ஞாயிறு, ஆகஸ்ட் 18, 2013

அன்பே அழகானது. – பகுதி 9.

படம் வரைந்த கூகுளில் அப்லோட் செய்த ப்ரியாவுக்கு நன்றி.


சுதாவுக்கு இரண்டு புருஷனாம் என மாலதி சக ஆசிரியர்களிடம் கிசுகிசுப்பாக சொல்ல பள்ளியில் ஆசிரியர்கள் மத்தியில் அதுவே பெரும் டாப்பிக்காக இருந்தது. சுதா ஒய்வு அறையில் இல்லாத போது இரண்டு முறை திருமணம் ஆளாளுக்கு தங்களது கற்பனையில் உதித்ததையெல்லாம் சொல்ல ஆரம்பித்தார்கள்.

அப்போது உள்ளே வந்த ஸ்டீபன்னிடம் சக ஆசிரியர் ஒருவர் புதுசா வந்துயிருக்கற சுதா டீச்சர்க்கு இரண்டு முறை கல்யாணம்மாச்சாம் சார் என்றார்.

ஆளப்பாத்தா அதிகமா இருக்கும் போல என்றார் நக்கலாக.

இதை கேட்டு ப்ரியா மனதில் வெறுப்பு வந்தது.

நான் சொல்றது சரிதானே ப்ரியா மேடம் என இரண்டு பல் வரிசை தெரியும் படி சிரித்துக்கொண்டே கேட்டார் ஸ்டீபன்.

அப்போது வகுப்பு முடிந்து சுதா உள்ளே வர எல்லோரும் அமைதியானார்கள். ஸ்டீபன் மட்டும் வெளியே செல்லும் போது சுதாவின் உடலை மேலிருந்து கீழ்வரை பார்த்தபடி வெளியே சென்றார். அந்த பார்வையில் அத்தனை விரசம். அதனை உணர்ந்த சுதா ப்ரியா பக்கத்தில் அமர்ந்தபடி ச்சீ இப்படியா கேவலமா நடந்துக்குவாரு என முணுமுணுத்தாள்.

சும்மாயிரு என்றாள் ப்ரியா.

பின்ன அப்படி பாத்தா என்னங்க அர்த்தம்.

யாராவது கேட்டு அவர்க்கிட்ட போட்டு தந்தாங்கன்னா உங்களுக்கு நிறைய குடைச்சல் தருவாரு.

அதுக்காக அவர் பண்றத பொறுத்துக்க சொல்றிங்களா என கேட்டாள் கோபமாக.

அப்பறம் பேசிக்கலாம் சும்மாயிருங்க என ப்ரியா சொன்னதும் அமைதியானாலும் மனதில் கோபம் அனலாய் எரிந்தது.

மாலை வீட்டுக்கு போகும்போது சுதா ப்ரியாவிடம், அவர் பெரியா ஆளா இருக்கட்டும் மேடம் அதுக்காக இப்படி மோசமா பிகேவ் பண்றாரு. கேட்ககூடாதுன்னா என்ன அர்த்தம்.

கேட்டா பிரச்சனை வரும். அவருக்கு நிறைய செல்வாக்குயிருக்கு. அவருக்கு தான் எல்லோரும் சப்போட் பண்ணுவாங்க.

யாராவது ஒருத்தர் கூடவா நியாயம் பேசமாட்டாங்க.

நம்மக்கிட்ட பேசுவாங்க. சபையில பேசமாட்டாங்க. நான் இத பல வருஷமா பாத்துக்கிட்டு இருக்கன்.

அதுக்காக இப்படியே விடச்சொல்றிங்களா.

நாய் கடிக்குதுன்னா நாம திருப்பி கடிக்க முடியாதுயில்ல. அதனால போடான்னு விட்டுட்டு வேலையப்பாருங்க என ப்ரியா சொன்னதை சுதா கேட்டாலும் அவள் மனசு மட்டும் ஆறவில்லை. வண்டியில் வீட்டுக்கு கிளம்பினாள்.

ஒருவாரம் கடந்துயிருக்கும் அன்றைய கடைசி பீரியட் டீச்சர்ஸ்க்கான அறையில் சுதா மட்டும் அமர்ந்து பத்தாம் வகுப்பு புத்தகம் ஒன்றை படித்துக்கொண்டு இருந்தாள்.

ஸ்டீபன் உள்ளே வந்தார். சுதா வருவதை பார்த்தாலும் கண்டும் காணாமல் புத்தகத்தை படித்துக்கொண்டு இருந்தார். சுதாவுக்கு எதிர் டேபிளில் அமர்ந்தவர் சுதாவை வெறித்துபார்த்தவர் மேடம் என அழைத்தார்.

சுதா பார்க்க க்ளாஸ் இல்லையா என கேட்டார்.

இரண்டு பீரியட் ப்ரி சார் என வெறுப்பாக பதில் சொல்ல ஸ்டீபன்க்கு கோபம் எட்டிபார்த்தது. புதுசா வந்தவ என்னையே அலட்சியப்படுத்தறாளே என மனதுக்குள் வெம்பியவர்.

ப்ரீ கிடைச்சாலும் இரண்டா கிடைக்குது. வேலை பாத்தாலும் டபுளா வேலை பாக்கறிங்க என டபுள் என்பதை அழுத்தி சொன்னார்.

புரியல சார்.

வீட்ல உங்களுக்கு ‘டபுள் வேலையாம்மே’ என டபுள் மீனிங்கிள் கேட்டார்.

சுதா முறைக்க அதை அலட்சியப்படுத்திய ஸ்டீபன், கல்யாணம் ரெண்டு, வேலை இரண்டு, குழந்தையும் இரண்டுதானா இல்லை இரண்டு இரண்டா என கொச்சையாக கேட்டார்.

அதை கேட்டு சுதா மனம் குமுறி டீசன்டா பேசுங்க சார் என்றாள் கோபமாக.

கோபமா பேசனா. நீ ஒழுக்கமானவளா என நேரடியாக தாக்க சுதாவின் கண்ணில் நீர் முட்டியது.

வாங்க வண்டியில ட்ராப் பண்றன்னு கேட்டதுக்கு ஏதோ ஆம்பளை கையே படாதவ மாதிரி நடந்துக்கிட்ட. இப்பத்தான் உன் யோக்கிதை தெரிஞ்சிடுச்சே. ஆப்பறம்மென்ன உன்கிட்ட போய் டீசன்டா பேசறது என்றார் நக்கலின் உச்சத்தில்.

சுதாவின் கண்ணீல் நீர் தளும்பி வர தன் ஹேன்ட் பேக்கை எடுத்தபடி உங்களை சும்மா விடமாட்டன் என்றாள் ஸ்டீபனை முறைத்தபடி.

உன்னை மாதிரி சவால் விட்டவளுங்க என்னை எவனாலும் ஒன்னும் பண்ண முடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்டு எங்கிட்ட வந்து சரணடைஞ்சாளுங்க. நீ இங்க தானே வேலை பாக்கனும் எங்கிட்ட எப்படி சிக்காம போறன்னு நான் பாத்துக்கறன் என ஆணவத்தின் உச்சத்தில் பேசியதை கேட்டபடி கண்ணீரை துடைத்துக்கொண்டு வேகவேகமாக வெளியே வந்தவள் யாரிடமும் சொல்லாமல் தன் வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.


மதன் தன் அறையில் விளம்பர டிசைன்களை ஃபைனல் செய்துக்கொண்டு இருந்தான். அப்போது தான் அவனது செல்போன் சத்தம் போட்டது. எடுத்து பார்த்தபோது ஆட்டோ டிரைவர் மணி நம்பரில் இருந்து கால் வந்தது. இவர் எதுக்கு இப்ப போன் பண்றாரு என நினைத்தபடி அட்டன் செய்தபோது மதன் சார் தானே என்றார் பதட்டமான குரலில்.

இருங்க பொறுமையா பேசுங்க மணியன்னே.

சார் ரஞ்சித்த ஒரு டூவீலர் மோதிட்டு போய்டுச்சி சார் ஆஸ்பத்திரிக்கு கொண்டும் போய்க்கிட்டு இருக்கு. அசோக் ஆஸ்பிட்டலுக்கு வந்துடுங்க சார் என்றார் பதட்டமான குரலில்.

என்னண்ணா ஆச்சி என மதன் அலற பிரபு, பாண்டியன், மஞ்சு, கீதா, ரேவதி உட்பட அனைவரும் அவன் அறையை நோக்கி ஓடிவர மதன் கதவை திறந்துக்கொண்டு வெளியே வர என்னடா ஆச்சி என பிரபு அவன் தோளை பிடித்துக்கொண்டு கேட்டான். ரஞ்சித்த ஏதோ டூவீலர்காரன் மோதிட்டு போய்ட்டானாம். அசோக் ஆஸ்பிட்டல்க்கு கொண்டும் போறாங்களாம் என சொல்லியபடி தன் டூவீலரை நோக்கி ஓடினான்.

இரு நான் வண்டி ஓட்டறன் என பிரபு வண்டியை எடுத்துக்கொண்டு போக பாண்டியன் நீங்க இருங்க நான் பாத்துட்டு போன் பண்றன் என மஞ்சு, கீதா, ரேவதியிடம் சொல்லிவிட்டு பின்னாடியே கிளம்பினார்.

அசோக் மருத்துவமனை வாசலில் ஆட்டோ டிரைவர் மணி நின்றிருந்தார். பிரபு வண்டியை நிறுத்தும் முன்பே அழுத முகத்தோடு மணியிடம் எங்கண்ணே அவன் என கேட்டபடி ஓட எமர்ஜென்சியில அட்மிட் பண்ணியிருக்கு சார் டாக்டர் பாத்துக்கிட்டு இருக்காரு.

அப்போது ஒரு நர்ஸ் டிரைவர் மணியிடம் பையன் அப்பா, அம்மா வந்துயிருக்காங்களா ?.

நான் தாங்க பையனோட அப்பா.

என் கூட வாந்து ஃபார்ம் பில் பண்ணிதாங்க. அட்மிஷன் பீஸ் ஃபைவ் தவுசன் கட்டுங்க என்றதும் நீ இருடா நான் பாத்துக்கறன் என நர்ஸ்சுடன் போனான்.

பையன் எங்கயிருக்கான், எப்படியிருக்கான், நான் அவனை பார்க்கனும் என பதட்டமாக கேட்டபடி நர்ஸ் பின்னாடி மதன் ஓட. டாக்டர் செக் பண்ணிக்கிட்டு இருக்காரு. உள்ள போக முடியாது வெயிட் பண்ணுங்க என்றார்.

கதவு வழியாக எட்டி எட்டி பார்க்க உள்ளே ரஞ்சித் அம்மாhhhhhhhhh என கத்துவது கேட்டு இவன் அழ தொடங்கினான். பாண்டியன் ஓடி வந்து என்ன சார் அழுதுக்கிட்டு ஒன்னும் ஆயிருக்காது சார் என சமாதானப்படுத்தினான். மதனின் அழுகையை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை.

உள்ளே ரஞ்சித் அழு குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. 20 நிமிடத்துக்கு பின் டாக்டர் வெளியே வந்தவரை ஒதுக்கிவிட்டு உள்ளே ஓடினான். டாக்டர் அதை திரும்பி பார்க்க பையனோட அப்பா சார் என்ற பாண்டியன். காயம் பெருசா சார் என கேட்டான். பெருசா ஒன்னும்மில்ல. அப்பறம்மா வந்து என்னை பாக்க சொல்லுங்க என சொல்லிவிட்டு நடந்தார்.

ரஞ்சித் பெட்டில் தலையில் பெரிய கட்டு, வலது கை, வலது காலிலும் கட்டுப்போடப்பட்டுயிருந்தது. மயக்கத்தில் இருந்தான். மதன் அவன்கிட்டே நெறுங்கி தலையில் கை வைக்க முயல அங்கிருந்த நர்ஸ் தையல் போட்டுயிருக்கு. அதனால கை வைக்காதிங்க டிஸ்டப் பண்ணாதிங்க. மயக்க ஊசி போட்டுயிருக்கறதால நல்லா தூங்குவான் பயப்படாதிங்க எனச்சொல்லிவிட்டு சென்றார்.

கட்டில் மேல் உட்கார்ந்திருந்த மதன் அருகே வந்த பாண்டியன் பயப்படறதுக்கு ஒன்னும்மில்லைன்னு டாக்டர் சொன்னார் சார் என்றான். பிரபுவும் உள்ளே வர அங்கு வந்த இரண்டு கம்பவுண்டர்கள் பையனை வார்டுக்கு மாத்தனும் அங்க வந்து பாருங்க எனச்சொல்லிவிட்டு பையனை ஸ்ட்ரெச்சரில் வைத்து வார்டுக்கு தள்ளிக்கொண்டு சென்றார்கள். மதன் பிரபுவை பார்க்க ஸ்பெஷல் வார்டு போட்டுயிருக்கன் என்றான். கொஞ்சம் அகலமான அறையில் இருந்த பெட்டில் படுக்கவைத்தவர்கள் இன்னும் இரண்டு மணி நேரம்மாகும் மயக்கம் தெளிய என சொல்லிவிட்டு சென்றனர்.

சார் உங்கள டாக்டர் வந்து பாக்க சொன்னாரு என பாண்டியன் சொன்னதும் அவரது பெயரை கேட்டுக்கொண்டு அவரை தேடி சென்றான். டாக்டர், மதனிடம் நல்ல வேளை பையனுக்கு பெருசா அடியில்ல. மோதனதும் கீழ விழுந்து ரோட்ல தேச்சிக்கிட்டு போனதுல கை, கால்யெல்லாம் சிராய்ப்பு, தலையில மட்டும் லேசா அடிப்பட்டுயிருக்கு. சரியாகிடும். பயப்படறமாதிரி ஒன்னும்மில்ல என்றவர். பையனோட அம்மா வரலியா ?.

வரமாட்டாங்க சார்.

மயக்கத்தலயும் அம்மா அம்மான்னு பையன் சொல்லிக்கிட்டு இருந்தான் அம்மா பாசத்துக்கு ஏங்கறான் பாத்துக்குங்க. சின்ன வயசுலயே அவனுக்கு மனவிரக்திய தராதிங்க அது அவன் லைப்ப ஸ்பாயில் பண்ணிடும் என்றவர் ஒன் வீக் ஆஸ்பிட்டல்ல இருக்கட்டும் அதுக்கப்பறம் அழைச்சிக்கிட்டு போங்க என்றதும் தலையாட்டிவிட்டு வெளியே வந்தான். அறையை நோக்கி நடந்தபோது பிரபு அறைக்கு வெளியே நின்று, ரஞ்சித்க்கு உடம்பு சரியில்ல ஆஸ்பிட்டல்ல சேர்த்துயிருக்கு என யாருக்கோ சொல்லிக்கொண்டு இருந்தான். மதன் அருகே வந்ததும் பேச்சை நிறுத்தினான்.

யாரு ?.

உங்க அப்பாக்கிட்ட என்றதும் பதில் எதுவும் சொல்லாமல் அறைக்குள் சென்றான். அறைக்குள் பாண்டியன் பயப்படறமாதிரி ஒன்னும்மில்ல மஞ்சு. மத்தவங்கிட்டயும் சொல்லிடு என சொல்லிக்கொண்டு இருந்தபோது உள்ளே வந்த மதன் பாண்டியனிடம் பேசிட்டு தாங்க என்றார். பேசுங்க சார் என செல்போனை தர ஆபிஸ் நீங்களே பூட்டிடுங்க. நாளைக்கு நீங்களே திறங்க எனச்சொல்லிவிட்டு தர பாண்டியன் செல்போனை வாங்கிக்கொண்டு வெளியே சென்றார்.

பிரபுவும், டிரைவர் மணியும் உள்ளே வந்தனர்.

டிரைவரை பார்த்த மதன், உங்கள நம்பிதாண்ணே பையனை விட்டன்.

இல்ல சார். ஸ்கூல் விட்டு ஓடிவந்தவன் ஃபேக்க ஆட்டோவுல வச்சிட்டு எதிர்லயிருந்து கடையில ஐஸ்கிரிம் வாங்கிவர்றன்னு போய் வாங்கிக்கிட்டு வந்தான். அப்ப ஸ்கூல்லயிருந்து வெளியில வந்த ஒரு ஸ்கூட்டி அவனை மோதிட்டு போய்டுச்சி சார் என்றார்.

ரொம்ப நன்றிண்ணே.

என்ன சார் பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிகிட்டு. இது என் கடமை சார்.

பரவாயில்லண்ணே. டைம்மாச்சி வீட்டுக்கு கிளம்புங்க.

தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சிடுங்க சார்.

உங்கமேல என்ன தப்பு. அவன் விளையாட்டா இருந்துட்டான். சின்ன அடியோட போச்சி பாத்துக்கலாம் ஃபீல் பண்ணாதிங்க கிளம்புங்க என்றான். வர்றன் சார் எனச்சொல்லிவிட்டு மணி கிளம்பியதும் அந்த அறையில் பிரபுவும், பாண்டியனும் மட்டும் இருந்தனர்.

பிரபு, அவுங்க ஸ்கூல் பிரின்ஸ்பால் பேசனாங்க. எப்படி இருக்கான்னு கேட்டாங்க ஒன்னும் பெரிய அடியில்லன்னு சொல்லியிருக்கன்.
ம்.

டாக்டர் என்ன சார் சொன்னாரு என பாண்டியன் தான் கேட்டான்.

தரையை பார்த்தபடி அமர்ந்திருந்த மதன், பயப்படற மாதிரி ஒன்னும்மில்லையாம். ஒரு வாரம் ஆஸ்பிட்டல்ல இருக்கட்டும்ன்னு சொல்லியிருக்காரு.

அவ்ளோ தானா என பிரபு சந்தேகத்தோடு கேட்டான்.

அம்மா பாசத்தல புலம்பறான்னு சொன்னாரு.

இப்பவாவுது சொல்றத கேளுடா என பிரபு சொல்ல உங்க பிடிவாதத்த கொஞ்சம் விடுங்க சார் இன்னும் எவ்ளோ நாளைக்கு தான் இப்படியே இருப்பிங்க, உங்க பையன் வாழ்க்கையை மனசுல நினைச்சி பாருங்க என்றான் பாண்டியன்.

அவன் சரியாகட்டும் யோசிக்கறன் என்றபோது அவர்கள் முகத்தில் சிறு பிரகாசம். பாண்டியன் நீங்க கிளம்புங்க. நைட்டாகிடுச்சி வீட்ல தனியா இருப்பாங்க.

இருக்கட்டும் சார்.

பராவயில்ல கிளம்புங்க டாக்டர் தான் ஒன்னும்மில்லன்னு சொல்லிட்டாரே. நான் பாத்துக்கறன்.

பாண்டியன் கிளம்பி செல்லவும், பிரபு மனைவி பதட்டத்தோடு உள்ளே வந்தார். என்னண்ணா நீங்க பையனை பாத்துக்கறதில்லயா என சொல்லிவிட்டு வாஞ்சையோடு அவனின் தலையை தடவி விட்டவர். டாக்டர் என்ன சொன்னாருண்ணா ?.

பயப்படறமாதிரி ஒன்னும்மில்லன்னு சொன்னாரும்மா.

தலையில அடிப்பட்டுயிருக்கு ஸ்கேன் எடுத்து பாருங்கண்ணா

டாக்டர் எடுக்கலாம்ன்னு சொல்லியிருக்காரு எனச்சொன்னதை கேட்டு அமைதியாக நின்றவர் தன் கணவரிடம் ஒரு கவரை தந்தார். பிரபு அதை வாங்கி இந்தாடா என்றான்.

என்ன ?.

வாங்கி பாத்துட்டு அப்பறம் பேசு.

அதை வாங்கி பார்த்தபோது உள்ளே நூறு ரூபாய் கட்டு மூன்று இருந்தன. என்னடாயிது.

செலவுக்குண்ணா.

காசு இருக்கும்மா.

இந்த மாசம் ரொம்ப டைட்டா இருக்குன்னு இரண்டு நாளைக்கு முன்னாடி தான் சொல்லிக்கிட்டு இருந்தாரு. ஆஸ்பத்திரி செலவுக்கு காசு இருக்காதுன்னு தெரியும் அதான் என இழுத்தது. 

மச்சான்க்கு கல்யாணம் செலவுக்கு காசுயில்லன்னு கடன் கேட்டுக்கிட்டு இருக்கான். நீ என்னடான்னா காசு எடுத்து தர்ற உங்ககிட்ட காசு ஏது ?.

அதவிடுடா.

காசுயேது அதச்சொல்லுங்க முதல்ல.

அவர் ரஞ்சித்துக்கு ஆக்சிடன்டுன்னு ஆஸ்பிட்டல்ல சேர்த்துயிருக்காருன்னு சொன்னதும் கவலையாகிடுச்சி. சும்மாவே அதிகமா ஃபில் போடற ஆஸ்பிட்டல். ஏப்படியும் நீங்களும் டைட்டா தான் இருப்பிங்கன்னு தெரிஞ்சிதான் மூனு பவுன் செயின் அடகு வச்சி பணம் வாங்கி வந்தன் என சொன்னபோது என்ன சொல்வது என தெரியாமல் அமைதியானேன்.

ஊருக்கு சொல்லியாச்சாண்ணா.

இவன் தான் சொன்னான்.

எப்போ வர்றாங்களாம்.

மாடு, கன்னுயிருக்கு பாத்துக்க ஆள் ஏற்பாடு பண்ணிட்டு காலையில வந்துடுவாங்க என்றான் பிரபு.

உங்களுக்கு நைட் சாப்பாடுண்ணா.

இல்லம்மா முதல்ல அவன் கண் முழிக்கட்டும்.

டாக்டர் தான் ஒன்னும்மில்லன்னு சொல்லிட்டாருயில்ல. நீங்க சாப்பிடுங்க உங்க உடம்ப பாத்துக்கிட்டா தான் அவனை நல்லா பாத்துக்க முடியும்.

நீ இரு நாங்க கேன்டீன் வரை போய்ட்டு வர்றோம் என்ற பிரபு வாடா ஒரு டீ சாப்ட்டுட்டு வரலாம் என அழைத்தான்.

இரு போகலாம்.

அவன் கண் முழிக்க லேட்டாகும் வா போகலாம் என கட்டாயப்படுத்தி இழுத்து சென்றான். கேன்டீனில் டீ சாப்பிட்டாலும் அது நெஞ்சு குழிக்குள்ளே இருந்தது. அப்போது பிரபு செல்போன் ரிங்கானது. எடுத்தவன் உங்கப்பா கூப்பிடறாரு என்றவன் ஆன் செய்து பேசினான். அசோக் ஹாஸ்பிட்டல்ப்பா என்றான். சரியென அவர் கட் செய்துவிட்டார்.

பஸ் ஸ்டான்ட்ல இருக்காறாம்.

ம்.

காபி சாப்பிட்டுவிட்டு அறைக்கு திரும்ப ரஞ்சித் ஏதோ முனகியபடி இருக்க பிரபு மனைவி தான் காதை கிட்டே கொண்டு சென்று கேட்டது. அவன் என்ன சொல்வான் என்பது மனதுக்கு தெரிந்தது.

அம்மா அம்மாங்கறாண்ணே என்றவள் சில நொடிகள் பொறுத்து அவன் நல்லா வர்றதும், கெட்டு போறதும் உங்ககிட்டதான்னே இருக்குது என்றார்.

பாத்துக்கறன்ம்மா என்றதும் அந்த வார்த்தையில் நம்பிக்கையில்லாமல் இருப்பது அவர் முகத்தை பார்த்தபோது தெரிந்தது.

இந்த ரூம் தான் என கம்பவுண்டர் அழைத்து வந்து விட மதனின் அப்பாவும், அம்மாவும் உள்ளே வந்தனர். மதனின் அம்மா கோதை அழுதுக்கொண்டே வந்தவர் பேரனை பார்த்ததும் அய்யோ சாமீ என பெருங்குரலெடுத்து அலறினார். அய்யோ எம் பேரன் இப்படி கிடக்கறானே அந்த அய்யனாருக்கு கண் இல்லையா என அழ தொடங்கினார். நர்ஸ் வந்து அழாதிங்கம்மா எனச்சொல்லிவிட்டு சென்றார்.

அழுகையை அடக்க முடியாமல் முந்தாணியால் வாயை பொத்திக்கொண்டு கோதை அழ, கலிவரதனும் கலங்கி தோள் மீது கிடந்த துண்டால் தன் கண்ணீரை துடைத்தவர் பிரபு பக்கம் திரும்பி என்னப்பாச்சி என கேட்டார். அவன் நடந்ததை சொன்னான். டாக்டரு என்ன சொன்னாரு என கோதை கேட்டதும், பிரச்சனை எதுவும்மில்லன்னு சொன்னாரும்மா. ஒரு வாரத்துக்கு ஆஸ்பத்திரியில இருக்கட்டும்ன்னு சொல்லியிருக்காரு.

எப்ப முழிப்பான். இன்னும் கொஞ்ச நேரத்தல முழிச்சிக்குவான் என்றதும் பேரன் முகத்தை பார்த்தபடி கோதை தரையில் அமர்ந்தார். கலிவரதன், பிரபுவின் மனைவியிடம், எப்படிம்மா இருக்க?, பசங்க எப்படி இருக்காங்க?, என நலம் விசாரித்தார்.

நேரம்மாச்சி. பசங்க தனியா இருக்கபோறாங்க வீட்டுக்கு கிளம்புங்க என்றதும் பிரபுவும், அவன் மனைவியும் பாத்துக்குங்க எனச்சொல்லிவிட்டு மதனிடம் சொல்லிவிட்டு கிளம்பினர். கொஞ்ச நேரத்தில் ரஞ்சித் மயக்கம் தெளிந்தான். அவன் கன்னத்தில் கோதை கை வைத்ததும் ம்மா வலிக்குதும்மா….

தொடரும்………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக