ஜீலை 1ந்தேதி முதல் 10 லட்சத்துக்கு மேல் சம்பளம் பெறும் சினிமா, தொலைக்காட்சி நடிகர்-நடிகைகள் அனைவரும் 12.3 சதவிதம் சேவைவரியை கண்டிப்பாக கட்டவேண்டும் என மைய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு தான் இந்தியாவின் சினிமா-சின்னத்திரை உலகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
கலைத்துறை மீது சேவை வரி விதிப்பால், தயாரிப்பு செலவு அதிகமாகும், இதனால் சினிமா தொழில் முடங்கும் என்கிறார்கள் தயாரிப்பாளார்கள். நடிகர் – நடிகைகள் வாங்கும் சம்பளங்களுக்கு சேவை வரி விதிப்பதால் அவர்களின் உழைப்பை அரசு உறிஞ்சுகிறது என டுடிவிட்டரில் கருத்து கூறியுள்ளார் நடிகை சோனம்கபூர்.
சினிமாத்துறையில் உள்ளவர்கள் மக்களை காக்க வந்த ரட்சகர்களா என்ன சேவை வரியில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க. 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் கூப்பன் வாங்கும் ஒரு கூலிக்காரனிடமே சேவை வரி வசூலிக்கப்படுகிறது. அப்படியிருக்க பொழுது போக்குக்காக படம் எடுத்து அதனை பார்க்க 100 ரூபாய், 200 ரூபாய்க்கு டிக்கட் விற்கும் சினிமாத்துறையில் உள்ளவர்கள் சேவை வரி கட்டகூடாதா என்ன.
நடிகர் – நடிகைகளால் இந்தியாவில் ஏதாவது மாற்றம் நடந்துள்ளதா, புரட்சி நடந்துள்ளதா, மக்களின் பிரச்சனைகள் தீர்ந்துள்ளதா, லஞ்ச லாவண்யம் குறைந்துள்ளதா, அரசியல்வாதிகள் திருந்தியுள்ளார்களா? என்ன நடந்துள்ளது இவர்களுக்கு சலுகை காட்ட.
இன்றைய இந்திய கலாச்சாரமும், பண்பாடும் சீரழிந்ததுக்கு காரணம் இந்த பச்சோந்திகள் தான். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கண்ட கஸ்மாலங்களை நடிப்பு என்ற பெயரில் ஆபாசங்களையும், வன்முறைகளையும் இளைய தலைமுறையினரிடம் விதைத்ததை தவிர இந்த சினிமா உலகம் என்ன செய்துள்ளது.
அதோடு, படம் எடுத்து ஓசியிலா மக்களுக்கு காட்டுகிறார்கள். 10 ரூபாய்க்கு விற்க வேண்டிய டிக்கட்டை 100 ரூபாய்க்கு விற்பனை செய்து அரசாங்கத்தை, பார்வையாளனை ஏமாற்றி கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.
திரையில் தான் ஊழல்களுக்கு எதிராக கொடி பிடிப்பார்கள். ஆனால் நிஜத்தில் நடிகர், நடிகைகள், டெக்னிஷியன்கள் அந்த பாடத்துக்கு வாங்கிய சம்பளத்தில் பாதி பணத்தை கறுப்பாக தான் வாங்குகிறார்கள். ஊழலை எதிர்ப்பதாக காட்டிக்கொள்ளும் இவர்கள் நிஜத்தில் அரசாங்கத்துக்கு கட்ட வேண்டிய வரியை கோடிகளில் ஏமாற்றுகிறார்கள். அதோடு, யார் ஆளும்கட்சியாக இருக்கிறார்களோ அவர்களுக்கு ஜால்ரா அடித்து தங்களது பணத்தை பாதுகாத்துக்கொள்ளும் பச்சோந்திகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு வேண்டுமாம். அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை தொடர்ந்து அதிகளவில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் இந்த கலைத்துறையினர் தான்.
ஒரே வார்த்தையில் சினிமா உலகத்தை பற்றி குறிப்பிட வேண்டும் என்றால் மக்களை சுரண்டி பிழைக்கும் பச்சோந்திகள் இவர்கள். இவர்களுக்கு சேவை வரியில் இருந்து மட்டும் விலக்கு தரவேகூடாது.
ராஜ்பிரியன்,
பதிலளிநீக்குஇப்படிலாம் பேசப்படாது அபச்சாரம், சினிமா இல்லைனா மனுஷனால வாழ முடியுமா, essential service அதுக்கு போய் சேவை வரிப்போடலாமா? வருங்கால முதல்வர்களை அடையாளம் காட்ட சினிமாவ விட்டா வேற என்ன இருக்கு. வருமான வரி விலக்கு கூட கேட்பாங்க கொடுக்கணும் :-))
இப்படிலாம் சினிமாக்காரங்களை தாக்கினா ,வலைப்பதிவில பிரபலம் ஆக முடியாது, வாரத்துக்கு நாலு விமர்சனம் போட்டு பிரபலம் ஆகுற வழியப்பாருங்க சார்.
இப்போ ஒரு சினிமா கும்பலே ஓடி வந்து உங்களை கும்ம போவுது :-))
இதுல இன்னொரு கொடுமை என்னனா ஹோட்டலில் 2 இட்லி சாப்பிட்டா கூட சேவை வரி, மெடிக்கலில் பில் போட்டு மருந்து வாங்கினா சேவை வரினு எல்லாத்துக்கும் கேட்கிறாங்க, சினிமாவுக்குலாம் போடக்கூடாது சொல்றாங்க ,என்ன கொடுமை சார் இது :-))
பதிலளிநீக்கு