காங்கிரஸ் அரசு நாட்டு மக்களை பணத்துக்கு அடிமையாக்கி வருகிறது. வடநாட்டை சேர்ந்த ஒரு பைஜாமா கூறிய குற்றச்சாட்டு. இதை தினசரிகளில் படித்தவர்கள் நம்ம வடிவேலு பயலைவிட கூ+ப்பரா ஜோக் அடிக்கறான்யா என டீ கடை பெஞ்ச்சில் அமர்ந்து நக்கல் அடித்துவிட்டு போய்யிருப்பார்கள். இப்படி யோசிக்காம பேசி பேசியே தான் நாம் வீணாபோனது. சரி அதிருக்கட்டும்.
அந்த பைஜாமா சொன்னது உண்மையா என கேட்டால் உண்மை தான். பணத்தால், அதிகாரத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணத்துக்கு எப்போதே வந்துவிட்டது காங்கிரஸ். ஓட்டுக்கு காசு தரும் கலாச்சாரத்தை ஏதோ திமுக தான் ஆரம்பித்து வைத்தது. அதுவும் அழகிரி தான் ஆரம்பித்து வைத்தார். அதற்க்கு முன் பணம்மென்றால் என்னவென்றே தெரியாது என்பது போல பலரும் பேசியும், எழுதியும் வருகிறார்கள். திட்டமிட்டே சில விவகாரத்தை மறைக்கிறார்கள்.
முதன் முறையாக தமிழகத்தில் காங்கிரஸ்க்கு போட்டியாக திமுக தேர்தல் களத்தில் குதித்தபோது சிறு பிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது என காங்கிரஸ் தலைகள் கிண்டல் செய்தார்கள். ஆனால் முதல் தேர்தலிலேயே ஒரளவு எம்.எல்.ஏ சீட்களை பிடித்ததும் பயத்தோடு பார்த்தார்கள். இரண்டாவது முறையாக பொது தேர்தலில் மோதியபோது, திமுகவை கண்டு பயந்து வாக்காளர்களுக்கு காலணா, அரைணா என தந்து படோபரமாக விளம்பரம் செய்தார்கள் காங்கிரஸ் வேட்பாளர்களாகயிருந்த முதலாளிகள். திமுக பேச்சாற்றளை நம்பி களம் கண்டு-வென்றது. காசுக்கு வேட்பாளர்களை அடிமையாக்கியது யாரென்று இப்போது தெரிகிறதா?.(இதற்க்கு ஆதராம் உள்ளது)
இதை அப்படியே மறைக்கிறார்கள் வரலாற்று எழுத்தாளர்கள். பின் வந்த தேர்தல்களில் சட்டமன்ற தேர்தல் என்றால் 5ரூபாய், பாராளமன்ற தேர்தல் என்றால் 3 ரூபாய் என பணம் தரப்பட்டது. எதிலும்மே திராவிட கட்சிகள் தீவிரம் காட்டுவார்கள். அப்படித்தான் காங்கிரஸ் சில்லறையாக வாக்காளர்களுக்கு தந்து பிச்சைகாரன்டா நீங்க என சொல்லாமல் சொன்னதை திராவிட கட்சிகள் மாற்றி நோட்டுகளாக தந்து பணக்கார பிச்சைக்காரர்களாக்கினார்கள்.
காலப்போக்கில் நிலைமை மாறி இன்றைய ஆளும்கட்சி திருமங்களம் பார்முலா என ஒரு பார்முலாவை உருவாக்கி இடைத்தேர்தல் என்றால் பணமும், பிரியாணியும்மே முக்கியம் என களத்தை மாற்றிவிட்டார்கள். தற்போது திராவிட கட்சிகளின் புண்ணியத்தில் கவர்களாக, டிவிகளாக, மிக்சிகளாக, கிரைண்டர்களாக வாங்குகிறார்கள் வாக்காள பெருமக்கள். நாளை கம்பியூட்டராக உருமாறும் சாத்தியம்முள்ளதாக திராவிட பெரு இயக்கங்கள் பக்கம்மிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை கண்டு அரண்டு போன காங்கிரஸ்சின் விசுவாசிகளான ஒற்றர்கள் ( ஐ.பி ) சோனியாவிடம் திமுக இடைத்தேர்தல்ல சூறாவளியாயிருக்கு அவுங்க போடற திட்டம் இதுதான் திருமங்களம் பார்முலாவை சொன்னார்கள். காங்கிரஸ்சின் வரலாறுகளை எழுத்து கூட்டி படித்து வரும் சோனியா ஆஹா வடை போச்சே என புலம்பியபடி. நம்ம கட்சியோட பழைய பண திட்டத்துக்கு மெருகேத்தியிருக்காங்க அவுங்கள விட நாம அதிகமா மெருகேத்துவோம் என கூடி கும்மியடிக்கும் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையின் போது, சுதந்திர பேராட்ட காலத்தில் டாட்டா, பிர்லா குடும்பங்கள் தான் காங்கிரஸ்சை ஏன் காந்தியையே வழி நடத்தின. அவர்களோடு தற்போது அம்பானி அன் கோ, வெளிநாட்டு முதலாளிகள் இப்ப நம்மை வழி நடத்துகிறார்கள். இவர்கள் தான் தற்போது நமது ஏ.டி.எம் மிஷின்கள். பாராளமன்ற தேர்தலில் அந்த ஏ.டி.எம் மிஷினால் தான் நாம் ஜெயித்தது.
தொடர்ந்து இவர்களை வைத்து இனி பழைய கள்ளை புது மொத்தையில அதிகமா ஊத்தி தரனும், சின்னகவுண்டர் ராகுல்காந்தி அடுத்து பிரதமரா வறனும் அவருகு;கு எந்த பிரச்சனையும் இருக்க கூடாது, கஸ்டப்படகூடாது என பேசி முடிவு செய்தனர். அதற்ககாக ஏ.டி.எம் மிஷின்களிடம், நீங்க வங்காள விரிகுடாவ வாரி சுருட்டிக்க, இந்தியாவ வேலி போட்டு வளைச்சிக்க, எங்க வேண்டுமானாலும் குந்திக்க, என்ன வேண்ணா பண்ணிக்க, பாராளமன்றத்த லீசுக்கு எடுத்துக்க, எம்.பிங்கள வேலைக்கு வச்சிக்க. அதுக்கு பதிலா எங்களுக்கு பணம் தா என பணத்தை வாங்கி அதன் மூலம் சுவிஸ் வங்கிகளிலும், மொரிசியஷ் வங்கிகளிலும் பணத்தை போட்டு பத்திரப்படுத்தி வருகிறதாம்.
ஆட்சி, அதிகாரம், பணத்தை இனி நாமே அனுபவிக்கனும்ன்னா எதிர்கட்சிகூடாரத்தை காலி பண்ணனும் என எதிர்கட்சிகளின் கூடாரத்துக்குள் புகுந்து மகுடி வித்தைகளை ஒற்றர்கள் மூலம் செய்து எதிர்கட்சிகளை வெற்று அறிக்கைகளோடு நிற்க வைத்து வருகிறது காங்கிரஸ் அன்ட் கம்பெனி.
இப்ப இருக்கற மாதிரியே பொதுமக்கள் இருக்கனும், அதுக்கு அவனை கடன்காரனாக்கனும், வறுமையில வச்சிக்கனும், தினமும் வாழ மட்டும் பணம் தரனும் என திட்டம் தீட்டி எதிர்காலத்தில் எதற்க்கும் நம்மை கேள்வி கேட்க கூடாது என்பதற்க்காக கொண்டு வரப்பட்டது தான் இந்த புது திட்டங்கள். நம்மிடம் வரிப்பணத்தை வாங்கி அதை நம்மிடமே, வட்டிக்கு கல்வி கடனாகவும்;, கந்து வட்டிக்கு விவசாய கடனும், 100 நாள் கட்டாய வேலையென சோம்பேறி திட்டத்தை போட்டு மக்களை கடன்காரன்களாக, வறுமைக்கு திண்டாடுபவனாக, எதைப்பற்றி யோசிக்காமல் சொகுசாக வாழ வழி ஏற்படுத்தி தந்துள்ளது காங்கிரஸ் கம்பெனி.
இதையெல்லாம் யோசித்து தான் பணத்துக்கு மக்களை அடிமையாக்குகிறது காங்கிரஸ் என ஜிப்பா சொன்னது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக