திங்கள், அக்டோபர் 20, 2014

தீவிரவாதத்தை தொடர்ந்து ஊழலுக்கும் ரஜினி ஆதரவு.



தீபாவளிக்கு இன்னும் 3 தினங்கள் உள்ள நிலையில் இப்போதே ஜெவுக்கு வாழ்த்து மெசேஜ் அனுப்பிவிட்டார் நடிகர் ரஜினிகாந்த். அது தீபாவளி வாழ்த்து மெசேஜ் என சொல்லப்பட்டாலும் உண்மையில் அது தீபாவளிக்கான வாழ்த்து மெசேஜ் அல்ல.

அதில் கூடுதலாக உள்ள வரிகளை கண்டால் புரியும். அந்த வாழ்த்தில், நீங்கள் போயஸ்கார்டன் திரும்பியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது நல்ல நேரத்துக்காக நான் பிரார்தனை செய்கிறேன். நீங்கள் எப்போதும் உடல் நலத்துடனும், மன அமைதியுடனும் இருக்க வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். ஊழல் வழக்கில் சிறையில் இருந்து பெயிலில் இருந்து வந்ததுக்குக்கான வாழ்த்து. அதை சுற்றி வளைத்து தீபாவளி வாழ்த்தாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பல நடிகர் நடிகைகள் பந்தல் போட்டு உண்ணாவிரதம்மிருந்து தமிழக தாயை விடுதலை செய்யுங்கள் என குரல் கொடுத்தார்கள். அதில் ரஜினி கலந்துக்கொள்ளவில்லை. ஜெ வெளியே வந்ததும் வாழ்த்து தெரிவித்து நான் உங்கள் அடிமைகளில் ஒருவர் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார்.

ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்று சிறையில் இருந்தவருக்கு உச்சநீதிமன்றத்தால் பெயில் தரப்பட்டுள்ளது. அதில் வெளிவந்தவருக்கு ஏதோ பொய் வழக்கில் சிறை சென்று விடுதலையாகி வந்த தியாகிக்கு வாழ்த்து தெரிவிப்பது போல் தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார்.


சூப்பர் ஸ்டார் அவர்களே, உங்களை வாழ வைப்பது தமிழக மக்கள். அந்த மக்கள் கடந்த 20 நாட்களுக்கு முன் ஜெ குற்றவாளி என தீர்பளிக்கப்பட்டு தண்டனை தந்த அன்று பட்ட துயரங்கள் தெரியும்மா. அதிமுகவினர் மாநிலம் முழுவதும் வன்முறையில் ஈடுபட்டு பொதுமக்களை துயரத்துக்கு ஆளாக்கினார்கள், பொது சொத்துக்களை சூரையாடினார்கள். 20 நாட்கள் அரசாங்கம் செயல்படவில்லை. எதிர்கட்சிகள் கண்டித்தன. ஏன் இப்போது உச்சநீதிமன்றம் கூட கண்டித்துள்ளது. உங்களை வாழ வைத்த வைக்கும் தமிழக மக்கள் துயரத்தில் இருக்கும் போது குரல் கொடுக்காத உங்கள் மனம் இப்போது குரல் கொடுப்பது எதனால்???????????

இப்போது மட்டுமல்ல, மும்பையில் தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டு மற்றும் ஆயுதம் பாதுகாப்பாக வைத்திருந்து சப்ளை செய்து நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாக காரணமாக இருந்த பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவருக்கு ஆதரவாக அவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்தீர்கள்.

காவிரி நதிநீர் பிரச்சனையில் சட்டப்படி நடந்துக்கொள்ளாமல் தமிழகத்துக்கு துரோகம் செய்யும் கர்நாடகாவை கண்டித்து தமிழக மக்கள் கொதித்தெழுந்தனர். தமிழ் திரையுலகம் கர்நாடகாவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தது. உங்களை சூப்பர் ஸ்டாராக்கி அழகு பார்க்கும் தமிழக மக்களுக்கான போராட்டத்தில் கலந்துக்கொள்ளாத நீங்கள் தனியாக பந்தல் போட்டு நதிநீர் இணைப்புக்கு ஒருகோடி ரூபாய் தருகிறேன் என ஸ்டன்ட் அடித்து கர்நாடகாவின் தவறை கண்டிக்காமல் பிரச்சனையை நீர்த்து போக செய்து மறைமுகமாக நான் ஒரு கன்னடியன் என்பதை காட்டினீர்கள்.


இப்போது நீங்கள் நடிக்கும், பெரும்பகுதி கர்நாடகாவில் தயாராகும் படம் லிங்கா. கர்நாடகா அரசியலை ஆட்டி வைக்கும் லிங்காயத்துக்கு சாதியின் பெயரில் படம் எடுக்கிறீர்கள். மறைமுகமாக அந்த சாதியை தூக்கி பிடிக்கிறீர்கள்.

தீவிரவாதத்துக்கும், ஊழலுக்கும், சாதி வெறிக்கும், மொழிவெறிக்கும் துணை போகும் நீங்கள் மக்களை மட்டுமல்ல உங்களது ரசிகர்களை கூட பல ஆண்டுகாலாமாக ஏமாற்றி வருகிறீர்கள்.

சுமார் 15 ஆண்டுகாலமாக நான் அரசியலுக்கு வருவேன்......... வருவேன் என செய்திகளை கிளப்பி விடுகிறீர்கள். உங்களது முட்டாள் ரசிகனும் தலைவா என பாலபிஷேகம் செய்கிறான். அவனுக்கு நம் தலைவன் இந்த முறை அரசியலுக்கு வந்துவிடுவான் நாட்டை திருத்திவிடுவான், அரசியலில் நமக்கும் பதவிகள் கிடைக்கும் என நம்புகிறான். அரசியல் வருகை செய்திகள் எப்போது பரப்பப்படுகிறது என்றால் உங்கள் புதுப்படம் வரும் ஒவ்வொரு முறையும் பரப்பப்படுகிறது. உங்கள் படம் ஓடவேண்டும் கோடி கோடியாய் பணம் கொட்ட வேண்டும் என்பதற்காக செய்யும் விளம்பர யுக்தி என தெரியாமல் கிடக்கிறான். படம் வந்தபின் கல்லா கட்டியபின் உங்கள் கட்அவுட்க்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்களை செருப்பால் அடிக்காத குறையாக துரத்துகிறீர்கள். நீங்கள் மட்டும்மா உங்கள் குடும்பம்மே அதைத்தான் செய்கிறது.

30 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதியில் நடந்த உங்கள் திருமணத்துக்கு வர நினைத்த உங்கள் ரசிகர்கள் வரக்கூடாது வந்தால் அடிப்பேன் என்றீர்கள். அதன்பின் உங்கள் மகள்கள் திருமணத்துக்கு ரசிகர்கள் யாரும் வரக்கூடாது. கல்யாணத்துக்கு பின் விருந்து வைப்பேன் என்றீர்கள். அதை வாகாக மறந்துவிட்டீர்கள். எப்போதவது மீடியாவுக்கு பேட்டி தந்தால், இரண்டு பெண்களுக்கு திருமணம் செய்ததில் கடனாளியாகிவிட்டேன் அதனால் விருந்து வைக்க முடியாமல் போய்விட்டது எனச்சொல்லிவிடுங்கள் அதன் பின் எவனும் அதைப்பற்றி கேட்கபோவதில்லை. 


உங்கள் படங்களை கொண்டாடிய, பாபா படத்தின் போது பாமகவினரிடம் அடி உதை வாங்கிய உங்கள் ரசிகர்கள் உங்கள் படத்தை பயன்படுத்த கூட உங்கள் மனைவி சட்டப்படியான தடை விதித்து பணமாக்கி வருகிறார். ரசிகனை பணம் காய்க்கும் மரமாகவும், மக்களை முட்டாளாகவும் நீங்களும் உங்கள் குடும்பமும் நினைக்கிறீர்கள்.

ஏதோ ஒரு படத்தில் என் வழி தனி வழி என்றீர்கள். உண்மை தான் உங்கள் வழி தனி வழி தான். அந்த வழி குறுக்கு வழியாக இருக்கிறது. அதனால் தான் ஊழலுக்கும், மதவாதத்துக்கும், சாதிவெறிக்கும், மொழி வெறிக்கும் வெளிப்படையாக சப்போட் செய்கிறீர்கள்.  

5 கருத்துகள்:

  1. ningal sollurathil niyaayam irukkirathu sir.

    rajiniyin rasikan enra pothilum ungalin karuthukkalai etru kolkiren.

    thodarungal.

    பதிலளிநீக்கு
  2. kannada nadikaikku kannada nadikar vaazhththu theriviththullaar,melum cinimaavil mattum veeram pesum intha jeyavin adimai

    பதிலளிநீக்கு
  3. ஷோக்க சொன்ன நைனா, இந்த கபட நாடக வேடதரியை என்னைக்கு தான் உலகம் புரிஞ்சிக்க போகுதோ?

    பதிலளிநீக்கு
  4. இவர் ஒரு சினிமா கூட்டத்தை சேர்ந்தவர் ஊழல் குற்றவாளியை ஆதரிப்பார்கள். ஆனால் மத்திய அமைச்சராக இருந்து கொண்டு மேனகா காந்தி செய்தது தான் மிக ஆபத்தானது.

    பதிலளிநீக்கு
  5. சிறந்த பகிர்வு
    தங்களுக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

    பதிலளிநீக்கு