2017 வரை மின்வெட்டு என்கிறார்கள் மின்வாரிய பொறியாளர்கள். இனி வரும் மாதங்களில் 8 மணி நேரமாக இருக்கும் மின்வெட்டை இன்னும் அதிகப்படுத்த முடிவு செய்து ‘பொருத்துக்கொள்க’ என அறிவித்துவிட்டது மின்சார வாரியம். இனி 8 மணி நேரம் என்பது 12 மணி நேரமாகும் அதற்கு மேல் கூட ஆகலாம். முன்கூட்டியே அறிவித்ததற்க்கு வாரியத்தை பாராட்ட வேண்டும். காற்று அடிக்கவில்லை அதனால் காற்றாலை மின்சாரம் தடைப்பட்டுவிட்டது, அதேபோல் தென்மேற்கு பருவமழை தாமதமாகிறது இதனால் நீர் மின்சாரம் தயாரிக்க முடியவில்லை அதனாலே இந்தப்பற்றாக்குறை என்கிறார்கள். மழை வரவில்லை ஒத்துக்கொள்கிறோம். காற்றாலை காத்தாடிகள் எதனால் சுற்றாமல் நின்றது என கேட்டால் காற்று அடிக்கலன்னு சொல்றோம்மில்ல நம்புங்க என்கிறார்கள்.
ஆடி காத்துல அம்மியும் நகரும்ன்னு எங்க அப்பச்சிங்க எழுதிவச்சியிருக்காங்க. அது உண்மையாவும் இருக்கு அப்படியிருக்க காற்று அடிக்கலன்னு சொல்றிங்க. அதோட ஆசியாவுலயே அதிகமா காற்று வீசும் பகுதி கன்னியாகுமரி, நாகர்கோயில் பகுதிதான்னு இந்த விஞ்ஞானிங்கயெல்லாம் அறிவிச்சாங்களே அதெல்லாம் பொய்யாங்க?.
காற்று அடிக்கவில்லை என்பது உண்மையல்ல. உண்மையான காரணம், தனியார் முதலாளிகளுக்கும் அரசுக்கும் நடக்கும் பண யுத்தம். காற்றாலை மின்சாரம், நிலக்கரி மின்சாரம் போன்றவற்றை அரசாங்கம் மட்டுமல்ல தனியார்களும் உற்பத்தி செய்து நமக்கு விற்பனை செய்கின்றனர். அவர்களிடம்மிருந்து வாங்கி தான் நமக்கு அரசாங்கம் சப்ளை செய்கிறது. தனியாரிடம்மிருந்து 1 யூனிட் 9 ரூபாய் வரை வாங்கி நமக்கு அரசாங்கம் தருகிறார்கள். (இதல எத்தனை பர்சன்ட் ஆள்றவங்களுக்கு கேட்காதிங்க எனக்கு தெரியாது.) இதனால் 95களுக்கு பின் டி.என்.இ.பி கையிருப்பு குறைய தொடங்கி கடன் மேல் கடன் இ.பியின் சொத்துக்கள் விற்பனைக்கும், அடமானத்துக்கும் சென்றன. தற்போது கடன்கார அமைப்பாக உள்ள இ.பி தனியார் முதலாளிகளுக்கு தரவேண்டிய தொகையாக நூற்றுக்கணக்கான கோடியை பாக்கி வைத்துள்ளது.
இதனால் அடிக்கடி தனியார் முதலாளிகள் பணத்தை தந்தா தான் மின் உற்பத்தி எனச்சொல்லி ‘ஸ்ட்ரைக்’ செய்கின்றனர். இதனால் தான் பற்றாக்குறை. தாய் உள்ளம் கொண்டவரின் ஆட்சியில் எந்த அதிகாரியும் முயற்சி எடுத்து அதை சரிச்செய்ய முயல்வதில்லை. ( செஞ்சிட்டாலம்………….. )
தற்போது தமிழ்நாட்டில் மின்விளக்கு எரிய வேண்டும்மா என்பதை அரசை விட தனியார் முதலாளிகள் தீர்மானிக்கும் நிலைக்கு போய்விட்டோம். இத்தனைக்கும் இந்த தனியார் காற்றாலை மற்றும் நிலக்கரி பவர் பாயின்ட் முதலாளிகள் தமிழகத்தில் தொழில் தொடங்க மானியம் என்ற பெயரில் பலப்பல சலுகை தந்தது அரசாங்கம். அவர்கள் தான் இப்போது அல்வா தருகிறார்கள். சில மாதங்களுக்கு முன் 14 மணி நேரம் கரண்ட் கட் இருந்தபோது மதுரையில் உள்ள ஒரு நிறுவனம், தூத்துக்குடியில் உள்ள ஒரு நிறுவனம் பணம் கேட்டு ‘ஸ்ட்ரைக்’ செய்தது.
கடன் சொல்லி மின்சாரத்தை வாங்கியாயிற்று பிறகென்ன சொன்ன தேதியில் பணம் தருவதில்லை. அவன் கேட்க வரும்போதுயெல்லாம் அப்பறம் தர்றனே, அட விடுங்க அப்பறம் தர்றன் என வள்ளல் மனம் கொண்ட தங்கத்தாய் ஆட்சியில் சொல்வதால் இன்று போய் நாளை வா கதை எங்கிட்ட வேணாம் என நிறுத்திவிட்டார்கள். அதன்பின் அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி பாதி பணத்தை தந்து உற்பத்தியை தொடங்க வைத்தார்கள். அரசாங்கமும், தனியார்களுக்கு சரியான நேரத்தில் பணம் தருவதில்லை. காரணம் நிதி பற்றாக்குறை.
ஏன் மாநில அரசுகளே மின்உற்பத்தியில் ஈடுபடக்கூடாதா ?.
மத்தியரசு 1990ல் மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையின் வாயிலாக, எந்த மாநிலமும் புதிய மின்உற்பத்தி யூனிட்களை அமைக்கக்கூடாது. இருக்கும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு லேட்டஸ்ட் உபகரணங்கள் எதுவும் வாங்ககூடாது. தனியார் முதலாளிகள் மின் உற்பத்தி செய்வார்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும், அவர்களிடம்மிருந்து மின்சாரத்தை வாங்கி தனியார் முதலீடுகளை ஊக்கவியுங்கள் என கூறிவிட்டது. (என்னவொரு பாசக்கார பயபுள்ளைங்க.)
இதனால் புதிய பிளான்ட்கள் எதையும் மாநில அரசுகளால் அமைக்க முடியவில்லை. கடந்த ஆட்சியில், அதற்கு முந்தைய ஆட்சியில் மத்தியரசிடம் கெஞ்சி கூத்தாடி 3 பிளான்ட்களை அமைக்க அனுமதி பெற்ற கட்டி முடித்துள்ளார்கள். அதில் இருந்து வரும் மின்சாரம் பற்றவில்லை. ( டூ பாத்ரூம் கூட குளு குளுன்னு இருக்கனம்ன்னு நினைக்கறான்.)
வடகிழக்கு மாநிலங்களில் அதிகமாக மின் உற்பத்தி நடக்கிறது. அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகம் கொண்டுவர ஒரு யூனிட்க்கு அதிகபட்சம் 1 ரூபாய் 50 பைசா தான் செலவாகும் என பொறியார்கள் சொன்னதின் அடிப்படையில் 2001ல், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை கொண்டு வர மத்தியரசின் மூலம் தமிழகரசு திட்டமிட்டது. அதற்காக டெண்டர் விட்டது. மின்கம்பங்கள் அமைக்கும் பணிக்கான அந்த டெண்டரை அம்பானி குரூப் எடுத்தது. டெண்டரை எடுத்த புண்ணியவான், எனக்கு தொகை பத்தாது என அடுத்த மூன்றாவது மாதம் உச்சநீதிமன்றத்தை அணுகி இன்னும் கூடுதலா வேணும் என கேட்டு மனு போட்டான்.
நாங்க சொன்ன தொகையை ஒத்துக்கிட்டு நீ டெண்டரை எடுத்துட்டு இப்ப வந்து கூட்டி குடு (அந்த கூட்டு கொடுயில்லைங்க) ன்னு கேட்டா எப்படி தரமுடியும். அதெல்லாம் தரமுடியாது என்றது. (அப்பவும் பாருங்க டெண்டரை கேன்சல் செய்து, வேற டெண்டர் விடல. அரசாங்கம் நினைத்தால் டெண்டரை ரத்து செய்யலாம்). வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஓர் ஆண்டாக நிலுவையில் உள்ளது. ( உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு நிறைய வேலையாம் ………………………… என்னது கேட்கல …………. என்ன வேலைன்னு கேட்கறிங்களா?........................ மணியாட்டற வேலை …………. சாமிக்குப்பா.)
இதனால் வடகிழக்கு மாநில மின்சாரத்துக்கும் வழியில்லாமல் உள்ளது. மோடி என்கிற கேடி அரசாங்கம் தரும் மின்சாரம், நெய்வேலி மின்சாரம் போன்ற சிலதே தற்போது இருட்டில் இருந்து நம்மை காப்பாற்றுகிறது.
மத்தியரசுக்கும், மாநில அரசுகளும் வருங்காலத்தை கணக்கில் கொண்டு திட்டங்கள் தீட்டுவதேயில்லை என்பது இந்த மின்சாரம் விஷயத்தில் உறுதியாக அறியமுடிகிறது. ஆண்டுக்கு ஆண்டு மக்களுக்கான மின் தேவை அதிகமாகிக்கொண்டே செல்கிறது. அதோடு 90களுக்கு பின் பன்னாட்டு கம்பெனிகள் பல இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் தொழில் தொடங்கின. அவர்களுக்கு தடையில்லா மின்சாரம், அதுவும் சலுகை விலையில் தருவதாக ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இப்படி செய்யுமபோது இதனை கணக்கிட்டு மின் உற்பத்தியில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், மாநில அரசுகளை மின் உற்பத்தியில் ஈடுபடாதே எனச்சொன்னதால் அப்பாடா என இவர்களும் விட்டுவிட்டார்கள். இப்போது இருட்டில் தவிக்கும் போது மக்களிடம் திட்டு வாங்குவது மாநிலத்தை ஆளும் கட்சிகள் தான்.
சரி விடுங்க நாம குறைப்பட்டு என்னப்பண்றத்து செவிடம் காதுல ஊதல சங்கு தான். உங்களுக்கு ஒரு விஷயம் நீங்க முடிஞ்ச கேட்டுக்கங்க. 2013 முதல் மின்வெட்டின் நேரம் அநேகமாக 15 மணி நேரம் இருக்கும் என்கிறார்கள் மின்சார வாரியத்தில் உள்ள பொறியாளர்கள்.
நிறைய விஷயங்கள் இப்படித்தான் தெரியாமலேயே போய் விடுகின்றன . அப்ப எந்த ஆட்சி வந்தாலும் இந்த கதிதானா ? இது தெரியாம இவரு போயி அவரு வந்தா கிழிச்சுப்புடுவாருன்னுல நெனச்சுக்கிட்டு இருக்கோம் .
பதிலளிநீக்குநிறைய விஷயங்கள் இப்படித்தான் தெரியாமலேயே போய் விடுகின்றன . அப்ப எந்த ஆட்சி வந்தாலும் இந்த கதிதானா ? இது தெரியாம இவரு போயி அவரு வந்தா கிழிச்சுப்புடுவாருன்னுல நெனச்சுக்கிட்டு இருக்கோம் .
பதிலளிநீக்கு