செவ்வாய், செப்டம்பர் 29, 2015

பயணத்தில் கிழிக்கப்படும் மோடி முகமுடி. – உள்நாட்டு மீடியாவுக்கு கண் தெரியவில்லை.



அமெரிக்காவின் சிலிக்கான் வேலி பகுதிக்கு நம் நாட்டு பிரதமர் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு பேஸ்புக் தலைமையகத்தில் அதன் நிறுவனரை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டார் என கதை எழுதிய நம்நாட்டு பத்திரிக்கைகள், மீடியாக்கள் சிலிக்கான் வேலியில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தை ஒரு பாக்ஸ் அளவுக்கு கூட செய்தியாக்கவில்லை. அவர் தலைமையிலான பி.ஜே.பி ஆட்சிக்கு வந்து ஒன்னரை ஆண்டுகள் ஆகிறது. இன்னமும் அவரது ஆட்சியை பற்றி விமர்சனமே, குறைகளோ சுட்டிக்காட்டாமல் அவர் நடந்தால் நடையழகு, சிரித்தால் பல்லழகு என்றே எழுதிக்கொண்டும், ஒளிப்பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இது என்னவகையான ஜர்னலிசம் என தெரியவில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம். சிலிக்கான் வேலியில் மோடிக்கு எதிர்ப்பாக என்ன போராட்டம்?. மோடி தலைமையிலான இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் செயல்படும் மோடி அரசை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டங்களை செய்தியாக பதிவு செய்து மோடி அரசை கிழிகிழியென கிழிக்கின்றன நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், பி.பி.சி போன்ற பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும்.

இதுயேதோ அமெரிக்காவில் மட்டும் நடைபெறும் போராட்டமல்ல மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கும் நாடுகளில் மோடி பயணம் செய்தால் ஜனநாயக ரீதியில் தங்களது எதிர்ப்புகளை காட்ட அந்நாடுகள் அனுமதியளிக்கின்றன. இதனால் போராட்டங்களும் நடைபெறுகின்றன.

மோடி பிரதமராக பதவியேற்றதும் முதன் முதலாக மோடி பயணம் செய்த நாடு இந்தியா அடிமையாக நடத்தும் பூடான் நாட்டுக்கு. அங்கு நம்மவூர் கட்சிகள் போல் பிளக்ஸ், கட்அவுட், கொடி, தோரணம் என கட்ட வைக்கப்பட்டு வரவேற்ப்பு தரப்பட்டது. அந்த நாட்டின் நாடாளமன்றத்தில் மோடி உரையாற்றி முடித்தபோது மோடிக்கு எம்.பிகள் கைதட்டி அதிர்ச்சியை தந்தனர். கைதட்டினால் ஏன் அதிர்ச்சியாக வேண்டும். பூடான் வழக்கப்படி கைதட்டுவது என்பது துர்நாசம் செய்யும் ஆவிகளை விரட்டவே கைதட்டுவார்கள். மோடியை அவர்கள் துர் ஆவியாக நினைத்துவிட்டார்கள் போல.

அடுத்த்தாக பல நாடுகளுக்கு அவர் பயணம் செய்தார்.

2014 ஜீன் மாதம் பூட்டான்.
2014 ஜீலை நான்கு நாள் பயணமாக பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக்கொள்ள பிரேசில்.
2014 ஆகஸ்ட் மாதம் இரண்டு நாள் பயணமாக நேபாளம். அதேமோதம் 30ந்தேதி முதல் செப்டம்பர் 3ந்தேதி வரை ஜப்பான் பயணம்.
2014 செப்டம்பர் 5 நாள் பயணமாக அமெரிக்கா.
2014 நவம்பர் மாதம் மியான்மர், அதேமாதம் 14 முதல் 18 வரை ஆஸ்திரேலியா, அதேமாதம் ஒருநாள் பயணமாக பிஜி தீவுக்கும், 25ந்தேதி மூன்று நாள் பயணமாக மீண்டும் நேபாளம் பயணமானார்.

2015 மார்ச் 10ந்தேதி இரண்டு நாள் பயணமாக ஐஸ்லாந்து, அப்படியே 11ந்தேதி 3 நாள் பயணமாக மொரிசியஸ், மார்ச் 13ந்தேதி இலங்கை, மார்ச் 29ந்தேதி சிங்கப்பூர் பயணமானார்.

2015 ஏப்ரல் மாதம் பிரான்ஸ்க்கும், ஏப்ரல் 12ந்தேதி ஜெர்மனி, 14ந்தேதி கனடாவுக்கு பயணம்.

2015 மே மாதம் 3 நாள் பயணமாக சீனாவுக்கு ஓடினார். 16ந்தேதி மங்கோலியாவுக்கு போனார். 18ந்தேதி தென்கொரியாவுக்கு போனார். இதோ இப்போது அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளார்.

கடந்த ஜீன் 2014 முதல் 2015 ஜீன் வரை 20 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். அதற்கான செலவு மட்டும் 37.22 கோடியென ஆர்.டி.ஐ தகவல் தெரிவிக்கிறது. இதில் ஆஸ்திரேலியா பயணம் தான் அதிக செலவு வைத்துள்ளது மோடிக்கு. அதிக செலவு வைத்த இந்த பயணம் யாருக்காக நடத்தப்பட்டது என துழவினால் அவரது நம்பிக்கைக்குரியவரும், அவரை பிரதமராக்க பாடுப்பட்ட அதானி குழுமத்துக்காக தான் ஆஸ்திரேலியா பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதோடு அந்த அதானி குழுமத்துக்கு மக்களின் சேமிப்பாக இந்திய பாரத வங்கியில் உள்ள பணம் 2 ஆயிரம் கோடி அளவுக்கு அதானிக்கு கடன் தர உத்தரவிட்டுள்ளார் மோடி.

முதல்முறை அமெரிக்கா பயணம் சென்றபோது, பெரும் வரவேற்ப்பு தந்த அமெரிக்கா வாழ் இந்தியர்களில் இந்த முறை குறிப்பிட்ட சதவிதம் பேர் எதிர்த்து நின்கின்றனர். அதைத்தான் மேலே குறிப்பிட்ட முதல் பத்திகளில் சுட்டிக்காட்டியது. அதோடு, மோடிபெயில் என்ற இணைய பக்கம் தொடங்கப்பட்டு அவரை எதிர்ப்பதற்கான காரணங்கள், எதிர்ப்பு பற்றி பதிவு செய்துள்ளது மோடி விசுவாசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மோடியின் வெளிநாட்டு பயணங்கள் பெரும் வெற்றியென ஒரு பக்கம் கொண்டாடப்பட்டாலும் அது எந்தளவுக்கு தோல்வியென விளக்கமாக வெளிவந்துள்ளது. ஆனால் அதனை வெளிப்படுத்ததான் பலரும் தயங்குகிறார்கள். லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இதழில் கடந்தவாரம் அமெரிக்காவுக்கு போப் பிரான்சிஸ் மற்றும் மோடி பயணம் வந்தது பற்றி இருவரின் பயண ஓப்பிட்டு ஒரு நேர்த்தியான கட்டுரை வந்துள்ளது வாய்ப்பிருந்தால் படித்து பார்க்கவும்.


மோடி வெளிநாடுகளுக்கு போனதும் அங்கு அவர்க்கு வரும் எதிர்ப்புகள் பற்றியோ, பயணத்தின் வழியாக அவர் பெற்ற வெற்றி பற்றி எழுதுவதில்லை. அவர் மக்கள் முன் கை ஆட்டுவது, வரலாறு என்ற பெயரில் உளறுவதை மட்டுமே இங்கு பதிவு செய்து அவரை நாயகனாக காட்ட முயல்கிறார்கள். இதுப்பற்றி விமர்சனம் செய்து எத்தனை வெளிநாட்டு மீடியாக்கள் மோடி மீது கரி பூசி அனுப்பினாலும் அதை கலர் சாயம் என வக்காலத்து வாங்க தயாராகவே உள்ளனர் காவிகளும், காவியாகும் நான்காம் தூணும்.

1 கருத்து: