நாகரீகம் என்ற பெயரில் எங்களது சுதந்திரத்தில் அரசாங்கம் தலையிடுகிறது. தனது அதிகாரத்தை எங்கள் மீது காட்டுகிறது என சில ஆசிரியர் சங்கங்கள் போர்கொடி தூக்கியுள்ளன. எதனால் இத்தனை கொதிப்பு?. ஆசிரியைகள் புடவை கட்டிக்கொண்டு தான் பள்ளிக்கு வரவேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு தான் இப்படி கொதிக்கின்றனர். பெண்ணியவாதிகள் பலர் எதிர்ப்பு குரல் கொடுக்கிறார்கள்.
ஒருவர் என்ன உடை உடுத்த வேண்டும் என்பது அவர்களின் உரிமை என்பதற்காக என்ன உடை வேண்டுமானாலும் உடுத்தலாமா?. விதவிதமான உடை உடுத்த அனைவருக்கும் ஆசை தான். அதற்காக எப்படி வேண்டுமானாலும் உடை உடுத்தலாமா ?.
ஆடை என்பது உடலை மறைக்கவே. உடல் அங்கங்களை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக அல்ல. ஆனால் இன்றைய 'நவீன நாகரீக' உலகில் உடலை மறைக்க ஆடை உடுத்துகிறோம் என்ற பெயரில் உடலின் வளர்ச்சியை மற்றவர்களுக்கு விருந்து வைக்கிறார்கள் ஆண்களும் - பெண்களும்.
நம் வீட்டில் எப்படி வேண்டுமானாலும் உடை உடுத்தலாம். சாலைக்கு வரும்போது கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்கிற சிறு எண்ணம் கூட இங்கு யாருக்கும்மில்லை. மற்றவர்கள் தான் அப்படி செய்கிறார்கள் என்றால் சமூகத்தில் பெறுப்பாக இருக்ககூடிய சிறுபிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் எங்களுக்கு ஆடை உடுத்துவதில் சுதந்திரம் வேண்டும் என கேட்பது எந்த விதத்தில் நியாயம். பிள்ளைகளின் ரோல் மாடலான ஆசிரியர்கள் ஆடை உடுத்துவது இப்படித்தான் என கற்று தந்து அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க வேண்டும் என்கிறிர்கள் போல.
15 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். மாணவ சமூதாயத்துக்கு எது நல்லது, எது தவறு என கற்று தந்தார்கள். பிள்ளைகளை தங்கள் பிள்ளைகள் போல் பர்த்துக்கொண்டார்கள். படிக்கவில்லை என்றால் அடித்து உதைத்தப்பார்கள். அதே மாணவன் நின்றுவிட்டால் வீட்டுக்கே போய் சண்டை போட்டு பள்ளிக்கு அழைத்து வருவார்கள் பெரும்பாலான ஆசிரியர்கள்.
நான் உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டுயிருந்த சமயம், எங்களுக்கு ஆங்கில ஆசிரியராக ஒரு பெண்மணி இருந்தார். பள்ளியில் எந்த மாணவ-மாணவி தப்பு செய்தாலும் மற்ற ஆசிரியர்கள் அவரிடம் தான் அனுப்பி வைப்பார்கள். தப்பு என்றால் தயங்கவே மாட்டார் கம்பு உடையும் அளவுக்கு அடிப்பார். மற்றவர்கள் முன் நாம் கண்ணியமாக இருக்க வேண்டும் என வலியுறுத்துவார். ஒருநாள் மதியம் எட்டாம் வகுப்புக்கு பாடம் நடத்த வந்தார். அரை மணி நேரம் பாடம் எடுத்தவர் பின் படிங்கடா எனச்சொல்லிவிட்டு தன் இரண்டு கால்களை தூக்கி டேபிள் மேல் போட்டுக்கொண்டு தூங்க தொடங்கினார். அவர் வகுப்பில் இருந்தாலே அமைதியாக இருப்போம். ஆனால் அன்று மாணவிகள் மத்தியில் இருந்து சிரிப்பு மற்றும் கிசுகிசு சத்தம். எதனால் என பசங்களுக்குள் ஆர்வம் வந்து என்னவென்று ஆளாளுக்கு கேட்டபோது ஒரு பையன் சுட்டிக்காட்டினான். அதிர்ச்சியானது. ஒரு மாணவி எழுந்து போய் சொல்ல, அதிர்ச்சியாகி அதன்பின் அவர் பள்ளிக்கே வரவில்லை. சில வாரங்களில் டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு வேறு பள்ளிக்கு போய்விட்டார். அவர் சக ஆசிரியர்களிடம், நான் முன் மாதிரியா இருந்திருக்கனும், பசங்க முன்னாடி அநாகரீகமா இருந்துட்டன். இனி அவர்கள் என்னை எந்த பர்hவையில பார்ப்பாக , நானும் தான் அவர்கள் முன்னாடி எப்படி நிப்பன். நான் செய்தது தவறு என சொல்லியுள்ளார்.
ஆனால் இன்று பள்ளிகளில் தவறு செய்யும் ஆசிரியர், ஆசிரியைகள் பெருகிவிட்டார்கள். பிள்ளைகளை தங்களது இச்சையை தீர்த்துக்கொள்ள பயன்படுத்துகின்றனர். சமீப காலங்களில் நியமிக்கப்பட்டுள்ள இளம் வயது ஆசிரியர் – ஆசிரியைகளின் நடவடிக்கைகளை காணும் போது அருவருப்பும் ஆத்திரமும் வருகிறது.
சில வாரங்களுக்கு முன், நான் எப்போதும் சாப்பிடும் மெஸ்சில் சாப்பிட அமர்ந்திருந்தேன். நான்கு இளம் வயது இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். பேச்சின் போது தான் அவர்கள் ஆசிரியர்கள் என அறியமுடிந்தது. எட்டாவதுக்கு பாடம் எடுக்க நேத்து போயிருந்தம்ப்பா. அதான் அந்த கும்முன்னு ஒரு பொண்ணுயிருக்கே அது வந்து உங்க டிரஸ் நல்லாயிருக்குன்னு பேசுச்சி. நானும் கை புடிச்சி பேசனன் என்றான். வேறு இரு ஆசிரியர்கள் எங்க ஸ்கூல்ல மூனு, நாலு இருக்குங்க கவுக்க நானும் என்னன்னவோ பண்றன் அன்னைக்கு சென்ட் போட்டுக்கு போனன். வாசைன தூக்குச்சி எதிர்பாத்த மாதிரியே ஒரு பொண்ணு வந்து ஸ்டாப் ரூம்ல இருந்த எங்கிட்ட வந்து சூப்பரா இருக்கிங்க சார்ன்னு சொல்லிட்டு, என்ன சென்ட் போட்டுயிருக்கிங்கன்னு கேட்டுக்கிட்டு போச்சி என்றான். அவன்களை எழுந்து செருப்பால் அடிக்க வேண்டும் போல்யிருந்தது.
இளம் வயதில் படித்தவுடனே வாத்தியார் வேலை தந்தது முதல் தவறு. இப்படி நடந்துக்கொள்ளத்தான் ஆசிரியர் பயிற்சியில் கற்று தந்தார்களா?. குறைந்த பட்ச ஆடை கட்டுப்பாடு கூடயில்லை என்றால் இவர்கள் எப்படி நடந்துக்கொள்வார்கள் என யோசித்து பார்த்தால் அதிர்ச்சியாக உள்ளது.
ஆடை உடுத்துவதில் கட்டுப்பாடு விதிக்கிறார்கள் என உரிமை பேசுபவர்கள் தாம் பேசுவது முறைதானா என கொஞ்சம் யோசித்து பாருங்கள். புடவையில் அசிங்கமாக உள்ளது என்கிறிர்கள். அப்படியெனில் மற்ற உடை நாகரீகமாகவா உள்ளது?.
புடவையை தவிர நாகரீக உடை வேறுயேது. விதவிதமாக உடை உடுத்த விரும்புபவர்கள் தயவு செய்து பள்ளி நேரம் முடிந்து உங்களது வீடுகளில், விசேஷங்களுக்கு செல்லும் போது உங்கள் விருப்பப்படி உடை உடுத்திக்கொண்டு சொன்று உங்களது ஆசையை தீர்த்துக்கொள்ளுங்கள் தயவு செய்து சீரழிந்து வரும் இளம் சமுதாயத்தின் முன் நீங்களும் போய் மேலும் சீரழிக்காதீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக