வெள்ளி, மே 22, 2015

மீண்டு(ம்) ஜெ வந்தார் முகம் தயராக இருக்கட்டும்.



தன் செருப்பு காலால் சட்டத்தை நசுக்கி அது தன் மயிருக்கு சமானம் என நிறுபித்தவர் ஜெ. இன்றள்ள நேற்றள்ள என்றும்மே அவர் சட்டத்தை கண்டு கவலைப்படுவது கிடையாது. சட்டத்தை வளைக்க எதால் வேண்டுமானாலும் அடிப்பார். அப்படி அடித்துதான் பல தீர்ப்புகளை வாங்கியுள்ளார்.

சட்டம் மட்டுமல்ல எல்லாம்மே அவருக்கு துச்சம் தான். எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார். தான் நினைத்தது நடக்க வேண்டும் என நினைப்பார். முதலமைச்சராக பதவிக்கு வருவதற்க்கு முன்பு நியமன எம்.பியாக எம்.ஜீ.ஆரால் நியமிக்கப்பட்ட போதே சட்டத்தை மீற தொடங்கியவர் அவர். எம்.ஜீ.ஆர் அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தபோது, அவரால் நிர்வாகம் செய்ய முடியாது என்னை முதல்வராக நியமியுங்கள் என கேட்டுக்கொண்டதில் இருந்து வெளிப்படையாக தொடங்குகிறது அவரது தரம் தாழ்ந்த அரசியல் விளையாட்டு.

எம்.ஜீ.ஆர் இறந்தபோது, ஜானகி தான் மோரில் விஷம் வைத்து அவரை கொன்றார் என அவரது மனைவி மீதே குற்றம்சாட்டினார். அதோடு, எம்.ஜீ.ஆர் உடல் அருகிலேயே இருந்து கட்சியை கைப்பற்ற அவர் நடத்திய டிராமா யாரும் யோசிக்க முடியாதது........ அதன்பின் பல யோசிக்க முடியாத அரசியல் விளையாட்டுகளை காண செய்தது தமிழகமும், இந்தியாவும்.

1990 ல் சட்டமன்றத்தில் முதல்வர் இருக்கையில் இருந்த கலைஞரின் கையில் இருந்த பட்ஜெட் நகலை பிடுங்கி அவரை அடிக்க முடியல அதற்கு திமுக அமைச்சர்கள் சிலர் ஜெவை பிடித்து தள்ள  சட்டமன்றத்துக்கு வெளியே வந்து என் புடவையை பிடித்து இழுத்தார்கள் என கூப்பாடு போட்டார்.

பின் ராஜிவ்காந்தியுடன் கூட்டணி வைத்தார் விடுதலை புலிகளால் ராஜிவ்காந்தி கொல்லப்பட இந்த கொலைக்கு திமுக தான் காரணம் என விவகாரத்தை திசை திருப்பி விட்டு திமுக நசுக்கப்பட்டு எதிர்த்து களமாட ஆளேயில்லாத தேர்தல் மைதானத்தில் விளையாடி 91ல் முதல் முறையாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்.

காணாததை கண்ட குரங்கை போல ஆட்சியில் அமர்ந்தால் வரும் வருமானம், லஞ்சம் போன்றவற்றை பார்த்து திட்டங்களில் கோடிக்கோடியாய் கொள்ளை அடிக்க தொடங்கினார். கங்கைஅமரன் உட்பட பல பிரபங்களின் சொத்துக்களை பிடுங்கியது, ஏழைகளின் நிலங்களை பறித்தது, எதிர்ப்வர்கள், எதிரிகள் என கண்டறியப்பட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர், ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா போன்றவர்கள் மீது ஆசிட் விச்சி, ரவுடிகளை வைத்து வழக்கறிஞர் சண்முகசுந்திரம் மீது கொலைவெறி தாக்குதல், கட்சிக்காரர்களை வைத்து பா.சி, மணிசங்கர்அய்யரை தன் கட்சியினரை வைத்து தாக்க வைத்தது என நேரடியாக ஜெ – சசி கும்பல் அராஜகத்தை தமிழகத்தில் நடத்தியது. ஜெ மீது ஊழல் விசாரணைக்கு கவர்னர் சென்னாரெட்டி உத்தரவிடப்போகிறார் என்றதும், என் கையை பிடித்து இழுத்தார் என பேட்டி தந்து அவருக்கு நெஞ்சுவலி வந்து சாக காரணமானர்.

ஆட்சி கட்டிலில் இருந்து இறங்கியபின் தொடுக்கப்பட்ட வழக்குகளில் இருந்து தப்பிக்க பல அந்தர் பல்டிகளும், இதற்கு நீதி வளைந்து கொடுத்த தன்மைகளை எழுதினால் நீதித்துறையை ஒருவரும் மதிக்கமாட்டார்கள்.

2000த்தில் தேர்தலில் நிற்க முடியாமல் சட்டம் தடுத்தபோது, ஒரே நேரத்தில் 4 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்து அனுதாபம் தேடினார். எம்.எல்.ஏவாக இல்லாத சூழ்நிலையில் கவர்னர் பாத்திமாபீவிக்கு செட்டில் செய்து முதல்வர் பதவியில் அமர்ந்தபின் கொஞ்சம் மாற்றி அராஜகம் செய்ய தொடங்கினார். இதே காலக்கட்டத்தில் டான்சி நில கொள்ளையில் இருந்து விடுதலை, பிளசன்ட் டே ஹோட்டல் வழக்குகளில் இருந்து எப்படி விடுதலை செய்யப்பட்டார் என்பது வெளிப்படை.

கோடிகளை கொட்டி பழைய கால மகாராசக்கள் மகன்களின் திருமணம் நடப்பதை போல தன் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தை நடத்தினார். கிலோ கணக்கில் நகை வாங்கியதற்கு பணம் தராததால் பிரபலமான நகைக்கடை அதிபர் தற்கொலை செய்துக்கொள்ள காரணமானவர். ஆடம்பர திருமணம் செய்து வைத்து வைத்த வளர்ப்பு மகன் சுதாகரனை ஹெராயின் கேஸ் போட்டு சிறையில் வைத்து அடித்து உதைப்பதை போன் வாயிலாக கேட்டு ரசித்தவர். தனது ஆடிட்டர் பாஸ்கர் சரியாக கணக்கு போடாததால் தான் தன் மீது ஊழல் வழக்கு வர காரணம் என ஜெவே அவரை அடித்து உதைத்தது என விவகாரங்கள் நீளும்.

ஜெ மீதான முறைகேடு வழக்கை விசாரித்த ஒரு நீதிபதியின் மருமகன் மீது ஹெராயின் வழக்கு, மற்றொரு நீதிபதியின் வீட்டுக்கு மின்சாரம், குடிநீர் சப்ளை துண்டிப்பு என ஆட்டம் போட்டவர் ஜெயலலிதா. அதிகாரிகளை சட்டையால் அடித்து வேலை வாங்குகிறேன் என்றவர் எஸ்மா, டெஸ்மா சட்டத்தால் லட்ச கணக்கான ஊழியர்களை ஒத்த கையெழுத்தில் வீட்டு அனுப்பியவர் தற்போது அதே ஜெ தன் பார்வையை உணர்ந்து காலில் விழுந்து நக்கும் தன் அமைச்சர்களை கூட நம்பாமல் அதிகாரிகளை வைத்து ஆட்சி நடத்துகிறார்.

சட்டமன்றத்திலும் ஜெ சர்வாதிகாரி தான். தன் புகழ் பாடும் கவிதைகள், எதிர்கட்சி தலைவர்களை மிக கேவலமாக பேசுவதை ரசிப்பது மட்டுமல்ல எதிர்கட்சிகளின் நியாயமான கோரிக்கைகளை கேட்காதவர். சட்டமன்றத்தில் தாமரைக்கனியை வைத்து விரபாண்டி ஆறுமுகத்தை அடிக்க வைத்ததாகட்டும், காவல்துறை கயவர்களால் பத்மினி என்ற பெண் கற்பழிக்கப்பட்டதை கேள்வி கேட்டதற்கு பதில் சொல்லாமல் போனதையடுத்து சட்டமன்றத்துக்குள் எதிர்கட்சிகள் உண்ணாவிரதம் இருந்தபோது, மின்சாரம், குடிநீர் போன்றவற்றை நிறுத்தி அந்த கட்டிடத்திற்குள் வைத்து எதிர்கட்சி எம்.எல்.ஏக்களை பூட்டி ஜனநாயகத்தை கொலை செய்தார். 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்தல் தான் இந்த 4 ஆண்டுகளில் ஜெ செய்த சாதனை. இன்னும் பட்டியல் போடலாம் படிக்கத்தான் நேரம் இருக்காது. அவருக்கு எதிராக சட்டமன்றத்தில் குரல்கள் எழுந்தாலும், பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் செய்திகள் வந்தாலும் அவர்களை நசுக்குவதை குல தொழிலாக வைத்துள்ளார். ஜனநாயகம், சட்டம், நன்னடத்தை விதிகள், சட்டமன்ற மாண்புகளை மிதித்தவர் ஜெ.

இதைத்தான் ஜெவின் தைரியம் என்கிறார்கள். என்னிடம் எதற்கும் துணிந்த பத்து ரவுடிகள் கையில் இருந்தால் நானும் என்ன வேண்டுமாலும் செய்ய முடியும். என்னை கண்டும் எல்லோரும் பயப்படுவார்கள். இதைத்தான் ஜெ செய்கிறார். அவர் ஆட்சியில் இருக்கும் போது காவல்துறையில் அவர் ஏவுவதை செய்து முடிக்கும் ஏவலர்கள் உள்ளார்கள். செய்கிறார்கள். எங்கே எதிர்கட்சியாக இருக்கும் போது செய்யச்சொல்லுங்கள் பார்க்கலாம் ?.

ஜெ எது செய்தாலும் அதை நியாயப்படுத்தி பேச சோ, குருமூர்த்தி போன்ற பார்ப்பன கும்பல்களோடு,  காவி கும்பல்கள், சட்டம் படித்தவர்கள் மட்டுமல்ல பத்திரிக்கையாளர்கள் வரை எல்லா இடத்திலும் நடுநிலை வேடம் போட்டுக்கொண்டு ஆட்கள் இருக்கிறார்கள். ஊழல் தவறுயில்லை என தன் கட்சி தொண்டர்களை, மக்களை நம்பவைத்த, மூளையை மழுங்கடித்த ஜெ போன்ற அரசியல்வாதிகளை ஆதரிக்கிறிர்களே இவர்களுக்கு வெட்கமாகயில்லையா?. 


கிடையாது. சாதி பாசம், அதிகார வெறி, பணம் இவைகள் அவர்களை வெட்கப்படவைக்காது. ஆனால் மக்களாகிய நாமெல்லாம் வெட்கபட வேண்டும். ஆனால் படமாட்டோம். மூஞ்சியில் காரி துப்பினாலும் துடைத்து தூரப்போட்டுவிட்டு குதுகலிக்கும் மனப்பான்மையை ஆண்டாண்டு காலமாக வளர்த்துக்கொண்டுள்ளோம்.

இதோ, காரி துப்ப மீண்டு(ம்) ஜெ வந்துவிட்டார். துப்புவதை வாங்கிக்கொள்ள தயாராகயிருங்கள். அதை நியாயப்படுத்த நியாயவான்கள் நிறையப்பேர் உள்ளார்கள் கவலைப்படாதீர்கள்.


1 கருத்து: