புதன், ஆகஸ்ட் 08, 2012

சுகமான சுமைகள் …………. 29.




நீ இப்படி பண்ணுவன்னு நான் நினைச்சிக்கூட பாக்கலப்பா என்றார் ப்ரியாவின் அம்மா. 

அமைதியாக இருந்தேன். கவிதாவும் அமைதியாக நின்றிருந்தாள்.

இவளை காதலிக்கத்தான் ப்ரியா கூட பழகனியாப்பா என கேட்டபோது சுரீர்ரென்றது. 

இனியும் அமைதியாக இருப்பது நல்லதல்ல என மனதில் எண்ணியபடி, ப்ரியாவோட பழகன ரொம்ப நாளைக்கு அப்பறம் தான் கவிதாவ பாத்தன். அதுக்கப்பறம் ரொம்ப நாளைக்கு பிறகு தான் கவிதா ப்ரியாவோட தங்கச்சின்னு தெரிஞ்சது. இருந்தும் என் மனச மாத்திக்க முடியல. நாங்க காதலிக்கறது தெரிஞ்சி ப்ரியா எங்கிட்ட ரொம்ப நாள் பேசாம இருந்தாங்க. கல்யாணத்தப்ப தான் பேச ஆரம்பிச்சாங்க. ப்ரியா எனக்கு நண்பர். கவிதா காதலி. ஏனக்கு எப்பவும்மே கவிதாவை விட ப்ரியா ரொம்ப முக்கியம். 

நான் சொன்னதை கேட்டுப்படியே ப்ரியா பக்கம் திரும்பி நீ கூட சொல்லலியேம்மா. 

ப்ரியாவும் சைலண்டாக இருக்க அவரது மாமியார் அப்போது உள்ளே வந்தார். 

என்ன ஆளாளுக்கு ஒரு பக்கம் நிக்கறிங்க யார் முகமும் சரியில்லயே என்றவர் கீழே கொட்டியிருந்த சாம்பாரையும், கவிதாவையும் பார்த்துவிட்டு என் பக்கம் திரும்பி என்னப்பா உங்க மாமியார்க்கு உங்க விவகாரம் தெரிஞ்சிப்போச்சா என சிரித்தபடியே கேட்டவர். விடுங்க சம்மந்தியம்மா. ஊர் உலகத்தல நடக்காததா நடந்துப்போச்சி. 

உங்களுக்கு எப்ப தெரியும். 

அவுங்க ஊருக்கு வந்த உடனே என் மருமக, ஏன் வந்தன்னு இந்த தம்பிக்கிட்ட கேட்டு சண்டை போட்டது. அதல தெரிஞ்சது. அப்பவே இரண்டு பேரையும் திட்டிட்டன். இப்ப நீங்க வேற பசங்கள திட்டாதிங்க. பையன் அம்சமா தான் இருக்கான், ஜாதியும் ஒன்னுதான். காலேஜ் முடிச்சிட்டான். கிராமத்தல இருந்தாலும் நிலம் நீர்ன்னு வசதியா தான் இருக்காங்களாம். பையன் வேலைக்கு போக ஆரம்பிச்சதும் கல்யாணம் பண்ணி வைக்கற வேலைய பாருங்க. 

அதுக்கில்ல சம்மந்தியம்மா. அவருக்கு தெரிஞ்சா பிரச்சனையாகும். 

ஓன்னும்மாகாது. பொம்பளைங்க நாம நினைச்சா எந்த பிரச்சனையையும் ஈஸியா தீர்த்துடலாம். அவர்க்கிட்ட பேசற விதத்தல பேசுங்க. என்னதம்பி உங்க வீட்ல ஒத்தக்குவாங்கயில்ல?.

ஓத்துக்குவாங்கன்னு தான் நினைக்கறன். 

என்னப்பா இழுக்கற. 

இல்லம்மா. ஏதாவது வேலைக்கு போனபிறகு தான் கேட்கனும். இப்ப போய் சொன்னா திட்டுவாரு. கவிதா காலேஜ் முடிக்க இன்னும் ஒரு வருஷம்மிருக்கு. அதுக்குள்ள நான் நல்ல வேலையா பாத்து செட்டிலானபிறகு வீட்ல சொல்றனே. 

அதான் தம்பி தெளிவா இருக்கில்ல நீங்க ஏன் மனச போட்டு குழப்பிக்கிட்டு விடுங்க சம்மந்தியம்மா என்றவர் ப்ரியா டிபன் எடுத்து வை எல்லோரும் சாப்படலாம் என்றார். 

ப்ரியா உள்ளே போக வாங்க சம்மந்தியம்மா என கையை பிடித்து இழுத்து சென்றார். எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டு முடித்ததும் நான் மட்டும் மாடிக்கு வந்தேன். வீட்லப்போய் இத எப்படி சொல்றது. அந்தாளு லப லபன்னு கத்துவாரு. சரி அம்மாக்கிட்ட சொல்லி கரெக்ட் பண்ணலாம். லவ் மேட்டரை சொல்றதுக்கு முன்னாடி ஒரு நல்ல வேலையாப்பாக்கனும் என யோசித்தபடி அமர்ந்திருந்தபோது கவிதா வாசற்படியில் நின்றிருந்தாள். 

என்ன வெளியிலயே நிக்கற. 

தனியா மாட்டனா ஏதாவது பண்ற. அப்பறம் மாட்டிக்க வேண்டியதா இருக்கு. 

இப்ப என்ன பண்ணிட்டாங்க. 

ஓன்னும் பண்ணாம தான் மாட்டிக்கிட்டோமா. 

கோயிலுக்கு போனவங்க திரும்பி வருவாங்கன்னு எனக்கென்ன ஜோசியமா தெரியும். 

எவ்ளோ அசிங்கமா இருந்துச்சி தெரியுமா. 

நீ மட்டுமா அசிங்கப்பட்ட. நானும் தான் அசிங்கப்பட்டன். அதுவும் இரண்டாவது முறையா அசிங்கப்பட்டன் என சொல்லும் போது மனதில் கோபம் வந்திருந்தது. 

மூஞ்சப்பாத்தா அசிங்கப்பட்டமாதிரி தெரியலயே. 

இப்ப அதுக்கு என்ன உட்கார்ந்து அழ சொல்றியா ?. 

பண்றத பண்ணிட்டு இப்ப எதுக்கு கோபப்படற. 

நான் கோபப்படல. எதுக்கு வந்தன்னு சொல்லு. 

நீ பேசறதலயே தான் தெரியுதே. 

ஏய் இப்ப என்னங்கற. கோபத்தல தான் இருக்கன். நான் காதலிக்கறவளுக்கு ஒரு முத்தம் தந்தன் அவ்ளோ தானே. உன்னயென்ன ரேப்பா பண்ணிட்டன் ?.

இப்ப எதுக்கு அசிங்கமா பேசற என கேட்டவள் நான் அமைதியாக இருந்ததை பார்த்துவிட்டு கண் கலங்கியபடி ரூம்மை விட்டு வெளியே போனால். சில நிமிடம் பொருத்தபின்பே ச்சே என்ன இப்படி பேசிட்டமே என சங்கடமானது. கீழ போய் அவக்கிட்ட ஸாரியும் கேட்க முடியாது. என்ன பண்ணலாம் என யோசித்தபடியே அமர்ந்திருந்தேன். 

அழுக்கு துணி ஏதாவது இருக்கா என்ற குரல் கேட்டு நிமிர்ந்தபோது ரூம்க்குள் ப்ரியா வந்து நின்றிருந்தது. இரு எடுத்து தர்றன் என சொல்லிவிட்டு பாத்ரூம்மில் ஓரமாக போட்டுவைத்திருந்த 2 செட் துணிகளை கொண்டு வந்து தர வாங்கிக்கொண்டு சென்றுவிட. இதுங்கிட்டயாவது கவிதா என்ன பண்றான்னு கேட்டுயிருக்கலாம். விட்டாச்சி. என்ன பண்ணலாம் என யோசித்தபடியே கீழ போய்தான் பாக்கலாம் தனியா இருந்தா ஸாரி கேட்டுடுவோம் என எண்ணி எழுந்தபோது ப்ரியாவின் மாமியார், தம்பி, தம்பி என அழைக்க இதே வர்றன்ம்மா என அவசர அவசரமாக ரூமில் இருந்து கீழே இறங்கினேன். படிக்கட்டு முன் நின்றிருந்தவர் டூவீலர் ஓட்டுவியாப்பா. 

ம். ஓட்டுவன்ம்மா.



பக்கத்தல ஒரு கோயில் இருக்கு. என்னை கொஞ்சம் அங்க கொண்டும் போய் விடேன். 

சரிம்மா என்றபடி இறங்கிவந்தேன். 

உள்ளேயிருந்து வெளியே வந்த ப்ரியாவின் அம்மா சம்மந்தியம்மா இருங்க நானும் வர்றன். 

சரிப்பா அப்ப நாங்க ஆட்டோவுல போறோம். 

சரிம்மா. 

அதுயென்ன எல்லாரையும் அம்மா அம்மாங்கற. 

புன்னகைத்தபடியே பழகிடுச்சிம்மா என்றதும் காலேஜ் பொண்ணுங்களயும் அம்மான்னு கூப்பிட்டுடாத என்றார் சிரித்தபடியே. நீ வந்த நாள்ளயிருந்து நான் சிரிச்சி பாக்கவேயில்லப்ப. இன்னைக்கு தான் நீ சிரிக்கறதையே பாக்கறன் என்றவர் போய்ட்டு வர்றோம்ப்பா என்றபடி படியில் இறங்கினர்கள். நான் கவிதாவை தேடி ஹாலுக்கு சென்றபோது அங்கேயில்லை. கிச்சனிலும்மில்லை. எங்க போயிருப்பா என எண்ணியபடி ஷோபாவில் அமர்ந்து யோசிக்கும்போதே பாத்ரூம்மில் இருந்து வெளியே வந்தாள். 

என்னைப்பார்த்து நின்றவளிடம், தப்பாதான் பேசிட்டன் ஸாரி. 

………………..

ஸாரி ஸாரின்னு ஆயிரம் முறை கேட்கறன் போதும்மா என சொல்லியும் தலையை குனிந்தபடி அமைதியாக நின்றிருந்தாள், எழுந்து அவளின் அருகே சென்று ஏய் ஏதோ கோபத்தல பேசிட்டன். அதப்போய் பெருசா எடுத்துக்கிட்டு இப்ப நீ மன்னிக்கறதுக்கு நான் என்ன பண்ணட்டும் சொல்லு. 

அப்போதும் அமைதியாக இருந்தாள். 

வேணூம்ன்னா ஒரு முத்தம் தரட்டுமா என மெல்லிய குரலில் கேட்டதும் 

தலையை தூக்கி முறைத்தவள் உள்ளயிருக்கறவ வெளியில வந்து செருப்பால அடிப்பா அதயும் வாங்கிக்க. 

ஓ…… உள்ளத்தான் இருக்கா என கேட்டதும் அமைதியானாள். 

அன்றிரவு பிரியாவின் அப்பாவந்தார். மறுநாள் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு நான், கவிதா, அவளின் அப்பா-அம்மா என நான்கு பேரும் கிளம்பி ஊர் வந்து சேர்ந்தோம். நான் நேராக வீட்டுக்கு வந்ததும் அம்மாதான், எப்படிடா இருக்கு அந்த பொண்ணு என கேட்டார். நல்லாயிருக்காங்கம்மா. 

ஜான் போன் பண்ணியிருந்தான். நீ ஊருக்கு வந்ததும் போன் பண்ண சொன்னான் என்றார். 

அவன் வீட்டுக்கு போன் செய்ததும். அவன் தான் போனை எடுத்தான். என்ன மாச்சான் பெங்களுரூ போயிருந்தியாம். எங்கிட்ட கூட எதுவும் சொல்லல. என்ன உன் ஆளோட ஜாலியா?. 

அதையேன் கேட்கற. அங்கப்போயும் சண்டை தான் வந்தது. 

அதுங்கிட்டயும் சண்டை தானடா என கேட்டவன். மச்சான் சென்னையில ஒரு கம்பெனியில அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்ல நமக்கு வேலை ஓ.கே ஆகியிருக்கு. பேசிக் சேலரி 8 தவுசன். தனியா ரூம் தந்துடறாங்களாம். சாப்பாடு மட்டும் நாம வெளியில சாப்ட்டுக்கனும்மாம். 

சென்னைக்கா?. 

என்ன சென்னைக்கான்னு கேட்கற. சென்னை தான். உங்காளை எவனும் கொத்திக்கிட்டு போகமாட்டான். மூடிக்கிட்டு வா. 2 வருஷத்துல வேலூர்ல ஒரு ஆபிஸ் வைக்க ஐடியா இருக்காம். அப்ப நம்மள அங்க மாத்திடறம்ன்னு சொன்னாங்கன்னு அப்பா சொன்னாரு. உடனே வேலையில ஜாயின் பண்ணிக்க சொல்லியிருக்காங்க.  

சர்டிப்கெட் ஏதாவது தரனும்மா?. 

இல்லடா. ரெஸ்யும் கேட்டாங்க. உனக்கும் சேர்த்து நானே டைப் பண்ணி மெயில் பண்ணிட்டன். அங்கயிருக்கறவர் அப்பா பிரண்ட்டுங்கறதால அவுங்க அதப்பாத்தே ஓ.கே பண்ணிட்டாங்க. வேலையில வந்து ஜாயிண் பண்ணிக்கச்சொல்லிட்டாங்க. 

சரிடா. வர்ற வெள்ளிக்கிழமை போய் ஜாயின் பண்ணிக்கலாமா. 

நீ ஓ.கேன்னா. எனக்கும் ஓ.கே. 

சரி. நான் நாளைக்கு வீட்டுக்கு வர்றன். நீ அப்பாக்கிட்ட ஓ.கேன்னு சொல்லிடு எனச்சொல்லிவிட்டு போனை வைத்தேன். 

மறுநாள் ஜான் வீட்டுக்கு போனபோது வா மச்சான் வெளியில போகலாம் என்றபடி ஃபைக் எடுத்துக்கொண்டு வெளியே அழைத்து வந்தான். அவனிடம் பெங்களுரூவில் நடந்த அத்தனையும் ஒப்பித்தேன். அந்த ரொமான்ஸ் தவிர. 

அப்பறம் என்ன அவுங்கம்மா ஓ.கே சொல்லிட்டாங்கயில்ல. விடு பாத்துக்கலாம் என்றான். 

வீட்டுக்கு வந்து அப்பா அம்மாவிடம் சென்னையில வேலை கிடைச்சியிருக்கு என்றதும் அம்மா தான் என்னடா இவ்ளோ தூரத்தலப்போய் தனியா தங்கியிருக்க போறியாடா என்றார் அக்கறையோடு. 

ஏற்கனவே ஹாஸ்டல்ல இருந்தது தானே அதனால ஒன்னும் பிரச்சனையில்லம்மா. 

ஏய் வெளியில போய் நாலு விஷயம் தெரிஞ்சிக்கிட்டும் விடுடீ என்றார் அப்பா. 

ப்ரியாவுக்கு போன் செய்து சொன்னபோது, ஏய் சந்தோஷம்பா. அங்கபோய் யார்க்கிட்டயும் கோபப்படாத, ஒழுங்கா வேலைய மட்டும் பாரு .

கவிதாவுக்கு போன் செய்து சொன்னபோது அப்பயென்ன அடிக்கடி சந்திக்க முடியாதா?.

வீக் என்ட் வந்துடுவன். ஞாயிற்றுக்கிழமை நாம சந்திக்கலாம். போன் தான் இருக்கே அடிக்கடி பண்றன், இடையில வேணும்ன்னா வந்துட்டு போறான் என்றதும் சமாதானமானால். வீட்ல சொல்லிடு எனச்சொல்லிவிட்டு போனை வைத்தேன். 

சென்னை சென்று நானும், ஜானும் வேலையில் சேர்ந்தோம். வேலை ஒன்றும் பெரியதாக இல்லை என்றாலும், மார்ச் மாதம் வந்தால் ஒரே தலைவலி என்றார்கள் அங்கிருந்த மற்றவர்கள். தேவி ஒருமுறை போன் செய்து அவனை ஒழுங்கா பாத்துக்கு என்றாள். எங்கு இருவருமே வாரத்தில் 2 நாள் சரக்கும், சைட்டிஸ்சுமாக நாட்கள் ஓடியது. வாரம் தோறும் ஊருக்கு வந்து போய்க்கொண்டுயிருந்தோம். அப்பா அம்மாக்கூட ஒருமுறை சென்னை வந்து தங்கி இரண்டு நாள் சென்னையை சுற்றிபார்த்துவிட்டு போனார்கள். ப்ரியாவுக்கும், கவிதாவுக்கும் அடிக்கடி போன் செய்து போசிக்கொண்டு இருந்தோம். நாட்கள் போனதே தெரியவில்லை. ஒருநாள் இது ஒன்பதாவது மாசம் சீமந்தம் என ப்ரியா சொல்ல ஆச்சர்யமானது. ப்ரியாவின் கணவர் வந்துடுங்க பாஸ் என அழைப்பு விடுத்தார். 

லீவு இருக்கான்னு தெரியல பாஸ் முடிஞ்சா வர்றன். சீமந்தத்துக்கு போகமுடியவில்லை. ப்ரியாவை ஊருக்கு அழைத்து வந்திருப்பதாக கவிதா தான் போன் செய்து சொன்னால். ஊருக்கு வரும்போது வீட்டுக்கு வர்றன் என்றேன். அந்த வாரம் ஊருக்கு போனபோது, வேலைக்கு போக ஆரம்பிச்சதும் சார்க்கு எங்கக்கிட்ட பேச நேரமேயில்லயா?.

அப்படியெல்லாம் இல்ல என பதில் தந்து பேசிவிட்டு வந்திருந்தேன். குழந்தை பிறந்த இரண்டாவது மாதம் கவிதா போன் செய்து உன்ன அக்கா வீட்டுக்கு வரச்சொல்லுச்சி. 

எதுக்கு. 

தெரியல. எதுவும் சொல்லல. 

சரி வர்றன். 

அந்த வாரம் வீட்டுக்கு போனபோது, எப்போதும் என்னை கண்டால் ப்ரியா முகத்தில் வரும் அந்த மலர்ச்சியில்லை. கவிதாவின் முகம் கோபத்தில் இருந்தது. ஏதோ நடந்திருக்கு என மனதில் எண்ணியபடி ப்ரியாவிடம் எப்படி மேடம் இருக்கிங்க. என்ன விஷயம் வர்றச்சொன்னியாம். 

இனிமே, கவிதாவோட தனியாவோ, வெளியில சந்திக்கறத விட்டுடு. 

புரியாமல் ஏன். 

பாக்காதன்ன பாக்காதா. 

அதான் எதனாலன்னு கேட்கறன். 

காரணம் சொல்ல வேண்டியதில்ல. 

கவிதாவுக்கு மாப்பிள்ளை பாக்கறாங்க என ப்ரியா சொன்னபோது உச்சகட்ட அதிர்ச்சியானது. 

கவிதா கோபமாகி யாரை கேட்டு மாப்பிள்ளை பாக்கறிங்க. நானும் அவரும். காதலிக்கறது எல்லாருக்கும் தெரியும்மில்ல. அப்பறம் என்ன மாப்பிள்ளை பாக்கறது. 

நீ வாயை மூடூடீ. 

இதுக்கு தான் அவரை வரச்சொன்னியா. இங்கப்பார் எந்த காலத்திலயும் நீங்க நினைக்கறது எதுவும் நடக்காது. நான் அவரைத்தான் கல்யாணம் செய்துக்குவன். 

செருப்பு பிஞ்சிடும் வாயை மூடூடீ. 

நீ மிரட்டறதுக்கு நான் ஒன்னும் உன் வீட்டுக்காரர்யில்ல. என் வாழ்க்கைய எப்படி பாத்துக்கனம்ன்னு எனக்கு தெரியும். இதல நீ தலையிடாத. 

நான் அதிர்ச்சியில் இருந்து மீண்டு நீ ஒரு நிமிஷம் சும்மாயிரு கவி. நாங்க காதலிக்கறது எல்லாருக்கும் தெரியும். உங்க அம்மாவும் ஏத்துக்கிட்டாங்க. அப்பறம் என்ன திடீர்ன்னு வேற மாப்பிள்ளை பாக்கறிங்க. உங்க அம்மாவும் - அப்பாவும் எங்க நான் பேசறன். 

இங்கப்பார், நீ அது சொல்றத கேட்ட நடக்கறதே வேற. யார் எதிர்த்தாலும் நம்ம கல்யாணம் நடந்தே ஆகனும். பிரிக்க நினைச்சாங்க அவ்ளோ தான் என அழுதபடி ரூம்க்குள் போனால் கவிதா. 

ப்ரியா என்னிடம், இவ கல்யாணத்த பொருத்தவரை நான் எடுக்கறது தான் முடிவு. அதனால இனிமே நீ அவளை பாக்க வர்றாத. 

காரணம் தெரியனும். 

உங்கிட்ட காரணம் சொல்ல வேண்டியதில்ல. 

காரணம் தெரியாம நான் அவளை கைவிடப்போறதில்ல. 

நான் சொல்றத நீ கேளு. 

இங்கப்பாரு. இந்த உலகத்தல நீ எனக்கு ரொம்ப முக்கியம். நீ சொல்றத நான் கேட்கறன். உனக்கு என்ன வேணும் கேளு. செய்யறன். அதுக்காக கவிதாவ மறக்கச்சொல்லாத. அது மட்டும் முடியாது.

அமைதியாக இருந்தவளிடம் நான் புறப்படறன்.  

அவளை விட்டு விலகறன்னா மட்டும் என்னை வந்து பாரு, என்கிட்ட பேசு இல்லன்னா பேசாத. 

அதிர்ச்சியாகி ஒரு நிமிடம் அவளை பார்த்தபடியே நின்றிருந்தேன். கடைசியாக இந்த வார்த்தைய நினைச்சி நீ ப்யூச்சர்ல பீல் பண்ணுவ. 

தொடரும்.................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக