ஞாயிறு, ஜூன் 10, 2012

கேலி சித்திர சூத்திரதாரியே ஜாக்கிரதை.




மீண்டும் திராவிடத்தோடு மோத தொடங்கியுள்ளது ஆரிய கும்பல். தென்னிந்தியாவில் தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்கள் இந்தியை பள்ளிகளில் ஒரு பாடப்பரிவாகவே கற்று தர தொடங்கிவிட்டார்கள். தமிழகத்தில் மத்தியரசு கல்வி நிலையங்களை தவிர மற்ற எங்கும் இந்தியை புகுத்த தமிழக கட்சிகள் விடவில்லை. காரணம் இந்தியை மக்கள் விரும்பவில்லை. 

இந்தியை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தியவர்கள் தமிழர்கள் தான்.  1937 பின் 1965களில் தமிழுக்காக உயிர் தந்தவர்கள் தமிழ் மாணவ சமுகத்தினர். இந்த இந்தி வேண்டாம் என்பதில் பெரியார், அண்ணா போன்ற பல தலைவர்கள் உறுதியாக இருந்தனர். இந்திக்கு எதிராக திராவிடர் கழகம், திமுக உட்பட தமிழர் கட்சிகள் பலவும் குரல் கொடுத்தன. ஆனால் தமிழகத்தில் காங்கிரஸின் ராஜாஜி, முதல்வராக இருந்த பக்தவச்சலம் போன்றோர் இந்திக்கு பல்லக்கு தூக்கினர். இந்திக்கு எதிரானவர்கள் மீது வார்த்தை என்ற விஷத்தை அப்போதைய பிரதமர் நேரு கக்கினார். ஆனால் அன்றைய இளைஞர்கள் எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை. அரசாங்கத்தையே ஸ்தம்பிக்க வைத்தார்கள். அதன்பின்பே மாநில அரசுகள் விரும்பும் வரை இந்தி திணிக்கப்படமாட்டாது என வாய் வார்த்தை உத்தரவாதம் தந்தார் நேரு. அதை ஏற்றுக்கொள்ளாமல் தமிழர்கள் போராட்டம் செய்ய இறுதியில் இந்திராகாந்தி காலத்தில் தான் சட்டமாக்கப்பட்டது. 

இதன் மூலம் கன்னடம், தெலுங்கு, மலையாளம், பெங்காலி உட்பட பல மொழிகளை காப்பாற்றியவர்கள் தமிழர்கள். குறிப்பாக திராவிடம் பேசிய, எழுதிய தமிழர்கள். தமிழர்கள் மட்டும் அன்று எதிர்க்காமல் இருந்திருந்தால் இன்று இந்தியாவில் இந்தியை தவிர்த்து மற்ற மொழிகள் வழக்கொழிந்து காணாமல் போயிருக்கும். 

இந்திய ஒன்றியத்தை ஆண்டவர்கள் வாக்குறுதி தந்தாலும் மறைமுகமாக, சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் இந்தியை கட்டாய பாடமாக்கி இந்திய ஒன்றியத்தில் இந்தியை புகுத்த அதிகமான நிதி ஒதுக்கீடு செய்கிறது மத்தியரசு. இருந்தும் தமிழகத்தில் இந்தியை சீந்துவார்யில்லை. ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் அப்படியில்லை. அம்மக்களிடம் இந்தியை படிப்படியாக ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டார்கள். அங்கு நகரங்களில் இன்றைய இளம் தலைமுறை இந்தி கற்றவர்களாக உள்ளார்கள். தமிழகத்தில் இன்னமும் இந்திக்கு எதிரான மனநிலையே உள்ளது. 

இப்படிப்பட்ட நிலையில் இந்திய ஒன்றியத்தை மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி, சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் இந்தியை எதிர்த்து தமிழகத்தில் நடந்த போராட்டத்தை கேலி செய்து பாடப்பிரிவாக கேலி சித்திரமாக வைத்து மாணவ தலைமுறையிடம் கொண்டு சென்றுள்ளார்கள். இந்த தைரியம் எப்படி இந்திய ஒன்றியத்தை ஆளும் மத்தியரசுக்கு வந்தது. அவர்களுக்கு ஜால்ரா போடும் திமுக. திராவிடத்தை அழிக்க துடிக்கும் பார்பன தலைமை கொண்ட அதிமுக போன்ற கட்சிகளால் எதுவும் செய்ய முடியாது என்ற திமிறில் தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கேலி சித்திரம் வரைந்து பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது. 

துமிழக அரசியல் தலைவர்கள் கண்டனத்தை தெரிவிக்கும் முன்பே இதை கண்டு கொதித்துப்போய் பேஸ்புக்கில் நண்பர் ஒருவர் நேருவின் காதல் லீலைகளை பற்றி ஓவியம் வரைந்து பாடத்தில் வையுங்களேன் என கேட்டுயிருந்தார். அந்த கருத்தோடு சேர்த்து எனது கேள்விகள், மகாத்மாகாந்தி என அழைக்கிறிர்களே, அவர் பகத்சிங், நேதாஜி போன்றவர்களை ஆங்கிலேயர்களுக்கு காட்டி தந்தது, அரிஜன மக்களுக்கு செய்த துரோகம் பற்றி, தென்னாப்பரிக்காவில் காந்தி நடந்துக்கொண்ட விதம், பணக்காரர்களுக்காக வாதாடிய காந்தி பற்றி பாடத்திட்டத்தில் சேருங்களேன். மக்கள், மாணவ சமுதாயம் அறிந்துக்கொள்ளட்டும். 

சுதந்திரத்துக்கு பின் பாடத்திட்டத்தில் தன் விருப்ப பட்டதை, விரும்பியதை மட்டுமே பாடமாக வைத்தது. இன்றும் அதையே செய்கிறது. காரணம், ஆட்சியதிகாரம் அவர்கள் கையில் இருக்கிறது என்பதால் மட்டுமல்ல இந்திய ஒன்றியத்தை ஆளும், ஆளத்துடிக்கும் காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற கட்சிகள் வௌ;வேறாக இருக்கலாம். ஆனால் அவர்களின் கொள்கை தமிழகத்தில் திராவிடம் பேசுபவர்களை அழிக்க வேண்டும் என்பது தான். 

மற்ற மாநிலங்களில் தாங்கள் நினைத்ததை செய்ய முடிந்த மத்திய கட்சிகளுக்கு தமிழகத்தில் மட்டும் செய்ய முடியவில்லை. அதற்கு காரணம், இங்கு பெரியார் என்ற கிழவன் அனைவருக்கும் சுயமரியாதையை உருவாக்கி தந்துள்ளான். சமூகநீதியை விதைத்துள்ளான். அந்த கிழவனின் வாரிசுகள் நாங்கள். எங்கள் முன்னோர்கள் உயிர் தந்து எங்கள் மொழியை காத்துள்ளார்கள். நாங்கள் அதை கேலி செய்வதை ஒரு நாளும் பொருத்துக்கொள்ளமாட்டோம். எச்சரிக்கிறோம். நீங்கள் செய்வது எங்களை மட்டம் தட்ட என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். நாங்கள் பொங்கினால் இந்தி பேசும் அரசியல்வாதிகளே, ஜால்ரா தட்டும் பர்ப்பனர்களே நீங்கள் தாங்கமாட்டீர்கள் ஜாக்கிரதை. 

3 கருத்துகள்:

  1. இந்தியை தமிழக மக்கள் விரும்பவில்லை. கிச்சு கிச்சு மூட்டாதீர்கள். தமிழனுக்கு இந்தியும் பேசவராது ஆங்கிலமும் பேசவராது என்று தெரிந்துதான் பெரிய சாப்ட்வேர் கம்பெனிகள் வடமாநிலத்தவரையும் ஆந்திரமாநிலத்தவரையும் தெரிவுசெய்து தமிழகத்திலுள்ள தங்கள் கம்பெனிகளில் பணியில் அமர்த்தியுள்ளனர். தமிழன் அவர்களுக்கு ஆட்டோ ஓட்டவும் செக்கூரிட்டியாகவும் பணி செய்வான்.
    வாழ்க பெரியார் அண்ணா கருணாநிதி.
    பி.கு. ஏன் வேண்டாம் இந்தி என்று புத்தகம் எழுதிய மாறனின் மகன்கள் ஆங்கிலவழிக்கல்வியும் இந்தியும் கற்றவர்கள். கருணாநிதியின் துணைவியின் மகளும் பேரன் பேத்திகளும் ஆங்கில வழிக்கல்வியும் இந்தியும் படித்தவர்கள்.
    ஊருக்குத்தான் உபதேசம். தனக்கில்லை.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் இந்தியை ஒழிப்பது இருக்கட்டும்,முதலில் தமிழை ஒழிக்காமல் இருங்கடா,67 -க்கு முன் இருந்த தமிழ் வழி பள்ளிஎல்லாம் என்ன ஆச்சு.

    பதிலளிநீக்கு
  3. s.mani, vizzy > என்ற இரண்டு பேர் கருத்து வெளியிட்டுள்ளார்கள். 67களில் தமிழ்வழி பள்ளிகளில் தமிழ் என்ற போர்வையில் சமஸ்கிருதம் கற்று தந்தார்கள். 67விட இப்போது நிறைய தமிழ்வழி கல்வி நிலையங்கள் தமிழகத்தில் உள்ளன. தமிழின் தமிழை அழிக்கவில்லை. தமிழகத்தில் வாழும் சிலர் தமிழை அழிக்கும் முடிவில் உள்ளார்கள்.

    தமிழனுக்கு இந்தி வராது உங்கள் கருத்து கேவலமாக உள்ளது. இன்று உலகத்தின் பல பகுதிகளில் தமிழன் வெற்றி கொடி நாட்டுள்ளான். அவன் நினைத்தால் எந்த மொழியையும் சுலபமாக கற்றுக்கொள்வான் .இதுதான் வரலாறு. கடந்த கால வரலாறுகளை பாருங்கள். இங்கு தெலுங்கன், கன்னடன், இந்திக்காரன் பிச்சைக்காரனாக இருக்கிறான். அதற்காக அம்மொழி பேசுபவர்கள் எல்லாம் முட்டாள்களல்ல. வெளிநாட்டு நிறுவனங்களில் போட்டி ஆராயுங்கள் எந்த மொழிக்காரன் அதிகமாக பணியாற்றுகிறான் என்பதை அறிவீர்கள்.

    இந்த அரைவேக்காட்டு தனமாக கருத்துக்களை வெளியிடாதீர்கள்.

    பதிலளிநீக்கு