திங்கள், ஜூலை 16, 2012

நடுரோட்டில் மனித நாய்கள்.........

 
 
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் நடந்த விவகாரம் மன்னிக்க முடியாத குற்றம். 19வயது இளம்பெண்ணை பிஸியாக காணப்படும் சாலையில் இரவில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்ததை எந்த விளக்கத்தை கூறியும் நியாயப்படுத்த முடியாது.

கடந்த 10ந்தேதி தன் தோழியின் பிறந்தநாள் விழா வின்ட் கிளப்பில் மது விருந்துடன் நடந்துள்ளது. அப்போது அங்கிருந்த இளைஞர்களில் சிலருக்கும் அப்பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கிளப்பின் பாதுகாவலர்கள் அந்த பெண், அந்த பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர்களை அங்கிருந்து விரட்டியுள்ளது. அந்த பெண் அங்கிருந்து கிளம்பி குவாத்தி-ஷில்லாங்க சாலையில் நடந்தே வந்துள்ளார். அப்போது அந்த ஹோட்டலில் இருந்து பின்னாடியே வந்த சில இளைஞர்கள் அந்த பெண்ணின் உடல் அங்கங்கள் மீது கைவைத்துள்ளனர்.

இதனை பார்த்து சாலையில் சென்ற சிலப்பல இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வந்து அந்த பெண்ணின் மீது பாய்ந்து அரை நிர்வாணமாக்கினர். அந்த பெண் அழுதும், திமிறியும் விடவில்லை அந்த இளைஞர்கள். இதனை டிவி சேனல் ஒன்று படம் எடுப்பதையும் பொருட்படுத்தாமல் அந்த பெண்ணின் அங்கங்கள் மீதே குறியாக இருந்தனர். வெறிக்கொண்டு தங்கள் காம இச்சையை காட்டிய அவர்களில் பெரும்பாலானோர் படித்தவர்கள் தான் என்பது தான் வேதனை.

அந்த பெண்ணை துரத்தியவர்களின் நோக்கம். அந்த பெண்ணை அடைய வேண்டும் என்பதே. ஆதனை மற்றவர்கள் தடுத்திருக்க வேண்டும் ஆனால் இதுதான் சந்தர்ப்பம் என நடுரோட்டில் நாய்கள் வன்புனர்ச்சிக்கு அலைவதைப்போல அலைந்தனர்.

சில மனிதாபிமானவாதிகள் காவல்துறைக்கு தகவல் சொல்ல அதன்பின்பே போலிஸார் வந்து அந்த பெண்ணை காப்பாற்றி சென்றுள்ளனர். அப்போதும் அந்த பெண்ணின் உடலோடு விளையாடியவர்களை கைது செய்யவில்லை. தொலைக்காட்சிகளில் அந்த காட்சிகள் ஒளிபரப்பானபின் கண்டனங்கள் வந்தபின் காவல்துறை சிலரை மட்டும் கைது செய்துள்ளது.

அந்தபெண் குடித்தால், தகராறு செய்தால் உச்சபட்சமாக தவறான நடத்தை கொண்ட பெண் என்றும் எதிர்ப்புகாட்டுபவர்கள் கூறலாம் அந்த பெண் என்ன தவறு வேண்டுமானாலும் செய்துயிருக்கட்டும். ஒரு இளம் பெண்ணிடம் நடந்துக்கொண்ட முறையா அது.

தற்போது, டிவி நிருபர் மீதும் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. அதாவது, அந்த பெண் துடித்தபோது காப்பாற்ற டிவி மீடியாவினர் வரவில்லை என்றும், இது பரபரப்புக்காக நிருபரே உருவாக்கினார் என்றும் கூறப்படுகிறது. அவ்வளவு முட்டாளா அந்த தொலைக்காட்சி நிருபர்?.

ஒரு தவறை மறைக்க இன்னோரு தவறை செய்யாதீர்கள்.

1 கருத்து:

  1. அருமையாகத் தலைப்பிட்டு இருக்கிறீர்கள்
    நாயைக் கூட சமயத்தில் கல்லைவிட்டு எறிந்து
    கலைத்துவிடுகிறோம்
    இந்த நாய்களை என்ன செய்வது ?

    பதிலளிநீக்கு