திங்கள், நவம்பர் 10, 2014

பாதை மாறும் இளையோர்கள். - தவிக்கும் முன்(னோ)ஏர்கள்.


பிடித்தால் சேர்ந்து வாழ்வோம் பிடிக்காவிட்டால் வெட்டிக்கொண்டு போய்க்கொண்டே இருப்போம் என்பது இன்றைய நவயுக இளையோர்களின் வாழ்க்கை முறையாக இருக்கிறது. மேற்கத்திய நாடுகளிலேயே வெட்டிக்கொண்டு போவது வேலைக்காகாது என பிரச்சனையை பேசி தீர்த்துக்கொண்டு, விட்டுக்கொடுத்துக்கொண்டு ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் முறையை பின்பற்ற தொடங்கியுள்ள நிலையில் உலகத்துக்கே முன்மாதிரியாய் தாய் – தந்தை – சகோதரன் – சகோதரிகள் என வாழ்ந்த நம் சமூகம் இப்போது மனைவியையே யூஸ் அன்ட் த்ரோவாக பார்க்கிறது. இதனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியிருக்கிறது என்கிறார்கள் குடும்பநல நீதிமன்றங்களில் பணியாற்றுபவர்கள்.

விருப்பப்பட்டால் சேர்ந்து வாழ்கிறோம் இல்லையேல் பிரிந்து போகிறோம் இது எங்கள் சுதந்திரம். விருப்பம் இல்லாத துணையோடு எத்தனை காலம் சேர்ந்து வாழ்வது என தங்கள் தவறுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள். ( படிப்பு புத்தியை தரும் என்றார்கள். ஆனால் இந்தியாவில் படிப்பு புத்தி பேதலிப்பை தான் தந்துள்ளது. ) ஒரு பொருளை வாங்கிய பின் மற்றொரு பொருளை காணும் போது பெஸ்ட்டாக தான் தோணும். அதை வாங்கினால் அதற்கடுத்த பொருள் பெஸ்டாக தோணும். அதற்காக பெஸ்டாக இருப்பதை வாங்கிக்கொண்டே இருந்தால் பொருள், பண விரயம் தான் ஏற்படும்.

பிடிக்கவில்லையென துணையை மாற்றிக்கொண்டே எத்தனை காலத்துக்கு இருப்பீர்கள்?. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின் மாற்ற ஆள் இருக்கமாட்டார்கள் என்பது புரியும் போது வாழ்க்கை விரக்திக்கு தள்ளிவிடும். காலம் மாறுகிறது அதனால் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்கிறார்கள். உண்மை தான். அந்த காலத்தல நான் அப்படியிருந்தன், நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என நிர்பந்தப்படுத்துவது அபதத்தின் உச்சம். இன்றைய காலக்கட்டத்தில் இளையோர்களிடம் மறைக்க எதுவும்மேயில்லை என்பதே உண்மை. நமக்கு தெரியாத பலவும் அவர்களுக்கு இந்த சிறிய வயதில் டெக்னாலஜி வாயிலாக அத்துப்படி.

90க்கு முன்பு பிறந்தவர்களின் காலக்கட்டம் என்பது வேறு. அதற்கு பிறகு பிறந்தவர்களின் காலக்கட்டம் என்பது வேறு. இனி பிறக்க போகிறவர்களின் காலக்கட்டம் வேறு மாதிரியாக தான் இருக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இளைய சமுதாயம் சரியாக வாழ்ந்தது என்றால் எதுவும் அவரை தேடி வரவில்லை. அதை தேடி செல்ல வேண்டிய கட்டாயம். உதாரணத்துக்கு ஒரு செக்ஸ் கதை படிக்க வேண்டும், நிர்வாண புகைப்படத்தை பார்க்க வேண்டும் என்றால் அதை வெளியிடும் புத்தகத்தை தேடி போய் வாங்க வேண்டும், ஜெயமாலினி, சில்க் போன்றவர்களின் கவர்ச்சி நடனங்களை காண தியேட்டருக்கு சென்றால் தான் முடியும்.

இன்று அப்படியல்ல, செக்ஸ் கதை படிக்க வேண்டுமா எந்த மொழி, எந்த நாட்டுடையது வேண்டும். மொழி மாற்றம் செய்து தரட்டுமா ?, எந்த நாட்டு பெண்ணின் நிர்வாணத்தை பார்க்க வேண்டும் என பட்டியல் போட்டு தருகிறது இணையம். இன்று தமிழ் சினிமாவில் மட்டுமல்ல டோலிவுட், பாலிவுட் என கலந்துக்கட்டி வீட்டின் வரவேற்பரையில் உள்ள டிவி பெட்டியில் கவர்ச்சியான பாடல்கள் ஒளிப்பாகின்றன. தம் அடிக்க, பீர் குடிக்க வேண்டும் என்றால் பிறர் பார்த்தால் என்ன சொல்வார்களோ என்ற பயம்மிருந்தது, சின்ன பசங்க வந்தால் தராமல் துரத்திய மனித நேயமிக்கவர்கள் இருந்தார்கள். இன்று அப்படியல்ல நேர் எதிர்.

பொய் ஊர் சுற்றி வரும்போது தான் உண்மை எழுந்து நிற்கும் என கிராமத்தில் கதை சொல்வார்கள். அதேபோல் தான் இன்றைய நவயுக கால இளையோர்களுக்கு டெக்னாலஜியில் தவறுகள் வேகமாக கண் முன் வந்து நிற்கின்றன. அறிந்துக்கொள்ள வேண்டியவை தாமதமாக வருகின்றன. இது தவறு இதை பார்க்காதே, படிக்காதே, சேராதே என்றால் எனக்கு சுதந்தி்ரம் உள்ளது என்கிறார்கள். சுதந்திரம் என்பதை தவறாக புரிந்கொள்கிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் மட்டுமல்ல எப்போதும்மே காதல், காமம், வாழ்க்கை ஒரு தடுமாற்றம் இருக்கத்தான் செய்கிறது. அதை இளையோர்கள் மட்டும்மல்ல பெரியவர்களும் புரிந்துக்கொள்வதுயில்லை என்பதே உண்மை. 


சாலையில் முன்பின் அறிமுகம்மில்லாத ஒரு பாலினத்தை காணும்போது எதிர்பாலினத்துக்கு ஒரு ஈர்ப்பு உருவாகும். அது இயல்பே. அதை இன்னும் டீப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு பெண் எதிரே செல்லும் போது அவளின் அங்கங்களை பார்ப்பது ஆண்களின் இயல்பு. அதேபோல் ஒரு ஆண்  அட்ராக்டிவ்வாக செல்லும் போது பெண்கள் பார்ப்பது இயல்பே. சிம்பளாக சொல்ல வேண்டும் என்றால் சைட் அடிப்பது இருபாலருக்கும்மே ஓ.கே தான்.

இந்த சைட் அடிப்பது மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட வயது அதாவது 13 அ 14 வயது தொடங்கும் போதே தொடங்கிவிடும். அதே காலக்கட்டத்தில் செக்ஸ் நினைவுகள் மனதில் தோன்ற தொடங்கிவிடும் என்கிறது உடலியல் மருத்துவம் மற்றும் காமசூத்ரா. நம் உடலில் உணர்ச்சிகளை தூண்டும் செக்ஸ் அணுக்கள் உருவாகும் காலம். அந்த அணுக்கள் உருவானபின் அதன் வீரியத்தை இழக்கும்மே தவிர மற்றப்படி அவை ஒருவர் இறக்கும் வரை அவரது உடலில் இருக்கும்.

இதுப்பற்றி செக்ஸ்யாலஜிஸ்ட்டுகள் கூறும்போது, மனிதனிடம் தோன்றும் செக்ஸ் நினைவுகள் என்பது தடுக்க முடியாதது. செக்ஸ் குறித்த சிந்தனை எல்லோருக்கும் தினமும் வரும், இதற்கு வயது வித்தியாசமே கிடையாது என்று சொல்லலாம். ஆணோ பெண்ணோ 13 வயதுக்கு மேல் செக்ஸ் சுரப்பிகள் சுரக்க தொடங்கிவிடும். அந்த எண்ணம் மனதில் தோன்ற தொடங்கிவிடும். உடல் பாகங்களில் இது என்ன?, இது எதற்காக என்ற தேடல் தொடங்கிவிடும். வழிகாட்டுதல் சரியாக இருந்தால் கற்றுக்கொள்வார்கள். இல்லையேல் தவறாக அர்த்தப்படுத்திக்கொள்வார்கள். செக்ஸ் சிந்தனை என்பது பலருக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும் என்கிறார்கள்.

செக்ஸ் சிந்தனை என்பது சாதாரணமானது என்பதை புரிந்துக்கொள்ள மறுக்கிறது சமூகம். புரிந்துக்கொண்டால் பிரச்சனை என்பது வராது என்பதே உண்மை. செக்ஸ் சிந்தனை பற்றி அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் சராசரியாக ஆண்கள் தினமும் 19 முறை செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்குகின்றனர், பெண்களோ ஒரு நாளைக்கு சராசரியாக 10 முறை செக்ஸ் குறித்து சிந்திக்கின்றனர் என்று தெரியவந்தது. அதாவது பெண்களை விட ஆண்களே செக்ஸ் குறித்து அதிகம் சிந்திக்கிறார்கள் என்கிறது அந்த ஆய்வு.

அந்த ஆய்வில் தூக்கம், உணவு, செக்ஸ் ஆகிய மூன்றில்  எது குறித்து அதிகம் தினமும் சிந்திக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு  பெரும்பாலான ஆண்களின் சிந்தனை செக்ஸ் குறித்தே இருந்துள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது 1 முதல் 388 முறை வரை  செக்ஸ் குறித்த சிந்தித்திக்கின்றார்கள். சராசரியாக ஒவ்வொரு ஆணும் குறைந்தது 19 முறையாவது செக்ஸ் குறித்து நினைக்கிறார்கள். பெண்கள்  ஒரு நாளைக்கு 1 முதல் 140 தடவை செக்ஸ் குறித்து நினைக்கிறார்களாம். சராசரியாக ஒவ்வொரு பெண்ணும் 10 முறை செக்ஸ் குறித்த சிந்திக்கின்றார்கள். இந்த சிந்தனையை யாரால் எப்படி தடுக்க முடியும். நம் மனம் காணும் கற்பனையை, கனவை யாராலும் தடுக்க முடியாது.

இதோடு, குடும்ப வாழ்வை போட்டு குழப்பிக்கொள்ளகூடாது. மனித வாழ்க்கைக்கான தேவைகள் போல் அவனை இயக்கும் உடலுக்கான தேவைகள் என்பது சாதாரணமானது. அதையும் செய்ய வேண்டும். அவ்வளவே. உடல் தேவையே முக்கியம் என நினைத்தால் வாழ்க்கை போய்விடும், வாழ்க்கை முக்கியம் என நினைத்தால் உடல் போய்விடும். இரண்டையும் பேலன்ஸ் செய்ய வேண்டும். இதைத்தான் யாரும் செய்வதில்லை. இந்த குழப்பம் பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை எல்லோரிடமும் உள்ளது.

சிறியவர்களுக்கு நாம் வழிகாட்ட வேண்டும் அதற்கு முன் நாம் தெளிவாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் இரு தரப்புக்கும்மே பிரச்சனையில்லை.

2 கருத்துகள்:

  1. நல்லதோர் தலைப்பில்
    நன்றாக அலசிய எல்லாம்
    நன்று.
    சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. உடல் தேவையே முக்கியம் என நினைத்தால் வாழ்க்கை போய்விடும், வாழ்க்கை முக்கியம் என நினைத்தால் உடல் போய்விடும். இரண்டையும் பேலன்ஸ் செய்ய வேண்டும்.///

    nalla karuthu sir.
    pathivum arumai

    பதிலளிநீக்கு