ரஜினியை
சந்திக்க வேண்டும் என மோடி மட்டும் விரும்பவில்லை. மோடியை சந்திக்க ரஜினியும்
விரும்பினார் என்பதே உண்மை. சென்னை வந்த மோடி என் வீட்டில் டீ சாப்பிட விரும்பினார். அது நிறைவேறியது எனக்கு சந்தோஷம். அவர்
மனதில் உள்ளது நிறைவேற கடவுளிடம் பிரார்த்திப்பேன் என்றார். (அதுயென்ன மறைமுக வாய்ஸ். நேரடியாகவே சொல்லியிருக்கலாம் மோடி பிரதமராக
ஆதரவு என்று). ரஜினியே வாய்ஸ் தந்துட்டாரு தமிழ்நாட்ல மோடி அலையோடு
ரஜினி அலையும் சேர்ந்து 40க்கு 60 சீட் ஜெயித்துவிடுவார்கள் என்கிறார்கள் பொருந்தா
கூட்டணிக்கு வால்பிடிப்பவர்கள்.
ஆட்சிக்கு
வரப்போகிற கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் வரிசையில்
சினிமா நடிகர்களில் ரஜினிக்கு எப்போதும் தனி இடம் உண்டு.
91-96 காலக்கட்டம்.........
தமிழகத்தை ஆண்ட ஜெ – சசி வகையறா
ஆட்சி மீது மக்களிடம் இயல்பாகவே ஒரு எதிர்ப்பு உருவாகியிருந்தது. மாற்றத்துக்கு
மக்கள் தயாராகயிருந்தனர். 96ல் திமுக தனித்து நின்றிருந்தாலும் ஜெயித்துயிருக்கும்.
அதுதான் அன்றைய மக்கள் மனநிலை.
அடுத்து திமுக ஆட்சி தான் என்பதை
உணர்ந்தே, சோ, ரஜினி ஓடிவந்து திமுகவுக்கான வண்டிகளில் ஏறிக்கொண்டு திமுக – தமாக கூட்டணியை
உருவாக்கியதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு வெற்றியில் பங்கெடுத்துக்கொண்டார்கள். ரஜினி
குரல் கொடுத்ததால் தான் ஜெ தோற்றார். திமுக ஆட்சியை பிடித்தது என
பிதற்றுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களை அரசியல் தெரியாத
அறிவிளிகள் என ஒதுக்க முடியாது. ஏன் எனில் அவர்கள் திட்டமிட்டே அந்த மாயையை உருவாக்கி
அது நிலைத்து நிற்க வைத்தார்கள். அவர்கள் தான் தற்போது ரஜினி
மோடிக்கு ஆதரவு என பிரபகாண்டம் செய்கிறார்கள்.
2004 நாடாளமன்ற
தேர்தல்...........
தமிழகத்தில் ரஜினியின் செல்வாக்கு
என்ன என்பதை 2004 நாடாளமன்ற தேர்தலில் பாமக வெட்ட வெளிச்சமாக்கியது. பாபா படம் ராமதாஸ்
மோதலின் போது பாமக போட்டியிடும் 7 தொகுதிகளில் அந்த கட்சியை என் ரசிகர்கள் தோற்கடிக்கும்
பணியில் ஈடுபட வேண்டும் என வாய்ஸ் கொடுத்தார். மக்கள் ஆதரவளிக்க
வேண்டும் என பேசினார். அந்த குரல் எடுபடாமல் மண்ணை கவ்வினார். 7 இடங்களிலும்
திமுக கூட்டணியில் இருந்த பாமக வெற்றி பெற்றது. பின்னர் மத்திய
அமைச்சரான அன்புமணிராமதாஸ்சுடன் நட்பு பாராட்டினார்.
2006 சட்டமன்ற
தேர்தல்........
திமுகதான் அடுத்து
ஆட்சிக்கு வரும் என்பதை யூகித்த ரஜினி, 2004ல் பாமகவுக்கு எதிராக தந்த வாய்ஸ் புஸ்சாகியதால்
2006 சட்டமன்ற தேர்தலின் போது வாயை மூடிக்கொண்டார். திமுக ஆட்சிக்கு வந்தது. 2011 வரை தமிழகத்தை ஆண்ட கலைஞரின் சினிமா, இலக்கிய விழாக்களில் கலந்துக்கொண்டு ஐஸ் மழை பொழிந்தார்.
2009 நாடாளமன்ற
தேர்தல்..............
அடுத்தும்
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி தான் என்பதால் சைலண்டாக வாய்ஸ் தராமல் இருந்தார்.
2011 சட்டமன்ற
தேர்தல்..........
2011 சட்டமன்ற
தேர்தல், ஈழப்பிரச்சனை, காங்கிரஸ்க்கு வாரி வழங்கிய சீட்களின் எண்ணிக்கை,
அமைச்சர்களின் கொள்ளை, ஊழல் பிரச்சனையென திமுக மீது அதிருப்தி மக்கள் மத்தியில்
இருந்தது. தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால் அடுத்து அதிமுக ஆட்சி தான்
என்பதை மக்கள் நம்பினர்.
இதை உணர்ந்திருந்த
ரஜினி, ஓட்டு போடும்போது இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு அதை திட்டமிட்டே
மீடியாவில் காட்டவைத்ததோடு வெளியே வந்து இரட்டை இலை சிம்பள் காட்டி என் ஆதரவு அதிமுகவுக்கு என சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றார். அதிமுக
வெற்றி பெற்றது. ரஜினி ரசிகர்களின் ஆதரவு தான் ஜெவை மீண்டும்
முதல்வராக்கியது என பிதற்றினார்கள். ரஜினி விரல் காட்டவில்லையென்றாலும்
அதிமுக ஜெயித்திருக்கும் என்பதே எதார்த்தம். அதனாலே ரஜினியை கண்டுக்கொள்ளவில்லை.
2014 நாடாளமன்ற
தேர்தல்......
இப்போது, 2014
நாடாளமன்ற தேர்தல். இந்தியா முழுவதும் மோடி அலை கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக திட்டமிட்டே
உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பொய்யை பலமுறை சொன்னால் உண்மையாகிவிடும் என்பது ஹிட்லரின்
நம்பிக்கைக்குரிய அமைச்சர் கோயாபல்ஸ் சித்தாந்தம். இந்த சித்தாந்தத்தை வைத்து
பலமுறை ஹிட்லர் வெற்றி பெற்றுள்ளார். அதைத்தான் மோடிக்கான விளம்பரத்துக்கு
பயன்படுத்துகிறது அமெரிக்காவின் விளம்பர நிறுவனமும், காவி கூடாரமும்.
காங்கிரஸ் மீது
பெரும் ஊழல் குற்றச்சாட்டுகள், விலைவாசி உயர்வு, பன்னாட்டு பொருளாதாரத்துக்கான
கதவுகள் அகலமாக திறந்தது போன்றவை நாட்டு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி
வைத்துள்ளது. இந்த நேரத்தில் நாடு முழுவதும் பரவலாக அரியப்பட்ட காங்கிரஸ்க்கு
மாற்று என முன்னிறுத்தப்படும் பி.ஜே.பியில் குப்பன், சுப்பனை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி
கூட்டணி அமைத்திருந்தால் வலிமையான கூட்டணி இந்தியா முழுமைக்கும் அமைந்திருக்கும். அந்த
கூட்டணி பெரும் வெற்றி பெற்றிருக்கும். குஜராத்தில் இஸ்லாமிய மக்களை கொன்று
குவித்த மோடி பிரதமர் வேட்பாளர் என்பதால் தான் கூட்டணி அமையவில்லை. இருந்தும்
உருவாக்கப்பட்ட மோடி அலையை கொண்டு கரை சேர துடிக்கிறது காவி கூடாரம். மோடி அலை
தமிழகத்தில் உதவாது என்பதால் ரஜினி வாய்ஸ் எதிர்பார்த்து நின்றார்கள்
பி.ஜே.பியினர். ரஜினி காரிய மன்னன் அடுத்து எப்படியும் மோடி ஆட்சி அமைத்துவிடுவார்
என்ற நம்பிக்கையில் மோடி சந்திப்புக்கு தலையாட்டியதோடு அவர் நினைப்பது நிறைவேற
கடவுளை பிரார்த்திக்கிறேன் என வாய்ஸ் தந்துள்ளார்.
வாய்ஸ்க்கு
பின்னால் அரசியல் மட்டுமல்ல ரஜினியின் மத, மொழி வெறியும் உண்டு.
சூப்பர் ஸ்டார்
ரஜினி சாதாரண சிவாஜிராவ்வாக இருக்கும் போது, கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக
செயல்படும் வாட்டாள் நாகராஜின் தீவிரமான மொழிவெறி அமைப்பில் ஒரு சிப்பாயாக
இருந்தவர். இதை வாட்டாள் நாகராஜ்ஜே கூறியுள்ளார். கர்நாடகாவின் சூப்பர்ஸ்டாராக
மக்கள் மனதில் நின்ற நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியபோது ரஜினி துடித்த
துடிப்பு பெரியது. தன் மாநிலத்தவர்க்காக துடித்த அதே ரஜினி மதத்துக்காகவும் பலமுறை
துடித்துள்ளார். இப்போது நடிகர் ரஜினியின் மதவெறி மத வெறியறான மோடிக்கு ஆதரவு
தரவைத்துள்ளது.
மாநில அளவில்
இருந்து தேசிய அளவு வரை முற்போக்கு முகத்தில் காட்சியளித்த பலரின் முகமுடிகளை இந்த
தேர்தல் கழட்டி வருகிறது.
மிகச்சரியான ஆய்வு & பதிவு!!!
பதிலளிநீக்குதமிழக அரசியலை தீர்மானிக்கும் மிகப் பெரிய சக்தியாக ரஜினிகாந்த் இருப்பார் என்ற மாயை உடைந்து பல காலங்கள் ஆகிவிட்டன. அவரை வைத்து இன்னும் இப்படிப்பட்ட அபத்தங்கள் மேடையேறுவது எதிர்பார்க்ககூடிய வேடிக்கைகள்தான்.சிரித்துவிட்டுப் போகலாமே?
பதிலளிநீக்குpadhivu nandru surendran
பதிலளிநீக்குRajini is always great. He reflect people thought.
பதிலளிநீக்குEllam kazhisadyana ohta vaika kudukkum buildup
பதிலளிநீக்கு