா நீதித்துறை
ஜனவரி இறுதியில் நீதித்துறையின் இணையதளத்தில் பதிவேற்றி வெளியிட்டுள்ளது.
வெளியாகியுள்ள "எப்ஸ்டின் பைல்ஸ்" உள்ள தகவல்தான் இந்தியா வரை
பரபரப்பாக்கியுள்ளன.
அதில், அமெரிக்க ஜனாதிபதியாவுள்ள டொனால்ட் ட்ரம்ப், 25 ஆண்டுகளுக்கு
முன்பு நியூ ஜெர்சியில் வைத்து 13-14 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை ட்ரம்ப் பாலியல்
ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். அப்போது அச்சிறுமி தற்காப்புக்காக ட்ரம்ப்பைக் கடித்ததாகவும்,
அதற்காக அவர் அச்சிறுமியின் முகத்தில் தாக்கியதாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்ரம்ப்பின் மார்-ஏ-லாகோ (Mar-a-Lago) இல்லத்தில் நடைபெற்ற விருந்துகளில்
ஈலோன் மஸ்க், டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் மற்றும் இவான்கா ட்ரம்ப் உள்ளிட்ட பல முக்கிய
பிரமுகர்கள் கலந்துகொண்டதாக எப்ஸ்டின் பைல்ஸ் ஆவணங்கள்
சுட்டிக்காட்டுகின்றன.
உலகின் பெரும் பணக்காரரான பில்கேட்ஸ் குறித்து கடந்த 2013ம் ஆண்டு
ஜூலை 18 ம் திகதி ஈ-மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மின்னஞ்சலில், "Microsoft
இன் இணை நிறுவனரான பில்கேட்ஸ் ரஷ்ய பெண்களுடன் உடலுறவு வைத்திருந்தார். அதன்பிறகு பாலியல்
ரீதியான நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான மருந்துகளை நாடினார். இந்த ஈ-மெயிலை அழிக்க பில்கேட்ஸ் வலியுறுத்தினார்'' என்ற விவரங்கள்
உள்ளன. பில்கேட்ஸ் - மெலிண்டா ஆகியோர் கடந்த 1994ம் ஆண்டு திருமணம் செய்தனர். அதன்பிறகு
இருவரும் விவகாரத்து செய்தனர். அந்த சமயத்தில் பில்கேட்ஸ் அளித்த நேர்காணல் ஒன்றில் ‛எப்ஸ்டீன் உடனான தனது நட்பும் விவகாரத்துக்கு ஒரு காரணம்'' என்று
கூறியிருந்தார்.
பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ, 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி எப்ஸ்டீன் அனுப்பிய அந்த மின்னஞ்சலில், 26 வயது ரஷ்ய இளம்பெண் ஒருவரை ஆண்ட்ரூவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் எப்ஸ்டீன். அவரது மின்னஞ்சலுக்கு பதிலளித்த ஆண்ட்ரூ, தான் ஐரினா என்னும் அந்த ரஷ்ய இளம்பெண்ணை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர் எப்ஸ்டீனுடைய மாளிகைக்கு விருந்துக்குச் சென்றபோது, விர்ஜினியா (Virginia Giuffre) என்னும் 17 வயது பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டதாக பின்னாட்களில் அந்தப் பெண் வழக்குத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடதக்கது. இதனால் ராஜகுடும்பம் பெரும் தலைகுனிவை சந்தித்ததால் ஆண்ட்ரூவையும் அவரது மனைவியும் அரண்மனையிலிருந்து வெளியேற்றினார்கள். அதற்கான ஆவணங்கள் அதில் உள்ளன.
ஜெப்ரி எப்ஸ்டீன் விசாரணை ஆவணங்களில், அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா
ட்ரம்பின் பெயரும் இடம்பெற்றுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு மெலானியா ட்ரம்பிற்கும், எப்ஸ்டீனின் உதவியாளரும்
காதலியுமான கிஸ்லேன் மாக்ஸ்வெல்லிற்கும் (Ghislaine Maxwell) இடையில் இடம்பெற்றதாகக்
கூறப்படும் மின்னஞ்சல் உரையாடல்கள் இதில் அம்பலமாகியுள்ளன.
2002 அக்டோபரில் மெலானியா எழுதியதாகக் கூறப்படும் மின்னஞ்சலில்,
"அன்புள்ள G! எப்படி இருக்கிறீர்கள்? நியூயார்க் இதழில் எப்ஸ்டீன் (JE) பற்றிய
கட்டுரை மிகச் சிறப்பாக இருந்தது. அந்த புகைப்படததில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்
எனக்குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மாக்ஸ்வெல் மீண்டும் நியூயார்க் வரும்போது தன்னை
அழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மெலானியாவின் மின்னஞ்சலுக்கு பதிலளித்த
மாக்ஸ்வெல், அவரை "Sweet pea" என குறிப்பிட்டு, தனது பயணத்திட்டங்கள் மாறியுள்ளதால்
தற்போதைக்குச் சந்திக்க முடியாது எனச்சொல்லியுள்ளார். இந்த உரையாடல்கள் இடம்பெற்ற காலத்தில்
மெலானியாவுக்கும் டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் இடையில் திருமணம் நடைபெறவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.
இந்த வரிசையில் நம்ம இந்திய பிரதமர் மோடியை 2017ல் நடனம்
ஆடச்சொன்னதாக அதில் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சல் உள்ளது. நான் சொன்னதுப்போல்
இந்திய பிரதமர் நடந்துக்கொண்டார் என ஒரு மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார். இதுதான்
இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை இந்திய வெளியுறவுத்துறை
மறுத்துள்ளது.
இந்த விவகாரம் இன்னும் சிலமாதங்களுக்கு உலகநாடுகளில் பரபரப்பாக
இருக்கும்.

