செவ்வாய், ஜனவரி 18, 2011

நேதாஜி என்ற உன்னத தலைவனின் வரலாறு இரட்டடிப்பு.


 
பாரத தேசம் ஆங்கிலேயரின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த போது இந்தியாவின் உன்னத குடும்பம், தன்னிகறற்ற குடும்பம். இந்தியாவின் வளர்ச்சிக்காகவே பிரதமரான நேரு, இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி போன்றோர் வாழ்ந்தனர். வெள்ளையனை வெளியேற்ற நடந்த போராட்டத்தில் மானமிகு உலக தலைவர் ராஜிவ்காந்தி தன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே மகாபாரதத்தில் தாயின் வயிற்றில் இருக்கும்போதே அபிமன்யூ போர் முறைகளை கற்றுக்கொண்டதை போல ராகுல்காந்தி தன் தாய் இந்திராகாந்தி வயிற்றில் உருவாகும்போதே வெள்ளையனை எதிர்க்க கற்றுக்கொண்டடார். சோனியாவும் அதே போல என 2050ல் நமது வருங்கால சந்ததிகள் வரலாற்றை படித்தால் ஆச்சர்யப்படுவதற்க்கில்லை.
 
காரணம் வரலாறுகள் அப்படித்தான் காங்கிரஸ்சாரால் எழுதப்பட்டுள்ளன. வருங்காலங்களில் அப்படித்தான் எழுதப்பட போகின்றன. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களில் ஒருவர். வெளிநாடுகளில் போய் பல நாட்டு தலைவர்களை சந்தித்து இந்தியாவுக்காக ஆதரவு திரட்டியவா.  சுதந்திர இந்தியாவுக்காக தன்னையே அர்பணித்துக்கொண்ட மாவீரன் என்றால் மிகையில்லை. அப்படிப்பட்டவரின் வரலாற்றை முழுமையாக அறிய விடாமல் காங்கிரஸ் பேரியக்கம் இரட்டிப்பு செய்துள்ளது.
 
நாட்டுக்கு சுதந்திரம் வேண்டி காங்கிரஸ் பேரியக்கத்தை போல பல இயக்கங்கள் போராடின. இந்துஸ்தான் சோசலிஸ்ட் சமதர்ம குடியரசு ராணுவம், நவ ஜீவன் பாரத் சபா, கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய ராணுவனம் உள்ளிட்ட அமைப்புகள் வௌ;வேறு காலகட்டங்களில் போராடின. பல தலைவர்கள் போராட்ட களத்தில் உயிர் விட்டார்கள். இவர்களின் வரலாறு சிலவை மட்டும் போகிற போக்கில் தான் வரலாற்று பாட திட்டத்தில் உள்ளது. ஆனால் 1910களுக்கு பின்பு  போராட்ட களத்திற்க்கு வந்த காந்தியின் வரலாறு, முதல் சுதந்திர இந்தியாவின் பிரதமர் நேரு, இந்திராகாந்தியின் வரலாறுகள் இன்று எங்கும் நிறைந்துள்ளன.
 
காங்கிரஸ் கட்சி என்பது வெள்ளையனிடம் அய்யா சாமி என கெஞ்சி காரியம் சாதித்த கட்சி. மற்ற தலைவர்களை விட காந்தி அந்த காரியத்தை சரியாக செய்தார். எதை செய்தாலும் ஒரு நேர்த்தி வேண்டுமென கூறும் காந்தி உண்ணாவிரதமா சாமீ சாப்பிடாம நாலு நாளைக்கு இருக்க போறோம் என தகவல் அனுப்பி வைப்பார். போராட்டமா, தெய்வமே போராட போறோம். எங்கள மட்டும் அடிக்காதிங்க என்பவராக இருந்தார். இந்த நல்ல உள்ளத்திற்காக காந்தி சொன்ன பலவற்றை ஆங்கிலேய அரசாங்கம் செய்து தந்தது.
இதற்காக பகத்சிங், சுகதேவ் போன்ற இளைஞர்கள் ஆங்கிலே காவல் அதிகாரியை சுட்டு கொன்றதற்க்காக தூக்கு தண்டனை தந்தது. இதற்க்கு பாரத தேசம் முழுவதும் எதிர்ப்பு வந்தது. அப்போது காங்கிரஸ் மாநாடு நடைபெறுவதாக இருந்தது. இதனால் காந்தி ஆங்கிலேய அரசிடம், தூக்கு தாண்டனையை முன் கூட்டியே நிறைவேற்றுங்கள் என கேட்டுக்கொண்டார். இதனால் குறிப்பிட்ட நாளுக்கு முன்பே ஒருநாள் தூக்குதண்டனையை நிறைவேற்றியது வெள்ளையர் அரசாங்கம்.

 
இதனை காங்கிரஸ் மாநட்டில் ஒப்புக்கு சப்பானியாக கண்டித்த காந்தியை எதிர்த்து குரல் கொடுத்தார் நேதாஜி சுபாஷ். இவர் காங்கிரஸ்சின் பெரிய தலைவர்களில் ஒருவரான சித்தரன்ஜன்;தாசின் சிஷ்யர். தன் குருவை போலவை தலைமை தப்பு செய்தாலும் தட்டி கேட்கும் துணிச்சல் கொண்டவர்.
 
சுபாஷ் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, இவர் தீவிர போக்கு உடையவர் (அதாவது தீவிரவாதி என சொல்லாமல் சொல்வது.) என கூறிய காந்தி இவரை எதிர்த்து தலைவர் தேர்தலில் பட்டாபி சீத்தாராமையா என்பவரை நிறுத்தினார். தேர்தலில் காந்தியின் வேட்பாளரையே தோற்கடித்தார் நேதாஜி. பதவிகளை துச்சம்மென தூக்கியெறிந்தவர்.

 
இரண்டாம் உலக போரின் போது, பாரத தேசத்தை ஆண்டுக்கொண்டுயிருந்த பிரிட்டிஷ் அரசு போரில் கலந்து கொண்டன. இதுதான் பிரிட்டிஷ் அரசை எதிர்க்க சரியான காலமென இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் படைகள் மீது போர் தொடுக்க ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளின் தலைவர்களிடம் போய் உதவி கேட்டார். கடைசியில் ஜப்பான் உதவி செய்ய முன் வந்து போர் வீரர்கள், போர் தளவாடங்களை தந்தது.
 
இந்திய-ஜப்பான் கூட்டு இராணுவத்திற்க்கு தலைமை யார் என்ற கேள்வி வந்தபோது, என் நாட்டு சுதந்திரத்திற்க்கு நாங்கள் தான் தலைமை தாங்குவோம், எங்களை ஆள நீங்கள் முயற்சிக்காதிர்கள் என சொல்லும் வலிமை வாய்ந்தவராகயிருந்தார்.
 
பாரத தேசத்திற்க்கு வெளியே ஒரு அரசை உருவாக்கி பிரதமராக பதவிறே;று ஜனகன மன பாடலை நாட்டுப்பண்ணாக கொண்டு வந்தார். இந்த அதிர்ச்சியே காங்கிரஸ் தலைவர்களை அவரை பலி கொடுக்க வைத்தது. அதாவது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தும், நேதாஜியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு மறைமுக நிபந்தனையை வைத்தது. அதனை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆக நேதாஜி என்ற மாபெரும் தலைவரின் உயிரை விலை பேசியே சுதந்திரத்தை வாங்கினார்கள் என்பது இன்றளவும் மறுக்க முடியாத மறைக்கப்பட்ட உண்மை.


நேதாஜி விமான விபத்தில் இறந்தார் என கதை சொன்னது ஜப்பான்.  ஆனால் அதை பெரும்பாலானோர் மறுத்தனர். இதுப்ப்ற்றி இந்தியாவிடம் சமுக ஆர்வலர் ஒருவர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி கேள்வி கேட்டபோது, அதைப்பற்றி தெரிவித்தால் நாடுகளுக்கிடையேயான உறவுகள் பாதிக்கப்படும் என்பதால் அதனை வழங்க முடியாது என தெரிவித்தது மத்தியரசு. நாடுகளுடனான உறவுகளுக்காக ஒரு உன்னத தலைவரின் வரலாற்றை மறைக்கிறது ‘ஜனநாயக’ அரசு. அதேபோல் நேதாஜியின் இறப்பு உண்மையா என கண்டறிய மத்தியரசே பல கமிட்டிகளை போட்டது அந்த கமிட்டிகளுக்கு அவையே ஒத்தைழைக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது. 
 
அரசாங்கமே மறைக்கும் அந்த மாபெரும் வரலாற்று நாயகனின் 118வது பிறந்தநாள் ஜனவரி 23 அதை கோலாகலமாக கொண்டாடுவோம். ஜெய்ஹிந்த்.

4 கருத்துகள்:

  1. காந்தி ஜீ தம் வாழ்நாளில் வெறுத்த மனிதர்கள் நேதாஜியும் ஒருவர், ஜின்னா, நேதாஜி, அம்பேத்கர் போன்றவர்களை காந்தி ஜீ வெறுத்தார் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. அவைகளை இந்த காங்கிரஸ் கயவாளிகள் வெளியில் சொல்ல மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் நண்பரே, காந்திஜிக்கு தாழ்த்தப்பட்டவர்களை கண்டால் பிடிக்காது, அதேபோல் ஜின்னாவை மட்டுமல்ல இஸ்லாம் சமுகத்தையே அவருக்கு பிடிக்காது அதற்க்கு காரணம் அவர்கள் மாமிசம் உண்கிறார்கள் என்பதும் ஒரு காரணம். இப்படி நிறைய சொல்லலாம். காந்தியின் வழிமுறையை காங்கிரஸ் மறைமுகமாக கடைபிடித்து வருகிறது. வெளியுலகத்திற்க்கு நான் ரொம்ப நல்லவங்க என நாடகம் ஆடுகிறது.

    பதிலளிநீக்கு
  3. அந்த மாதிரி தலைவர்கள் வாங்கித் தந்த சுதந்திரத்தை இன்னைக்கு இருக்கும் பொருக்கி அரசியல் வியாதிகள் சூரையாடிக்கிட்டு இருக்கானுங்களே? நேதாஜிக்கு சல்யூட், உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஜெயதேவ். நேதாஜி போன்ற தலைவர்களை அன்றைய அரசியல்வாதிகள் ஒழித்ததே இன்றைய நிலைக்கு காரணம்.

    பதிலளிநீக்கு