உங்கக்கா என்னை அசிங்கப்படுத்திட்டா. பணக்காரின்னு பந்தா பண்றாலா. பெங்களுரூ வந்துட்டா பெரிய இவளா?, அவ வீட்டுக்கு வந்துட்டன்னு நடு வீட்ல நிக்கவச்சி கேள்வி கேட்கறா என்ன நினைச்சிக்கிட்டு இருக்கறா என்னைப்பத்தி? அவளை நான் சும்மா விடமாட்டன்? நான் இப்பவே ஊருக்கு போறன் அவ ஊருக்கு வரட்டும் நான் யாருன்னு காட்டறன்னு சொல்லி என்னை திட்டனியாமே. என்ன மனசுல பெரிய இதுன்னு நினைப்பா? ஊருக்கு வந்தா கிழிச்சிடுவியா நீ என கேட்க ப்ரியா பின்னால் கை கட்டிக்கொண்டு நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டுயிருந்தாள் கவிதா.
பதிலேதும் சொல்லாமல் டிபன் எடுத்து வைங்க பசிக்குது.
நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.
சும்மா கற்பனை பண்ணிக்கிட்டு ஏதாவது பேசாதிங்க.
நான் ஒன்னும் கற்பனை பண்ணல. இவக்கிட்ட தான் நீ திட்டியிருக்க.
இங்க பாருங்க மேடம். நான் வந்தது தப்பு தான் நான் ஊருக்கு போறன்னு சொன்னன். உங்கள திட்டல.
அப்ப அவ பொய் சொல்றாளா?.
அத நீங்க அங்கத்தான் கேட்கனும்.
அக்கா பொய் சொல்றாரு. விடாத கேளு.
வாய மூடிக்கிட்டு இருக்கியா. நீ தூண்டிவிடாத.
அவ பொய் சொல்லமாட்டா.
ஆமாம். உங்கிட்ட சொன்னதை விட ரொம்ப அதிகமாவே திட்டனன். திட்டனது மட்டும் தான் சொன்னாங்கள. பாத்ரூம் மேட்டர் எதுவும் சொல்லயா?.
உடனே பதறிய கவிதா அக்கா நீ போய் டிபன் எடுத்து வா. எனக்கும் பசிங்குது.
என்ன பாத்ரூம் மேட்டர் என ப்ரியா இழுக்கும்போதே.
இல்லக்கா பாத்ரூம்ல தண்ணீ வரலயேன்னு திட்டனாரு அவ்ளோ தான் என படப்படப்பாக பதில் சொன்னவள் நீ போய் டிபன் எடுத்தாக்கா என பிடித்து தள்ளினாள்.
கொஞ்சம் சந்தேகத்துடனே உள்ளே போக நாற்காலியில் அமர்ந்த என்னை நங்க்கென மண்டையில் கொட்டியபடியே மூஞ்சப்பாரு என்றாள் கவிதா. ப்ரியா டிபன் எடுத்து வந்து வைக்க நானும், கவிதாவும் சாப்பிட்டு விட்டு ஹாலில் வந்து அமர்ந்தேன். அக்காவும், தங்கையும் பின்னாடியே வந்தனர்.
ஸாரிப்பா உன்ன பாத்ததும் ஷாக்காயிட்டன். எங்க மாமியார் – மாமனார் கேட்;டா என்ன சொல்றது, என்ன சொல்வாங்களோன்னு பயந்து தான் எதுக்கு வந்தன்னு கேட்டன்.
நீ கேட்டதுல தப்புயில்ல. நான் வந்ததுல தான் தப்பு. நான் வரலன்னு தான் சொன்னன். உன் அருமை தங்கச்சி தான் விடாம இழுத்து வந்தாங்க.
நான் தான் ஸாரி கேட்கறன்யில்ல.
அத விடுங்க.
என்ன வாங்க, போங்கன்னு மரியாதை தூள் பறக்குது.
கல்யாணமாகிடுச்சே அதனால தான்.
கல்யாணமாகிட்டா ரொம்ப மரியாதை தரனம்ன்னு யார் சொன்னது. நீ எப்பவும் போலவே கூப்பிட்டு. நான் உன்னப்பத்தி அவர்க்கிட்ட சொல்லியிருக்கன். அவர் எதுவும் தப்பா எடுத்துக்கமாட்டாரு.
ம்.
என்ன ப்ரோகிராம் ?.
இன்னைக்கு நல்லா தூங்கனும். ஊர் சுத்தறதெல்லாம் நாளைக்கு தான்.
டிவியை ஆன் செய்துவிட்டு ரிமோட்டை கையில் தர ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டு அப்படியே ஊர் கதை பேசிக்கொண்டு இருந்தோம். ஆமாம், உன் வீட்டுக்காரரை திட்டனதும் ஆபிஸ்க்கு போறன்னு எஸ்கேப்பாகிட்டாரே எப்ப வருவாரு.
வந்துடுவாரு எனச்சொல்லும்போதே வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
வந்ததும் காபி கேட்பாரு என்றபடி கிச்சன்க்கு செல்ல கொஞ்ச நேரத்தில் மேலே வந்தவர். ஹாலில் இருந்த எங்களை ஓரக்கண்ணால் பார்த்தபடி அவரது ரூம்க்கு போக முயன்றார்.
எதிரே வந்த ப்ரியா ஏங்க வீட்டுக்கு வந்துயிருக்கவங்ககிட்ட நல்லாயிருக்கிங்களா அப்படின்னு கேட்டிங்களா? பாத்துட்டு நீங்க மாட்டுன்னு உள்ள போறிங்க, அவன் என்ன நினைப்பான் என கேட்டதும் அப்படியே அதிர்ச்சியில் நின்றார்.
ஏய் உன் மனசுல என்னத்தான் நினைச்சிக்கிட்டு இருக்கறா. தங்கச்சியும், அம்மாவும் வர்றாங்க வீட்லயே இருன்னு லீவு போடச்சொன்ன. வந்தவங்கக்கிட்ட பேசும்போதே திட்டன. ஏதுடா வம்புன்னு வெளியில போய்ட்டு வந்தவன்க்கிட்ட கண்டுக்காம பேறன்னு கேட்கற?.
அப்படியா கேட்டன்?.
ஏய் உலக நடிப்பு உன்னிது என்றவரின் பேச்சை காதில் வாங்கியபடியே கிச்சன் சென்று காபி டம்பளை தந்த ப்ரியாவிடம், அவுங்களுக்கு.
சாப்ட்டாங்க.
பிரச்சனை முடிஞ்சதா?.
என்ன பிரச்சனை. நீங்களா எதையாவது கற்பனை பண்ணிக்காதிங்க. அவுங்க ஒரு வாரம் இங்கத்தான் இருக்க போறாங்க. எங்கங்க போறதுன்னு ப்ளான் பண்ணுங்க.
பாஸ் பாத்திங்களா. பொண்ணு பாக்க வரும்போது ஊமச்சி மாதிரி இருந்தாங்க. இப்ப பேசி சமாளிக்க முடியல.
விடுங்க சார். கல்யாணமான ஆம்பளைங்க அடிமைதானே.
அடிமையா இருக்கற மாதிரி நடிக்கறதுன்னு சொல்லு என ப்ரியா சொல்ல கப்சிப்பென ஆனது. அடுத்த மூன்று நாள் தீம்பார்க், கார்டன் என பெங்களுரை ஒரு ரவுண்ட் வந்தோம். அடுத்ததாக இரண்டு நாள் ட்ரிப்பாக ஜோக்பால்ஸ்க்கு காரிலேயே பயணமானோம். நானும் அவரும் மாறி மாறி காரை ஓட்டிக்கொண்டு செல்லும் போது, என்ன பாஸ் நீங்களும் கவிதாவும் காதலிக்கறிங்களா என சடாரென கேட்டபோது ஒரு நிமிடம் தயங்கினோம்.
தப்பா எடுத்துக்காதிங்க. நீங்க இரண்டு பேரும் தனியா வரும்போதே லேசா புரிஞ்சது அதனால தான் கேட்டன்.
ம். காதலிக்கறோம். இரண்டு பேர் வீட்டுக்கும் தெரியாது. உங்க வீட்ல இருக்கறவங்களுக்கு மட்டும் தான் தெரியும். வேலைக்கு போனதுக்கப்பறம் தான் இரண்டு பேர் வீட்லயும் சொல்லனும்.
நான் கூட காதலிச்சிதான் கல்யாணம் பண்ணனும்ன்னு பாத்தன். நல்ல நல்ல பிகர்ங்க ரூட் விட்டதுங்க. நான் ஒன்ன செலக்ட் பண்ணலாம்ன்னு பாத்தப்ப வீட்ல பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. சரி கல்யாணத்துக்கப்பறம் மனைவிய காதலிக்கலாம்ன்னு பாத்தன். கல்யாணத்தப்ப தான் தெரிஞ்சது இது மொக்க பிகர், சுத்த நாட்டுப்புறம்ன்னு அப்பறம் எங்க காதல் பண்றத்து. சண்டை தான் போடவேண்டியதா இருக்கு.
இருக்கும் இருக்கும் என ப்ரியா லேசாக முறைக்க. சைலண்டானவர் உங்க லவ் மேட்டரை சொல்லுங்க சார் என கேட்டார்.
உங்க மச்சனிச்சி. கைல கிரிட்டிங் கார்ட வச்சிக்கிட்டு என் பின்னாடியே சுத்தி சுத்தி வந்தாங்க. அப்பறம் தான் போனா போகுதுன்னு ஓ.கே சொன்னன். லவ்வ ஓ.கே சொன்னதுக்கப்பறம் தான் தெரிஞ்சது லவ் பண்ற பொண்ணு இவுங்களோட தங்கச்சின்னு.
அப்பறம்.
முதல்லயே தெரிஞ்சியிருந்தா லவ்வ ஓ.கே பண்ணியிருக்கவே மாட்டன்.
ஏன்.
உங்க மனைவியப்பாத்தா காலேஜ்ஜே பயப்படும். அப்படின்னா எப்படிப்பட்ட ஆளுன்னு பாத்துக்குங்க. அவுங்களோட தங்கச்சியப்போய் எவன் காதலிப்பான். நான் தான் தெரியாம ஏமாந்துட்டன்.
நான் உன் பின்னாடி சுத்தனன்னா. உன் மூஞ்சிய கண்ணாடியில போய் பாரு யாரு யார் பின்னாடி சுத்தனாங்கன்னு தெரியும் என கவிதா பதிலடிக்க நக்கலும், நய்யான்டியுமாய் இரண்டு நாள் ட்ரிப் முடிந்து பெங்களுரூ திரும்பியபோது இரவு 8 மணியாகியிருந்தது.
ப்ரியாவின் அம்மா அவரது சம்மந்தியுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள். நாங்கள் உள்ளே நுழைந்ததும் எழுந்து நின்று எப்படி இருக்கிங்க மாப்ள என்றதும் ப்ரியாவின் வீட்டுக்காரர் நல்லாயிருக்கன் அத்தை என்றார்.
எப்ப வந்திங்க.
நேத்து சாயந்தரம் வந்துட்டன். உங்களை டிஸ்டப் பண்ண வேணாம்ன்னு தான் சொல்லல.
மாமா வரலியா ?.
கடையில வேலையிருக்கு நீ மட்டும் போய் வான்னாரு. அதனால நான் மட்டும் தான் வந்தன். இரும்மா வந்துடறோம் என்றபடி கணவரை தள்ளிக்கொண்டு ரூம்க்குள் சென்றார்.
என்னப்பா எப்படியிருக்கற.
நல்லாருக்கேம்மா. உங்க உடம்பு சரியாகிடுச்சா.
ம். சரியாகிடுச்சி. அதனால தான் ஊருக்கு வந்தன்.
சரி. ட்ரஸ் மாத்திக்கிட்டு வா. சாப்பிடுவிங்க என்றதும். நான்மேலே ரூம்க்கு சென்று துணியை மாத்திக்கொண்டு வந்தேன்.
அனைவரும் இரவு உணவை முடித்தபின் அவரவர் ரூம்க்கு சென்றோம். காலையில் நான் எழுந்தபோது ஒன்பதாகியிருந்தது. குளித்துவிட்டு கீழே வந்தபோது எதிரே வந்த கவிதா, விடிஞ்சது கூட தெரியாம தூங்கிக்கிட்டு இருக்கற.
கார்ல வந்த டயர்டு. அதிருக்கட்டும் என்ன வீடே அமைதியாயிருக்கு. யாரையும் காணோம்.
அம்மாவும், அக்காவும் கோயிலுக்கு போயிருக்காங்க. மாமா ஆபிஸ் போயாச்சி. அத்தை ஏதோ தெரிஞ்ச வீட்ல விசேஷம்ன்னு காலையிலயே போனாங்க.
அப்போ வீட்ல நீயும் நானும் மட்டும் தானா?.
ஆமாம். ஏன் கேட்கற.
இல்ல சும்மாத்தான் கேட்டன்.
கையையும், காலையும் வச்சிக்கிட்டு சும்மாயிருக்கனும் ஏதாவது சில்மிஷம் பண்ண அவ்ளோ தான் என கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்லிவிட்டு போனால்.
போடீ போ. எத்தனை நாளைக்குன்னு நானும் தான் பாக்கறன்.
தாலி கட்டற வரைக்கும்.
அப்ப இப்பவே கட்டிடறன்.
முதல்ல வேஷ்டிய ஒழுங்கா கட்டு அப்பறம் தாலி கட்டுவ.
நாங்க ஒழுங்கா தான் கட்டியிருக்கறோம். நீ போய் வேலையப்பாரு என்றபடி சோபாவில் அமர்ந்து டிவி ரிமோட்டை எடுத்து ஆன் செய்ய கேபிளில் படம் வரவில்லை. அமைதியாக டிவியவே பாத்துக்கொண்டு இருந்தேன்.
எங்க பேச்சு மூச்ச காணோம்.
இங்கத்தான் இருக்கன். சாப்பிடவா என்றதும் போய் அமர்ந்ததும் டியூப்லைட்ட கல்யாணம் பண்ணி என்ன பண்ணப்போறனோ என முனகிக்கொண்டே டேபிளில் இட்லி தட்டை கொண்டு வந்து வைத்துவிட்டு உள்ளே போனவளை இழுத்து பிடித்து கன்னத்தில் ஒரு முத்தமிட்டதும் ஷாக்காகி நின்றாள்.
சடாரென சுதகரித்துக்கொண்டு ச்சீ போ என பிடித்து தள்ளிவிட்டுவிட்டு கிச்சன்குள் சென்றவள் வெளியே வரவேயில்லை. அவசரப்பட்டுட்டோம் போல என எண்ணியபடி என்ன செய்யலாம் என யோசித்தபடி இட்லியிருக்கு. தொட்டுக்க எதயும் காணோம்.
டிபனும்மில்ல, ஒன்னும்மில்ல. இங்கயிருந்து முதல்ல எழுந்துப்போ.
கோபத்தலயிருக்கா. இவளை எப்படி சமாதானப்படுத்தறது என யோசித்தப்படி நானும் கிச்சன்க்குள் நுழைந்தேன். நான் உள்ளே நுழைவது அவளுக்கு தெரிந்திருந்தாலும் திரும்பாமல் நின்றாள். மெல்ல அவள் அருகே சென்று அவளை பின்பக்கமாக கட்டிப்பிடித்ததும் உதறினால்.
அவளை விடாமல் மேடத்துக்கு எம்மேல என்ன கோபம்.
நீ பண்ணதுக்கு கோபப்படாம என்ன செய்வாங்களாம் என்றபடி கையிலிருந்து நழுவ அவளால் முடிந்தவரை முயற்சித்தால்.
ஏய் காதல்ல முத்தம் கூட இல்லைன்னா எப்படி என்றபடி அவளை இறுக்கி பிடித்து அவள் கழுத்தில் ஒரு முத்தம் தந்ததும் அவள் திமிருவது அதிகமானது.
விடலன்னா கத்துவன்.
கத்தன உதடு புன்னாகிடும் என்றதும் அமைதியா இருந்தவள். மெல்ல திமிறுவதை நிறுத்தியவல் வீட்ல யாரையும் காணோம் தனியா இருக்கறவள கொஞ்சுவோம், இல்லன்னா சின்னதா ரொமான்ஸ் பண்ணி சின்னதா முத்தம் தருவோம் அப்படிங்கற எண்ணமேயில்லாம டிவி பாக்க உட்கார்ந்தா என்ன அர்த்தம்.
இல்ல நீ திட்டுவியோன்னு தான்.
சரியான லூசுடா நீ.
ஏய் என்ன டா போட்டு பேசற.
அப்படித்தான் பேசுவன்.
கொழுப்புடீ.
உனக்கு இருக்கற விட கம்மி தான்.
எனக்கு எங்கயிருக்கு.
பின்ன முத்தம் தந்தா கொழுப்புதானே.
நான் கேட்டதும் நீ ஓ.கே சொல்லியிருந்தா இப்படி நடந்திருக்காது.
நீ கேட்டதும் ஓ.கே சொல்லிட்டா அதல ஒரு இன்ட்ரஸ்ட்டே இருக்காது. ஒன்னு தெரிஞ்சிக்க, காதலி தனியா இருக்கான்னா உடனே அவளை கொஞ்சம் புகழ்ந்து, கொஞ்சம் கொஞ்சமா நெருங்கி பேசி, தோல் மேல கைபோட்டு ஒன்னே ஒன்னுன்னு கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சினின்னா முடியாதுன்னு அவ பிகு பண்ணுவா. ஓன்னே ஒன்னுதான் அதுக்கப்பறம் கேட்கமாட்டன்னு ஐஸ் வைக்கறப்ப அவ மனசுல சீக்கிரம் தந்து தொலையேன்டான்னு இருக்கும். ஆனா அத சொல்ல மாட்டாங்க. கடைசியில காதலன் கெஞ்சறதப்பாத்து மனசு இறங்கற மாதிரி காட்டிக்கிட்டு ஒன்னே ஒன்னு தான். அதுக்கப்பறம் கேட்ககூடாதுன்னு சொல்லுவாங்க. காதலன் ஓ.கே சொல்லி ஒன்னு தந்தான்னா அதுக்கப்பறம் பொண்ணுங்க அத பத்தாக்கற வழிய காட்டுவாளுங்க.
நீ என்னடான்னா சடார்ன்னு முத்தம் தந்துட்டு சமாதானம் செய்யறன்னு இப்படி வந்து கட்டிப்புடிச்சா திட்டாம என்ன செய்வாங்க. திடீர்ன்னு முத்தம் தந்தோம்மே. கோவத்தல இருக்காலே என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சி. உள்ள வந்து என் பின்னாடி நின்னுக்கிட்டு என்னை சமாதானம் பண்ணன்னும்போது கொஞ்சம் பிகு பண்ணுவன். அதுக்கப்பறம் ஸாரி கேட்டுக்கிட்டே இன்னோரு முத்தத்துக்கு ட்ரை பண்ணியிருந்தா கிடைச்சியிருக்கும்.
நீ என்னடான்னா உள்ள வந்து அப்படியே கட்டிப்புடிச்சி ஸாரி சொன்னா என்ன அர்த்தம் என கேட்டாள். இல்லப்பா இதுக்கு முன்னாடி பண்ணதில்லையா அதான்.
இதுக்கெல்லாம் ட்ரைனிங்கா தருவாங்க. லூசு. சினிமா ஏதாவது பாத்தாதானே. அதலயிருக்கற ரொமான்ஸ் பத்தி தெரியும்.
விடு இனிமே பாத்து தெரிஞ்சிக்கறன்.
நீ பாத்து தெரிஞ்சிக்கறப்ப நம்ம புள்ளைங்க காதலிக்க ஆரம்பிச்சியிருக்கும்.
ஏய் விட்டா ஒன்னும் தெரியாதவன்னு முத்திரை குத்திடுவ போலயிருக்கு.
வேற என்னவாம்.
கல்யாணத்துக்கு அப்பறம் பாரு. அய்யாவோட திறமைய.
க்கும். இப்ப என்னை விட்டுட்டு போய் உட்காரு டிபன் எடுத்து வர்றன் என பிடித்து தள்ள வெளியே வந்தபோது அதிர்ந்து போனேன்.
ப்ரியா ஹாலில் அமர்ந்திருந்தாள். ப்ரியாவின் அம்மா நின்றுக்கொண்டுயிருந்தார்கள். வெளியே வந்த கவிதா என் பார்வை போன பக்கம் பார்த்தவளின் கையில் இருந்த சம்பார் கிண்ணம் கீழே விழுந்துயிருந்தது.
தொடரும்……………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக