சனி, பிப்ரவரி 06, 2016

தமிழகத்தை கேலி பொருளாக்கியது நாங்களே - ஸ்டிக்கர் அரசாங்கம் பெருமிதம்.


 இந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்தை விட கல்வியில், பொருளாதாரத்தில், வாழ்வாதாரத்தில் தமிழகம் முன்னேறிய மாநிலம் என்கிறது பல புள்ளி விவரங்கள். சாதி கட்டமைப்பில் கூட மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் நாம் பரவாயில்லை என்கிறார்கள். என்ன தான் வளர்ச்சியடைந்தாலும் அரசியலை நோக்கும் போது ஒரு குறிப்பிட்ட சாரரின் மூளை வளரவேயில்லையோ என தோன்றுகிறது. அந்த குறிப்பிட்ட சாரார் அதிமுகவினர் என நான் சொல்லாமல் நீங்கள் புரிந்துக்கொண்டால் நிச்சயம் நீங்கள் அதிமுக தொண்டரல்ல.


அதிமுகவினர் அடிமைகளை விட மிகமிக மோசமானவர்களாக நிற்கிறார்கள். அடிமையாக இருப்பவர்களுக்கு கூட அறிவு உண்டு. ஆனால், அதிமுகவில் இருப்பவர்கள் அறிவற்ற ஒரு கூட்டமாக இருப்பதை தான் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

யாருக்கு வேண்டுமானாலும் பதவி கிடைக்கும் ஒரு கட்சி எதுவென்றால் அது அதிமுக. உனக்கு எந்த தககுதியும் தேவையில்லை. கட்சி தலைமை சொன்னதை செய்யும் ஏவல்காரராக இருந்தால் போதும். பணம் செலவு செய்து அவர்களே வெற்றி பெற வைப்பார்கள். மற்ற கட்சிகளை போல சம்பாதிக்க முடியாது. சம்பாதிப்பதை தலைமைக்கு தந்துவிட வேண்டும். அவர்கள் தருவதை வாங்கிக்கொள்ள வேண்டும். பங்குயெல்லாம் சரியாக வந்துவிடும். அந்த ஒப்பந்தத்தில் இருந்து மீறினால் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் டம்மியாக்கப்படுவார்.

எவ்வளவு உயரத்துக்கு போனாலும் நான் உங்கள் விசுவாசி என்பதை காட்ட ஹெலிகாப்டரை பார்த்து வணங்க வேண்டும், கார் சக்கரத்தை காலாக நினைத்து விழுந்து கும்பிட வேண்டும். நிகழ்ச்சிக்கு வர இன்னும் 6 மணி நேரம் இருக்கிறது என்றாலும் மணிக்கணக்காக வெயில், மழை என பார்க்காமல் நிற்க வேண்டும். இதுமட்டும்மல்ல வித்தியாசமாக, விதவிதமாக கெட்ட வார்த்தைகளால் எதிர்கட்சிகளை, குறிப்பாக கலைஞரை, ஸ்டாலினை வசைப்பாட தெரிந்திருக்க வேண்டும். பொதுயிடம், சபை என எந்த நாகரீகமும் பார்க்ககூடாது.

கூடு, சொரணை எதுவும்மற்ற இயந்திரமாக இருக்க வேண்டும் என தலைமை எதிர்பார்க்கும். அதன்படி நடந்துக்கொண்டால் கட்சியில் பதவி நிலைக்கும். இது தெரிந்தே அதிமுகவினர் தங்களை அப்படியே உருமாற்றிக்கொள்கிறார்கள். பதவிக்காக ............. தின்னச்சொன்னாலும் தின்பார்களோ என்னவோ.......... இதை எழுதும் போது எனக்கு அந்த கட்சி தலைமை பதவியில் உள்ளவர் மீது கோபம் தான் வருகிறது. கட்சி தொண்டர்களுக்கு பதவி என்கிற ஆசையை காட்டி அறிவில்லாத கூட்டமாக மாற்றி வைத்துள்ளார். அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆரும் அப்படித்தான்.  ஜெ உச்சத்தில் உள்ளார் அவ்வளவே.

ஜெயலலிதா கொள்ளையடித்துவிட்டு ஜெயிலுக்கு போய் பிணையில் வெளியே வந்ததற்கு ஊரெல்லாம் திருவிழா நடத்தினார்கள். சென்னை மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது, மாநிலத்தின் பிற பகுதி மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பிய நிவாரண பொருட்களில் “அம்மா“ ஸ்டிக்கரை ஒட்டினார்கள். அடுத்தவன் பிள்ளைக்கு நான் தான் தகப்பன் என்பதை போல. இதை கூட கட்சியின் விளம்பரத்துக்காக செய்தார்கள் என ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், கட்சி சார்பில் ஏழைகளுக்கு நடத்தி வைத்த திருமணத்தில் மணமக்கள் தலையில் ஜெ படம் போட்ட கிரீடம் வைப்பது என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தலையில் மட்டும்மல்ல நெஞ்சிலும் வட்டமாக ஜெ படத்தை குத்தி வைத்துள்ளார்கள். இந்த மாதிரியான கேவலம் தமிழகத்தில் வேறு எந்த கட்சியும் செய்ய துணியாது. இப்படி சொந்த கட்சியினரை முட்டாளாக்கி வைத்திருப்பதை செய்தி நிறுவனங்களும் வேடிக்கை பார்ப்பது தான் விந்தையிலும் விந்தையாக இருக்கிறது.

அடுத்ததாக இப்போது அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும் என ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளார் முதலமைச்சராக உள்ள ஜெயலலிதா. எவ்வளவு கேவலம்.

இந்த நீதிமன்றம் வித்தியாசமான பல வழக்குகளை சந்தித்துயிருக்கிறது என பராசக்தி வசனத்தை போல இந்த தமிழகம் கடந்த சில ஆண்டுகளாக இதுப்போன்ற வித்தியாசமான நிகழ்வுகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. அடுத்தவர் எள்ளி நகையாடும் வகையில் அதிமுகவினர் செய்யும் இந்த செயல்களை கண்டு சொந்த மாநில மக்கள் மட்டும்மல்ல பக்கத்து மாநில மக்கள் கூட கைகொட்டி சிரிக்கிறார்கள். சிரிக்கவில்லை என சொல்பவருக்கு ஒரு உதாரணம். 


சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் ஒரு இடைத்தேர்தல். மலேசியாவில் வெளிவரும் தமிழ் ஒரு பிரபலமான செய்திதாளின் செய்தியாளர் செய்தி சேகரிக்க பெரிய செட்டப்போடு தொகுதிக்கு வந்து ஒரு லாட்ஜ்ல் ரூம் போட்டு தங்கினார். வந்தவர் பிரச்சாரம், தலைவர்கள் பேச்சு என எதையும் எடுக்கவில்லை. அதற்கு பதில் ஆரத்தி எடுப்பது, முகத்தில் படம் வரைந்திருக்கும் தீவிர தொண்டர், தலைவர்கள் போல் வேடம் போட்டு ஊர்வலம் வரும் தொண்டர்கள், மேடைப்போட்டு குத்தாட்டம் போடுவது போன்றவற்றை தான் தினமும் விதம் விதமாக செய்தியாக்கினார். அவரிடம் கேட்டபோது, அங்க படிக்கப்போறது தமிழன் தான். தமிழக தேர்தல் காமெடியை ரசிக்க ஒரு பெரிய கூட்டம்மே அங்கயிருக்கு சார். தமிழ்நாட்டு அரசியலைப்பத்தி பேசனா அவ்வளவு கேவலமா பேசுவாங்க. இதெல்லாம் அங்க புதுசு. எங்களுக்கு அங்க ஆங்கில பேப்பரும் இருக்கு. அதலயும் இந்த செய்தி போடுவாங்க. இப்படியெல்லாம்மா தமிழ்நாட்ல அரசியல் நடக்குதுன்னு அந்த நாட்டுக்காரங்க கேட்பாங்க சார் என்றார். ( பத்து நாள் தங்கியதற்கு ஒரு லட்ச ரூபாய் செலவு செய்திருந்தார். )

இப்படி பிற மாநிலங்கள் மட்டும்மல்ல பிற நாடுகளிலும் கேலியாக பார்க்கும் மக்களாக தமிழக மக்களை மாற்றியது எங்கள் சாதனை என ஸ்டிக்கர் அரசாங்கம் விளம்பரப்படுத்தாமல் இருந்தால் சரி.

2 கருத்துகள்: