இந்திய சினிமாவுக்கு புதிய தொழில் நுட்பங்கள், வியாபார யுக்திகளை
புகுத்துவதில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல முகம் கொண்ட கமல்ஹாசன்
அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. அதேநேரத்தில் இந்திய சினிமாவில் பிற
மொழிப்படங்களை பார்த்து காப்பியடிப்பதில் பெரும் பங்கும் கமல் அவர்களுக்கே உண்டு.
அவரின் எண்ணற்ற படங்கள் காப்பி பேஸ்ட் வகையே. தற்போது வெளியே வரவுள்ள விஸ்வரூம் 2,
உத்தமவில்லன் படத்தில் காப்பி வகை தான். கமல் காப்பியடித்தாலும் அதை தன் மண்ணுக்கு
ஏற்றாற்போல் மாற்றிக்கொள்வார். காப்பி பற்றி அவர் மீது எத்தனை விமர்சகர்கள்
விமர்சன கணையை வீசும்போதும், அதைப்பற்றி கேள்வி கேட்கும்போது புரிந்தும் புரியாத
இலக்கிய சொற்களால் குழப்பி தன் ஒரு இலக்கியவாதி என்பதை பறைசாட்டிவிடுவார்.
காப்பியடி என்ற பெயரை உலக நாயகன் கமலிடம் இருந்து தற்போது நடிகர்
விஜய் பங்கு போட சில ஆண்டுகாலமாக முயற்சித்து வருகிறார். தற்போது விஜய் நடிப்பில்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள கத்தி என்ற திரைப்படத்தின் டிரைலர்
வெளியிடப்பட்டுள்ளது. உலகின் பிரபலமான செய்தி ஏடான தி நியூயார்க் டைம்ஸ்
பத்திரிக்கை தனது விற்பனையை உயர்த்த வெளியிடப்பட்ட ஒரு விளம்பரத்தை அப்படியே
காப்பி அடித்து கத்தி பட டிரைலரை உருவாக்கியுள்ளது விஜய் –
முருகதாஸ் கூட்டணி. அதேபோல் அந்த விளம்பரத்தின் பின்னணி இசை மேற்கத்திய பாப்
ஆல்பம் ஒன்றின் இசை என்பது குறிப்பிடதக்கது. அதையும் காப்பியடித்துள்ளார் அனிரூத்.
( தம்பீ தான் கொலைவெறி பாடலுக்கு இசை அமைத்தவர் ). போஸ்டர் டிசைன் கூட காப்பியடிக்கப்பட்டுள்ளது.
இசை, டிரைலர் டிசைன், போஸ்டர் டிசைன் உட்பட எல்லாமே காப்பி. அந்த வரிசையில் கதையும்
காப்பியாக தான் இருக்கும். இல்ல முருகதாஸ் அப்படி செய்யமாட்டார் என நம்பும்
மேதாவியா நீங்கள் கஜினி என்ற படம் ஒரு மேற்கத்திய நாட்டில் வெளிவந்த ஒரு படத்தின்
காப்பி என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள். விஜய்க்கும் இது காப்பியென்று தெரியும் அவர்
ஏன் இதை கண்டுக்கொள்ளவில்லை ?. கத்தி படம் மட்டுமல்ல இதற்கு முன் வந்த துப்பாக்கி,
கில்லி என பலப்படங்கள் தெலுங்கு, ஹாலிவுட் படங்களில் இருந்து
காப்பியடிக்கப்பட்டும், உரிமைப்பெற்றும் தயாரித்த படங்கள் தான்.
இதை ஏதோ கமல், விஜய் மட்டும் செய்யவில்லை. சமகாலத்தில்
இசையமைப்பளார்கள் இளையராஜா, தேவா, ரஹ்மான், ஹாரிஸ்ஜெயராஜ், இயக்குநர்கள் மிஷ்கின்,
சங்கர், முருகதாஸ், அமீர் உட்பட என்னற்றோர் செய்கின்றனர். கமலும். விஜய்யும்
வெளிப்படையாக செய்கின்றனர் அவ்வளவே.
கடந்த வாரம் தமிழகத்தின் பிரபலமான ஒரு வார இதழ் தமிழகத்தின் அடுத்த
சூப்பர் ஸ்டார் விஜய் என அட்டைப்படம் போட்டு விஜய்யை ரஜினி இடத்தில் வைத்து அழகு
பார்த்துள்ளது.
என்னைக்கேட்டால் கமல் இடத்தில் வைக்க பொருத்தமான நபர் விஜய் என்பேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக