வியாழன், ஆகஸ்ட் 09, 2012

தாய்பாலா தயங்கும் தாய்மார்க்கு எச்சரிக்கை.
பெண்கள் 10 மாத கருவை தன் வயிற்றில் சுமப்பது எத்தனை வேதனையானதோ அதனை விட பன்மடங்கு அவர்களுக்கு இன்பத்தை தருவது கருவில் உள்ள குழந்தை பற்றிய அவர்களது நினைவுகள். வயிற்றில் உள்ள அக்குழந்தை இந்த பூமியில் சக மனிதர்களை பார்க்க துவங்கும் முன்பே அத்தாயின் மனம், தனக்கு பிறக்கப்போவது, ஆணா, பெண்ணா என தெரியாமல் அதற்கான பெயர் சூட்டுவது, வளர்ப்பது, என்ன படிக்கவைப்பது என அவர்களின் கனவுகள் கணக்கிலடங்கா. அந்த அன்பை காணும்போது உலகத்தில் தாய்க்கு ஈடான அன்பு வேறில்லை என்பது நிருபனமாகிறது. 

அதேநேரத்தில் குழந்தை பிறந்த பெண்கள் தங்கள் மேனியழகை பராமரிக்கும் போக்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அது தவறில்லை. ஆனால் அதற்கு அவர்கள் கையாலும் முறைகள் தங்களது பிள்ளைகளை தெரிந்தே நோயாளிகளாக்குகிறார்கள். 

குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் தர வேண்டும். கட்டாயம் ஆளு மாதம் வரை தாய்பால் புகட்ட வேண்டும் என்கிறது மருத்துவ உலகம். காரணம், தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது. இது குழந்தையை நோய் பரப்பும் சில வைரஸ், பாக்டிரியாக்களிடம்மிருந்து பாதுகாக்கும்  தடுப்பு மருந்து. தாய்ப்பால் குழந்தைக்கான நல்ல ஊட்டத்து உணவு. குழந்தை பெற்ற ஒரு பெண் உண்ணும் ஒவ்வொரு உணவு பொருளின் சக்தியும் அத்தாய்மாரின் உடலில் சேர்வதோடு தாய்ப்பாலாக மாறி அக்குழந்தைக்கும் போய் சேருகிறது. 

குழந்தை பிறந்த சில மணித்துளிகளில் பெண்களின் மார்பில் சுரக்கும் பால் கொலஸ்ட்ரம் ( சீம்பால் ) எனப்படும். இது வெள்ளை மற்றும் மஞ்சல் இரண்டும் கலந்த நிறத்தில் இருக்கும். இதில் சர்க்கரை மற்றும் லக்கோடஸ் என்ற தாதுப்பொருள் அதிகமாக இருக்கும். இதனை குழந்தைக்கு தரும்போது நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைக்கு அதிகமாக கிடைக்கிறது. இதனால் ஆஸ்த்துமா, கேன்சர் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உள்ளடக்கிய வைரஸ்கள் உடலில் அதிகமாக தாய்ப்பால் மூலம் குழந்தையின் உடல்க்கு கிடைக்கின்றன. 

பிறந்த குழந்தை சில மாதங்கள் வரை பால் குடித்த சிறிது நேரம் பொருத்து அழும். அதற்கு காரணம், மீண்டும் பால் தேவை என்பதே அதன் அர்த்தமாகும். இப்படி ஒரு நாளில் 10 முதல் 15 வரை தாய்ப்பால் புகட்டலாம். ஒரு முறைக்கும் அடுத்த முறைக்கும் இடைப்பட்ட நேரத்தில் அத்தாயின் மார்பகத்தில் மீண்டும் தாய்ப்பால் சுறந்திருக்கும். குழந்தை பால் குடிக்க குடிக்க பிட்;யூட்டரி, ஆக்சிடோசின், புரோலாக்டின் போன்ற தாதுக்கள் தாயின் உடலில் மீண்டும் மீண்டும் தாய்ப்பாலை சுரக்க வைக்கும்.  

தாய்ப்பால் அதிகம் சுறக்கவில்லையென்றால் உணவில் பூண்டு அல்லது பூண்டு சேர்க்கப்பட்ட பாலை இரவில் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகமாக சுறக்கும். பூண்டால் மற்றொரு நன்மை கர்ப்பப்பையில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்படும். எவ்வளவு குடித்தாலும் எளிதில் ஜீரனமாகும் தன்மை கொண்டது தாய்ப்பால். 

தாய்ப்பாலில் உள்ள ஆர்க்கோனிக் ஆசிட் மற்றும் டோகோஷாக்னிக் ஆசிட் என்ற தாது தாய்ப்பாலில் இயற்கையாகவே உள்ளது. இது குழந்தையின் உடலுக்கு செல்லும் போது கண் வளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதன் திறன்களை அதிகப்படுத்துவதோடு பிற்காலங்களில் கண் மற்றும் மூளை சம்மந்தமான நோய்களில் இருந்து அக்குழந்தையை காக்க உதவுகிறது என அமெரிக்காவின் பிரபல மருத்துவர்கள் ஆலன்பீட்டர், லூகாஸ் போன்றோர் தங்களது ஆய்வுகள் மூலம் தெரிவித்துள்ளனர். 
குழந்தை ஒருவேளை பால் குடிக்கவில்லை என்றால் தாயின் மார்பகத்தில் பால் கட்டிக்கொள்ளும். இது தாயின் உயிருக்கே ஆபத்தாக முடியும். இப்படிப்பட்ட காரணங்களால் தான் உலகம் முழுவதும் குழந்தைக்கு தாய்ப்பால் தர வேண்டி மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். 

தாய்மார்களுக்கு ஓர் எச்சரிக்கை, தாய்ப்பாலை நிறுத்துவதன் மூலம் வருங்காலத்தில் தாய்மார்களுக்கு ரத்த புற்றுநோய் வர அதிக வாய்ப்பு உண்டு, நீரழிவு நோய், உடலில் அதிக எடை கூடும் என இந்திய மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவைகளை உலக சுகாதார நிறுவனமும் உறுதி செய்துள்ளது. தாய்ப்பால் தொடர்ந்து தருவதன் விளைவாக கர்பப்பை பழைய நிலைக்கு திரும்ப உதவுகிறது. தொடர்ந்து தாய்ப்பால் தருவதன் விளைவாக செக்ஸ் உணர்வு சில மாதங்கள் மட்டுப்படுத்தப்பட்டு அடுத்த குழந்தை பிறப்பை தள்ளிப்போடுகின்றன. 

2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் தர வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் இன்றைய நவீனயுக தாய்மார்கள் குழந்தை பிறந்த ஒரு மாதம், இரண்டுமாதம் வரை தாய்ப்பால் தருகிறார்கள். அதன்பின் தருவதில்லை. காரணம், தங்களது அழகு குறைந்துவிடும் என்கின்றனர். மேனி பராமரிப்பில் காட்டும் அக்கறையை தங்களது பச்சிளம் குழந்தை நலனில் காட்ட மறுத்துவிடுகிறார்கள். தாய்ப்பாலை மறக்கடித்து புட்டி பால்க்கு பசும்பால், பவடர்பால்க்கு குழந்தையை பழக்கப்படுத்துகிறார்கள். 

குழந்தை குடிக்கவிடாமல் செய்யப்படும் பால் அப்பெண்ணின் மார்பில் கட்டிக்கொள்ளும்போது அதை கரைக்க மாத்திரையை பயன்படுத்துகிறார்கள். பணக்கார பெண்களிடம் தொடங்கிய இந்த பழக்கம் இன்றைய காலக்கட்டத்தில் கிராம பெண்கள் வரை தொற்றிக்கொண்டது. வேலைக்கு செல்லும் பெண்கள் வேலைக்கு சென்றால் தான் உணவு என்ற நிலையால் பாக்கெட் பால், பவடர் பால்க்கு மாறினார்கள். ஆனால் தற்போதைய நிலையில் வீட்டில் இருக்கும் தாய்மார்கள் கூட தாய்பால் தர தயங்குகிறார்கள். உடல் அழகை பராமரிக்கிறேன் என்ற பெயரில் தன் குழந்தையை நோய் எதிர்ப்பு சக்தியில்லாத உடல்களாக வளர்க்கிறார்கள். இதனை கவனத்தில் கொள்ளுங்கள் நோயில்லா குழந்தையை வளர்க்க முயலுங்கள். 

1 கருத்து: