கோடிகளில் கொள்ளையடித்த அமைச்சரையோ, அதிகாரியையோ சி.பி.ஐ, வருமான வரித்துறை பிடித்தால் அடுத்த ஒரிரு மாத்தில் வெளியே வந்து நாங்கள்ளாம் யாரு தெரியம்மில்ல என சவடால் பேசுகிறார்கள். ரேய்டு போகிறவர்கள் வீட்டில் ரெய்டு நடத்தினால் அதற்க்கு மேல் மோசமாகவுள்ளது. உயர் பீடத்தில் உள்ள தலைகளும் ஊழல் செய்கின்றன. அரசியல்வாதி முதல் அடிமட்ட அரசு ஊழியன் வரை தன்னால் முடிந்த அளவுக்கு கொள்ளையடிக்கிறார்கள். இதை தடுக்க முடியாதா என கேட்டால் சட்டத்தல ஓட்டையிருக்குங்க அதனால தான் தப்பிக்கறாங்க என்ற ரெடிமேட் பதில் வந்து விழுகிறது.
ஓட்டைய அடைங்கய்யா என்றால் அது அரசாங்கம் தான் செய்யனும் என்கிறார்கள். அரசங்கம் யாரு, நம்ம கால்ல வந்து விழுந்து ஓட்டு வாங்கனாரே அந்த எம்.எல்.ஏ, எம்.பிங்க தான் அரசாங்கமாம். அவுங்கள போய் நாம கேள்வி கேட்கலாம்ன்னு வீட்டாண்ட போனா (எந்த வீடுன்னு கேட்ககூடாது) கூர்க்கா துரத்தறான், நம்ம பணத்த போட்டு கட்டன ஆபிஸ்க்கு போனா சரக்கு வாடையும், மாட்டு சான வாடையும் திரும்பி ஓட வைக்குது. கூடி கும்மியடிக்கற (சட்டமன்றம், பாராளமன்றம்) இடத்துக்கு போனா டோக்கன் வாங்குங்கறான் அதயும் வாங்கிக்கிட்டு போனா, வெடிகுண்டு இருக்கறதா தகவல் வந்துயிருக்கு உள்ள அனுப்ப முடியாதுங்கறான்.
யோ நான் ஓட்டு போட்டு ஜெயிச்சதால தான் அவரு பொறுப்புலயிருக்காரு என சற்று குரல் உயர்த்தி சவுண்ட் விட்டால், யோ நீ ஓட்டு போட்டு தான் எங்காளு பொறுப்புக்கு வந்தாரா அடிங் கொய்யால போட்டு தள்ளிடுவோம் என மிரட்டி துரத்துக்கிறார்கள். கூடவே கவுருமெண்ட் இலவசமா டிவி தந்தது மானாட மயிலாடா பாக்க மட்டும்மில்ல உன் தொகுதி திமுககாரங்கள பாக்கனுமா கலைஞர் பாரு, அதிமுகவ சேர்ந்தவங்கள பாக்கனும்ன்னா ஜெயா, தேமுதிகவா கேப்டன், பாமகவா மக்கள், விசியா – தமிழன், காங்கிரஸ்க்கு கோஷ்டிக்கு ஒரு சேனல்ன்னுயிருக்கு கூட கட்சிக்கு ஒரு பத்திரிக்கைன்னு வேற வருது அதல பாத்துக்க, படிச்சிக்க உன் கோரிக்கைய லட்டர்ல எழுது போ, போ என மிரட்டி துரத்துகிறார்கள் அடிப்பொடிகள்.
நம்மாளு, நம்ம புள்ள, நம்ம சாதிக்காரன் என ஓட்டு போட்டவன் அதன் பின் அவர்களை பார்க்க முடியாமல் திண்டாடும் போது அடுத்த முறை வரட்டும் ஒட்டு போட்ட கோமணத்தோடு கோபத்தோடு காத்திருக்கறான் அடுத்த தேர்தல் வரை.
அடுத்த தேர்தல் வந்தால் அப்ப நம்ம பய புள்ள திருந்த மாட்டேன்கிறான். கேள்வி கேட்கமாட்டேன்கிறான். குhரணம் அவன் சாதிக்காரனை நிக்க வச்சி மாமா, மச்சான், அத்தை, பெரியப்பா என பங்காளி உறவு முறை பேசிவிட்டு ஓட்டு போட்டுடுங்க மண்ணி எனச்சொல்லிவிட்டு எஸ்கேப்பாகிவிடுகிறான். நம்ம புள்ள என ஓட்டு போட்டு விட்டு தெருவில் நிற்கிறான் வாக்காளன். இது தொடர் கதையாகிவிட்டது. அரசியல் கட்சிகள் ஏமாற்றும் கூ+ட்சுமத்தை புதுசு புதுசாக கண்டு பிடிக்கிறது. ஏமாந்த இளிச்சவாயன்களாக நம் பொது ஜனம் ஏமாந்துக்கொண்டேயிருக்கிறது.
இதன் வளர்ச்சி வருங்காலத்தில் எப்படியிருக்கும் தெரியுமா………………?
தேர்தல் தேதி கட்சிகளுடன் பேசி அறிவிக்கப்பட்டுள்ளது. – தேர்தல் ஆணையம்.
கட்சி அலுவலங்களில் சீட் கேட்டு படையெடுப்பார்கள் வள்ளல்கள். சீட் கேட்டு படிவத்தை வாங்கி பூர்த்தி செய்வார்கள்,
பெயர் : கடா குமார்.
தொழில் : கொலை செய்வது, ஆள் கடத்துவது, பெண்களை வைத்து
தொழில் செய்வது. அடியாட்கள் சப்ளை.
சொத்து : சும்மா 1500 கோடி இருக்குங்க.
அரசியல் பின்புலம் : எங்க தாத்தா எம்,பியா, எங்கப்பா அமைச்சராயிருந்தாங்க.
ஜெயிக்கலன்னா : எனக்கு ஓட்டு போடாதவன் பொண்டாட்டிய கற்பழிப்பன்,
பொண்ண தொழிலுக்கு, பையன் கிட்னியா புடுங்குவன்.
கட்சி தலைவர் நேர்காணல் நடத்துவார், ஓட்டுக்கு எவ்வளவுய்யா தருவ 5 ஆயிரம் தருவன் தலைவரே. சீட் தந்தா எனக்கு எவ்வளவுய்யா தருவ 100 கோடி தர்றன்யா, எப்படிய்யா சம்பாதிப்ப? ரோடே போடாம போட்டன்னு பில் எடுப்பன், பள்ளிக்கூடம் கட்டறன்னு பீர் பேக்டரி கட்டுவன், அடிச்சி மிரட்டி கொலை பண்ணி அடுத்தவன் சொத்த அபகரிப்பன், பொழுது போகலன்னா மீட்டிங் போட்டு மார்க்கெட் போன நயன்தாரா, ஸ்ரேயாவ ஸ்டேஜ்ல பாட்டு போட்டு டான்ஸ் ஆட வைப்பன்.
உனக்கு தான் சீட் போ போய் வேலைய பாரு. பணத்த வீட்ல தந்து. சிலிப் வாங்கிம் போய்டு.
தொகுதியில்……….
அண்ணே, புது வீடு கட்டியிருக்கானே கோவிந்தசாமி பையன் முனுசாமி அவன் தன்னோட வீட்ல போஸ்டர் ஒட்ட விடமாட்டன்னு சொன்னான். அவன் கைய வெட்டிட்டு இன்ஸ்பெக்டர்க்கு போன் பண்ணி விஷயத்த சொன்னன். அவரு மாடு குத்திடுச்சின்னு கேஸ் பதிவு பண்ணி டாக்டர்க்கிட்ட சர்டிப்கெட் வாங்கிக்கறன்னு சொன்னாருன்னே.
சரிடா அந்தாளு வரட்டும் கறிசோறு போட்டு அனுப்பலாம் அந்த பேனர்கள எடுத்தும் போய் கட்டு. நாளைக்கு பிரச்சாரத்துக்கு போகலாம்.
மறுநாள், ஐஸ்வர்யாபச்சான், ஷில்பாஷெட்டி, சினேகா போன்றோர் கரகத்தை தலையில் வைத்தபடி கிராமத்து சிமெண்ட் சாலையில் விஜய் மேளம் அடிக்க, அஜித் பீப்பீ ஊத, விக்ரம் ஜால்ரா தட்ட, சுருதிகமலஹாசனும், தனுஷ்சும் வாயில் வந்ததை பாட, ஏ.ஆர்.ரகுமான் காக்கா ரக்கையை அடித்துக்கொள்வது போல கையாட்ட இவர்கள் எழுப்பும் சத்தத்துக்கு ஏத்தப்படி தொப்புள் தெரிய, தொடை பளிச்சிட டான்ஸ் ஆடிக்கொண்டுயிருப்பார்கள். பின்னால் வாக்காள பெருமக்களே வாங்கி திண்ண.…………. மக்களே, போடுங்கடா(டீ), ஒட்டு ……….. பாத்து என மைக் அலற………. ஓட்டுக்கேட்டுக்கொண்டு போவார்கள்.
இப்படித்தான் வருங்கால அரசியல் களம், நாட்டின் நிலவரம்மிருக்கும். ஆனால் அதிலும் மாறாமல் ஒன்றே ஒன்றுயிருக்கும். அது எது தெரியுமா?
வாக்காளர்களுக்கு கிப்ட் தந்தால், வன்முறையில் ஈடுபட்டால், வாக்காளர்களை மிரட்டினால், அனுமதியில்லாமல் விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கை. – தேர்தல் ஆணையம். அறிக்கை தந்து சிரிப்பு காட்டுவது மட்டும் மாறவே மாறாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக