காமூகர்களால் பாலியல் வல்லுறுவுக்கு உல்லாக்கப்படும்
பெண் பிறரால் அனுதாபத்துடன் பார்க்கப்படுவார்கள். ஆனால் அந்த குற்றவாளிகள் கேவலமாக
பார்க்கப்படுவார்கள். இங்கும் அப்படித்தான் ஜெயல்லிதா பரிதாபமாக
பார்க்கப்படுகிறார். தமிழக மக்கள் கேவலமாக பார்க்கப்படுகிறார்கள்.
அதிமுக பொது செயலாளரும், முன்னால் முதல்வருமான ஜெயலலிதா
ஊழல் வழக்கில் குற்றவாளியாக சிறை தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தியாவில்
ஊழல் வழக்கில் முதல்வர் பதவியில் இருக்கும் போது தண்டனை பெற்ற முதல் முதல்வர் என்ற
பெருமையை ஜெ பெற்றுள்ளார். தண்டனை பெற்றதால் முதல்வர் பதவியை இழந்தார். அடுத்த
முதல்வராக அதிமுகவுக்கு சட்டசபையில் தனி பலம் உள்ளதால் நிதி அமைச்சராக இருந்த
ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப்பட்டுள்ளார்.
அரசின் பெறும் பொறுப்பில் இருப்பவர் நீதிமன்றத்தால்
குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரை சந்திக்ககூடாது என்கிறது சட்டம். ஆனால்
பதவி ஏற்றுக்கொண்டதும் சிறையில் உள்ள தன் கட்சி தலைவியை சந்திக்க பறந்து சென்றார்
தமிழக முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம்.
இதை வடஇந்திய மீடியாக்கள், தேசிய தொலைக்காட்சிகள் இந்த
செயலை விமர்சித்துக்கொண்டுயிருந்த நேரத்தில் ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள்,
அதிகாரிகள் வாய்மொழி உத்தரவாக தொழிலாளர், பேருந்து முதலாளிகள், லாரிகள், கடைக்காரர்கள்,
என தொழிலாளிகள் முதல் முதலாளிகள் வரை வரிசையாக போராட்ட களத்துக்கு வந்து
உண்ணாவிரம் இருக்க வேண்டும் என மிரட்டின. அவர்களும் அதை சிறு முனுமுனுப்பும்
இல்லாமல் ஏற்றுக்கொண்டு உண்ணாவிரத பந்தலில் அமர்ந்தார்கள். ( மதியம் பிரியாணி சாப்பிட்டார்கள்
என்பது வேறு விஷயம் ).
அந்த வரிசையில் உச்சமாக கல்லூரி மாணவ – மாணவிகளை ஊழல்
வழக்கில் தண்டனை பெற்துள்ள ஜெ வை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டு போராட்டம்
செய்ய வைத்தார்கள். பின் தனியார் பள்ளி – கல்லூரிகளை மூடிவிட்டு போராட்டம் நடத்த
முடிவு செய்தார்கள் ( பல தரப்பின் எதிர்ப்பால் பின் வாங்கப்பட்டது ). ஆனாலும் அதன்
முதலாளிகள் உண்ணாவிரதம் இருந்தார்கள்.
இவைகளை அரசியல் கட்சிகளில் பாமக ராமதாஸ் தவிர வேறு
யாரும் எதிர்க்கவில்லை. திமுக சட்டம் ஒழுங்கால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்
என்பதோடு நிறுத்திக்கொண்டது.
ஆளும் அதிமுகவினர் ஊழலுக்கு வக்காலத்து வாங்குவதே தவறு.
அப்படியிருக்க அவர்கள் பொதுமக்களை தங்களது ஆளும்கட்சி என்கிற அதிகாரத்தை காட்டி
மிரட்டி உண்ணாவிரதம், கடையடைப்பு செய்ய வைப்பது எந்த விதத்தில் நியாயம் ?.
நான் அறிந்த வரையில் இப்படி ஊழல் செய்தது உறுதி செய்யப்பட்டு
தண்டனை விதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக எங்கும் போராட்டம் நடத்தியதில்லை. ஆனால், தமிழகத்தில்
நடக்கிறது. இதனை சமூக ஆர்வலர்கள், சில அரசியல் கட்சிகள், குறிப்பாக பெரும்பான்மை மீடியாக்கள்
ஏற்றுக்கொள்வது வித்தியாசமாக இருக்கிறது.
சில இடங்களில் மட்டும் தான் ஜெவுக்கு தரப்பட்ட தண்டனை
சரியானது என போஸ்டர் வழியாக தங்களது கருத்தை பதிவு செய்தார்கள். மற்றப்படி யாரும்
எங்கும் பேசவில்லை.
இதை இந்தியா மட்டுமல்ல இந்தியாவை தாண்டி பல நாடுகளின் பிரபலமான
செய்தித்தாள்கள் ஊழலுக்கு ஆதரவாக ஒரு மாநிலம், மக்கள் இருப்பதை செய்தியாக
வெளியிட்டுள்ளன.
ஊழலுக்கு ஆதரவாக போராட்ட களத்துக்கு வா என அதிகாரம்
கையில் இருப்பதால் அழைக்கும் ஆளும்கட்சியான அதிமுகவை எதிர்க்க துணிவில்லாமல்
வீட்டுக்குள்ளும், பூட்டிய கதவுகளுக்கு பின்னால் இருந்துக்கொண்டும்
எதிர்க்கிறார்கள். இதுவே ஒரு வகையில் குற்றம் தான். குற்றத்துக்கு துணை போனால்
மட்டும் குற்றவாளியல்ல. குற்றம் செய்ய துண்டுவதை எதிர்க்காமல் இருப்பவர்களும் குற்றவாளிகள்
தான்.
ரொம்ப அவமானகரமான நிலைமை தான். நீதி, ஊழல் எதிர்ப்பு என்று சும்மா போலிக்கு பேசிய தமிழக சமுதாயம் என்று இப்போ தானே புரிகிறது.
பதிலளிநீக்கு