வெள்ளி, டிசம்பர் 19, 2014

அமெரிக்காவிடம் சிக்குகிறதா க்யூபா ?


அமெரிக்காவின் காலுக்கு கீழ் இருக்கும் குட்டியுண்டு நாடு என்றாலும் க்யூபா அமெரிக்காவின் கண்ணில் விழுந்து அகற்ற முடியாத தூசு. அமெரிக்காவின் கண்ணை உருத்திக்கொண்டே இருந்தது………… இருக்கிறது………. இனிமேல் இருக்கும்மா என்பது தான் இப்போது பெரும் கேள்வி.

காரணம், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் – க்யூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுக்கும் இடையே 18 மாதங்கள் நடந்த ரகசிய பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்து பல வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

1959 ஜனவரி 1க்கு முன்பு வரை க்யூபா காலணி ஆதிக்க நாடாக அமெரிக்காவில் பிடிக்கப்பட்டு பின் அமெரிக்க ஏகாதியபத்திய கம்பெனிகளால் பொம்மை ஆட்சி க்யூபாவில் நடந்தது. க்யூபாவில் 90 சதவிதம் கரும்பு பயிர். கரும்பு தோட்டங்கள் அனைத்தும் அமெரிக்காவின் கம்பெனிகள் வசம். க்யூபாவின் தொலைதொடர்பு, போக்குவரத்து துறை, பாதுகாப்பு, மின்துறை என அனைத்தும் அமெரிக்க கம்பெனிகள் வசம்மிருந்த்து. அவர்கள் சொல்வது தான் சட்டம். அதிபராக, அமைச்சராக இருந்த்து என்னவோ க்யூபாவை சார்ந்தவர்கள் தான். ஆனால் அவர்கள் குசு விடக்கூட அமெரிக்காவின் கம்பெனிகளை கேட்க வேண்டும். இதனை எதிர்த்து போராடி க்யூபாவை சுதந்திர நாடாக்கியவர்கள் பிடல் காஸ்ட்ரோ, சேகுவேராவும்.

அமெரிக்காவின் பொம்மை ஆட்சிக்கும், அமெரிக்காவுக்கு எதிராக பிடல் காஸ்ட்ரோவை விட அவரது தம்பி ரவுல் காஸ்ட்ரோ தான் தீவிரமாக எதிர்த்தார். அந்த ரவுல் காஸ்ட்ரோ தான் இப்போது க்யூபாவின் அதிபர். அவர் தான் அமெரிக்காவுடன் கை குலுக்கியுள்ளார்.

க்யூபாவை சுதந்திர நாடாக பிடல் அறிவித்தபின் க்யூபாவில் இருந்த அமெரிக்க கம்பெனிகளின் சொத்துக்களை நாட்டுடமையாக்கினார். நஷ்டயீடு வழங்கினார். மக்களுக்கு நிலங்களை பிரித்து தந்தார். கம்யூனிசத்தை நோக்கி க்யூபா நடைபோட்டதும் அமெரிக்கா அலறியது. முதலாளித்துவ நாடுகளுக்கு முதலாளியான தனக்கு கீழ் ஒரு சின்ன நாடு கம்யூனிசத்தை நோக்கி நடைபோடுவது அதற்கு பிடிக்கவில்லை. மறைமுகமாக அல்ல நேரடியாகவே க்யூபாவை மிரட்டியது முதலாளித்துவ அமெரிக்கா அரசாங்கம்.

பிடல் அமெரிக்காவுக்கு நேர் எதிரான கம்யூனிச நாடான ரஷ்யாவின் தலைமையை ஏற்றார். க்யூபாவுக்கு பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா. ரஷ்யாவின் உதவியுடன் தடைகளில் இருந்து தன்னை காத்துக்கொண்ட க்யூபாவின் நிலை 19990க்கு பின் தலைகீழாக மாறியது.

முதலாளித்துவ நாடுகள் அமெரிக்கா தலைமையில் கூடி ரஷ்யாவை சிதைத்தபின் இந்தியா போன்ற பல நாடுகள் அமெரிக்காவின் தலைமையை ஏற்றுக்கொண்டன. ஆனால் சிறிய நாடான க்யூபா அதை செய்யவில்லை. அமெரிக்காவின் தலைமையை ஏற்காமல் இயங்க முடிவு செய்தது.

இன்றைய காலக்கட்டத்தில் விவசாயம், மருத்துவம், கல்வியறிவு, பிறப்பு-இறப்பு விகிதாச்சாரம் போன்றவற்றில் முன்னிலை வகிப்பது க்யூபாதான். இதில் என்ன பெரிய ஆச்சர்யம் என கேட்கலாம். க்யூபா மீது பொருளாதார தடைகள் உள்ளது. அமெரிக்காவை பகைத்துக்கொண்டு எந்த நாடாவது க்யூபாவுக்கு உதவும்மா ? யோசித்து பாருங்கள்.

அந்த நிலையிலும் முன்னிலை வகிக்கிறது க்யூபா.

இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ க்யூபா அதிபராக இருந்த இப்போதும் நாட்டை கண் போல் பாதுகாக்கும் பிடலை கொலை செய்ய எடுத்துக்கொண்ட முயற்சிகள் தான். அதிகாரபூர்வமாக 70க்கும் மேற்பட்ட முறை அவரை கொல்ல முயன்று தோற்றுள்ளது சி.ஐ.ஏ. அதன் சரித்திரத்தில் மிகப்பெரிய தோல்வி இது.

இன்றும் கம்யூனிசத்துக்கு ஆதரவாக க்யூபாவின் அதிகாரபூர்வ ஏட்டில் கட்டுரைகள் எழுதி வருகிறார் பிடல்காஸ்ட்ரோ. ஆனால் அவரது தம்பி ரவுல் காஸ்ட்ரோ முதலாளிகளின் பாதுகாவலரான அமெரிக்காவுடன் கைகோர்த்துள்ளார். இத்தனை ஆண்டுகள் யாரை எதிர்த்ததோ அந்த நாட்டுடன் கை கோர்த்துள்ளது க்யூபா.

இதுவரை போராடியதல்ல போராட்டம். இனி க்யூபா போராட போவதுதான் உண்மையான போராட்டம். இதில் தாக்கு பிடிக்குமா இல்லை முதலாளிகளுக்கு சாதகமான நாடுகளின் பட்டியலில் இணைக்கப்படும்மா என்பது போகபோக தெரிந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக