செவ்வாய், செப்டம்பர் 29, 2015

ஈழ துரோகிகள் யார் ?. வெளிச்சமாக்கும் அமெரிக்க தீர்மானம்.



2009 போர் இலங்கையில் நடந்த மனித இனப்படுகொலையை யாரும் மறந்திருக்க முடியாது. இலங்கை அரசாங்கத்துக்கும் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே நடந்த யுத்த்த்தில் ஈழ தமிழர்களை கொன்று குவித்த்து இலங்கையை ஆண்ட இராஜபக்சே அரசாங்கம்.

இலங்கையில் போர் நடப்பதற்க்கு காரணம்மே அன்று இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசாங்கமும், அதற்கு முட்டுக்கொடுக்கும் அன்று தமிழகத்தை ஆண்ட திமுக அரசாங்கமும் தான் என எதிர்கட்சிகள் பலப்பல விதங்களில் பலப்பல போராட்டங்களை முன்னெடுத்தார்கள் தமிழ்தேசியம் பேசும் நெடுமாறன், மணியரசன், பல தமிழ்தேசிய அமைப்புகள், வை.கோ, சீமான் போன்றவர்கள் நாக்கு தண்ணீர் வற்ற, நரம்பு புடைக்க கர்ஜித்தார்கள்.

போர் நிறுத்தும் அளவுக்கு மாநில அரசுக்கு அதிகாரம்மில்லை என தமிழகத்தை ஆண்ட திமுக அராசங்கம் பலமுறை எடுத்துக்கூறியும் அரசியல் செய்த தலைவர்கள் அதை அறிந்தும் தெரிந்திருந்தும் மக்களிடம் பொய்யான பிரச்சாரத்தை செய்தார்கள். 2011 தேர்தல் பிரச்சாரத்தின் போது இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார் சீமான், காங்கிரஸ் உள்ள அணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்றார்கள் நெடுமாறன், வை.கோ போன்ற ஈழத்துக்காக உருகும் தலைவர்களும், தமிழ்தேசியம் பேசுபவர்களும். திமுக ஆட்சி போய் அதிமுக ஆட்சி வந்துவிட்டது.

அந்த ஆட்சி வந்து 5 ஆண்டுகள் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் இன்னமும் ஈழம் மலரவில்லை. ஈழம் என்ற வார்த்தையே மறக்கடிக்கப்பட்டுவிட்டது. தமிழ்தேசியவாதிகளால் ஈழத்தாய் என அழைக்கப்பட்ட தமிழக முதல்வராகவுள்ள ஜெ, தமிழக சட்டமன்றத்தில் ஈழப்படுகொலை பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற ரீதியில் இரண்டு, மூன்று முறை தீர்மானம் இயற்றியதும் ஈழம் உருவானது போல் பாராட்டு கூட்டமும், அறிக்கையும் தந்தனர் தலைவர்கள்.


இலங்கையில் நடந்த மனித படுக்கொலைப்பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும்மென ஐ.நாவின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் நவநீதம் பிள்ளை அறிவித்தார். அவருக்கு பின் பல தலைவர்களும் அறிவித்தார்கள்.

இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கம் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவந்தது. இந்தியாவில் பி.ஜே.பி மலர்ந்தால் வந்தால் ராஜபக்சேவை சர்வதேச கூண்டில் மோடி நிறுத்துவார் என வை.கோ, தமிழருவி மணியன் போன்றவர்கள் பேசினார்கள். வை.கா கூட்டணியே வைத்தார். 2014ல் இந்தியாவில் தாமரையின் ஆட்சி உருவானது மோடியும் பிரதமரானர். வை.கோவை எட்டி உதைக்கும் விதமாக ராஜபக்சேவை பதவியேற்பு விழாவுக்கு அழைத்து கவுரவித்தார்.

மாநிலத்தில் இவர்கள் விரும்பிய இலை ஆட்சி, மத்தியில் இவர்கள் நினைத்த தாமரை ஆட்சி தான் உள்ளது. ஆனால், தமிழகத்து மோடி மட்டும்மல்ல, இந்தியாவின் மோடியாலும் ராஜபக்சேவை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆட்சி அதிகாரம் போனாலும் அவர் மாளிகையில் ஜாலியாகவுள்ளார். ராஜபக்சேவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து ஆட்சிக்கு வந்த சிறிசேனாவும் ராஜபக்சேவை அவரது குடும்பத்தை விட்டுதர தயாராகயில்லை.


ஈழத்தில் நடந்த மனித படுகொலையை இலங்கை அரசாங்கம்மே நீதி விசாரணை நடத்தலாம். அதில் சர்வதேச நீதிமான்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இடம் பெற வைத்துக்கொள்ளலாம் என்ற தீர்மானத்தை ஐ.நாவில் நிறைவேற்ற அமெரிக்கா முயல்கிறது. இந்தியாவின் மோடி அரசாங்கம் அதற்கு உதவுகிறது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும்மென்றால் மோடி அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை திட்டமிடல் படி உருவானதே அமெரிக்காவின் அந்த தீர்மானம்.

இப்படியொரு தீர்மானம் வரப்போகிறது என்பது முன்பே திமுக ஆட்சியின் போது கோயாபல்ஸ் பிரச்சாரம் செய்த நெடுமாறன், வை.கோ, சீமான், மணியரசன் மற்றும் பல தமிழ்தேசியவாதிகளுக்கு தெரியும். தெரியவில்லை என அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வோம். இந்த அக்டோபர் மாதம் ஐ.நா அவை கூடியதும் அந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதோடுஈ சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை நீர்த்து போக வைக்கும் வகையிலான சரத்துகள் இன்னும் சேர்க்கப்பட்டு 30ந்தேதி அந்த தீர்மானம் ஐ.நா அவையில் நிறைவேற்றப்படவுள்ளன என்ற தகவல்களும் வந்தன.


28ந்தேதி இரவு வரை நெடுமாறன், வை.கோ, சீமான், மணியரசன், புதியதாக உருவாகியுள்ள வேல்முருகன் மற்றும் தொல்.திருமா போன்ற யாரும் வாய் திறக்கவில்லை. அனைத்து துவாரங்களையும் அடைத்துக்கொண்டு இருந்தனர். விமர்சனம் வருகிறது என்றதும் 29ந்தேதி காலை வை.கோ மட்டும் சென்னையில் போராட்டம் நடத்தி கைதானார்.

இவர்கள் போராட்டம் நடத்தாதற்கு காரணம் ஈழத்தாயின் ஆட்சியில் ஈழத்தில் மக்கள் நிம்மதியாக அனைத்து உரிமைகள் பெற்று வாழ்கிறார்கள் என சொல்ல வருகிறார்களா ? அல்லது ஈழத்தில் தமிழ் மக்களே இல்லை என சொல்ல வருகிறார்களா ? அமைதியாக இருந்து என்ன சொல்ல வருகிறார்கள்.

2009 நாடாளமன்ற தேர்தல் நடந்த போது, ஈழத்தில் இருந்து விடுதலைப்புலிகள் ஆதரவு தலைவர்களிடம், போரை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்க சொல்கிறார்கள் என்ன செய்யலாம் என விடுதலைப்புலிகள் தலைவர்கள் கேட்டபோது அடுத்து பி.ஜே.பி ஆட்சிதான் போரை தொடர்ந்து நடத்துங்கள் என ஆலோசனை சொன்னதாக தகவல் வெளியானது. அதை நம்புவது கடினமாக இருந்தது.

மத்தியஸ்த நாடாகயிருந்த நார்வே வெளியிட்ட போர் முடிவுக்கு பின் விசாரணை அறிக்கையில் விடுதலைப்புலிகளை நம்பவைத்து கழுத்தறுத்த்து தமிழக அரசியல் தலைவர்கள் என குறிப்பிட்டுயிருந்தது.

அவைகளை அப்போது நம்புவது கடினமாக இருந்தது இப்போது முழுதாக நம்புகிறேன். ஈழ துரோகிகள் காங்கிரஸ்சோ, திமுகவோ கிடையாது. நெடுமாறன், வை.கோ, சீமான், தமிழ்தேசியவாதிகள் தான். காங்கிரஸ், திமுக போன்றவை நெஞ்சில் குத்தினார்கள் என்றால் நெடுமாறன், வை.கோ, சீமான், தமிழ்தேசியவாதிகள் உங்கள் நண்பன் என சொல்லிக்கொண்டு தோளில் கைபோட்டுக்கொண்டு விடுதலைப்புலிகள் மற்றும் ஈழ மக்கள் முதுகில் குத்திய துரோகிகள் என்பதை உங்களது கொண்டைகளே காட்டி தருகின்றன.

வாழ்க உங்கள் புரட்சி.  

1 கருத்து: